Monday, December 16, 2013

அச்சம் தவிர் - சினிமா விமர்சனம்

 
 
மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டு பணத்துக்காக  இந்திய நாட்டுக்குத்தீராத அவமானத்தோல்வியைப்பெற்றுத்தரும் பிரபல கிரிக்கெட் வீரரை அவரோட  கிளாஸ் மேட் கம் இன்னொரு கிரிக்கெட்  வீரர்  திட்டம் போட்டு  ரொம்ப ஹைட்டான சிக்சர் அடிச்சு மேல் லோகம் அனுப்பறார்.

டெய்லி வறக்காப்பி ( பால் இல்லா வெறும் டிகாக்‌ஷன் ) குடிச்சாலும் தன் அபிமான ஹீரோ கட் அவுட்டுக்கு  கடன் வாங்கியாவது பால் அபிஷேகம் செய்யும் சினிமா ஹீரோவின் வெறித்தனமான ரசிகன் தியேட்டர்ல  ரொம்ப உயரமான இடத்துல  இருந்து  கட் அவுட்டுக்கு  பால் அபிஷேகம் செய்யும் போது  தவறி விழுந்து ஒரு காலை இழக்கிறார். வெளில  ரசிகர்கள் தான் தன் தெய்வம் , அவங்களூக்காக உயிரைகுடுப்பேன் , தயிரைக்குடுப்பேன்னு பஞ்ச் டயலாக் பேசும்  சூப்பர் ஹீரோ ரசிகனுக்கு ஒரு ஆபத்துன்னுதம் கண்டுக்காம மருத்துவசெலவுக்குக்கூட பண உதவி செய்யாம அவமானப்படுத்தி அனுப்பறார். அந்த கோபத்துல அந்த ஹீரோவை சொர்க்கத்துல போய் டூயட் பாடிக்கோன்னு அனுப்பிடறார் அந்த  ரசிகர் .

அமைதிப்படை அமாவாசை மாதிரி செல்வாக்கில்லாம  இருந்த ஒரு அரசியல் தலைவர் காலேஜ் பாணவர்கள் தலைவன் ஆதரவால் தொகுதி ல ஜெயிச்சு காரியம் ஆகும் வரை காலைப்பிடி , காரியம் ஆனபின் கழுத்தைப்பிடிச்சு வெளியே தள் என்னும் பழமொழிக்கேற்[ப  மாணவர்தலைவனை அவமானப்படுத்தறார்.அவரைப்போட்டுத்தள்ளும் முயற்சியில்  மாணவர் தலைவன் தோற்றுவிடுகிறார்.

 மேலே சொன்ன  3 தனித்தனிக்கதைல  3 பேரும் நண்பர்கள் . 4 வதா ஒரு நண்பர் . அவர்  தான்  ஹீரோ.அவங்க 4 பேருக்குள்ளே என்ன ஒப்பந்தம்னா அவங்கவங்க வேலை முடிஞ்சது,ம்  தற்கொலை செஞ்சுக்கனும் .

அவங்க திட்டம்  நிறைவேறுச்சா ? அவங்களைப்பிடிக்க நியமிக்கப்பட்ட  போலீஸ் ஆஃபீசர்  என்ன செஞ்சார் ? என்பதே மிச்சம் மீதித்திரைக்கதை .

இது ஒரு  தெலுங்கு டப்பிங்க்  படம் . நல்ல மெசேஜ் உள்ள படம் . ஆனா அதை திரைக்கதை ஆக்கும் விதத்தில் தான் தடுமாறி  இருக்காங்க .

லட்சிய இளைஞர்கள் 4 பேரும்   நல்ல நடிப்பு தான் . ஆனால் லட்சியம் வெச்சிருக்கும் இளைஞர்கள்  தாடியும் வெச்சிருக்கனும் , ஹேர் கட்டே பண்ணக்கூடாதுன்னு யார் சொன்னாங்கன்னு தெரியலை

 
 
இவங்களைப்பிடிக்கும் முயற்சியில்  போலீஸ் கமிஷனரா வரும் சரத்குமார் அருமையான பாடி லேங்குவேஜ் , டிரஸ்சிங்க் சென்ஸில் கலக்குகிறார். ஆனா அவர் வரும் காட்சிகள் ஜஸ்ட் 15  நிமிஷம் தான் . ஆனா போஸ்டர் பார்த்தா அவரே மெயின்  ஹீரோ மாதிரி  ஒரு பில்டப் .

ஹீரோயின்  வேணுமே என்பதற்காக  2 பேரு . சுமார் நடிப்பு . ஹீரோ ஹீரோயின் பேச்சைக்கேட்காம வில்லனைப்பார்க்க ப்போய்ட்டார் என்பதற்காக ஹீரோயின் தற்கொலை செய்வது எல்லாம்  ஓவர்.

டிப்பு டிப்பு அப்டின்னு ஒரு செம குத்தாட்டப்பாட்டு இருக்கு . டி வி ல போடும்போது மிஸ் பண்ணாம  பாருங்க . பாட்டு க்கான டான்ஸ் ஸ்டெப் கலக்கல் . 3  புதுப்பொண்ணுங்க ஆடி இருக்காங்க

சஸ்பென்சாக படத்தைக்கொண்டு செல்ல வேண்டும் என்பதர்காக முதல் பாதியில் பிட்டு பிட்டாக காட்சிகள் வருவதைத்தவிர்த்திருக்கலாம் .


சொதப்பல்ஸ்

1.  மேட்ச் ஃபிக்சிங்கில்  ஈடுபடும் வீரரை ஆதாரத்துடன் போலீஸ் கைது செய்வது  ஓக்கே , ஆனால் மேட்ச் ஆடும்போதே கிரவுண்டுக்கே வந்து கைது செய்வது எல்லாம் ஓவர் . அதுவும் அப்போ நடக்கும் மேட்சில் அப்போ செஞ்ச தப்ப்பை அப்பவே 5 வது  நிமிசமே போலீஸ் வருவது காதில்   பூக்கூடை

2.  ஹீரோவை  வில்லன் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்கச்சொல்வதும் , அதை  ஹீரோ செய்த பின்னும்  விடாமல் உன் தலை தானே தப்பு ப்ண்ணுச்சு . தலையால என் காலைத்தொடு என்பதெல்லாம் ரொம்பவே  ஓவர் . தேவை இல்லாமல் வைனவர்களை அந்தக்காட்சியில் வம்புக்கு இழுத்திருக்காங்க .  வசனம்  மூலம்


3.  சூப்பர்  ஹீரோவாக வருபவ்ர் அட்லீஸ்ட் 30 வயசு ஆனவராக காடி இருக்கலாம் . 19 வய்சு கூட ஆகாதவரை 25 படம் ஹிட் கொடுத்தவராக காட்டி இருப்பது கேலிக்கூத்து


4 எந்த செல்வாக்கும் இல்லாத  அரசியல் தலைவரை மாணவர் சக்தி ஆதரித்ததும் மேலிடம் சீட் கொடுப்பதும் , இருவர் , நாயகன் ,  தளபதி படத்தில் வருவது போல் பால்கனியில்  நின்றபடி ஜனக்கூட்டத்தைப்பார்த்து  பிரமிப்பதும், செம காமெடி ,. சீரியஸ்னெஸ் இல்லை

5  போலீஸ் ஆஃபீசராக  வரும் சரத்குமார் எதுவுமே சாதிக்கவில்லை . ஹீரோவின் ஃபிளாஸ் பேக்கை கேட்கிறார் அவ்வளவு தான் . அவருக்கு ஏதாவது முக்கியக்காட்சிகள் வெச்சிருக்கலாம்



நச் டயலாக்ஸ் 


1. சோறு போட்டவனைக்கூட சினிமாக்காரங்க மறக்கலாம், ஆனா  சினிமா  டிக்கெட் எடுத்தவனை மறக்கவே  கூடாது


2 ஆர்ப்பாட்டம் பண்றவங்க எல்லாம் அரசியல்வாதிங்க  கிடையாது , உண்ணாவிரதம்   இருக்கறவங்க எல்லாம்  மகாத்மாவும் கிடையாது

3  உன்  கிட்டே மட்டும் நான்  பொய்  பேச மாட்டேன் , ஏன்னா நான்  பொய் சொன்னா  நீ கண்டு பிடிச்சுடறே


4 பஞ்ச் டயலாக் பேசத்தகுதியான  ஒரே ஆள்  நீதான் யா ( இந்த சீனில் சரத்குமாரின் ரசிகர்கள் 3 பேர்  கைதட்டினாங்க , டோட்டல் ஆடியன்ச் 80 பேர் )


5  நீ இல்லாம லஞ்ச்சே சாப்பிட மாட்டேன்., எப்படி லாஞ்ச் பண்ணு வேன் ? எல்லாம்  நீ வந்த பின் தான்


6  நீ  குடுக்கும் செக்   துடைச்சுப்போடக்கூட  யூஸ் ஆகாது

7  என்ன சார்? கதை என்ன?ன்னு கேட்டா கத்தியை எடுத்துக்காட்டறேள் ?

 கத்தியைச்சுத்திதாங்க கதையே


8 படத்தோட  டைட்டில்  என்ன ?
 இம்சை

 அது ஆல்ரெடி நாங்க வெச்ச பேரு

 அது  பெரிய இம்,சை . இது சின்ன இம்சை


9 ரசிகர்னா அபிமானம் வைங்க , பிச்சை எடுகாதீங்க

10  நம்ம பதவியைக்காப்பாத்த னும் ன்னா அடுத்தவன்  தலையை  வெட்டவும்  தயங்கக்கூடாது , அதுதான் அரசியல்

11  உங்க வேலை  முடிஞ்சதும் கழ்ட்டிப்போடும் காண்டம் மாதிரி இல்லை மாணவர் சக்தி

12  ஒருத்தன்னுக்காக  நீ கை கை  தட்டக்கூடாது   நீ செஞ்சதைப்பார்த்து  மத்தவங்க  கை தட்டனும்


13 தண்டிக்கிறவனுக்கு தண்டனையை ஏத்துக்கும்  துணிவும்  வேண்டும் .



சி பி கமெண்ட் - படம் தியேட்டர்ல  போய்ப்பார்க்கும் அளவு  ஒர்த் இல்லை , ஆனா  டி வி ல போட்டா பார்க்கும் அளவு  இருக்கு .

அச்சம் தவிர் = தெலுங்கு டப்பிங் படம் = தியேட்டரில் போய் படம் பார்ப்பதைத்தவிர் - மாமூல் மசாலா - ரேட்டிங் = 2 / 5 .சரத்குமார்் 15 நிமிடமே

தியேட்டர்  மேட்டர் = கோவை குமரன் தியேட்டர்ல படம் பார்த்தேன். ஏ சி டி டி எஸ் தியேட்டர் . நல்லா மெயிண்ட்டென்ஸ் பண்ணி  இருக்காங்க . டிக்கெட் ரேட்டும் கம்மிதான் . 15  , 35 , 30 , 80 , 85
 ஆன் லைன் புக்கிங்கும் இருக்கு . கேண்ட்டீன் ல எதை எடுத்தாலும் 15  ரூபா மாதிரி போர்டு நம்ம ஊர்த்தேர்க்கடையை நினைவு படுத்துது . பொதுவா தியேட்டர்களில்  வாட்டர்கேன் விற்பனை  பாதிக்கக்கூடாதுன்னு  சுமாரான தண்ணீரை வெச்சிருப்பாங்க , ஆனா இங்கே சிறுவாணித்தண்ணீர் .
 கோவை பஸ் ஸ்டேண்ட் , காந்திபுரம் , ஈரோடு , சேலம் ப்ஸ்  எல்லாம் கிள்மபும் ப்ஸ் ஸ்டாப்க்கு பின் புறம் தியேட்டர்  இருக்கு .
 இது ப்ழைய அம்பாள் , அம்பாளிகா தான்
 பொங்கலுக்கு  செந்தில் ல  ஜில்லா , குமரன் ல வீரம் . இங்கே எப்பவும்  பிளாக்  டிக்கெட்சே கிடையாது ., ஒன்லி கவுண்ட்டர்டிக்கெட்தானாம்

1 comments:

Priyamuden ashok said...

பாஸ் உங்க பதிவ படிக்க முடியாதளவுக்கு விளம்பரம் ஸ்கரீன மறைக்குது பாஸ் எதாவது பண்ணுங்க