Thursday, December 19, 2013

SHERLOCK HOLMES - ஹாலிவுட் சினிமா விமர்சனம் ஆங்கிலப் படங்கள்ல நாவல் அல்லது காமிக்ஸ் புத்தகத்தை மையமா வச்சு வெளி வந்து கலக்கு கலக்கின படங்கள் நிறைய (NARNIA, TINTIN, SPIDERMAN, THE DAVINCI CODE இன்னும்...). அந்த வரிசைல ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வந்து கலக்கிய படம் தான் ஷெர்லக் ஹோல்ம்ஸ். இது ஒரு டிடெக்டிவ் டைப் கதை.

சரி அறிமுகம் போதும்... கதைக்கு வருவோம். ஒரு அபார திறமை கொண்ட தனியார் துப்பறியும் ஆய்வாளர். ஓர் அரசு மருத்துவர் இவர்கள் சேர்ந்து செய்யும் சாகசங்களே படத்தின் கதைக்கரு.ஓப்பனிங் ல ஒரு கிறுக்கன் மந்திரம் தந்திரம்னு ஒரு பொண்ண பலி கொடுக்க முயற்சி பண்றான். அத நம்ம ஹீரோக்கள் காப்பாத்தி அந்த கிறுக்கன ஜெயில்ல தள்ளிடறாங்க. அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுது.

அதுக்குள்ள படம் முடிஞ்சிருச்சா...? அப்டீன்னு பார்த்தா.. ஒரு டிவிஸ்ட்.. மரண தண்டணைய நிறைவேத்தறாங்க . அரசு மருத்துவர் கன்ஃபார்ம் பண்ணி ஆல் அவுட்டு சொல்றார்.அவனை புதைச்சிடறாங்க. ஆனா அடுத்த நாள் அவ்ன் கல்லறை உடைஞ்சு இருக்குது. அதுக்கப்புறம் அந்த ஊரு பெரிய பதவில இருக்கற ஆளுங்க எல்லாம் ஒவ்வொருத்தறா கொல்லப்படுறாங்க. இதை BLACK MAGIC னு நம்பறாங்க. ஆனா ஹீரோவும் டாக்டரும் ஒத்துக்கல. வில்லன் எப்பிடி தப்பிச்சான், உண்மையில் இது மந்திர தந்திரமா? இல்ல மனித சக்தியா? ஏன் பெரிய தலைவர்கள் கொல்லப்படறாங்க என்பதை சஸ்பன்ஸ் த்ரில்லராக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

படத்தின் முதல் ஹீரோ ஷெர்லக் ஹோல்ம்ஸ் கேரக்டரை உருவாக்கிய Arthur Conan Doyle அவர்களையே சாரும். இதுவரை யாரும் பார்க்காத அருமையான படைப்பு.அடுத்து திரைக்கதை வடிவம். ஆங்கிலத்துல பாத்தாலும் அனைத்து காட்சிகளும் குழப்பமில்லாமல் படமாக்கியது.சில சமயங்களில் அவர்கள் பேசும் வசனங்களும் தெளிவாகப் புரிந்தன.

அடுத்து மிக முக்கியமான ப்ள்ஸ் பாயிண்ட் 
ஐயரன் மேனில் கலக்கியவர் இதில்  ஷெர்லக் ஹோல்ம்ஸாகவே வாழ்ந்து இருக்கிறார். இவரைத் தவிற வேறு யாரை புக் செய்து இருந்தாலும் சொதப்பி இருக்கும். மருத்துவர், ஹீரோயின் , வில்லன் என பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான கேரக்டர். இயக்குநருக்கு ஒரு சபாஷ் .....
டாப் டக்கரு...:

1. படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண்னை காப்பாற்றும் காட்சி. ஸ்டண்ட் அமைப்பு பக்கா.

2. ஏதோ ஒரு ஃபேண்டசி படம் போல ஆரம்பித்து பின்னர் த்ரில்லராக மாறி சூடு பிடிக்கும் திரைக்கதை.

3. ஒரு குத்துச்சண்டை காட்சியில் ஹீரோ சில விநாடிகளில் திட்டமிடுவதை விஸுவலாக காட்டி அடுத்த விநாடி ப்ளான் பண்ணியதை அப்பளை செய்யும் காட்சி. இது வரை திரையில் பயன்படுத்தப்படாத புதுமை .

4. இத தமிழ்ல எடுத்திருந்தா பில்டப்,பஞ்ச் டயலாக் என நாஸ்தி பண்ணியிருப்பார்கள். ஆனால் ஹாலிவுட்டில் அப்படி இல்லை. எல்லம் எயதார்த்தமாக படமாக்கியிருக்கிறார்கள்.

5.பெரிய ஹீரோ என்ற பில்ட் அப் இல்லாமல் ஆர்ப்பாட்டமில்லாத ஹீரோவின் நடிப்பு.

6. ஒவ்வொரு கொலை நடக்கும் போதும் ஃப்ரேமில் ஒரு காகத்தை காட்டி ப்ளாக் மேஜிக் என ஆடியன்ஸ்க்கு குறிப்பால் உணர்த்தியது.

7. படத்திற்கு தேவையான பின்னனி இசை. ஹாலிவுட்ட அடிச்சுக்க முடியாது.

8. படத்தின் கலரிங் சூப்பர். ஒரு வித டார்க் கலந்த பச்சை நிறம். கதை நடக்கும் காலகட்டத்திற்கு ஏற்ப  ஃபர்பெக்ட்டாக பொருந்துகிறது.

9. பக்கா காஸ்ட்யூம் வடிவமைப்பு.

10. இறுதிக்காட்சி பெரிய பலம்.க்ளைமேக்ஸ் காட்சியில் ஹீரோ பேசும் வசனங்கள் பொறி பறக்கிறது (தீப்பொறி தான்...). ஆடியன்ஸ்க்கு புரிய வைக்கறதுக்காக இது எல்லாம் ப்ளாக் மேஜிக் இல்ல-னு க்ளைமேக்ஸ்ல ஹீரோ கொடுக்கும் விரிவுரை அறிவியலில் இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கிறதானு வியக்க வைக்கிறது. ( இத நம்மாளுங்க எல்லாம் அந்த காலத்துலயே கண்டுபிடிச்சுட்டாங்க)


டண்டானா டர்ணா.....

1. லம்ப்பா பெரிய குறைகள் என் கண்ணுக்கு தெரியவில்லை. இருந்தாலும் தொழில் தர்மம்னு இருக்கில... ஹீரோயின் ஏன் திடீர்னு நல்ல பிள்ளையா மாறிடறாங்க? எத்தனை தமிழ் படத்துல பார்த்திருப்போம்.

2. சீன் வைக்க சான்ஸ் இருந்தும் ஏன் வைக்கல? இதனை சி.பி. அவர்கள் வன்மையாக கண்டிக்கிறார். ( நான் கண்டிக்கவில்லை)

3. பேசாம் வில்லன எரிச்சிருக்கலாமே...? ( கிறிஸ்டியன்னு லாஜிக் எஸ்கேப்)


IMDB Rating 7.5/10

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். மருந்துக்கு கூட வன்முறை காட்சிகளோ பிட்டு சீனோ இல்லை. பக்கா குடும்ப படம். 

இந்த விமர்சனத்தை வழங்கியவர் என் அக்கா பையன் கார்த்திக். மேற்பார்வை சி.பி.


1 comments:

விஸ்வநாத் said...

// மருந்துக்கு கூட வன்முறை காட்சிகளோ பிட்டு சீனோ இல்லை. பக்கா குடும்ப படம்.

இந்த விமர்சனத்தை வழங்கியவர் என் அக்கா பையன் கார்த்திக் //

மாமாவுக்கு ஏத்த மாப்பிள்ளை. வாழ்க உங்கள் கலைத்தொண்டு