Thursday, December 25, 2014

கயல் - சினிமா விமர்சனம்ஹீரோ  ஒரு நாடோடி. அவனுக்குன்னு பெரிய  லட்சியம்  எல்லாம் இல்லை,  ஊர் எல்லாம்  சுத்திப்பார்க்கனும்னு  நினைக்கறான். ஒரு இந்தியபிரதமராவோ , இந்திய ஜனாதிபதியாவோ  இருந்தா  ஓசில யே ஊரான்  வீட்டுக்காசுல   மங்களம்  பாடிடலாம், ஆனா ஹீரோக்கு  அந்தக்கொடுப்பினை இல்லை. அதனால  கொஞ்ச  காலம்  ஒரு பக்கம்  வேலை  செய்யறது . அந்தப்பணத்துல  ஊர்  சுத்தறது , இதுதான்  அவன்   வாழ்க்கை  முறை .அவன்  கூட  ஒரு நண்பன்.


ஒரு  லவ் ஜோடி  ஊரை  விட்டு  ஓடிப்போகும் வழில  இவங்களைப்பார்க்குது. தெரியாத்தனமா  அவங்களுக்கு  உதவப்போக வந்தது  வினை . காடு வெட்டி  குரு , டாக்டர்  ராம்தாஸ்  மாதிரியே  ஜாதி  வெறி  பிடிச்ச கும்பல்  கிட்டே மாட்டிக்கறாங்க . சித்ரவதைப்படுத்தறாங்க .ஓடிப்போன  பொண்ணு  எங்கேன்னு  கேட்டு  டார்ச்சர் பண்றாங்க . இவங்க  கிட்டே  உண்மையை வரவழைக்க  நக்கீரன்  கோபால்  தூது  மாதிரி  அவங்க  வீட்டு வேலைக்காரப்பெண்ணை  தூது அனுப்பறாங்க . 


அந்தப்பொண்ணுதான்  ஹீரோயின் .ஹீரோவுக்கு பார்த்ததுமே  பத்திக்குது . காதல் தீ . எல்லாருக்கும்  முன்னால  தன்  காதலை  பகிரங்கமா  சொல்லறாரு. 


ஊரை  விட்டு ஓடிப்போன  பொண்ணு  திரும்ப வந்துடுது. அதனால  ஹீரோவை  விட்டுடறாங்க  . ஹீரோ  கன்யாகுமரி  போறேண்ட்டு கிளம்பிடறார்.

ஹீரோயின் க்கு  ஹீரோ  நினைவாவே  இருக்கு. ஹீரோவைப்பார்க்க  கன்யாகுமரி  கிளம்புது, ஹீரோயின்  கிட்டே  ஹீரோ அட்ரஸ் இல்லை ,  ஃபோன் நெம்பர்  இல்லை . அவங்க  2 பேரும்  சேர்ந்தாங்களா? இல்லையா? என்பதே   மிச்ச  மீதிக்கதை


 ஹீரோ ஆரோன்  கேரக்டரில்  புதுமுகம்  சந்திரன்.  அட்டகத்தி தினேஷ்  , விதார்த்தி  போல்  இவருக்கும்  நல்ல  எதிர்காலம்  அமைய  வாழ்த்து .வசன  உச்சரிப்பு   , முக  பாவனைகள்  எல்லாம்  ஓக்கே ரகம் 


 ஹீரோயினாக  புதுமுகம்  ஆனந்தி . மாநிற  அழகிகளில் நந்திதா தாஸ்க்குப்பின் பிரமாதமான அழகி யாரும்  வரவில்லையே  என்ற ஏக்கத்தைப்போக்கும்  வகையில்  கனகாம்பரப்பூப்போல  மிக எளிமையான அழகியாக  கயல்  கேரக்டரில் கன கச்சிதமாகப்பொருந்துகிறார் ஆனந்தி. இவரது  பரிதாபமர்ன  கேரக்டரைசேசனால்  ஸ்லோ மோஷனில்  பாவாடை சட்டையுடன்  முயல்குட்டிகள்  போல்  துள்ளி  ஓடி வரும்  சீனைக்கூட  ரசிக்க  முடியாதபடி கட்டிப்போடும் தரத்தினவள்  ஆனதில் ஆச்சரியம்  இல்லை.


ஹீரோவின்  நண்பனாக   வரும்  புதுமுகம்  நல்ல  முக வெட்டு. டயலாக்  டெலிவரியும் அசால்ட்டா வருது,


வில்லனாக வரும்   யோகி  தேவராஜ்  கச்சிதம் .  சண்டைப்போடும்  பாட்டி , லாரி டிரைவர்  ,  போலீஸ்காரர்கள்  எல்லோருக்கும்  மனதில்  நிற்கும்  கேரக்டர் தந்தது  கே பாலச்சந்தர்  பாணி.சபாஷ்
மனதைக் கவர்ந்த  வசனங்கள்1   அட்ரஸ் சொல்லாம உதவி பண்றீங்க,இந்த பணத்தை எப்படி திருப்பித்தர? 


கஷ்டம் னு யாராவது உங்ககிட்டே வந்தா அவங்களுக்கு உதவி பண்ணுங்க போதும் # கயல்


2  தாஜ்மகால் 7 அதிசயத்தில் 1 னு சொல்லிட முடியாது.ஏன்னா காதல் தான் முதல் அதிசயம் # கயல் 


3 வாழ்க்கைல பணம் சம்பாதிப்பதை விட முக்கியம் கடைசி காலத்துல நினைச்சு நினைச்சு அசை போட நல்ல நினைவுகளை சேர்த்து வைப்பது # கயல்்


4 ஆண்டவன் எல்லாருக்கும் ஒரு கொஸ்டின் பேப்பர் தந்திருக்கான்.அதுக்கு பதில் சொன்னாப்போதும்.அடுத்தவங்க போல் வாழ அவசியம் இல்ல# கயல்


5  கேஸ் சிலிண்டர் தீர்ந்தாலே என் சம்சாரம் எனக்குத்தான் போன் பண்ணுவா.என் கேசே தீர்ந்துட்டா (நானே செத்துட்டா) என்ன பண்ணுவாளோ?# கயல்


6  வாழும்போது வாழற அளவு சம்பாதிச்சா போதும்.அளவுக்கு அதிகமா சேர்த்து வெச்சு பிரயோஜனம் இல்லை# கயல்


7  அய்யா.இந்த சுடிதார் உங்களுக்கு சூப்பரா இருக்குங்க. டேய்.இது பைஜாமாடா # கயல் 


8 1955 ல பிறந்த ஒரு பேட்ச் இன்னும் இருக்கு.இவங்க காலத்துக்குப்பின் ஜாதி ஒழியும்னு எதிர்பார்க்கலாம் # கயல்


9  
அவ கண்ணைப்பாத்துப்பேசும்போது எனக்குள்ளே இடியும் ,மின்னலும் அப்டியே பிச்சிக்கிட்டு இறங்குது # கயல்10   காதல் வர்ற வரை தான் கண் ணும் கண்ணும் பேசிட்டு இருக்கும்.காதல் வந்துட்டா மனம் விட்டு பேசனும்னு நினைக்கும் # கயல்


11
ரேசன் கார்டு எடுக்கனும் (ரெடி பண்ணனும்)னா கல்யாணம் பண்ணனும் னு ஒரு டயலாக் 3 டைம் வருது.இந்த சட்டம் எப்போ வந்தது?


12   வாழ்க்கைல , வியாபரத்துல  தோத்தவன்  எல்லாரும் அடிச்சுப்பிடிச்சு  முன்னுக்கு  வந்துடுவாங்க , ஆனா  காதல்ல  தோத்தவன் ம்ஹூம், உருக்கிடும்#கயல்


 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ஹீரோயின் பேரு ஆனந்தி. ஆனந்தம் வந்ததடி ஆனந்தி உன்னாலே

2  பிரமாதமான ஒளிப்பதிவு ,கருத்தியல் வசனங்கள் ,நாயகி ஆனந்தியின் எளிமையான மாநிற அழகு இவற்றின் ஆதிக்கத்தில் கயல்


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1   ஹீரோவும் , அவர் நண்பரும்  பரஸ்பரம் தங்கள்  இனிஷியலாக  நண்ப
ரின்  பெயரின்  முதல்  எழுத்தை வைப்பது  புதுசு


2  ஓப்பன்ங்கில்  முதல் 40 நிமிடங்களில் படத்தில்  வரும்  வசனங்கள்  மிக பிரமாதம்,  பாசிட்டிவான  விக்ரமன் , ராதா டைப்  வசனங்கள் , சபாஷ்  டைரக்டர்


3  ஹீரோ  யார் என்பதை  அவரது அப்பா  எழுதிய  கடிதம்  மூலம்   விழி ஒளி  இழந்தவரின்  பிரெய்ல்  முறைப்படிப்பில்  போலீஸ்  தெரிந்து  கொள்ளும்  காட்சி  செம  செண்ட்டிமெண்ட்  சீன் 


4   க்ளைமாக்ஸ்  சுனாமி  காட்சி  பிரமாதம் .  சுனாமி  காட்சியை தத்ரூபமாகப்படம் ஆக்கிய  முதல்  தமிழ்ப்படம் என்ற பெருமையைப்பெறுகிறது , ஹேர் இழையில்  அந்த வாய்ப்பை  நழுவ விட்டது தசாவதாரம். அந்த  சுனாமி காட்சியில்    உபயோகித்த  டால்பி அட்மாஸ்   அடடே  செம  மாஸ்  


5 பாடல்  காட்சிகள்   பிரபு சாலமன்  படத்தில்  எப்போதும்  முக்கியத்துவம்  பெற்றுவிடுகிறது . இதுவும்  விதி விலக்கல்ல .  எல்லாப்பாட்டுமே நல்லாதான் இருக்கு,


இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  ஹீரோயினிடம்  அந்த  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  அவ்வளவு  கோபமாக  மிரட்டுவது  ஏனோ? அவரும்  ஒரு பெண்  தானே?   ரொம்ப  செயற்கையான  காட்சி 


2  பின் பாதி  திரைக்கதையில் பெரிய  ரசனையான  சம்பவங்கள்   இல்லாமல்  படம்  தடுமாறுகிறது. பொதுவாகவே  ஒரு திரைக்கதையில்   தேடிட்டுப்போகும்  கதை   என்றாலே  சலிப்பு  வந்துடும் . இவரைத்தேடி  அவரும் அவரைத்தேடி இவரும்  கிளம்புவது  போர்  அடிக்குது

3  ஹீரோ யார் என்றே  தெரியாது , அட்ரஸ் எதுவும்  இல்லை. அவரைத்தேடிப்போக   ஹீரோயினை அவரது  பாட்டியே  அனுப்புவது நம்பும்படி இல்லையே? அதுவும்  வயசுக்கு  வந்த  ஒரு பொண்ணை  இப்டித்தான்  வெளியூருக்கு   தனியா அனுப்புவாங்களா?

4  என்னதான்  ஆர்த்தி   பாய் கட்டிங்  அடிச்சாலும்  அந்த  வாட்ச்மேன்   அவரை சார் என அழைப்பது  எல்லாம்  ஓவர் . ஒரு வேளை  காமெடின்னு நினைச்ட்டாரோ?

சி  பி  கமெண்ட் -  கயல் - மென்மையான  காதல்  கதை- மைனாவுக்குக்க்கீழே , கும்கிக்கு அருகே- விகடன்  மார்க் = 43 , ரேட்டிங்  = 3 / 5ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே ரேட்டிங்  -  3 /5

டிஸ்கி  -  மீகாமன் - சினிமா  விமர்சனம்


http://www.adrasaka.com/2014/12/blog-post_54.html


டிஸ்கி 2  கப்பல் - சினிமா  விமர்ச்னம்


http://www.adrasaka.com/2014/12/blog-post_83.html

டிஸ்கி  3  வெள்ளக்காரதுரை -சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/12/meegaman-stills.html1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்...
படம் பார்க்கணும்...