Thursday, December 25, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 25/12/ 2014 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

மீகாமன் -  முன்தினம் பார்த்தேனே’, ‘தடையற தாக்க’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, ஆர்யாவை வைத்து ‘மீகாமன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துவருகிறார். தமன் இசையமைத்திருக்கிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை ‘நான் அவன் இல்லை’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆக்ஷன் திரில்லலராக உருவாகி வரும் இப்படத்தில் ஆர்யாவுடன் ஏழு வில்லன்கள் மோதவிருக்கிறார்களாம். ஆசிஷ் வித்யார்த்தி, மகா காந்தி, அஷுதோஷ் ராணா, ஹரிஷ், மகாதேவன், சுந்தன் ஷு பாண்டே இந்த ஏழு பேரும் ஆர்யாவுடன் மோதவுள்ளார்களாம். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது.

தமிழில் மீகாமன் என்றால் "கப்பலைச் செலுத்துபவன்" என்று அர்த்தமாம். அதுபோலவே, ஆர்யா நடித்திவரும் "மீகாமன்" திரைப்படமும் தமிழ் சினிமாவை மற்றொரு தளத்திற்கு செலுத்தும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். ஆர்யா - ஹன்சிகா நடித்துள்ள இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை "நான் அவன் இல்லை", "மாப்பிள்ளை" உள்ளிட்ட படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் தயாரித்து வருகிறது.



 ஆர்யாவின் புதிய கப்பல் “மீகாமன்”! ஆக்‌ஷன் திரில்லலராக உருவாகி வரும் இப்படத்தில் ஆர்யாவுடன் ஏழு வில்லன்கள் மோதியுள்ளார்கள். ஆசிஷ் வித்யார்த்தி, மகா காந்தி, அஷுதோஷ் ராணா, ஹரிஷ், மகாதேவன், சுந்தன் ஷு பாண்டே இந்த ஏழு பேரும் ஆர்யாவுடன் "பைட்" செய்யும் வில்லன்களாம். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து இறுதிகட்டப் பணிகளை தொடங்கியுள்ளனர். கூடிய விரைவில் இப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்


. இதுகுறித்து தெரிவித்த இயக்குனர் , "மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். தமிழில் பெயர் வைத்து அதனை புரியவைக்க ஆங்கிலத்தில் TAGLINE போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கதாநாயகன் ஒரு காரியத்தை கையில் எடுத்து, அதனை எப்படி வெற்றிகரமாக முடிக்கிறான் என்பதை ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக கதை அமைத்திருக்கிறேன். ஆர்யாவின் கெட்டப்பை இப்படத்தில் மாற்றியிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


ஈரோடு  ஆனூர்  ரிலீஸ்

2   கயல்
கும்கி படத்திற்கு பிறகு பிரபு சாலமன் அவர்கள் இயக்கி வரும் படம் கயல். இந்த படத்தில் சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக 'பொறியாளன்' ஆனந்தி நடிக்கிறார்.



டி.இமான் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்கிறார் வி.மகேந்திரன். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், காட் பிக்சர்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படம் முழுக்க முழுக்க காதல் படம் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன்.


இப்படம் வரும் 25ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. அதோடு இப்படம் ஜெர்மனி, ஸ்காட்லாந்து, நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட 650 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது.

பத்திரிகையாளர் யோகி தேவராஜ் ஒரு நடிகராக 30 படங்களை முடித்துவிட்டார். பிரபு சாலமன் இயக்கியுள்ள கயல் அவருக்கு 30 வது படம். முக்கியமான வேடம். 2009 நவம்பர் மாதம் ரிலீசான 'யோகி' படத்தில் வில்லத்தனமான வேடத்தில் நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் தேவராஜ். அன்றிலிருந்து அவர் யோகி தேவராஜாகிவிட்டார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவராஜ், நடிக்க வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. யோகி தேவராஜின் 30வது படம் 'கயல்' -


 கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது! இதுவரை நான் நடித்த படங்கள் குற்றப்பத்திரிகை, சூர்யா, ஜெர்ரி, ராம், யோகி, விலை, நானே என்னுள் இல்லை, முத்துக்கு முத்தாக, அழகர்சாமியின் குதிரை, முதல் இடம், தேரோடும் வீதியிலே, என் பெயர் குமாரசாமி, முப்பொழுதும் உன் கற்பனைகள் (இவரது காட்சிகள் இடம்பெறவில்லை), அமரா, ஒத்தவீடு, கம்பன் கழகம், வன யுத்தம் (தமிழில் இவரது காட்சிகள் இடம்பெறவில்லை), அட்டஹாசா, 'வன யுத்தம்' படத்தின் கன்னடப் பதிப்பு), ஒரு நடிகையின் வாக்குமூலம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், அழகன் அழகி, பொன்னர் சங்கர், நீர்ப்பறவை, சொகுசு பேருந்து, நெல்லை சந்திப்பு, ஒன்பதுல குரு, உ, பாலக்காட்டு மாதவன், ஆக்கம், கயல்,சதுரன். யோகி தேவராஜின் 30வது படம் 'கயல்' - கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது!



 இதுகுறித்து தேவராஜ் கூறுகையில், "5 ஆண்டுகளில் சிறியதும் பெரியதுமாக 30 படங்கள் முடித்துவிட்டேன். இத்தனை படங்களில் நான் நடித்து இருந்தாலும், மிகப் பெரிய திருப்புமுனையோ அல்லது மிகச் சிறிய திருப்புமுனையோ கிடைக்கவில்லை. என்றாலும், 'கயல்' படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் என்னை நம்பி கொடுத்த கேரக்டரின் தன்மையைக் கெடுக்காமல் நடித்து இருக்கிறேன். இந்தப் படம் எனக்கு சரியான திருப்பு முனையைத் தரும் என நம்புகிறேன். எப்போதும் போல் அனைத்து நண்பர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.


erode   royal , annaboorani , srinivaasaa


கப்பல்-கப்பல் படத்திற்காக கரகாட்டக்காரன் படத்திலிருந்து ஒரு பாடலை ரீமேக்ஸ் செய்துள்ளனர்.வைபவ், சோனம், கருணாகரன், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் கப்பல். இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்.



படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு மூடர்கூடம் மற்றும் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் என்ற படங்களுக்கு இசையமைத்தவர்.ஐ ஸ்டூடியோ என்ற நிறுவனம் சார்பாக எட்டு நண்பர்கள் இணைந்து இதனை தயாரித்துள்ளனர், இந்த படத்தை பார்த்த ஷங்கர் தானே முன்வந்து அவரது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக படத்தை வெளியிடுகிறார். வரும் 25ம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.



இப்படத்திற்காக கரகாட்டக்காரன் படத்திலிருந்து ஒரு பாடலை ரீமேக்ஸ் செய்துள்ளனர்.1980ல் ராமராஜன், கனகா நடிப்பில் வெளியாகி ஒரு வருடம் ஓடி சாதனை படைத்த படம் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்க படத்துக்கு இசையமைத்திருந்தார் இளையராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டிதொட்டியொல்லாம் கலக்கியது.இந்நிலையில் கரகாட்டக்காரன் படத்தில் மலேசிய வாசுதேவன் பாடிய ஊரு விட்டு ஊரு வந்து




erode  vsp




4  “வெள்ளக்காரதுரை“.

கொடைக்கானலில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா பங்கேற்ற பாடல் காட்சி!

Vellakkara-Durai-Movie


அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை“.



இதில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஸ்ரீ திவ்யா. மற்றும் சூரி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, மிப்பு, பாவாலட்சுமணன், விட்டல், வி.ஞானவேல், மகாநதி சங்கர், டாடி சரவணன், நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.எழில். வைரமுத்து, யுகபாரதி பாடல்களுக்கு D.இமான் இசையமைக்கிறார்.


படம் பற்றி இயக்குனர் எழிலிடம் பேசினோம்…..வெள்ளக்காரதுரை படத்திற்காக சமீபத்தில் கொடைக்கானலில் விக்ரம்பிரபு – ஸ்ரீதிவ்யா பங்கேற்ற முதலிரவு பாடல் காட்சி ஒன்றை வீடு ஒன்றில் படமாக்கினோம்.



“ கூதக் காத்து
கொல்லுதடி – கூரச்சேல தாடி “ என்ற முதலிரவு பாடல் அது. முதலிரவு பாடல் தான் என்றாலும் விரசமே இல்லாமல் எல்லோரும் குடும்பத்தாருடன் பார்க்கக் கூடிய பாடலாக உருவாக்கி உள்ளோம். நான் இயக்கிய இதற்கு முந்தைய படங்களிலும் ஆபாசமான காட்சிகள் எதுவுமே இருக்காது. அது மாதிரி தான் இதிலும்..ஜாலியான படமாக வெள்ளக்காரதுரை இருக்கும் என்றார்.



தயாரிப்பாளர் அன்பு செழியன் கூறியதாவது…. ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ள நான் முதன் முதலாக தயாரிக்கும் படம் இது. நான் எதிர் பார்த்த மாதிரியே தரமான கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது. படத்தை பார்த்து விட்டேன். முழு திருப்தியாக இருக்கிறது என்றார்.




theinterview-sony


சோனி நிறுவனம் தயாரித்த தி இன்டர்வியூ திரைப்படம் நாளை வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தபடம் வட கொரியாவின் தற்போதைய அதிபரைப் படுகொலை செய்ய முயற்சி நடைபெறுவதாக சித்திரிக்கப்பட்டுள்ளது.



அதன் திரைக் கதையில், வட கொரியாவின் தற்போதைய அதிபரைப் படுகொலை செய்ய முயற்சி நடைபெறுவதாக சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், சோனி பிக்சர்ஸ் நிறுவன வலைதளத்தில் மர்ம நபர்கள் சிலர் ஊடுருவி, நிறுவனத்தின் புதிய திரைக் கதைகள், ஊழியர்கள் குறித்த விவரங்கள், அவர்களது மின்னஞ்சல்கள், சம்பளப் பட்டுவாடா விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு ரகசியத் தகவல்களையும், அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, வெளியிடுவதற்குத் தயாராக உள்ள  திரைப்பட நகல்களையும் திருடி வெளியிட்டனர்.




இதில் வட கொரியாவுக்குத் தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் வட கொரிய தேசிய பாதுகாப்புக் குழு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “”வட கொரியா குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா பொறுப்பற்ற முறையில் வீண் வதந்தியைப் பரப்பி வருகிறார்.



இந்த நிலை தொடர்ந்தால், அமெரிக்க அதிபர் மாளிகை, ராணுவத் தலைமையகம் (பென்டகன்) உள்பட அமெரிக்கா முழுவதும் தாக்குதல் நிகழ்த்துவோம்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தி இன்டர்வியூ திரைப்படம் நாளை வெளியிடப்படும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

thanx  - dinamani  , maalaimalar  , all cine website

0 comments: