Monday, May 06, 2024

ரணம் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

     

    வைபவ்  நடிக்கும்  25  வது  படம்  என்ற  பெருமையுடன்  ரிலீஸ்  ஆன  இப்படம்  பல  மீடியாக்களால் பாராட்டப்பட்டு  பெரும்பாலான  விமர்சகர்க்ளால்  3/5  ரேட்டிங்  தரப்பட்ட  தரமான  படம் . லோ  பட்ஜெட்  படமாக  இருந்தாலும்   ஒரு  நல்ல  க்ரைம்  த்ரில்லர்  படம்  இது .23/2/2024  முதல்  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது .ரணம் : அறம்  தவறேல்  என்பது  முழுமையான  டைட்டில் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  போலீஸ்  ஸ்டேஷனுக்கு  வந்து  அங்கே    சில கேஸ்களுக்கு  க்ரைம்  ஸ்டோரி  எழுதித்தருபவன். அது  போக  ஓவியன்.  முகம் சிதைந்த  நிலையில்  ஒரு  டெட்  பாடி  இருந்தால்  அந்த  முகம்  இப்படித்தான்  இருக்கும்  என  கெஸ்  பண்ணி  வரைந்து  தருபவன்.சில  க்ரைம்  கேஸ்களில்  துப்பு  கிடைக்காத  போது  நாயகன்  இந்த  க்ரைம்  இப்படித்தான்  நடந்திருக்கும்  என  யூகித்து  க்ரைம்  ஸ்டோரி  எழுதித்தருவான். இது  போலீஸ்க்கு  மிகவும்  உதவியாக  இருக்கும் 


நகரில்  ஆங்காங்கே  எரிக்கபப்ட்ட  இரு  கைகள் , இரு  கால்கள் . உடல்  என  தனித்தனியாக  வெவ்வேறு  லொக்கேஷன்களில்  கிடைக்கிறது.போலீஸ்  ஸ்டேஷனுக்கு  எதிரிலேயே  ஒரு  அட்டைப்பெட்டியில்  எரிக்கப்பட்ட  நிலையில்   இரு  கைகள்  கிடைக்கின்றன.இவை  எல்லாம்  ஒரே  டெட்பாடியுடையது  அல்ல  என  நாயகன்  யூகித்து  சொல்கிறான்


நகரில்  பல  இடங்களில்  புதைக்கப்பட்ட  பிணங்கள்  திடீர்  என  காணாமல்  போகின்றன.


இந்த  இரண்டு  கேஸ்களும்  போலீஸ்க்கு  பெரிய  தலைவலி  தருகின்றன. இந்தக்கேசை  விசாரிக்கும் இன்ஸ்பெக்டர்  திடீர்  என  காணாமல்  போகிறார். இது  மீடியாவில்  பரப்ரப்பான  பேசுபொருள்  ஆகிறது 


 இந்த  இரண்டு  கேசை  விசாரிக்க  , காணாமல்  போன  இன்ஸ்பெக்டர்  கேசை  துப்பு  துலக்க  புதிதாக  ஒரு  பெண்  போலீஸ்  ஆஃபீசர்  வருகிறார்.  அவர்  எப்படி  கேசை  டீல்  செய்தார்  என்பது மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  வைபவ். அலட்டல்  இல்லாத  , ஆர்ப்பாட்டம்  செய்யாத  அமைதியான  ஹீரோவைப்பார்த்து  ரொம்ப  நாட்கள்  ஆகிறது . நல்ல  நடிப்பு .பர்சனாலிட்டியான  தோற்றம். வழக்கமாக  இப்போதெல்லாம்  நாயகனைக்காட்டும்போது    தண்ணி  அடிப்பது ,  தம்  அடிப்பது  என்பதாகவே அதிகக்காட்சிகள்  காட்டுவார்கள் , இதில்  அப்படி  இல்லை , நிம்மதி


போலீஸ்  ஆஃபீசர்  ஆக தன்யா  ஹோப்  அழகாக  இருக்கிறார். ஆனால்  போலீஸ்  கம்பீரம்  இல்லை . நாயகனுடன்  டூயட்  எல்லாம்  பாடவில்லை . அதுவரை  பரவாயில்லை 


 ஃபிளாஸ்பேக்  காட்சிகளில்   நந்திதா  ஸ்வேதா  நடிப்பு  குட் .அவரது  மகளாக  வரும்  ப்ரணதி  அமைதியான  நடிப்பு 


கவுரவ  வேடத்தில்  சரஸ்  மேன்ன்  கச்சிதம் 


அரோல்கோரெல்லி  தான்  இசை .நான்கு  பாடல்களும்  குட் . பின்னணி  இசை  பரபரப்பு 

பாலாஜி  கே  ராஜா  தான்  ஒளிப்பதிவு.. நாயகன் , நாயகி ,காதலி  மூவரையும்  அழகாகாட்டி  இருக்கிறார் 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஷெரீப் 


சபாஷ்  டைரக்டர்


1    க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் , இடைவேளை  ட்விஸ்ட்   என  பொருத்தமான  இடங்களில்  சஸ்ப்[என்சை  ஓப்பன்  செய்த  விதம் ‘

2  அழுத்தமான  ஃபிளாஸ்பேக்  காட்சி 

3   அமரர்  சில்க்  ஸ்மிதா  இறந்த  பின்  நடந்த  ஒரு  சம்பவத்தை  சாமார்த்தியமாக  திரைக்கதையில்  புகுத்திய  விதம் 

4  பெண்ணை  பாலியல்  வன்கொடுமை  செய்பவருக்கு  தண்டனை  இருக்கு , ஆனால்  பிணத்துடன்  உறவு  கொள்ளும்  கொடூர  ஆசாமிகளுக்கு  சட்டத்தில்  தண்டனை  வழங்க  வழி  இல்லை  என்ற   கான்செப்ட்டை  எடுத்து  திரைக்கதை  அமைத்த  விதம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1  பொன்னான  கண்ணு  தன்னால  நின்னு  கதை  அடிக்க 

2  சட்டுனு  பொட்டுனு  அட்டுல  விட்டு 

3  அச்சுப்பெண்ணே  ஆசை  முகமே  மண்ணில் எனக்காக  வாழும்  உயிரே


4  அம்மா  அம்மா  ஆசை  அம்மா 


  ரசித்த  வசனங்கள் 

1   அவள்  பறந்து போனாளே  என்னை  மறந்து போனாளே  யோவ்  ஹெட்  செட்  போட்டு  பாட்டு  கேட்கலாமில்ல? இப்படியா  ஊர்க்கே  கேட்கற  மாதிரி  சவுண்ட்  வெச்சு  கேட்பே?


 அந்தப்பாட்டெல்லாம்  ஹெட்  செட்ல  போட்டுக்கேட்க  முடியாது , ஏன்னா  அந்தப்பாட்டு  வந்தப்போ  ஹெட்  செட்டே  கண்டு  பிடிக்கப்படலை 


2    டைரக்டர்  = பாம்  பார்ட்டீஸ்.. நான்  ஓக்கே  சொன்னதும்  பாம்  வெடிக்கனும், ஓக்கே?


 பூம்


3  இந்த  ஜோக்  சொல்லும்போது  ஏன்  எந்திரிச்சு  நின்னு  சொல்றே?


  ஏன்னா  இது  ஸ்டேன்ட்  அப்  காமெடி 


4   எந்த  விஷயத்துக்கும்  முடிவு  , ஆரம்பம்  என்பது  கிடையவே  கிடையாது  நம்மைத்தேடி  வரும்  எந்த   விஷயத்துக்கும்  ஒரு  காரணம்  இருக்கும் 


5   சிலகேள்விகளுக்கு  பதில்  தேடிப்போனாதான்  கிடைக்கும்


6  அவசரப்பட்டுக்கொலை  பண்றவன்   இவ்ளோ  அக்யூரேட்டா  கட்  பண்ண  வாய்ப்பே  இல்லை .பிராப்பரா  சர்ஜரி  பண்ற  மாதிரி  பொறுமையா   கட்  பண்ணி  இருக்கான் 


7  தப்பு  பண்றது  மட்டும்  பாவம்  இல்லை , அந்த  தப்பைப்பார்த்துட்டு  எதுவும்  சொல்லாமல்  இருப்பதும், எதிர்ப்பு  காட்டாமல்  இருப்பதும்  பாவம்  தான் 


8  எல்லாருமே  சூழ்நிலையை  அவங்களுக்கு   சாதகமா  பயன்படுத்திக்கறாங்க


9   நாம  இறந்ததுக்குப்பின்  நாம  செஞ்ச  நல்லது கெட்டதுதான்   நம்ம  குணத்தை  தீர்மானிக்கும் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகி  ஆன  போலீஸ்  ஆஃபீசர்  நாயகனிடம்  கேட்கிறார்.காணாமல்  போன  இன்ஸ்பெக்டர்  கடைசியா  உன்  கிட்டே  என்ன  பேசினார்? அதற்கு  நாயகன்  சொல்வது  “  கேஸ்  சம்பந்தமா  ஏதாவது  தகவல்  கிடைச்சா  இம்மீடியட்டா  ஷேர் பண்ணு  என்றார்  என்பதுஆனால்  நிஜத்தில்  அவர்  சொன்னது . இந்த  கேசில்  இருந்து  நீ  விலகிடு. நான்  பார்த்துக்கறேன்  என்பது. ஏன்  அதை  மறைத்தார் ? ( இதற்கான  பதில்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில் இருந்தாலும்.. )


2   நாயகனுக்கு  கைலாசம்  யார்  என்றே  தெரியாது . அப்போதுதான்  போலீசே  கைலாசத்தை  ரவுண்ட்  அப்  பண்றாங்க.நாயகன்  எப்படி  கைலாசம்  இப்போதுதான்  தப்பிப்போனான்  என்கிறார் ? 


3   மகளுக்கு  சாலை  விபத்து  ஏற்ப்ட்டு  ஆம்புலன்ஸ்ல  அழைத்து  செல்லப்படும்போது  அம்மாவுக்கு  ஃபோன்  பண்ணி   ஜி ஹெச்  வந்துடுங்க  என்றதும்  அம்மா  ஜி ஹெச்  வேணாம், பிரைவேட்  ஹாஸ்பிடல்  கூட்டிட்டுப்போங்க  என்கிறார்.  இந்தக்காட்சி  பொது  மக்களிடையே  ஜிஹெச்  மீது  அவநம்பிக்கை  ஏற்படுத்தாதா?


4   ஆக்சிடெண்ட்க்கு  ஆளான  மகள்  சீரியசாக  ஐசியூ  வில்  இருக்கும்போது  அம்மா  அருகில்  இல்லாமல்  ப்ரே  பண்ண  சர்ச் க்குப்போவதாக காட்சி. இது  எதுக்கு ?  ஹாஸ்பிடல்லயே  ப்ரே  பண்ணினா  ஏசு  ஒத்துக்க  மாட்டாரா?


5  க்ளைமாக்ஸ்ல  நாயகன்  ஒரு  பைக் குக்குப்பக்கத்துல  எல்லா  ஃபோட்டோசையும்  எரிச்சுட்டு  இருக்காரு . பெட்ரோல் டேங்க்  பக்கத்துல  நெருப்பு  இருந்தா  ஆபத்து  தானே? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  யூ

சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சஸ்பென்ஸ்  த்ரில்லர் , க்ரைம்  த்ரில்லர்  ரசிகர்களூக்குப்பிடித்தமான  தரமான  படம் , ரேட்டிங்  3.25 / 5 


ரணம் அறம் தவறேல்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்ஷெரீஃப்
எழுதியவர்ஷெரீஃப்
உற்பத்திமது நாகராஜன்
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுபாலாஜி கே ராஜா
திருத்தியவர்முனீஸ்
இசைஅரோல் கோரெல்லி
தயாரிப்பு
நிறுவனம்
மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ்
மூலம் விநியோகிக்கப்பட்டதுசக்தி பிலிம் பேக்டரி
வெளிவரும் தேதி
  • 23 பிப்ரவரி 2024
விவரங்கள் தேவை ]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: