Wednesday, December 11, 2013

Miss Lekha Tharoor Kaanunnathu (2013) (Malayalam)- சினிமா விமர்சனம்

ஹீரோயின் ஒரு டி வி தொகுப்பாளினி கம் கேம் ஷோ நடத்துபவர் .  . பல திறமைகள் உள்ளவர். ஆனா விழி ஒளி இழந்தவர் . இவருக்கு கண் ஆபரேஷன் பண்ணி  பார்வை கிடைச்சிடுது . அதுக்குப்பின் தான் அனர்த்தமே ஆரம்பிக்குது . அவர் பார்வைக்கு சில அபூர்வமான அரிதான காட்சிகள் காணக்கிடைக்குது . அதாவது மரண தேவன் யாரை வந்து அழைச்சுட்டு போறாரோ அந்த சாவு முன் கூட்டியே அவருக்குத்தெரிஞ்சுடுது . 

 பலரிடம் சொல்லியும் அதை யாரும் நம்பலை .டாக்டர் கிட்டே காட்டியும்  நோ யூஸ் .  பேராநார்மல் ஆக்ட்விட்டி  , அதீத கற்பனை அப்டின்னு ஏதேதோ சொல்லி அவரை தட்டிக்கழிச்சிடறாங்க  அதுக்குப்பின் தான் தனக்கு கண் தானம் கொடுத்த பொண்ணு யார்? அவர் வாழ்க்கைல நடந்த சம்பவங்கள்  தான் இதுக்குக்காரணம்னுயூகிச்சு  அதைப்பற்றிய தேடலில் இறங்கறாங்க .


அந்தப்பொண்ணு யார்?  அந்தப்பொண்ணு ஏன் தற்கொலை பண்ணிக்குச்சு ? அல்லது அது கொலையா?  என்பதெல்லாம்  மீதித்திரைக்கதையில் காண்க. 

 சும்மா சொல்லக்கூடாது . திரைக்கதையில் கன கச்சிதமான பொறுமையுடன்  அழகா சொல்ல வந்த விஷயத்தை க்கோர்வையா சொல்வதில் இயக்குநருக்கு வெற்றி


மீரா ஜாஸ்மின் தான் மெயின் ஹீரோயின்  . ரன் படத்தில் துடிப்பான , இளமையான அழகிய நடிப்பை வழங்கிய இவர் இந்த கேரக்டரில் மிக அழகாகப்பொருந்தியதில் ஆச்சரியமே இல்லை . ஆனால் திகில் காட்சிகளில்  இவரது அழகு முகத்தில் நளினி , ஜீவிதா அளவுக்கு  பய ரேகைகளை ஓட விட்ச முடியாமல் போனது அவர் தவறல்ல . பிரம்மனின் தவறு . 


டாக்டராக வருபவர்  நடிப்பு கச்சிதம் . இடைவேளைக்குப்பின் வரும் அந்த லேடி கேரக்டருக்கு யாராவது அனுபவ நடிகையை போட்டிருக்கலாம் . ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஆட்கள் மிரட்டி இருப்பார்கள் . 


ஒளிப்பதிவும் , இசையும் இந்த மாதிரி  த்ரில்லர் படத்துக்கு முக்கிய வேர்கள் . ஒளிப்பதிவு ஓக்கே , ஆனா இசை , பின்னணி இசை  ரொம்ப சாதாரணமாக இருப்பது அதிர்ச்சி .  டெம்ப்ளேட்டாக இருக்கிறது .  


 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1.  போஸ்டர் டிசைன் பக்கா . த மோஸ்ட் வாண்ட்டட் & எக்ஸ்பெக்டட் சைக்கோ த்ரில்லர் ஆஃப் த இயர் 2013 என பிரம்மாண்டமாக கேரளா பூரா ஒட்டி கவனம் கவர்ந்து விட்டார்கள் .  மம்முட்டி , மோகன் லால் படங்களுக்கு இணையான விளம்பரங்கள் , முக்கியத்தியேட்டர்களை வளைத்துப்போட்ட லாவகம்  சபாஷ் 


2.  ஹாஸ்பிடலில்  வயசான லேடி எமனுடன் போகும் காட்சி ,  சின்னப்பையன் இறந்த பின்னும்  பந்து விளையாடும் காட்சி  , என பல காட்சிகள் காட்சி அமைப்பு , எடிட்டிங்க் , ஒளிப்பதிவு என டெக்னிக்கலாக மிரட்டும் லாவகம்   அருமை 

இடைவேளைக்குப்பின் வரும் காட்சியில்  மீரா ஜாஸ்மின் கண்ணாடியில் தன் முகத்தைப்பார்த்து விட்டு இது நான் இல்லை, இது யார்? என அலறும் காட்சி ரத்தத்தை உறைய வைக்கும் அபாரமான காட்சி .சஸ்பென்ஸ் காட்சியை எப்படி பிரசண்ட் பண்னனும் என்பதற்கு அதைத்தொடர்ந்து வரும் காட்சிகள் நல்ல உதாரணம் 


4 மீரா ஜாஸ்மினுக்கு கண் மங்கலாகத்தெரியுது என்பது காட்சியால் இயக்குநரும் , ஹீரோயினும் உணர்ந்திய விதம் அருமை  


 இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள் 

 1. ஊமை விழிகள் , நீ வருவாய் என முதற்கொண்டு பல தமிழ்ப்படங்களில் இயக்குநர்கள் செய்த அதே தவறை இந்தப்பட இயக்குநரும்  செய்கிறார் . அதாவது  விழி ஒளி இழந்தவர்க்கு இரு கண்களும் தானம் வழங்கப்படும்போது ஒரே நபரின் இரு கண்கள் பொருத்த மாட்டார்கள் . வேறு வேறு இரு நபரின் தலா ஒரு கண் தான் பொருத்தப்படும் . அந்த விதியை படத்தில்  மீறி இருக்காங்க 

2 . அதே போல் கண் தானம் செய்தவர் முழு விபரம் எக்காரணம் கொண்டும்  சம்பந்தப்பட்ட ஆபரேஷன் செய்து கொண்ட நபருக்கு தெரிவிக்கப்படக்கூடாது . 


3 ஓப்பனிங்க் சீன் ல  மீரா ஜாஸ்மின்  கால் மேல கால் போட்டு தெனாவெட்டா  செய்யும் கேம் ஷோ எடுபடலை . இயற்கையில் உயரம் குறைந்த அவர் ஜைஜாண்டிக் பர்சன் போல் ஆக்ட் கொடுப்பது தேவை இல்லாதது .  அதே போல் படத்தின் கதைக்கு அந்த கேம் ஷோ சீன் அநாவசியமே

4  டாக்டராக வருபவர்  ஹீரோயினுடன் சும்மா வாக் போவது , அவர் தடுக்கும்போது தாங்கிப்பிடிப்பது , இருவருக்கும் காதல் வருமா? என ஆடியன்சை எதிர்பார்க்க வைப்பது இந்த சீன்களும் ட்ரிம் செய்யப்பட வேண்டிய தேவை இல்லாத காட்சிகளே! 

5 போஸ்டர் டிசைனில் ஹீரோயின் விழி ஒளி இழந்தவர் என்பதை உணர்த்த கூலிங்க் கிளாஸ்  உடன் கையில்  ஸ்டிக்குடன் நடக்கும் காட்சியை காட்டி இருந்தால் இன்னும் டெம்போ எகிறி இருக்கும். நார்மல் மீரா ஜாஸ்மினையே காட்டி இருக்கிறார்கள்   

நச் வசனங்கள் 


1.  ஒருவர் அனுபவிக்கும் வேதனையை இன்னொருத்தருக்கு சும்மா வாய் வார்த்தையா சொன்னா 100% அவருக்குப்புரியாது . அவரும் அந்த கஷ்டத்தை அனுபவிச்சாத்தான்  புரியும் 
 
 
எனக்குப்பார்வை இல்லாத போது என்ன நிம்மதி கிடச்சதோ அது இப்போ பார்வை கிடைச்ச பின் இல்லை 

3 நாளைக்கு நடக்க இருக்கும் மரணத்தை இப்போ சொன்னா சூன்யக்காரி, பிசாசுன்னு சொல்றாங்க மதி கெட்ட ஜனங்க . இதே ஒரு ஆண் சொல்லி இருந்தா கொண்டாடி இருப்பாங்க , அவன் சம்பாதிச்சு இருப்பான் 


சி பி கமெண்ட் - மிக கண்ணியமாக அனைவரும் பார்க்கும் தரத்தில் எடுக்கப்பட்ட நல்ல த்ரில்லர் இது . ஏதோ ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டிருக்கிறார்கள் என்றாலும் இது கவனிக்கத்தக்கப்படைப்பே 


 ரேட்டிங்க் = 2.75 /5 


 கேரளா - கொல்லம் பிரனவம் தியேட்டரில் படம் பார்த்தேன் . பால்கனியே 75 ரூபா தான் , ஏ சி , டி டி எஸ் எல்லாம் அருமை , சீட்கள் கூட சூப்பர் 


Released on December 06 2013
Director: Shajiyem
Producer: K.K.Suresh Chandran
Music Director: Ramesh Narayanan
Cast: Meera Jasmine, Basil, Suraj Venjaramoodu, Nandu, Geetha Vijayan8 comments:

Muraleedharan U said...

THE EYE..remake again remake

சேக்காளி said...

//சீட்கள் கூட சூப்பர்//
எந்த சீட்?

Aryan said...

Ithu oru english movie copy, jessica alba's movie. i can remember the name.

Aryan said...

Movie name is "The Eye"
http://www.imdb.com/title/tt0406759/

Unknown said...

This is a remake of Jessica Alba's Mvie "The Eye" which was a remake of Hong Kong film "Jian Gui".
Always original is the classic.

sathees said...

பாஸ் நீங்க சொல்ரத பாத்தா THE EYE என்ற HONG KONG படத்த அப்படியே சுட்டுட்டாங்க போல இருக்கு.
இந்தாங்க அந்த லிங்.: http://www.youtube.com/watch?v=7CDFDD4kFtI

KaviIni Imaya said...

Apdiye Same story copied from the film "ATHU" in tamil starring SNEHA.
1. Sneha also Blind.
2. In the flashback the girl who donated eye has capablity of seeing death of people befor it happens
3. Same doctor always going with sneha.

everything same. 100% copy of the film "ATHU"

'பரிவை' சே.குமார் said...

சுட்ட படமா இருந்தாலும் பார்க்கலாம்ன்னு உங்க விமர்சனம் சொல்லுது...
அருமையான விமர்சனம் அண்ணா...