Tuesday, December 31, 2013

தூம் 3 - சினிமா விமர்சனம்




லாஜிக் பார்க்காத மேஜிக் ஆக்ஷ்ன், அமீர்கானின் அற்புத நடிப்பு, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யாவின் விறுவிறு இயக்கம், எச்சில் ஊற வைக்கும் கத்ரீனா கைப்... சப்புக் கொட்ட வைக்கும் பாதாம் பாலாக... தூம் 3

1990... சிகாகோவில் 'தி கிரேட் இண்டியன் சர்க்கஸ்' கம்பெனி நடத்தும் இக்பால் கான் (ஜாக்கி ஷெரப்). அவருடைய அனைத்து கலைகளையும் அறிந்த மகன் ஜாகீர் (அமீர்கான்). 'வெஸ்டர்ன் பாங்க் ஆப் சிகாகோவில் வாங்கிய கடனுக்காக, நெருக்கும் வங்கி அதிகாரி. தான் நேசிக்கும் சர்க்கஸ் கம்பெனி மூடப்படப் போவதைக் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் இக்பால்.



2013... இளைஞனான ஜாகிர், வெஸ்டர்ன் வங்கியின் ஒவ்வொரு கிளையாக கொள்ளை அடிக்கிறான். அதனால் வங்கி திவாலாகிறது. இந்தியாவிலிருந்து வரும் காவல் அதிகாரி ஜெய் தீக்ஷித் (அபிஷேக் பச்சன்), தன் உதவியாளன் அக்பர் அலியுடன் (உதய் சோப்ரா) ஜாகிரை வளைத்து பிடிக்க எடுக்கும் முயற்சிகள் மொத்த கதை. ஜாகிர் பிடிபட்டானா? ஜெய் வெற்றி பெற்றாரா? என்பது க்ளைமாக்ஸ்.



வீரன் ஜாகிராகவும், பலவீன சமராகவும் பட்டையை கிளப்பியிருக்கிறார் அமீர். அம்சமான வளைவுகளுடன் கத்ரீனா வரும்போதெல்லாம், திறந்த வாயை மூட முடியவில்லை ரசிகனால்! அபிஷேக்பச்சன், தான் அமிதாப்பின் வாரிசு என்பதை அமர்க்களமாய் நிரூபித்திருக்கிறார்.

பலே! உதய் சோப்ரா... 'இந்தி' சந்தானம் என்றாலும்... முதல் மார்க் 'ஸ்டண்ட்' மாஸ்டர்களுக்குத்தான். ஆரம்ப மோட்டார் சைக்கிள் துரத்தல், அபிஷேக்கின் ஆட்டோ சண்டை, செங்குத்தான வானுயரக் கட்டிடச் சுவர்களின் மேல் அமீர் அசத்தலாக ஓடி வரும் காட்சி என... திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள். சபாஷ்!


150 கோடிகளை செலவு செய்திருக்கிறதாம் தூம் 3, 1000 கோடி வசூலானால் ஆச்சர்யமில்லை.


மொத்தத்தில், 'தூம்-3' - 'தூள்'

Thanks - Dinamalar

0 comments: