Saturday, December 14, 2013

கூட்டணி அமைக்க டெல்லி கேப்டன் கெஜ்ரிவால் விதித்த 18 நிபந்தனைகள்

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தர தயார் என அறிவித்துள்ள நிலையில், கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 18 நிபந்தனைகள் விதித்துள்ளார். இன்று காலை டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முடிவு எடுக்க 10 நாட்கள் அவகாசம் கோரியுள்ளதாக தெரிவித்தார். 


தவிர ஆம் ஆத்மிக்கு ஆதரவு தர தயார் எனக் கூறியுள்ள காங்கிரஸுக்கும், எதிர்கட்சியாகவே இருக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ள பாஜக-வுக்கும் தனித் தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். 


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்குக்கும் அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 


அந்தக் கடிதத்தில் அவர் 18 நிபந்தனைகளை விதித்திருக்கிறார். அவை: 

 
1.டெல்லியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் சிவப்பு சுழல் விளக்கு கார்களை பயன்படுத்தக் கூடாது, பகட்டான பங்களாக்களிலும் வாழக் கூடாது. 


2.அண்ணா ஹசாரே வலியுறுத்துல் வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். 3.டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். 4. டெல்லியில் மின்வாரியம் தனியார் மயமாக்கப்பட்ட நிலையில், அந்நிறுவனங்கள் தனிக்கைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் நிறுவனங்கள் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டும். 5. மின் மீட்டர்கள் சோதனை செய்யப்பட வேண்டும். 6. டெல்லியில் ஒவ்வொரு நபருக்கும் நாள் ஒன்றுக்கு 220 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். ஆனால் அந்த தண்ணீர் எங்கே? 7. டெல்லியில் உள்ள காலனி குடியிருப்புகள் சட்டப்பூர்வமாக்கப் படுவதோடு அவை முற்றிலுமாக சீரமைக்கப்பட வேண்டும். 8. குடிசைகளில் வாழும் மக்களுக்கு நிரந்தர குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்9. ஒப்பந்த அடிப்படையில் பணி செய்பவர்களுக்கு நிரந்தர வருமானம் தரும் வேலை உத்தரவாதம் அளித்திட வேண்டும். 


10. சாமான்ய வியாபாரிக்கு கூட அடிப்படை கட்டமைப்பு, சாலை, தண்ணீர், மின் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். 


11. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு கூடாது. 


12. கிராமப்புற விவசாயிகளுக்கு வசதிகளும், மான்யங்களும் தர வேண்டும். 


13. டெல்லியில் 500 அரசு பள்ளிகள் திறப்பது, தனியார் கல்வி நிறுவனங்களில் நண்கொடை வசூலிப்பதை தடுப்பது. இவற்றின் மீது காங், பாஜக தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். 


14. மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மருத்துவமனைகள் திறக்க வேண்டும். 


15. மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் 3 மாதங்களுக்குள் பைசல் செய்ய வேண்டும். 


16.அனைது வழக்கு விசாரணைகளும் 6 மாத காலத்துக்குள் முடித்து நீதி வழங்க கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். கூடுதலாக நீதிபதிகளையும் நியமிக்க வேண்டும். 


17. டெல்லி முனிசிபல் அமைப்பு தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமா என்பது தெரிய வேண்டும். 


18. சில பிரச்சினைகளில் பொதுமக்களே கூடி முடிவெடுக்க அனுமதி அளிக்க வேண்டும். 


இப்படி காங்கிரஸ், பாஜக-வுக்கு கூட்டணி அமைக்க சில நிபந்தனைகள் விதித்துள்ளார். 


காங்கிரஸ், பாஜக கருத்து: 

 
இந்நிலையில், ஆம் ஆத்மி கடிதம் குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கெஜ்ரிவால் கடிதத்தை என் பார்வைக்கு அனுப்பியுள்ளார். அக் கடிதத்தை முழுமையாக ஆராய்ந்து, இன்னும் ஓரிரு தினங்களில் பதில் கடிதம் அனுப்புவோம் என்றார். டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கான வழிகளை ஆராய்வதை விடுத்து பிற கட்சிகளை ஆம் ஆத்மி விமர்சிப்பது உச்சபட்ச கர்வம் என பாஜக சாடியுள்ளது. 


 மக்கள் கருத்து 

 • இதே நிலைமையில் கடைசி வரை இருங்கள் நீங்கள் அடுத்த தேர்தலில் முதல் அமைச்சர் அவது உறுதி நங்கள் உங்கள் பக்கம்.
  about 19 hours ago ·   (14) ·   (2) ·  reply (0)
 • V.Shanmuganathan
  திரு.கேஜ்ரிவாளின் நிபந்தனைகள் " போகாத ஊருக்கு வழி கேட்டதுபோல" இருக்கிறது.மற்ற கட்சிகள் ஆட்சி செய்வது போல இல்லாமல் வித்யாசமாக செய்யவேண்டுமென நினைப்பது தப்பல்ல,ஆனால் எல்லாமே with in the constitution னாக இருக்கவேண்டும். திரு.கேஜ்ரிவாள் அவர்களின் நோக்கம் நான் உள்பட எல்லோராலும் பாராட்டப்படவேண்டியதே,ஆனால் மக்களுக்கு இவர் நினைத்தது போல நல்லது செய்ய முதலில் இவர் அதிகாரத்திற்கு வரவேண்டும்,அதற்க்கு இவர் டெல்லியில் ஆட்சியமைக்கவேண்டும்.அதைவிட்டுவிட்டு ஆகாயத்தில் கோட்டை கட்ட நினைத்தால் முடியுமா?
  about 18 hours ago ·   (3) ·   (2) ·  reply (0)
 • andal
  போகாத ஊருக்கு வழி கேட்பது போல் உள்ளது ஒன்று ஆட்சி அமைக்கவேண்டும் அல்லது பா ஜ கட்சி ஆட்சி அமைய அதரவு தரவேண்டும் மீண்டும் தேர்தல் வந்தால் ஆம் ஆத்மி கட்சி நிலை கேள்வி கேள்விகுரியகிவிடும்
  about 18 hours ago ·   (2) ·   (2) ·  reply (0)
 • Kanagaraj
  ஆம் ஆத்மி கட்சியிடம் கோரிக்கைகள் இருப்பது போல், அக்கோரிக்கைகளுக்கான திட்டங்கள் எதுவும் அவர்கள் முன்வைக்கவில்லை. இக்கட்சியின் கோரிக்கைகளை ஏற்க்கனவே பிற கட்சிகளும் பின்பற்றி கொண்டுதான் இருக்கின்றன ஆனால் அதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்ற திட்டம்தான் தேவை. அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுகொள்ளும்படியாக இல்லை.
  about 18 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
 • Moorthy
  காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பினார். அது சரி. பிஜேபிக்கு ஏன் அனுப்பனும்?? இப்போவே எதிர் கட்சிக்காரன நீ எதுவும் எதிர்ப்பு தெரிவிக்கமா இருந்தா நான் ஆட்சி அமைக்கிறேன் என்று சொல்கின்ற மாதிரி இருக்குது. கொஞ்சம் வெவகாரமான ஆள் தான்.
  about 18 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • shekar
  இது ரெம்ப ஓவர், இவர் கூறும் திட்டங்க���ுக்கு முறையான மதிப்பீடு Action plan, எதுவும் இவர் இதுவரை கூறவில்லை, இது செய்வேன் அது செய்வேன் என்கிறார். முடிவில் எதுவும் செய்யமுடியாமல் விழி பிதுங்கபோகிறார்.
  about 17 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
 • Devaraj
  இது போன்ற நிபந்தனைகள் தேவை அற்றது... ஒரே நாளில் மந்திரம் போட்டு நாட்டை மாற்ற முடியாது.. இவர் போக்கு சரீல்லை. பேசாமல் குடி அரசு தலைவர் ஆட்சியை அமல் செய்து. ஒரே கட்சி ஆட்சி அமைய வாழ்த்துக்கள்.
  about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
 • senguttuvan
  ஷங்கர் பட வசனம் மாதிரி இருக்கு ..... செங்குட்டுவன் பெங்களூர்
  about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
 • K. R.
  கேஜெரிவல் சொன்ன அனைத்துமே (18 நிபந்தனைகள் )ஒரு அரசாங்கத்தின் வேலை. இதை தைரியமிருந்தால் அவரே ஆட்சி அமைத்து செய்து காட்டட்டும் . ஆளுநருக்கு நிபந்தநியற்ற ஆதரவு ஆம் அத்மி கட்சிக்கு தருவத உறுதிபடுத்தியதன் மூலம் இந்தியாவில் தன்மானமற்ற - சுய நம்பிக்கை இல்லாத ஒரு கட்சி என்பதை மீண்டும் மீண்டும் காங்கிரஸ் நிருபித்துள்ளது.
  about 16 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
  Ammasi Manickam  Up Voted K. R.'s comment
 • senguttuvan
  எதோ செய்யணும்இன்னு நினைக்கிறார். அதுக்குள்ள எல்லாரும். ஆணியே புடுக வேண்டாம்னா எப்பிட்டி
  about 16 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
 • jebamoni
  ஆம் ஆத்மி!!! மற்றவர்கள் மிருகங்களா?
  about 16 hours ago ·   (0) ·   (2) ·  reply (0)
 • nsathasivan
  நமது நாட்டின் எல்லா முக்கிய பிரச்சனைக்களுக்கும் மக்கள் தொகை தான் காரணம். தண்ணீர், வீடு ,பள்ளிகள் எத்தனை பேருக்கு கொடுக்க முடியும். கேஜ்ரிவால் நிபந்தனைகள் " uthopian thought " (unimaginable and impracticable)


0 comments: