Friday, December 31, 2010

2010 -ன் டாப் 10 பதிவர்கள் (புதிய தலைமுறை)

08070.jpg (321×357)
இந்த ஆண்டில் பதிவுலகில் யார் யார் எல்லாம் என் மனதைக்கவர்ந்தார்கள் என்ற தனிப்பட்ட லிஸ்ட் இது.ஏற்கனவே டாப்பில் இருக்கும் பதிவர்கள் மன்னிக்க.

1. பன்னிக்குட்டி ராம்சாமி - பொதுவாக நகைச்சுவையாக எழுதுபவர்கள் எல்லோர் மனதையும் கவர்கிறார்கள்.அந்த வகையில் தான் எழுதும் பதிவுகளில் மட்டுமல்லாமல் கமெண்ட்களில் கூட காமெடியை அள்ளித்தெளித்து கலக்கும் இவர்தான் என்னைப்பொறுத்தவரை நெம்பர் ஒன்.வலைச்சரம் ஆசிரியராகப்பொறுப்பேற்றதும் இவரது பன்முகத்திறமை வெளிப்பட்டது,தனது வாசிப்புத்திறன் முழுவதையும் வெளிப்படுத்தி புதிய பதிவர்களை அட்டகாசமாய் அறிமுகப்படுத்தி ஏகோபித்த ஆதரவைப்பெற்றார்,கமெண்ட்ஸ் வாங்குவதில் நாமெல்லாம் 10 ,   20 என்று தாளம் போடும் நேரத்தில் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் பெற்று அதிலும் சாதனை புரிந்தார்.டயலாக் டெலிவரியில் கவுண்டமணியின் அவதாரமாக அனைவர் மனதிலும் நின்றவர்.தமிழ்மணம் டாப் 20 லிஸ்ட் வர ஆரம்பித்த பிறகு அதுவரை வாரம் ஒரு பதிவு போடும் பழக்கம் உள்ள பலரும் தினசரி  ஒரு பதிவு போட்ட போதும் தனது வழக்கப்படி வாரம் 3 பதிவு  என தொடர்பவர்.இதுவரை எந்த வம்பு வழக்கிலும் சிக்காதவர்..


2. கே ஆர் பி செந்தில் - குமுதத்தில் வரும் பயோடேட்டா போல் இவரும் பயோடேட்டாவில் கலக்குபவர்.சமூக விழிப்புணர்வு கட்டுரையிலும் சரி ,கவிதையிலும்  சரி இவரது டச் உண்டு.அலாஸ்கா ரேங்க்கில் செம ஸ்பீடாக முன்னேறி வருகிறார்.எல்லோரிட்மும் நட்பு பாராட்டும் நல்ல மனிதர்.

3. சேட்டைக்காரன் - யார் மனதையும் புண்படுத்தாமல் காமெடி பண்ணுவது ரொம்ப கஷ்டம்,அந்த கஷ்டமான வேலையை ஈசியாக செய்து வருபவர்.பெரும் பாலும் குடிகாரர்களை மையமாக வைத்து நக்கலாக பதிவு போடுபவர்,அரசியல் நையாண்டியில் தேசியப்பார்வையும் உண்டு.எழுத்தில் ஆபாசம் துளி கூட கலக்காமல் கண்ணியமாக எழுதுபவர்.இவரது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு பதில் போடுவதில்லை என்ற ஒரே ஒரு குறை மட்டும் உண்டு.

4. பட்டாபட்டி - சென்னை பஷையில் இவரது திட்டுக்களைக்கேட்கவே ஒரு கூட்டம் உண்டு.இவரது பதிவுகள் செம காமெடி.குறிப்பாக காங்கிரஸை போட்டு தாக்குவார்.யாரைப்பற்றியும் ,எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்.தனது மனதிற்கு எது சரி என தோன்றுகிறதோ அதை கலக்கலாக எழுதுபவர்.

5.வந்தேமாதரம் சசி - பதிவுலகில் டெக்னிக்கலான மேட்டர்ஸை பதிவு போட்டே புகழ் பெற்றவர்.அலாஸ்கா ரேங்க்கில் முன்னணியில் இருப்பவர்.சினிமா விமர்சனம்,ஜனரஞ்சக பதிவுகள் போட்டு முன்னேறும் பதிவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர்.பதிவர்களுக்கு டெக்னிக்கலான சந்தேகம் எது வந்தாலும் தீர்த்து வைப்பவர்.

6. ம தி சுதா -  இலங்கைப்பதிவர்.இவரது பல கட்டுரைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. அவ்வப்போது ஜனரஞ்சகமாகவும் எழுதுவார்.டாஸ்போர்டு ஓப்பன் பண்ணி எப்போதும் ஆன்லைனில் இருப்பார்.சுடு சோறு எனக்கே வார்த்தை பிரபலம்.

7.கோமாளி செல்வா - மொக்கைப்பதிவுகள் போட்டே சக்கையாக முன்னேறுபவர்.வட எனக்கே வாசகம் பிரபலம்.வடைவங்கி என இவருக்கு இவரே பட்டம் குடுத்துக்கிட்டார் (யாரையும் எதற்கும் எதிர்பார்க்கக்கூடாதாம்).இவரது வயது ரொம்பக்குறைவாக இருந்தாலும் நிறைவான பதிவுகள் கலக்கல்.

8.மங்குனி அமைச்சர் - இம்சை அரசன் 23ம் புலிகேசியின் லோகோவைப்பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்.இவரது எழுத்துக்களில் காமெடி தெறிக்கும்.சென்னைப்பதிவரான இவர் மற்றவர்களுடன் பழகுவதில் சகஜமானவர் என்ற நல்ல பெயர் பதிவுலகில் உண்டு.

9 . சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் பதிவர்.இவர் வாங்கி வந்த வரம் அப்படி.ஆஃபீஸ் டைம்லயே அனைத்து பதிவுகளையும் டைப் செய்து,கமெண்ட்டும் போடும் ஒரே பதிவர்.மற்றவர்களை கலாய்ப்பதில் மன்னர்.யார் எந்த பதிவு போட்டாலும் அதில் போய் இந்த ஜோக் ஏற்கனவே 4 வருஷத்துகு முன்பே நான் எழுதிட்டேன் என காமெடி பண்ணுவார்.இவர் பணி புரியும் ஆஃபீஸ் இன்னும் இழுத்து மூடாமல் இருப்பது ஆச்சரியம்.

10 - நல்ல நேரம் சதீஷ் - டைட்டில் வைப்பதில் மன்னன்.எனக்கு பதிவுலக குரு.அரசியல் நையாண்டி,சட்டயர் காமெடி எழுத்துக்கள் இவரது பலம்.இவரது அலாஸ்கா ரேங்க் முன்னேற்றம் அபார வேகம்.சூப்பர் ஹிட் போஸ்ட் போட்டால் சர்வ சாதாரணமாக 3000 ஹிட்ஸ் அடிப்பவர்.ரஜினி ரசிகர் ,ஜோதிடர்

டிஸ்கி - 2011 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்

59 comments:

settaikkaran said...

பட்டாபட்டி ஒரு விதத்தில் எனக்கு இன்ஸ்பிரேஷன்! பானா ராவன்னாவின் இடுகைகளை வாசித்து பல சமயங்களில் வாய்விட்டுச் சிரித்து மாட்டிக்கொண்டிருக்கிறேன். மங்குனியைப் பற்றி என்ன சொல்ல? ஒவ்வொரு அணுவும் நகைச்சுவைதான் அவரிடம்...!என்னைத் தவிர மற்றவர்கள் அனைவரும் வலையுலகில் உண்மையிலேயே தூள் கிளப்புகிறார்கள்.

தன்னடக்கமெல்லாம் இல்லீங்கோ! உண்மையிலேயே இந்தப் பட்டியலில் இடம்பெற என்னைவிடவும் தகுதியுள்ளவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். சட்டென்று பத்து பெயர்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. இருந்தாலும், என்னைப் பற்றிக் குறிப்பிட்டமைக்கு நன்றி! :-)

//இவரது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு பதில் போடுவதில்லை என்ற ஒரே ஒரு குறை மட்டும் உண்டு.//

தல, நிறைகளைச் சொல்வதைக் காட்டிலும், குறைகளைச் சுட்டிக்காட்டுகிறவர்கள் தான் நல்ல நண்பர்கள். உங்களைப் போல பலர் என்னிடமிருக்கிற இந்த ஒரு குறையை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். (இது தவிரவும் இன்னும் சில குறைகள் என்னிடம் இருக்கின்றன!).

எல்லாக் குறைகளையும் களைய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. அது உங்களது இடுகையைப் பார்த்ததும் அதிகரித்திருக்கிறது. நன்றி! நன்றி!! நன்றி!!

உங்களுக்கும் உங்களது நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

ரஹீம் கஸ்ஸாலி said...

HNY-2011

Anonymous said...

பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

sathishsangkavi.blogspot.com said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்....

மாணவன் said...

பகிர்வுக்கு நன்றி அண்ணே

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

சமுத்ரா said...

இவர்களெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தவர்கள். எத்தனை நாள் தான் இவர்களையே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?
பதிவுலக ஏகாதிபத்தியம் அழிய, தயவு செய்து மற்றவர்களையும் அடையாளம் காணுங்கள்.
நகைச்சுவை நல்லது தான் என்றாலும் அதனால் சமுதாயத்திருக்கு பயன் எதுவும் பெரிதாக இல்லை..

Unknown said...

- பன்னிக்குட்டி ராம்சாமி -
அட்டகாசமான நகைச்சுவை அவருடையது! வாய்விட்டுப் பலமுறை சிரித்திருக்கிறேன். அதுவும் அந்த கவுண்டமணி படம் செம பொருத்தம்! அதனால்தானோ என்னவோ அவரின் கமெண்ட்ஸ், டயலாக் எல்லாமே கவுண்டமணி பேசுவது போலவே தோன்றும்! வாழ்க பன்னிக்குட்டி ராம்சாமி!! :-)
நீங்கள் சொன்ன அனைவருமே நல்ல பதிவர்கள்தான்!

ஆர்வா said...

உண்மையிலேயே எல்லோரும் திறமைசாலிகள்தான். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

உங்களுக்கும் பட்டியலில் இடம் பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும்..

சசிகுமார் said...

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.

Speed Master said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்

karthikkumar said...

தல உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள எங்க தாத்தா சொல்ல சொன்னாரு அவரும் நீங்களும் ஒன்னா படிசீங்கலாமே...

karthikkumar said...

வீட்ல என்னோட வாழ்த்துக்கள சொல்லிருங்க... அடுத்த வருசதிலாவது நெறைய சீன படங்களுக்கு விமர்சனம் எழுதி பேரும் புகழும் அடைய வேண்டும்னு அடியேன் வேண்டிகொள்கிறேன்.....:)

வைகை said...

உங்கள் இதயத்தில் இடம் பிடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்! உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்!

THOPPITHOPPI said...

//Samudra said...

இவர்களெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தவர்கள். எத்தனை நாள் தான் இவர்களையே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?
பதிவுலக ஏகாதிபத்தியம் அழிய, தயவு செய்து மற்றவர்களையும் அடையாளம் காணுங்கள்.//

அடப்பாவிகளா ஒருப்பதிவுக்கு போய் கம்யுனிஸ்ட் ரேஞ்சிக்கு பீல் பன்னுராருப்பா............வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவியுங்கள் நண்பரே



இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் செந்தில்குமார் சார்

Chittoor Murugesan said...

டாப் 100ன்னு போட்டிருந்தா என்னாட்டம்
போனியாகாத கேஸோட வலைப்பூவுல்லாம் வந்திருக்கும்னு நினைக்கிறேன்

மங்குனி அமைச்சர் said...

- இம்சை அரசன் 23ம் புலிகேசியின் லோகோவைப்பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்///

ஆஹா .... அப்போ எல்லாரும் இவ்ளோ நாளா அந்த படத்த பாக்கத்தான் என் பிளாக்கிற்கு வந்திங்களா ???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................... இருந்த எல்லாத்துக்கும் அந்த படத்த அவார்டா குடுத்திடுறேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. என்ன பற்றி எழுதியிருக்கீங்க போல..!!!!

இன்னுமா, உலகம் என்னை நம்பிக்கிட்டு இருக்கு!!!!!...


புத்தாண்டு வாழ்த்துக்கள்..

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
மங்குனி அமைச்சர் said...

உங்கள் மனதில் எனக்கு இடம் கொடுத்ததிற்கு ரொம்ப நன்றி செந்தில் சார் ............. அனாலும் உங்கள் பிளாக்கின் வேகம் அபாரம் ..... எப்படி இவ்ளோ பதிவுகள் போடமுடியுது .........(ஒவ்வொரு பதிவும் போடுறதுக்கு நான் படுற கஷ்டம் எனக்குத்தான் தெரியும் ........வாரத்துக்கு ரெண்டு பதிவு போடுறதுக்குள்ளே நாக்கு தள்ளிப் போகுது சார் )

October (44)
December (41)

ஒரு மாசத்துல 30 நாள்ல 41 , 44 பாதிவுகள் ......... பிரமிப்பா இருக்கு செந்தில் சார் ....... (எங்க தல இவ்ளோ மேட்டர் கிடைக்குது கொஞ்சம் சொல்லுங்களேன் ........... பேமென்ட் பாத்து பன்னிக்கிறலாம்)

தொடந்து தமிழ் மணம் டாப் 20 முதலிடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் ........அந்த வெற்றிகள் தொடர மீண்டும் வாழ்த்துக்கள் செந்தில் சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

///Samudra said...

இவர்களெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தவர்கள். எத்தனை நாள் தான் இவர்களையே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?
பதிவுலக ஏகாதிபத்தியம் அழிய, தயவு செய்து மற்றவர்களையும் அடையாளம் காணுங்கள்./////

கவர்னரே சொல்லிட்டாரு. எல்லா பயபுள்ளைகளும் இனிமே ஒழுங்க எழுதலை பிச்சுபுடுவேன் ராஸ்கல். சமுத்ரா நீங்க கவலை படாதீங்க. இனிமே இந்த பயலுக எல்லாம் ஒழுங்கா எழுதி நாட்டை திருத்திடுவாங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/இதுவரை எந்த வம்பு வழக்கிலும் சிக்காதவர்..//

யோவ் பன்னி இது வரைக்கும் வம்புல சிக்கலையா? $#%#^#%$^ %^# யோவ் இப்ப உன்னை திட்டிட்டேன். சண்டைக்கு வாய்யா!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பட்டாபட்டி - சென்னை பஷையில் இவரது திட்டுக்களைக்கேட்கவே ஒரு கூட்டம் உண்டு.இவரது பதிவுகள் செம காமெடி.குறிப்பாக காங்கிரஸை போட்டு தாக்குவார்.யாரைப்பற்றியும் ,எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்.தனது மனதிற்கு எது சரி என தோன்றுகிறதோ அதை கலக்கலாக எழுதுபவர்.///

நல்ல பதிவர். மற்ற பதிவர்களை சந்திப்பதையே கடமையாக கொண்டவர். சந்திக்கும் பொது தேன் பாட்டில் முக்கியம். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா - மொக்கைப்பதிவுகள் போட்டே சக்கையாக முன்னேறுபவர்.வட எனக்கே வாசகம் பிரபலம்.வடைவங்கி என இவருக்கு இவரே பட்டம் குடுத்துக்கிட்டார் (யாரையும் எதற்கும் எதிர்பார்க்கக்கூடாதாம்).இவரது வயது ரொம்பக்குறைவாக இருந்தாலும் நிறைவான பதிவுகள் கலக்கல்.///

7 or 8 வயசு இருக்குமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைச்சர் - இம்சை அரசன் 23ம் புலிகேசியின் லோகோவைப்பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்.இவரது எழுத்துக்களில் காமெடி தெறிக்கும்.சென்னைப்பதிவரான இவர் மற்றவர்களுடன் பழகுவதில் சகஜமானவர் என்ற நல்ல பெயர் பதிவுலகில் உண்டு.//

யோவ் மங்கு எனக்கும் ஒரு நல்ல பேர் வாங்கி கொடுயா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இவர் பணி புரியும் ஆஃபீஸ் இன்னும் இழுத்து மூடாமல் இருப்பது ஆச்சரியம்.//

என்ன ஒரு நல்ல எண்ணம். வாழ்த்துக்கள். ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2011 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்

vasan said...

செந்தில், த‌ங்க‌ளின் டாப் 10 ப‌திவ‌ர்க‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்.
அனைத்து ப‌திவுல‌க‌த்தின‌ருக்கும் புத்தாண்டு வ‌ள்மையும், புல‌மையும், த‌லைமையும் த‌ர‌ட்டும்.
பதிவுல‌ம் ப‌ர‌வ‌லாகியே,ஓரிரு வ‌ருட‌ங்க‌ள் தான் இருக்கும். அத‌ற்குள் ப‌ழைய‌ தலைமுறை, புதிய‌ த‌லைமுறையென, அர‌சிய‌ல்வாதிக‌ள் போல் ப‌திவு ம‌க்க‌ளைப் பிரித்து விடாதீர்க‌ள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னண்ணே இது பெரியாளுக இருக்கற எடத்துல நம்மலையும் கொண்டு போயி வெச்சுட்டீங்க? உங்கள் பெருந்தன்மைக்கு ரொம்ப நன்றி சிபி.
பட்டாபட்டி, மங்குனி அமைச்சர், சிரிப்பு போலீஸ், இவர்கள்தான் இன்றும் எனக்கு இன்ஸ்பிரேசன், இவர்களைப் படித்துத்தான் பதிவுகள் பக்கமே வரத் தொடங்கினேன். இவர்கள் பெயருக்குப் பின்னால் என்னையும் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இதுவரை எந்த வம்பு வழக்கிலும் சிக்காதவர்../////

இப்பிடி போட்டுக்கொடுத்துட்டீங்களே? இத நெனச்சாத்தான் பயமா இருக்கு....!

Unknown said...

thala wish you happy new year 2011

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சேட்டைக்காரன் பதிவுகள் கிளீன் நகைச்சுவை......!
இப்போதெல்லாம் அவர் எழுதும் வேகத்தைக் குறைத்து விட்டார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மங்குனி அமைச்சர் - இம்சை அரசன் 23ம் புலிகேசியின் லோகோவைப்பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்.இவரது எழுத்துக்களில் காமெடி தெறிக்கும்.சென்னைப்பதிவரான இவர் மற்றவர்களுடன் பழகுவதில் சகஜமானவர் என்ற நல்ல பெயர் பதிவுலகில் உண்டு.//

யோவ் மங்கு எனக்கும் ஒரு நல்ல பேர் வாங்கி கொடுயா../////

வெச்சுக்கிட்டா இல்லேங்கிறாரு...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி வந்ததுக்கு நானும் வாழ்த்த்ச் சொல்லிக்கிரேம்பா, இல்லேன்னா அதுவும் குத்தமாயிடப் போவுது.....

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..........!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்டாபட்டி, மங்குனி அமைச்சர், சிரிப்பு போலீஸ், இவர்கள்தான் இன்றும் எனக்கு இன்ஸ்பிரேசன்,
//

நெஞ்சை நக்கிவிட்டீர்..
இன்னக்கு தண்ணி அடிக்காம தூக்கம் வராது போலிருக்கு..!!!!

ஹி..ஹி.. எனக்கு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@ரமேஸ்..
//
நல்ல பதிவர். மற்ற பதிவர்களை சந்திப்பதையே கடமையாக கொண்டவர். சந்திக்கும் பொது தேன் பாட்டில் முக்கியம். ஹிஹி
//


ஹி..ஹி.. போங்க சார்.. எனக்கு வெக்கம் வெக்கமா வருது..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பன்னி..


அடப்பாவி, நீர்....பதிவுலக்குக்கு வந்ததுக்கு நானும் ஒரு காரணமா?..


ரமேஸ்.. இந்த பீஸ்சை என்னானு கேளு....

Sivakumar said...

செந்தில் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் என் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!!

Ravi kumar Karunanithi said...

appo naan illaya.. enna ungaluku pidikadha.?

Saravanan Trichy said...

:) புத்தாண்டு வாழ்த்துக்கள்....

ஜெயந்த் கிருஷ்ணா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ivargal ellorin elutthum naanum rasipavaye... nanri pakirnthamaikku... Happy new year

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஆமினா said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

அடடா... மன்னிக்கணும் சிபிஎஸ் வரவு பிந்திவிட்டது (உடல் கோளாறு) தங்களின் மனங்களில் இப்படி ஒரு இடம் கிடைக்கும் என நான் என்றைக்குமே நினைத்ததில்லை ஏதோ போடி போக்காக எழுதியும் நகைச்சுவையாக பலரை கலாய்த்தும் கொண்டிருந்தேன்.... மிக்க நன்றி..

ம.தி.சுதா said...

@ Samudra said...
/////இவர்களெல்லாம் எல்லாருக்கும் தெரிந்தவர்கள். எத்தனை நாள் தான் இவர்களையே சொல்லிக் கொண்டிருப்பீர்கள்?
பதிவுலக ஏகாதிபத்தியம் அழிய, தயவு செய்து மற்றவர்களையும் அடையாளம் காணுங்கள்.//////

சகோதரம் தங்களின் கருத்தப் பார்த்து மிகவும் சந்தோசமடைகிறேன் காரணம்
என்னையும் எல்லோருக்கும் தெரியும் எனற பட்டியலிலு்ம் ஏகாதி பத்தியம் என்ற வட்டத்துள்ளும் சேர்த்தமைக்கு... மிக்க நன்றி..

ம.தி.சுதா said...

50 எனக்குத் தான் சுடு சோறு..

ம.தி.சுதா said...

@ Samudra said...

ஃஃஃஃஃஃஃநகைச்சுவை நல்லது தான் என்றாலும் அதனால் சமுதாயத்திருக்கு பயன் எதுவும் பெரிதாக இல்லை.ஃஃஃஃஃ

முடிந்தால் நம்ம ஓடைக்கும் ஒரு தடவை வந்து விட்டுப் போங்களேன்...

ம.தி.சுதா said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
/////////இதுவரை எந்த வம்பு வழக்கிலும் சிக்காதவர்..//

யோவ் பன்னி இது வரைக்கும் வம்புல சிக்கலையா? $#%#^#%$^ %^# யோவ் இப்ப உன்னை திட்டிட்டேன். சண்டைக்கு வாய்யா!!!////////

நானும் மல்லுகட்ட வாறேங்க... யோவ் பன்னி வாய்யா...

குறையொன்றுமில்லை. said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லா பதிவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

// பலரும் தினசரி ஒரு பதிவு போட்ட போதும் தனது வழக்கப்படி வாரம் 3 பதிவு என தொடர்பவர்.இதுவரை எந்த வம்பு வழக்கிலும் சிக்காதவர்////

மாட்டிகிட்டார்யா....ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அபூர்வ சிந்தாமணி...

MANO நாஞ்சில் மனோ said...

எங்கள் தம்பி மொக்கையன் செல்வாவுக்கு சின்ன பையன்னு ஏழாவது இடத்தில் போட்டதற்கு பின்னால் ஏதோ சதி நடந்துள்ளதை சொல்லி வன்மையாக கண்டிக்கிறேன்....ப்பூப்ப்...

MANO நாஞ்சில் மனோ said...

//டாப் 100ன்னு போட்டிருந்தா என்னாட்டம்
போனியாகாத கேஸோட வலைப்பூவுல்லாம் வந்திருக்கும்னு நினைக்கிறேன்///

டாப் 1000 ன்னு போட்டுருந்தா என் பேரு கூட வந்துருக்கும் தல....

MANO நாஞ்சில் மனோ said...

//நெஞ்சை நக்கிவிட்டீர்..
இன்னக்கு தண்ணி அடிக்காம தூக்கம் வராது போலிருக்கு..!!!!

ஹி..ஹி.. எனக்கு///

எலே மக்கா நானும் நானும்....

ADMIN said...

என் பேரை நான் எதிர்பார்த்தேன்...ம்ஹூம்.. எல்லாம் பெரிய தலைகளுக்குதானா..? சும்மா சோக்குக்குதான்னே..!