Monday, March 07, 2011

நாளைய இயக்குநர் - காதல் + கண்ணீர் கதைகள்

http://www.tamilgood.com/movies/wp-content/uploads/2011/01/Naalaiya-Iyyakunar55.jpg 
6.3.2011 அன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு கலைஞர் டி வி ல நாளைய இயக்குநர் நிகழ்ச்சில  ஹாய் மதன் சொன்ன தொடக்க வரி மனதைத்தொடுவதாக இருந்தது.இன்னொருவர் கஷ்டங்களைப்பார்த்து நெகிழ நாம் கத்துக்கனும்.அதற்கு அச்சாரமா டிராஜடிங்கற தலைப்புல இந்த வார படங்கள் அமைஞ்சிருக்குன்னார்.

அய்யய்யோ டிராஜடியா? மாட்னோம்டா அப்டின்னு நான் சலித்துக்கொண்டே தான் பார்த்தேன்.என் எண்ணங்களை தவிடு பொடி ஆக்கும் படி முதல் படமே கலக்கலான தொடக்கமா அமைஞ்சது..

1. அன்புடையீர்  - திருப்பூர் ராம்.

ஒரு சோக கதையை ஆக்‌ஷன் ஃபார்முலாவுல சொல்ல முடியுமா?ங்கற பிரமிப்பான தொடக்கத்தோட படம் அமைஞ்சது.ஒரு தூக்குத்தண்டனைக்கைதி தப்பி ஓடறப்ப போலீஸ் துரத்துது.. அந்த சேசிங்க் சீன்ல யே ஃபிளாஸ்பேக் அப்பப்ப வருது.

இந்த குறும்படத்தோட கதை சொல்லல் பாணி என்னை ரொம்பவே கவர்ந்துடுச்சு.மொத்தம் ஓடற 7 நிமிஷத்துல கதையை சொல்லி ஆகனும்,அதுல சோகம் இருக்கனும்,சுவராஸ்யமும் இருக்கனும்ங்கற கண்டிஷன்ஸை எல்லாம் அனாசயமா ஏத்துக்கிட்டு ஆக்‌ஷன் த்ரில்லர் லேபிள்ல சேர்த்தும் அளவு வித்தியாசமான படமாக இயக்கப்பட்ட இந்தப்படம் சமீபத்தில் நான் பார்த்த 65 குறும்படங்களில் சிறந்த படம் என கொள்ளலாம்.

படத்தோட பிளஸ் பாயிண்ட் ஹீரோயின். ரொம்ப பாந்தமான குடும்பப்பாங்கான மனைவியா வர்றவர் ரொம்ப இயல்பா நடிச்சிருக்கார்.கைதி தப்பி நேரா தன் வீட்டுக்கு வந்து தன் மனைவியையும் ,கைக்குழந்தையையும் பார்க்க வந்தவர் தன் மனைவி வேற ஒரு ஆள் கூட குடும்பம் நடத்துறதை பார்த்து திக் பிரமை அடைஞ்சு நிக்கறார்...

இந்தக்கதைல எனக்கு சில டவுட்ஸ்

1.கணவன் கைது ஆன உடனே ஒரு மனைவி உடனே செக்யூரிட்டிக்காக அப்படி வேற ஒரு ஆள் கூட போவாரா?

2. கதைல ஹீரோயின் (மனைவி) தனக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும்கறா.. ஹீரோ பெண் குழந்தை தான் பிடிக்கும்கறான். பொதுவா பொண்ணுங்க எந்தக்குழந்தையா இருந்தாலும் ஓக்கே அது அவங்க குழந்தைன்னு நினைப்பாங்க.. ஆண்கள் தான் வாரிசுக்கு ஆண் வேணும்னு நினைப்பாங்க.

3.  தூக்கு தண்டனைக்கைதியை துரத்தி பிடிக்கும் போலீஸ் ஆஃபீசர் அந்த கைதிக்கு முன்னாலயே தன்னோட உயர் அதிகாரிக்கு ஃபோன் போட்டு ,”சார்.. உடனே வாங்க.. நான் தனியா இவனை சமாளிக்க முடியாது”ங்கற  மாதிரி பேசுவாரா? ரிவால்வரால கால்லயோ, கைலயோ சுட்டு காயத்தை ஏற்படுத்தி கைதியை பலவீனன் ஆக்கி இருக்கலாமே..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigu7s621zl2WdvvbzlmIkQ1WQJ3x-Ap0Lkl7tCd8h11gQKI65yBvyDf6yR2lyFJOVFHQPl6yTJTdEnnP5aiQ8kZAvuFhjCS-EM5SFuPmA7h0bey2BsKhUxd03Yn9HrlcIgSIrnaVUNeipm/s320/director.png
இந்தப்படத்தில் கவர்ந்த வசனங்கள்

1. தப்பு செஞ்சவங்க நிறைய பேரு வெளில இருக்கறப்ப நான் மட்டும் ஏன் சாவனும்?

2,  எனக்கு பெண் குழந்தைன்னா உசுரு.மனைவியைக்கூட ஒரு குழந்தையாத்தான் பார்த்துக்கறேன்.

3. அப்பாவோட வாசம் தெரியாமயே என் குழந்தை வளர்ந்துட்டு இருக்கு

இந்தக்கதைக்கான ரிசல்ட் ஆடியன்சிடமும் சரி,ஜட்ஜூங்க ரெண்டு பேர்ட்டயும் சரி அபாரமா இருந்தது.ஒரு படைப்பாளிக்கு கிடைக்கற சிறந்த அங்கீகாரமே பாராட்டுதான் என்ற அளவிலும்,பாராட்டு சிறந்த கிரியா ஊக்கி என்ற அளவிலும் அந்த காட்சியைப்பார்க்க மனசுக்கு மகிழ்ச்சியா இருந்தது.

2. நான் அமாவாசைல பிறந்தவன் - அழகு ராஜா

ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரோட போராட்டங்கள்,அவமானங்கள்,வலி இவற்றை சொல்லும் கதை. பொதுவா இந்த மாதிரி கதைகள் ஜனங்களால அதிகமா விரும்பப்படறது இல்ல... அன்றாட வாழ்வியலில் ஏற்படும் பிரச்சனைகளை மையமா வெச்சு படம் எடுக்கறதே நல்லது. இதுக்கு சினி ஃபீல்டுலயே உதாரணம் சொல்லலாம். தாவணிக்கனவுகள், சினிமா சினிமா,முகவரி...(இதில் முகவரி வெற்றிப்படம் என்றாலும் எதிர்பார்த்த வெற்றி இல்லைன்னு அதன் இயக்குநரே பேட்டி குடுத்திருக்கார்,)


பிடித்த வசனங்கள்

1. எனக்கு நடக்கறது  ஒண்ணும் புதுசு இல்லை...தமிழ் சினிமாவுல கதை சொல்ல நடையா நடந்துட்டு தான் இருகேன்..

2.  என்னய்யா.. ஒரு கிஸ் சீன்க்கு இத்தனை டேக் எடுக்கறே... நல்ல வேளை ரேப் சீன் எடுக்காம போயிட்டோம்..

இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1 . சினிமா வாய்ப்பு கிடைக்கலைன்னு மனம் வருத்தம்தான் படுவாங்க,இதுக்கு யாரும் தற்கொலை செய்ய மாட்டாங்க. அப்படியே எங்காவது ஒரு சம்பவம் நடந்திருந்தாலும் அதை படமாக்குவதால் புது ஆட்களுக்கு தன்னம்பிக்கை யை வளர்ப்பது போல்தான் நாம்(அதாவது நீங்க) படம் எடுக்கவேண்டுமே தவிர நெகடிவ் எண்ணங்கள் ஏற்படும்படி அல்ல.

2. தூக்கு மாட்டிக்கொள்ளும் ஹீரோ 3 முறை மட்டுமே கால்களை உதறுவது போல் சீன் இருக்கு.. கிட்டத்தட்ட 13 முறை உதறுவானாம்.அந்த கொடூரத்தை காட்டுவதற்கு சிம்ப்பிளாக சிம்பாலிக் ஷாட் வைத்திருக்கலாம்.
http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/10/paritala-sunitha.jpg
3. கடைசி வரை -சத்தி 

காதல் ஜோடி லவ் பண்றாங்க. காதலனுக்கு ஒரு விபத்துல கண் பார்வை போயிடுது.உடனே பிராக்டிகல் சேஃப்டி லைஃப்ஃபை காதலி செலக்ட் பண்றா. வீட்ல பார்க்கற மாப்பிள்ளைக்கு ஓக்கே சொல்றா....ஆனா காதலன் நடந்த சம்பவத்தை நண்பன் கிட்டே சொல்றப்போ காதலி மேல தப்பில்லைங்கற மாதிரி சப்போர்ர்ட்டா பேசறான்  .

1. என்னடா நண்பா.. பேசிட்டு இருந்தே , திடீர்னு ஆளைக்காணோம்..போய்ட்டியோன்னு பார்த்தேன்.

பாதிலயே விட்டுட்டுப்போக நான் என்ன உன் ஆள் தேவியா?


2.பார்வை இல்லாததால என் கவனம் கலையறதில்லை.. கூர்மையான புலன்கள் ....

3.  ஒரே ஜோக்கை ரெண்டு மூணு தடவை படிச்சுப்பாரு ,சிரிப்பே வராது..அதே மாதிரி பல தடவை அழுது பார்த்துட்டா எதுவுமே சோகம் இல்ல...( சோகத்தோட வலி குறைஞ்சிடும்)

4. ஹீரோயின் - உங்களை எந்த அளவுக்கு நான் விரும்பறேனோ அந்த அளவுக்கு  என்னை நான் அதிகமா விரும்பறேன். 


காதல் கதை எடுக்கறவங்க  அந்த கதைக்கு வில்லனா காதலர்களே மாறிடறதா காட்டறப்ப அந்த கதைல , காதல்ல வலு குறைஞ்சிடுது....இதை கவனத்துல வெச்சுக்கிட்டு திரைக்கதை அமைப்பது நல்லது.

இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1. காதலர்கள் ஜாலியா பேசிட்டு இருக்கறப்ப ஒருத்தர் கண்ணை ஒருத்தர் பார்த்துப்பேச ஆசைப்படுவாங்க.. அதனால கூலிங்க் கிளாஸ் போட்டுட்டு பார்க்ல உட்கார்ந்து பேசற சீன் தேவை இல்லை.ஹீரோவை பந்தாவா காட்டனும்னு நினைச்சா பைக்ல போறப்ப, நடந்து வர்றப்ப அப்படி காட்டுனா போதும்.

2.காதலி காதலனை கை விடற ஷாட்ல அவ கண்ல வருத்தமே இல்ல..வேற வழி இல்லாம அப்படி பண்றாங்கறதை நல்லா தெளிவா காட்டனும்.சப்போஸ் நடிகைக்கு ஆக்டிங்க் வர்லைன்னா ( IF THE EXPECTING PERFORMANCE IS NOT OBTAINED) லாங்க் ஷாட் வைச்சு சமாளிக்கலாம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfCXOzUpmBqLkEGK3eBANMrLDwnPPb_mw2GjbUVJf4KWkvaahfa6v08hTo3ENFowqihfuON-UThLoHLIZ6-Rn_iHJpjMjz6RDVL-S_sgC1QAztn1eVh8wNywrHcwGicZ4ifoFJels1kof4/s1600/clapboard.jpg
4. ஒரு நாள் - தீபக்   

இந்தப்படம் ஒரு பிரமிப்பான அனுபவத்தை குடுத்தது.2008 நவம்பர் மாதம் 26ந்தேதி நடந்த உண்மைசம்பவத்தை மையமா வெச்சு எடுக்கப்பட்டிருக்கு.

ஒரே ஒரு கேரக்டரை வெச்சு இவ்வளவு பவர் ஃபுல்லா ஒரு திரைக்கதையை எழுத முடியுமா?அதை ரொம்ப பர்ஃபக்‌ஷனோட எடுக்க முடியுமா?என அனைவரையும் வியக்க வைத்து முதல் பரிசை தட்டி சென்ற படம். கடந்த ஆறு வாரங்களில் முதல் பரிசை பெறும் படங்கள் சரியான தேர்வுதானா  என மெல்லிய சந்தேக நூலிழை மனதில் ஓடும். ஆனா இந்தப்படம் சந்தேகத்துக்கு இடமில்லாம அனைவரது கவனத்தையும் பிரமாதமா கவர்ந்தது.

ஊடலுடனான கோபத்தில் மனைவி பெட்ரூம்ல படுத்திருக்கா.. அப்போ கணவன் கிட்டே இருந்து ஃபோன்.இவ எடுத்து 2 வார்த்தை கோபமா பேசிட்டு வெச்சிடறா..அவன் உடனே மெசேஜ் அனுப்பறான்.அடுத்த டைம் ஃபோன் பண்ணுனதும் அவ எடுத்துப்பேசும்போது மெல்ல மெல்ல தான் தீவிரவாதிகளால் தாக்கபட்ட ஹோட்டலில் இருப்பதாகவும், தன்னுடன் இருந்த அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் எனவும்,தான் மரண வாசலில் இருப்பதாகவும் பதட்டத்தோட சொல்றான்.

இறக்கும் தருவாயில் மனைவியுடன் கணவனுக்கோ,கணவ்னுடன் மனைவிக்கோ பேசும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதே கதையின் ஒன் லைன். அதற்கான கதைக்களனாக டெரரிஸ்ட் சம்பவத்தை கையில் எடுத்தது படத்தின் வெற்றியை உறுதி செய்யவும் , கதையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும்..

இந்த படத்துல நடிச்ச ஹீரோயின் நல்ல அழகான முகம். சடக் சடக் என மாறும் அம்சமான முக பாவனைகள். கோபம், ஊடல், காதல், பயம் , மரணத்தின் விளிம்பில் கணவன் இருப்பதும் வரும் பதட்டம் எல்லாமே கலக்கலான அம்சங்கள்.மேக்கப் அதீதமாக இல்லாமல் மிதமான இயற்கையான அழகு முகம் ஒரு பிளஸ் என்றால் அவரது பாடி லேங்குவேஜ்ஜூம் அற்புதம்.

சாகும் தருவாயிலும் கணவன்  பேசும் ஒரு டயலாக் கண் கலங்க வைத்தது,.
http://www.cinesnacks.in/tamil-movies/actress/Kajal-Agarwal-01/kajal-agarwal-photos-031.jpg
டாக்டரை கல்யானம் பண்ணுனது கூட ஒரு வகைல நல்லதா போச்சு.இப்போ முதல் உதவி சிகிச்சை எப்படி பண்றதுன்னு சொல்றியே.. நம்ம குழந்தையையும் டாக்டருக்கே படிக்க வைக்கனும்.

டைரக்டருக்கு சில வார்த்தைகள்

1. ஒரே ஒரு கேரக்டர் என முடிவு செஞ்சு ஷூட் பண்ணுனது பிரமாதமான ஐடியா என்றாலும் அதை ஒரே ஷாட்டில் சொல்லி இருந்தா இன்னும் பிரமாதமாய் இருந்திருக்கும்.கட் ஷாட்டே தேவை இல்லை. ஒரே ரூம். ஒரே கேரக்டர் எனும்போது குணா படத்தில் ஹாஸ்பிடல் சீனில் வரும் 4 நிமிட காட்சியில் கமல் அறையை சுற்றி வந்து பேசும்போது எப்படி கேமரா கோணங்கள் இருந்ததோ அப்படி இருந்திருந்தா கலக்கலா இருந்திருக்கும்.

2. அந்த சம்பவம் நடக்கறப்ப ஹீரோ ஹீரோயிண்ட்ட தீவிரவாத சம்பவம் பார்க்க டி வி யை ஆன் பண்ணு என சொல்றார்,அப்போ சிம்பாலிக் ஷாட் வைக்கும் உத்திக்காக கே டி வி ல ரோஜா படம் ஓடற மாதிரி காட்டி இருக்கீங்க. அந்த ஹோட்டல் சம்பவம் உண்மையா நடந்த அன்று அந்த படம் எந்த சேனல்லயும் இல்லை.

எனிவே ஹாட்ஸ் ஆஃப் தீபக்

பரிசு கொடுத்து முடிச்ச பிறகு எலிமினேஷன் ரவுண்ட் இது என்பதால் ஒருவர் எலிமினேட் பண்ணப்பட போகிறார் என அறிவித்தார்கள். அந்த மேடையில் 260 பேர் பார்த்துக்கொண்டிருக்காங்க. டி வி ல கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் அதைப்பார்க்கறாங்க.. அப்போ போய் ஒருவரை மேடைல அழைச்சு கை குடுத்து உங்களை எலிமினேட் பண்றோம்.. சாரி என சொல்றாங்களே...

இது எந்த விதத்தில் சரி...? நிறைகளை பொதுவாக எல்லோருக்கும் முன் சொல்லுங்கள். குறைகளை தனியாக கூப்பிட்டு சொல்லுங்கள்.தோல்விகளை ருசித்தவன் என்ற முறையிலும்,சக படைப்பாளி அவமானப்படுத்தப்படுகிறான்  என்ற தார்மீக கோபத்திலும் எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

அப்புறம் ஒரு சந்தோஷமான நிகழ்வு நடந்தது. இந்த வாரம் முதல் பரிசு போட்டிக்கு ராமின்  அன்புடையீர்,தீபக்கின் ஒரு நாள் ரெண்டுமே சம தகுதி இருந்தாலும் கடைசில முடி இழையில் முன்னணி பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஒரு நாள் படமே... 

வாழ்த்துக்கள்.

திருப்பூர் ராம் எனது நண்பர். நான் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. செல் ஃபோன் அறிமுகம் மட்டும்.

34 comments:

சக்தி கல்வி மையம் said...

I...

தமிழ் 007 said...

3...

தமிழ் 007 said...

பர்ஸ்ட் ஃபிகர் ஹோம்லி!
செகண்ட் ஃபிகர் ரூம்லி!

சக்தி கல்வி மையம் said...

!

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ் 007 said...

பர்ஸ்ட் ஃபிகர் ஹோம்லி!
செகண்ட் ஃபிகர் ரூம்லி!

adஅடடா கவித கவித

சி.பி.செந்தில்குமார் said...

கருண் மவுன விரதம் போல

Arul Kumar P அருள் குமார் P said...

வழக்கம் போல கலக்கலா விமர்சனம் பண்ணி இருக்கீங்க cps ....



அன்புடையீர் - திருப்பூர் ராம். எடுத்த கதை கரு ஒரு ஹிந்தி படத்தில் உள்ளது. படத்தின் பெயர் ஜெயில் என நினைக்கிறேன். ஹிந்தி படத்திற்கும் இதற்கும் ஒரு வித்தியாசத்தை காட்டி உள்ளார். அதில் கைதி ஒரு ரவுடி ,இதில் ஒரு அப்பாவி. ஹிந்தி படத்தில் அவன் தற்கொலை பண்ணி கொள்வான் . இதில் அகபடுகிறான். ஒரு வேலை சுட்டு இருப்பாரோ என சந்தேகம் எழுவதை தவிர்க்க முடிய வில்லை.

//.கணவன் கைது ஆன உடனே ஒரு மனைவி உடனே செக்யூரிட்டிக்காக அப்படி வேற ஒரு ஆள் கூட போவாரா?//

உடனே போகலானைனாலும் கொஞ்ச வருஷம் கழித்து போக வாய்ப்பு உள்ளது. கதையில் வரும் நபர் ஒரு தூக்கு கைதி எனவே ரொம்ப வருடன் கழித்து தப்பி வருவதாக காட்டி இருந்தால் உங்கள் சந்தேகம் வராமல் பார்த்து இருக்கலாம். அதற்க்கு அவர் குழந்தையை கொஞ்சம் பெரிய வயதாக காட்டி இருக்கலாம் ( ஹிந்தி " ஜெயில் " படத்தில் வருவது போல )

மேலும் கதையீன் முடிவு ஒரு விதமாக எதிர் பார்க்க முடிகிறது. ஒரு வேலை நான் அந்த ஹிந்தி படத்தை பார்த்து விட்டதால் கூட இருக்கலாம்.


ஒரு நாள் - தீபக்

எல்லா விதத்திலும் நன்றாக அமைந்த படம். முடிவு இப்படி தான் இருக்கும் என எதிர்பார்க்க வைக்காமல் சடாரென திரும்பிய திரை கதை பாராட்ட தக்கது. நீங்கள் சொன்ன "டைரக்டருக்கு சில வார்த்தைகள்" நல்ல அறிவுரை.



சினிமா ஞானம் நொம்ப நல்லா இருக்கு உங்களுக்கு . திரைப்படம் டைரக்ட் பண்ணும் எண்ணம் ஏதாவது இருக்கா...?

சக்தி கல்வி மையம் said...

எங்க ஏரியாவில சர்வர் பிராப்ளமா?
BSNL- EVDO Datacard யூஸ் பன்றேனா..
BSNL- பிராட்பேண்டே நொண்டியடிக்கும்..Datacard பற்றி சொல்லனுமா...
இருங்க படிச்சிட்டு வரேன்..

சக்தி கல்வி மையம் said...

நெட் எப்பவேலைசெய்யுதுன்னு தெரியல... ஸ்பீடாச்சுனா திரும்பி வருகிறேன்..

சி.பி.செந்தில்குமார் said...

@ வெட்டிப்பையன்

அடேங்கப்பா.. புள்ளி விபரத்தினை அள்ளி விடறீங்களே...

Speed Master said...

எப்படிங்க இதை எல்லாம் நோட் பண்றீங்க

extra victory said...
This comment has been removed by the author.
சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஆர்வக்கோளாறு தான்

Arul Kumar P அருள் குமார் P said...

//அடேங்கப்பா.. புள்ளி விபரத்தினை அள்ளி விடறீங்களே...//

ஹி..ஹி... நொம்ப நண்ணி ஹை...

extra victory said...

super sir

Mohammed Arafath @ AAA said...

எந்த ஒரு படைபாளிகுமே அவனோடது Best தான் .என்னமோ 50 குறும்படம் எடுத்த மாற்றி நீ விமர்சனம் பண்ற...
உனக்கு என்ன தகுதி இருக்கு..?
மொக்க தனமா sms ஜோக்ஸ் பிட்டு படம் உட்டா உனக்கு வேற எதாவது உருப்படியா எதுவும் தெரியாதா?
இப்படி ஒரு பொழப்பு.. அடுத்தவன் --------******------ நோண்டறது .

Jana said...

நியமய் ஐயே. பொகமஸ் ஸ்தூதி. (அதாவது நன்றாக இருக்கு. ரொம்ப நன்றி என்று சிங்களத்திலே சொன்னேன் :)

செங்கோவி said...

குறும்படம், ’பெரும்’படம் என எல்லா ஏரியாவிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் தலைவருக்கு வாழ்த்துகள்..நண்பர் திருப்பூர் ராமிற்கும் வாழ்த்துகள்!

Thirumalai Kandasami said...

எப்பவும் வழக்கமா ரெண்டு நாள் கழிச்சு தானே விமர்சனம் வரும்..நான் இன்னும் பாக்கலை..
இப்ப தான் டவுன்லோட் செஞ்சேன்..பார்த்திட்டு உங்க review படிக்கிறேன்.

Youtube லிங்க் - http://tamil.techsatish.net/file/naalaiya-iyyakunar-32/

Unknown said...

நான்கு இயக்குனர்களுக்கும் எம் வாழ்த்துக்கள்..
ராம் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்..

Unknown said...

//திருப்பூர் ராம் எனது நண்பர். நான் இதுவரை நேரில் சந்தித்ததில்லை. செல் ஃபோன் அறிமுகம் மட்டும்.//
வெகு விரைவில் சி.பி.செந்தில்குமார் பற்றி நாங்களும் சொல்லிக்கொள்ள, சென்னிமலை செந்தில் ஆண்டவர் விரைவில் மனது வைக்கட்டும்

Unknown said...

không có trong từ điển

காங்கேயம் P.நந்தகுமார் said...

திருப்பூர் ராம் அவர்களின் நாளைய இயக்குனர் குறும்பட தொகுப்பு தங்களின் விமர்ச்சனத்தால் மேலும் மெருகேறியது. நன்றி அட்ரா சக்க சி.பி.

ரஹீம் கஸ்ஸாலி said...

வந்துட்டேன்

ராஜி said...

நிறைகளை பொதுவாக எல்லோருக்கும் முன் சொல்லுங்கள். குறைகளை தனியாக கூப்பிட்டு சொல்லுங்கள்.தோல்விகளை ருசித்தவன் என்ற முறையிலும்,சக படைப்பாளி அவமானப்படுத்தப்படுகிறான் என்ற தார்மீக கோபத்திலும் எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
////////////////////////////

சக மனிதனை மதிப்பவன் வெகு சீக்கிரத்துலயே உயர்ந்த நிலையை அடைவான் என்பது என் கருத்து. சக படைப்பாளிகளின் மீது நீங்கள் காட்டும் கரிசனம் உங்கள் உயர்வுக்கு படிகட்டாய் அமைய வாழ்த்துக்கள்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

யொவ்,உனக்கு மட்டும் வயசாகுது.உன் எழுத்துக்கு வயசாகாதா?... இந்த தாத்தா வயசுலயேயும் எப்படிய்யா உன்னால மட்டும் இவ்வளவு இளைமையா எழுத முடியுது?
[-வயிற்றெரிச்சலில் பூங்கதிர்)

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

உங்க சின்ன வீட்ல சொல்லி உமக்கு திருஷ்டி சுத்தி போட சொல்லுமைய்யா!

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

இப்பலாம் என் கூட சரியா பேசறதே இல்லை. உனக்கு இருக்குடி ஒரு நாள் வடை,பாயாசத்தோட விருந்து!

Anonymous said...

அதனால கூலிங்க் கிளாஸ் போட்டுட்டு பார்க்ல உட்கார்ந்து பேசற சீன் தேவை இல்லை.ஹீரோவை பந்தாவா காட்டனும்னு நினைச்சா பைக்ல போறப்ப, நடந்து வர்றப்ப அப்படி காட்டுனா போதும்.
....................

Cooling glass போட்டாலே personality கூடிடும்னு நினைக்குறாங்க போல. ஹா, ஹா,

ராஜி said...

திருப்பூர் ராம் எனது நண்பர்.
..........................

உங்க ஃப்ரெண்டா இருந்துக்கிட்டும் எப்படி இப்படி

ராஜி said...

Nice post.

Thirumalai Kandasami said...

1 .கணவன் கைது ஆன உடனே ஒரு மனைவி உடனே செக்யூரிட்டிக்காக அப்படி வேற ஒரு ஆள் கூட போவாரா?
-->கணவன் உயிருடன் இருக்கும் போதே நடக்குது.கணவன் இனி வர மட்டன்(தூக்கு) என்பதால் கண்டிப்பாக நடக்கும்.

2. கதைல ஹீரோயின் (மனைவி) தனக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும்கறா.. ஹீரோ பெண் குழந்தை தான் பிடிக்கும்கறான். பொதுவா பொண்ணுங்க எந்தக்குழந்தையா இருந்தாலும் ஓக்கே அது அவங்க குழந்தைன்னு நினைப்பாங்க.. ஆண்கள் தான் வாரிசுக்கு ஆண் வேணும்னு நினைப்பாங்க.
--> இது அவரின் தனி விருப்பம்..உலகில் எல்லா ஆண்களுக்கும் ஒரே குணம் இருக்குமா என்ன ..??

3. தூக்கு தண்டனைக்கைதியை துரத்தி பிடிக்கும் போலீஸ் ஆஃபீசர் அந்த கைதிக்கு முன்னாலயே தன்னோட உயர் அதிகாரிக்கு ஃபோன் போட்டு ,”சார்.. உடனே வாங்க.. நான் தனியா இவனை சமாளிக்க முடியாது”ங்கற மாதிரி பேசுவாரா? ரிவால்வரால கால்லயோ, கைலயோ சுட்டு காயத்தை ஏற்படுத்தி கைதியை பலவீனன் ஆக்கி இருக்கலாமே..
--> நீங்க பாட்டுக்கு அசால்ட்டா சுடுன்னு சொல்லறிங்க..வார வாரம் 5 சினிமா பார்த்த இப்படி தான் ஆகும்..


கே டி வி ல ரோஜா படம் ஓடற மாதிரி காட்டி இருக்கீங்க. அந்த ஹோட்டல் சம்பவம் உண்மையா நடந்த அன்று அந்த படம் எந்த சேனல்லயும் இல்லை.
--> இது ரொம்ப ரொம்ப ஓவர்,,லாஜிக் பாக்கலாம்..அதுக்குன்னு இப்படியா..???,,நான் மற்றும் மதன் சார் ரசித்த ஒரு அருமையான கட்சி அது..
குறை சொல்லும்னு சொன்ன மாதிரி இருக்கு


எலிமினேட் - என்னை பொறுத்தவரை சரியாக தான் செய்கிறார்கள்..வெளிப்படையான போட்டி என்றால் வெளிப்படையான விமர்சனம் தான் கிடைக்கும்.. இதில் எனக்கு எதுவும் தப்பாக தெரியவில்லை.

Thirumalai Kandasami said...

நாளைய இயக்குனர் க்கு விமர்சனம் எழுதிய குழந்தை (அண்ணன் னு சொன்னா கோவிச்சுப்பார்) சிபி யை பாராட்டி,சீராட்டி,தாலாட்டி,சோறுட்டி தமிழ் 10 இல் ஒரு வோட்டு போடப்பட்டது..

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், விமர்சனங்களைப் பார்க்கும் போதே எல்லாக் குறும்படங்களும் அருமையானவை என்று தான் தோன்றுகிறது. எனக்குத் தான் பார்க்கும் வாய்ப்பு இல்லை. இது இணையத்தில் எங்காவது கிடைக்குமா? லிங் பிளீஸ்!