Saturday, December 28, 2013

ஆம் ஆத்மிஅர்விந்த்கேஜ்ரிவால்-சில அதிர்ச்சித்தகவல்கள்

 

சமுதாயத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்; குழப்பவாதி, தேர்ந்தெடுக்க லாயக்கற்றவர் என்றெல்லாம் இதர கட்சியினரால் விமர்சிக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்க்க இடங்களைப் பிடித்து, டில்லியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளது. தன்னுடைய இந்த சாதனை மூலம், இதர கட்சிகளின் வாயை அடைத்துள்ளார். கெஜ்ரிவால்.

வழக்கமான அரசியலில் ஈடுபட்டு வட்டம், மாவட்டம் என்றெல்லாம் சுற்றித்தான் ஆட்சி பீடம் ஏற வேண்டும் என்ற நடைமுறையையும், அரசியல் வாரிசாக இருந்தால் மட்டுமே பதவியைப் பிடிக்க முடியும் என்ற அவலத்தையும் மாற்றி, சாதாரண ஒரு நபர், முதல்வர் என்ற நிலைக்கு உயர முடியும் என்ற சாதனையைப் படைத்தவர் கெஜ்ரிவால். நாட்டில் மாற்றம் வரவேண்டுமானால் இவரைப் போன்றவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். இவரைப்போன்றவர்கள் மேலும் உருவாவார்களா? மக்கள் அவர்களை ஆதரிப்பார்களா இவரும் இவருடைய கட்சியினரும் நடந்து கொள்ளும் விதத்தில்தான் உள்ளது.மேலும் டில்லியில் தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்து சாதனை படைத்தார். 1967ல் 3 முறை மேயராக இருந்த மத்திய அமைச்சர் எஸ்.கே.பாட்டீலைத் தோற்கடித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், 1977ல் இந்திராகாந்தியை தோற்கடித்த ராஜ்நாராயண் ஆகிய சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.


கொலைகாரர்கள் என்று விமர்சித்தவர் : இந்த அரசியல் கட்சிகள் தங்களை மாற்றிக் கொள்ளா விட்டால், மக்கள் அவர்களை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்கட்டுவதாக கூறும் கெஜ்ரிவால், பார்லிமென்ட் உறுப்பினர்கள் கொலைகாரர்கள்; கற்பழிப்பாளர்கள் என்று விமர்சித்தவர்; ஜன்லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால், பாதிக்ம் மேற்பட்ட மத்திய அமைச்சர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று பகிரங்கமாக கூறியவர்.


அதிகாரி முதல் அரசியல்வாதி வரை:

பொறியாளராக வாழ்க்கையைத் துவக்கி, அதிகாரியாக பொறுப்பேற்று, ஒரு தலைவரின் ( அன்னா ஹசாரே) தீவிர தொண்டராக மாறி, பின்னர் அவரிடமிருந்து விலகி தனிக் கட்சி துவக்கிய கெஜ்ரிவால், ஹரியானா மாநிலம் ஹிஷாரில், கோபிந்த் ராம் கெஜ்ரிவாலுக்கும் மற்றும் கீதா தேவிக்கும் இடையே, 1968ம் ஆண்டு ஆகஸ்டு 16ம் தேதி மகனாகப் பிறந்தவர்.1985ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த கெஜ்ரிவால், முதல் முயற்சியிலேயே, ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் வெற்றியடைந்து, ஐ.ஐ.டி. கோரக்பூரில், மெக்கானிக்கல் இஞ்ஜினியர் பட்டம் பெற்றார்.

இஞ்ஜினியரிங் படிப்பை முடித்த கையோடு, டாடா ஸ்டீல் நிறுவனத்தில், 1989ம் ஆண்டில் பணியில் சேர்ந்த கெஜ்ரிவால், 1992ம் ஆண்டில், அப்பணியை ராஜினாமா செய்து, சிவில் சர்வீசஸ் தேர்வில், தனது முழு கவனத்தையும் செலுத்தினார். முதல் முயற்சியிலேயே, அந்த தேர்விலும் வெற்றி பெற்று மத்திய அரசுப் பணியில் அமர்ந்தார். மத்திய அரசின் பணியில் இருந்தபோதிலும், அவரது கவனம் முழுவதும் சமூக விழிப்புணர்வு அடிப்படையிலான செயல்கள் மற்றும் தகவல் அறியும் உரிமை குறித்த விழிப்புணர்வை, அடித்தட்டு மக்கள் வரை கொண்டு செல்லுதல் உள்ளிட்டவைகளிலேயே மிகுதியாக இருந்தது.

தகவல் அறியும் உரிமை குறித விழிப்புணர்வை, அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்ற நடவடிக்கையை கவுரவிக்கும் விதமாக, 2006ம் ஆண்டில், ரமோன் மகசேசே விருதை, அர்விந்த் கெஜ்ரிவால் பெற்றார்.

ராம்லீலா மைதானம் முதல் சட்டசபை வரை: 


மத்திய அரசின் வருமான வரித்துறையில் இணை ஆணையராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவால், 2006ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அப்பணியையும் ராஜினாமா செய்து, முழு நேர சமூக சேவையில் களமிறங்கினார். ரமோன் மகசேசே விருதின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, அரசு சாரா அமைப்பினை உருவாக்கி, அதன்மூலம், பொதுமக்களுக்கு ஏற்படும் அன்றாட இன்னல்கள் குறித்து ஆராயும் நடவடிக்கைகளில் முழுமூச்சாக ஈடுபட்டார்.


இந்நிலையில், 2011ம் ஆண்டில், ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, காந்தியவாதியும், சமூக சேவகருமான அன்னா ஹசாரே நடத்திய மாபெரும் போராட்டத்தில், கெஜ்ரிவால் தன்னையும் இணைத்துக் கொண்டார். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்ட அன்னா ஹசாரே குழுவில், நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி, மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன் உள்ளிட்டோர்களோடு, கெஜ்ரிவால் தன்னையும் இணைத்துக் கொண்டார்.லோக்பால் மசோதா குறித்த விவகாரத்தில், மத்திய அரசு தங்களை ஏமாற்றுவதாக கெஜ்ரிவால் கருத்து கூறியதையடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், கெஜ்ரிவால், அரசியலில் நுழைந்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து பார்க்கட்டும் என்று கெஜ்ரிவாலுக்கு நேரடியாக சவால் விடுத்தனர். இந்நிலையில், அன்னா குழுவினருக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அக்குழுவிலிருந்து விலகிய அர்விந்த் கெஜ்ரிவால், 2012ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி "ஆம் ஆத்மி' என்ற கட்சியை துவக்கினார்.
கரி பூசினார்:


கெஜ்ரிவாலின் அரசியல் பிரவேசம் குறித்து பலர் எள்ளி நகையாடிய போதிலும், அதுகுறித்து, அவர் கவலை கொள்ளாமல், இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திலேயே, டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கினார். டில்லி சட்டசபை உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள், இம்மாதம் 4ம் தேதி வெளியானது. டில்லி மாநிலத்தில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 28 இடங்களில், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, தங்களின் நடவடிக்கைகள் குறித்து எள்ளி நகையாடியவர்களின் முகத்தில் கரியை பூசியது.

தொடர்ந்து 3 முறை டில்லி முதல்வராக பதவி வகித்த ஷீலா திட்சித்தை எதிர்த்து போட்டியிட்ட அர்விந்த கெஜ்ரிவால், 25,684 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல்வர் அலுவலகத்திலிருந்து மட்டுமல்லாது, அவரது தொகுதியிலிருந்தும் ஷீலாவை, கெஜ்ரிவால் வெளியேற்றினார்.

அரசியலில் முதன்முறையாக களம் கண்டுள்ள அர்விந்த் கெஜ்ரிவால், இமாலய வெற்றி பெற்று, டில்லி மாநிலத்தின் குறைந்த வயது முதல்வர் என்ற பெருமையை பெறுகிறார்.
 
 
நன்றி-தினமலர்
 
 
டெல்லியில், இனி ஊழல் அற்ற ஆட்சி நடைபெறும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல் உரையில் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். 


டெல்லி மாநிலத்தின் 7-வது முதல்வராக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றுக் கொண்டுள்ளார். 


பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் முதல் உரை ஆற்றிய முதல்வர் கெஜ்ரிவால், டெல்லியில் மக்கள் ஆட்சி அமைந்து விட்டது. 


டெல்லியில் இனி அதிகாரிகள் ஆட்சி செலுத்த மாட்டார்கள் மக்கள் தான் ஆட்சி செலுத்துவார்கள். மக்கள் கைகளில் அதிகரத்தை அளிக்கவே இந்த போராட்டத்தை ஆம் அத்மி மேற்கொண்டது. 


டெல்லியில் ஊழல் முற்றிலுமாக களையப்படும். ஊழலுக்கு எதிரான போராட்டம் மிகப் பெரியது. இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மக்கள் ஆதரவு வேண்டும். நாடு எதிர்கொள்ளும் பெரும் பிரச்சினைகளுக்கு கறை படிந்த அரசியல் தான் காரணம். 


ஆரம்பத்தில் அரசியலில் அடி எடுத்து வைக்க அண்ணா ஹசாரே எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவரிடம், அரசியல் நுழைந்தால் தான் அதில் இருக்கும் அசுத்ததை நீக்க முடியும் என்றேன். அதற்கேற்ப அரசியலை சுத்தப்படுத்துவோம் என்றார். 


மேலும், தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும், பெரிய கட்சிகள் கடைபிடிக்கும் அதிகார ஆட்சியை அப்புறப்படுத்தவே ஆம் ஆத்மி உதயமாகியுள்ளதால், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மென்மையான போக்கை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
ஆட்சிக்கு ஆசைப்படவில்லை ஆம் ஆத்மி:

 
டெல்லி சட்டமன்றத்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி மேல் ஆசை இல்லை. 


எனவே முடிவு என்னவாக இருந்தாலும் மகிழ்ச்சியே. மறு தேர்தலில் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகப்படியான பெரும்பான்மையை அளிப்பார்கள் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


நன்றீ- ததமி  இந்து

திருப்பூர் மாவட்டம் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் திறப்பு விழா அணைவரும் வருக...
Embedded image permalink
 

2 comments:

gopinath said...

Idhula Enna adhirchi thagaval irukku Mr. Senthil?

gopinath said...

Idhula Enna adhirchi thagaval irukku Mr. Senthil?