Friday, December 05, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 5/12/ 2014 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

1 13 ம் பக்கம் பார்க்க  2 ர  3 1 பந்து 4 ரன் 1 விக்கெட் 4 நாங்கெல்லாம் ஏடாகூடம்
5 பகடை 6 நட்பின் நூறாம் நாள் 7 அழகிய பாண்டிபுரம் 8பிரசாத் 9 மணம் கொண்ட காதல் 10 ZOMBIE NIGHT

1 13 ம் பக்கம் பார்க்க-இன்று உலகம் முழுவதும் திகில் படங்களின் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களின் தேவைக்காக உலக மொழிகளில் பலர் திகில் படங்களை உருவாக்கி வருகின்றனர். அதேபோல தமிழில் இதுவரை சொல்லாத / வெளிவராத பரபரப்பான அதிர்ச்சியூட்டும் திகில் படத்தை உருவாக்கி வருகின்றனர்.

ஒரு புத்தகத்தில் உள்ள அதுவும் 13-ம் பக்கத்தில் உள்ள ஒரு சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசத்தை படத்தின் கருவாக வைத்து ‘13-ம் பக்கம் பார்க்க’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர். ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் ஆர்.வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். பல வெற்றிப்படங்களுககு கதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றிய  புகழ்மணி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

பயங்கர ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் செய்வது போன்ற முரட்டுத்தனமாக கதாபாத்திரத்தில் நளினி நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 40 அடி உயர முனீஸ்வரர் சிலை உள்ள கோவிலில் படமாக்கப்பட்டது. அப்போது நாயகி ஸ்ரீபிரியங்காவை ரத்தக்காட்டேரியிடமிருந்து காப்பாற்ற நளினி மந்திர உச்சரிப்பு செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதை வேடிக்கைப் பார்க்க வந்த பெண்களுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே சாமி வந்து ஆட ஆரம்பிக்க படப்பிடிப்புக் குழுவினர் பரபரப்பாகிவிட்டனர்.

இப்படத்தில் ரத்தன் மௌலி, ராம் கார்த்திக் இருவருடன் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராம்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா, சிங்கப்பூர் துரைராஜ் ஆகிய தெரிந்த முகங்களும் நடிக்கின்றனர்.

சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கும் இப்படத்தின் இசையை பிப்ரவரியில் வெளியிடவுள்ளனர். 
 

 2  ர -
Ra_00002தமிழ் சினிமாவில் பல புதியவர்களின் படையெடுப்பு நடந்து கொண்டிருக்கும் காலம் இது. எண்ணற்ற புதுப்புது படைப்பாளிகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.


‘டிஜிட்டல்’ சினிமா வந்த பிறகு இந்த ஆரோக்கிய மாற்றம் அதிகரித்து வருகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. இந்த புதியவர்களின் வரவால் தமிழ் சினிமா பற்றிய பார்வையும் மாறுபட்டுக் கொண்டேயிருக்கிறது.அப்படிப்பட்ட ஒரு மாறுபட்ட எண்ணம் கொண்ட இளைஞர்களின் படைப்புதான் ‘ர’. பிளான் ஏ ஸ்டுடியோஸ் சார்பாக அமீன் மற்றும் அக்பர் இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள்.


விமான பைலட்டாக இருக்கும் பிரபு யுவராஜ், அஷ்ரப் இந்த படத்தின் கதை, திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். பிரபு யுவராஜ் இயக்கமும் செய்ய, அஷ்ரப் படத்தின் நாயகனாக அறிமுகமாகிறார்.இப்படத்தை இயக்கும் பிரபு யுவராஜ், மணிரத்னம், செல்வராகவன் வரிசையில் யாரிடமும் உதவியாளராக பணியாற்றிய அனுபவம் இல்லாதவராம். திரைப்படங்களைப் பார்ப்பதே ஒரு பெரிய அனுபவம் என்கிறார். வீட்டில் மட்டும் இரண்டு லட்சம் படங்களின் டிவிடிக்கள் வைத்திருக்கிறாராம். படங்களைப் பார்த்தே பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என்கிறார்.


இப்படத்திற்கு ராஜ் ஆரன் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். பல மலையாளப் படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த தேசிய விருது பெற்ற பூமிநாதனின் மகன் பிரேம் பூமிநாதன் இந்த படத்தில் எடிட்டராகப் பணியாற்றுகிறார்.


அஷ்ரப், அதிதி செங்கப்பா, லாரன்ஸ் ராமு, ஜெ.பி. ஜெய், ரவி பிரகாசம் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.


படத்தைப் பற்றி இயக்குனர் பிரபு யுவராஜ் கூறுகையில்,


‘‘ர’ தமிழ்ல ‘பறிமுதல், அபகரித்தல்’ – னு அர்த்தம். நானும், ஹீரோவும் விமான பைலட்…இரண்டு பேரும் சேர்ந்துதான் கதை எழுதினோம்.


இந்த படத்தை நம்மளால பண்ண முடியுமான்னு முதல்ல யோசிச்சோம். ஹீரோவை மையமா வச்சி எழுதப்பட்ட கதை. ஸ்கிரிப்ட் மேல இருக்கிற நம்பிக்கையில இந்த படத்தை உருவாக்கினோம்.


மொத்தமா பிரண்ட்ஸா சேர்ந்து பண்ண படம். தயாரிப்பாளர் அமீன் எங்க நண்பர்தான். இந்த படம் ஒரு ஃபேன்டஸி த்ரில்லர். இரண்டு மணி நேர படத்துல, ஒவ்வொரு 15 நிமிஷத்துக்கும் படத்தோட ‘ஃபீல்’ மாறிக்கிட்டேயிருக்கும். அடுத்து என்ன நடக்கம்னு கண்டுபிடிக்க முடியாது.கொஞ்சமா கிராஃபிக்ஸ் சேர்த்திருக்கோம். ஒரே ஒரு பாட்டு, ஆனால் சிடி-ல ஐந்து பாடல்கள் வச்சிருக்கோம்.ஹீரோவை ஏதோ ஒண்ணு அபகரிக்க ட்ரை பண்ணுது. அதுதான் படத்தோட கதை. ஒரு விஷயத்தை ஹீரோ தப்பா பண்ணப் போக, அவரை அபகரிக்க ஒரு ‘சக்தி’ முயற்சி செய்யுது. அந்த சக்தியை அமானுஷ்யம்னு வச்சிக்கலாம்.இப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டால், த்ரில்லர் படத்தைப் பார்க்கிறதுல த்ரில்லிங்கே இருக்காது. இப்பவே முழு கதையையும் சொல்லிட்டால் சுவாரசியம் இருக்காது. ஆனால், படத்தைப் பார்த்தால் நிச்சயமா ஒரு வித்தியாசமான படத்தைப் பண்ணியிருக்கோம்கற உணர்வு ரசிகர்களுக்கு உருவாகும்,” என்றார் இயக்குனர் பிரபு யுவராஜ்.


எல்லார் மனசையும் ‘ர’ பண்ணிடுவாங்க போல இருக்கே…

 
3  ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்’ படம் திரை காண தயாராக உள்ளது. இந்தப் படத்தை வீரா இயக்கி உள்ளார். “ஒரு கிரிக்கெட் போட்டியின் கடைசி கட்டத்தில் ஓர் அணி வெற்றி பெற 4 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. மீதமிருப்பதோ ஒரே பந்து, ஒரே விக்கெட். இத்தகைய பரபரப்பான நேரத்தில் ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் சம்பவம்தான் இப்படத்தின் கதைக் கரு,” என்கிறார் வீரா.இதில் வினய் கிருஷ்ணா, லொள்ளு சபா ஜீவா, ஹாஷிகா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரைசிங் சன் ஃபிலிம்ஸ் சார்பில் எச்.என்.கவுடா இப்படத்தை தயாரித்துள்ளார். அண்மையில் பாடல் வெளியீடு முடிந்துள்ள நிலையில் படம் விரைவில் வெளியாகிறது. “நா. முத்துக்குமார், சினேகன், கோசி எழுதிய பாடல்களுக்கு கார்த்திக் நல்லமுத்து இசையமைத்துள் ளார். பாடல்கள் இளையர்களை ஆட்டம்போட வைக்கும்,” என்று அடித்துச் சொல்கிறார் வீரா.

 
4 அழகிய பாண்டிபுரம் - தாய்மண் புரொடக்ஷன் சார்பில் ந.கிருபாகரன் தயாரிக்கும் படம் ‘அழகிய பாண்டிபுரம்’. இதில் நாயகனாக புதுமுகம் இளங்கோ, நாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கின்றனர். ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, பஞ்சு சுப்பு, மீராகிருஷ்ணன், பாத்திமாபாபு, யுவராணி, கிரேன் மனோகரர், முத்துக்காளை, சிசர் மனோகர், நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை ந.ராயன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை நேசிக்க வேண்டும். நட்பாக இருக்க வேண்டும். ஈகோவினால் அவர்களுடன் பகையை உருவாக்க கூடாது என்ற கருத்தை மையமாக வைத்து காதல் படமாக தயாராகிறது.

இதன் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதிகளில் நடக்கிறது. இளங்கோவுடன் கவர்ச்சி நடிகை ரிஷா இணைந்து ஆடும் ஒரக்கண்ணாலே உத்து உத்து பாத்து என்ற பாடல் காட்சியை கிளுகிளுப்பாக படமாக்கியுள்ளனர். கட்டழகி நானப்பா, கொட்டிவச்ச தேனப்பா என்ற பாடலில் இளங்கோவுடன் இணைந்து இந்தி நடிகை ஆக்னஸ் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

ஒளிப்பதிவு: அகிலன், இசை: பரத்வாஜ், பாடல்: பா.விஜய், நா.முத்துக்குமார், விவேகா, எடிட்டிங்: சுரேஷ்அர்ஸ், நடனம்: சிவசங்கர், அசோக் ராஜ், ஜாய்மதி, ஸ்டண்ட்: சூப்பர் சுப்பராயன். 
 

5 நாங்கெல்லாம் ஏடாகூடம் - குருந்துடையார் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’.  R.விஜயகுமார் இயக்கத்தில் சார்லஸ் மெல்வின் இசையமைப்பில் மனோஜ் தேவதாஸ், வீணா நாயர், ஜார்ஜ் விஜய், விசாகர், ராஜேஷ், பாலாஜி, ஹென்சா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனரான R.விஜயகுமார், இயக்குனர்கள் வடிவுடையான், நகுலன் பொன்னுசாமி, சிவா ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குனர் R.விஜயகுமார் கூறியதாவது, “நாங்கெல்லாம் ஏடாகூடம்’ என தலைப்பு வச்சதுக்குக் காரணம் ஹீரோவோட கேரக்டர்தான். ஹீரோ எதை செஞ்சாலுமே ஏடா கூடமாவே செய்வாரு. அவர் குரு நாதர் என்ன சொல்றாரோ, என்ன நினைக்கிறாரோ அதைச் செய்யாம, அதுக்கு ஏடாகூடமா செய்வாரு. அதுதான் படத்தோட தலைப்புக்குக் காரணம். முழுக்க முழுக்க வட சென்னையிலயே நடக்கிற கதை. சென்னை மக்கள் அதிகமா பயன்படுத்தற வார்த்தை ‘ஏடா கூடம்’. அதுவும் படத்துக்குப் பொருத்தமா அமைஞ்சிருக்கு. ‘பாக்சிங்’ விளையாட்டுதான் படத்தோட மையக் கரு. வட சென்னையில நடந்த ஒரு பாக்சிங் மாஸ்டரோட உண்மைக் கதைதான் இந்த படம். பொதுவா, பாக்சிங்ல ஜெயிச்சி பெரிய ஆளாகிட்டாங்கன்னா, அவங்களைப் பார்த்து ஊரே பயப்படும். ஆனால், அதை பலரும் ரவுடியிசத்துக்குத்தான் பயன்படுத்துவாங்க. ஆனால், படத்துல வர்ற பாக்சிங் மாஸ்டர், பாக்சிங்கை ஒரு விளையாட்டால் பார்க்காம ஒரு கலையா பார்க்கிறாரு, தர்மமா பார்க்கிறாரு. இந்த கலை பலருக்குப் போய்ச் சேரணும்னு நினைக்கிறாரு. வாழ்க்கையில எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இந்த பாக்சிங் கத்துக் கொடுக்கும்னு சொல்றவரு.

படத்துல ஹீரோயினா நடிக்கிறவங்க வீணா நாயர். இவங்க கேரளாவுல பிரபலமான விளம்பர மாடல். படத்துல ஒரு சாப்ட்வேர் இன்ஜினயரா நடிக்கிறாங்க.

இந்த படத்துக்காக வட சென்னை பகுதியான ராயபுரம், காசிமேடு, எர்ணாவூர், திருவொற்றியூர் ஆகிய இடங்கள்ல படப்பிடிப்பு நடந்தது. யாருமே போகாத பல இடங்களுக்குப் போயி படமாக்கியிருக்கிறோம்.

அது மட்டுமில்லாம பாக்சிங், வட சென்னை பகுதியில எப்படி நடந்ததோ அதை அப்படியே யதார்த்தமா படமாக்கியிருக்கிறோம். உதாரணமா பாக்சிங்ல கலந்துக்கிறவங்களுக்கு கையில கிளவுஸ் கூட இருக்காது. வெறும் ‘காடாத் துணியை’தான் கிளவுஸ் மாதிரி சுத்திக்கிட்டு சண்டை போடுவாங்க. இப்படிப் பல விஷயங்களை பார்த்துப் பார்த்து செஞ்சிருக்கோம்,” என்கிறார் இயக்குனர் விஜயகுமார். படம் விரைவில் திரைக்கு வெளிவர உள்ளது.தொழில்நுட்பக் கலைஞர்கள்

தயாரிப்பு நிறுவனம் – குருந்துடையார் புரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பாளர் – நிர்மல் தேவதாஸ்
இயக்கம் – R.விஜயகுமார்
இசை – சார்லஸ் மெல்வின்
பாடல்கள் – இளைய கம்பன், லோகன்
ஒளிப்பதிவு – சரவணன் பிள்ளை
படத்தொகுப்பு – தேவராஜ்
கலை – கலை முருகன்
சண்டைப் பயிற்சி – மிரட்டல் செல்வா
நடனம் – ராபர்ட்
தயாரிப்பு மேற்பார்வை – வேல் மணி
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
6  பகடை  பகடை -
காதலிக்கும் போது பூ கொடுப்பார்கள்... அழகான பரிசு கொடுப்பார்கள் ஆனால் துப்பாக்கியை காட்டி மிரட்டி காதலிக்கிறான் கதாநாயகன். பகடை பகடை என்ற படத்தில்தான் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது. இது காமெடி படம் என்று கூறினாலும் போட்டோக்களைப் பார்த்தால் சீரியஸ் படம் போலவே தெரிகிறது.சூர்யா, ஜோதிகாவை வைத்து ‘பேரழகன்' படத்தை இயக்கிய சசிசங்கர் இயக்கும் படம் ‘பகடை பகடை'. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள திலீப் குமார்தான் இந்த படத்தின் நாயகன். திவ்யா சிங் நாயகியாக நடிக்கிறார்.
7 நட்பின் நூறாம் நாள் -

சென்னை : ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில் இ.பாலசுப்பிரமணி, ஜி.ஆர்.உஷாரவி தயாரிக்கும் படம், ‘நூறாம் நாள்’. விஜயசிரஞ்சீவி, சாய்னா, மிருதுளா, ஜாக்குவார் தங்கம் நடிக்கிறார்கள். ராஜாதேசிங்கு இயக்குகிறார். ராஜா ஒளிப்பதிவு. முராள் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் சங்க பொருளாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட, இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன் பெற்றுக் கொண்டார். விழாவில் பெப்சி செயலாளர் ஜி.சிவா, இயக்குனர்கள் வி.சேகர், பேரரசு, லியாகத் அலிகான், ஆர்.வி.உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படம் பற்றி தேசிங்குராஜா கூறும்போது, ‘நண்பனுக்கு ஏற்படும் கொடுமையால் சைக்கோவாகும் ஹீரோ, நட்புக்கு துரோகம் செய்பவர்களை அழிப்பார். அப்படிப்பட்டவன் திடீரென ஒரு குடும்பத்தை அழிக்கிறான். அது ஏன் என்பது கதை. ஆக்ஷன், த்ரில் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்’ என்றார். 


8 பிரசாத்-  இது  பற்றி  கூகுளில்  தேடு தேடுனு தேடியும்  விபரம்  கிடைக்கலை 


9 மணம் கொண்ட காதல்  -


திருமணத்திற்கு முன்னால் காதலிப்பது மட்டும் காதல் அல்ல. கல்யாணத்திற்குப் பின் காதலிப்பது தான் உண்மையான காதல் என்பதை உணர்த்துவது தான் "மணம் கொண்ட காதல்" படத்தின் கதை.


ரித்திஸ் ஹரிஸ் மூவீஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும் "மணம் கொண்ட காதல்" என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . இப்படத்தை P.முத்துராமலிங்கம் தயாரிக்கிறார்.


இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சமீபத்தில் நடைபெற்றது. இது மனம் இல்ல. மணம்... வாசனை, ஸ்மெல்' என்று நாலாவகையிலும் போராடி தலைப்பில் இடம் பெற்ற 'மணம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் சொன்னார்கள்.
 

10  ZOMBIE NIGHT
A quaint California town that comes under siege by zombies in this horror yarn directed by John Gulager (Feast, Piranha 3DD) and starring Anthony Michael Hall, Daryl Hannah, Shirley Jones, and Alan Ruck. ~ Jason Buchanan, Rovi
Rating:
R (for strong horror violence/gore, language, some sexuality and nudity)
Genre:
Horror , Comedy
Directed By:
,
Written By:
Keith Allan , Delondra Williams , Richard Schenkman
In Theaters:
On DVD:
Oct 16, 2003
Runtime:
காதலிக்கும் போது பூ கொடுப்பார்கள்... அழகான பரிசு கொடுப்பார்கள் ஆனால் துப்பாக்கியை காட்டி மிரட்டி காதலிக்கிறான் கதாநாயகன். பகடை பகடை என்ற படத்தில்தான் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது. இது காமெடி படம் என்று கூறினாலும் போட்டோக்களைப் பார்த்தால் சீரியஸ் படம் போலவே தெரிகிறது.
சூர்யா, ஜோதிகாவை வைத்து ‘பேரழகன்' படத்தை இயக்கிய சசிசங்கர் இயக்கும் படம் ‘பகடை பகடை'. 20 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள திலீப் குமார்தான் இந்த படத்தின் நாயகன். திவ்யா சிங் நாயகியாக நடிக்கிறார்.
- See more at: http://www.tamil.thecinemanews.com/2014/12/blog-post_63.html#sthash.lIH2P1Sk.dpuf

0 comments: