Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - புரொடியூசருக்கு சொம்பு- சினிமா விமர்சனம்


படம் போட்டு 20 நிமிடங்கள் கழித்துத்தான் ஹீரோவே அறிமுகம் ஆகிறார்
என்னும்போதே ஒரு காதல் சப்ஜெக்ட் படத்துக்கான முதல் சறுக்கல்
தொடங்கி விடுகிறது

ஊமை விழிகள்,கேப்டன் பிரபாகரன் போன்ற ஆக்‌ஷன் சப்ஜெக்டில்
ஒரு பில்டப்புக்காகவும்,ஹீரோ எப்போ வருவார்?நடக்கும் அநியாயத்தை
எப்போ தட்டி கேட்பார் என்ற டெம்ப்போவை எகிற வைக்கவும் ஹீரோ
அறிமுகத்தை வேண்டும் என்றே தள்ளிப்போடுவது உண்டு.

ஆனால் இது போன்ற காதல் கதையில்...?

மாதவனையும்,திரிஷாவையும் லவ்வர்ஸாக ஆரம்பத்திலேயே
காட்டி விடுவதால் பார்வையாளர்களின் மனதில் அந்த ஜோடி
செட் ஆகி விடுகிறது.அதற்குப்பிறகு கமல் திரிஷாவுடன் ஜோடி
சேருவாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த இயக்குநர் பகீரதப்பிரயத்தனம்
செய்தும் ம்ஹூம்....

நடிகையை காதலிக்கும் பணக்கார வாலிபன் அவள் மீது சந்தேகப்பட்டு
ஒரு உளவாளியை நியமித்து அவள் கேரக்டரை ஸ்டடி பண்ணுகிறான்.அந்த உளவாளியே அந்த நடிகையுடன் ஜோடி சேரும் சூழ்நிலை எப்படி வருகிறது என்பதை 17 ரீல்கள் இழு இழு என இழுத்து சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

அர்னால்டு ஸ்வார்செனேகர் நடித்த  TRUE LIES, பிறகு வந்த சீன் படங்கள் THE INDECENT BEHAVIOUR,MY WIFE"S LOVER  போன்ற ஆங்கிலப்படங்களில்
வந்த கதைகளில் உளவாளி மனைவியுடன் கனெக்‌ஷன் ஆவது போல்
காண்பிப்பார்கள்.தமிழுக்காக டீசண்ட்டாக காதல் என மாற்றி,மனைவி என்பதை காதலி என உல்டா பண்ணி இருக்கிறார்கள்.

கணவன் மனைவி மீது சந்தேகப்படுவது பல இடங்களில் நடப்பது.ஆனால்
காதலி மீது பெரும்பாலும் காதலன் சந்தேகப்பட மாட்டான்,அப்படி சந்தேகப்பட்டால் அது உண்மையான  காதலே இல்லை.இந்த ஆதார  சுதி பேதம் படத்தின் மையத்தை பாதிப்பதால்....


அதே போல் காதலில் தோல்வி அடையும் ஒரு பெண் அடுத்த காதலுக்கு போக கொஞ்சம் டைம் எடுத்துக்குவா.அல்லது காதல் பிஸ்னெஸே வேண்டாம் என முடிவு எடுப்பா,இப்படி அண்ணன் எப்போ எந்திரிப்பான்,திண்ணை எப்போ காலி ஆகும் என அடுத்த காதலுக்கு அடுத்த நிமிஷமே போக மாட்டா.

படத்தின் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் என டைட்டிலில் போட்டாலும் கதை,
திரைக்கதை ,வசனம் போன்ற பொறுப்புகளை ஏற்ற கமல் தான் படத்தையும்
இயக்கி இருக்கிறார் என்பது கண் கூடாக தெரிகிறது.படத்தின் கடைசி
40 நிமிடங்கள் மட்டும் ரவி இயக்கி இருக்கலாம்,செம காமெடி சீன்கள்.

சினிமா ஷூட்டிங்கில் திரிஷாவும்,சூர்யாவும் பழகிக்கொள்வதைப்பார்த்து
மாதவன் சந்தேகப்படுவதாக காண்பிக்கும்போதே மாதவன் இதில் வில்லன்
கேரக்டர் என்பது ஈஸியாகப்புரிந்து விடுகிறது.

கமலுக்கு பொதுவாக ஒரு குணம் உண்டு.தன்னுடன் நடிக்கும் ஹீரோவை டம்மி பண்ணி விடுவார்,(வெற்றி விழா,குருதிப்புனல்).ஆனால் அன்பே சிவம் படத்தில் மட்டும்தான் மாதவனின் நடிப்பு கமலை ஓவர்டேக் செய்தது.அதற்குப்பழி வாங்கும்  முகமாக இதில் மாதவனி டம்மி பண்ணி விட்டார்.
படத்தில் ரசனையான சீன்கள்

1.கமல் திரிஷாவை பைனாகுலர் மூலம் உளவு பார்ப்பதை ஒரு பொடியன்
இன்னொரு பைனாகுலர் மூலம் எதேச்சையாக பார்ப்பது,அதைத்தொடர்ந்து
வரும் காமெடி காட்சிகள்

2.படத்தோட ஓபனிங்க் ஃபைட் முடிந்ததும் கமலை கடந்து போகும்
ஃபாரீன் ஃபிகர்கள்

3. நீ நீல வானம் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கலக்கல்.அதில்
ஒரு சீனில் ஒரு செடி தனது இலைகளாக குழந்தையின் பாதங்களை
வைத்திருப்பது ஒண்டர்ஃபுல் கற்பனை.(ஆர்ட் டைரக்‌ஷன் பிரமாதம்)

4.கிரேசி மோகன் ஸ்டைலில் வரும் ஆள் மாறாட்டக்காமெடி சீன்கள்+
படத்தின் கடைசி 40 நிமிட காமெடிக்கச்சேரிகள்

5.கமலுக்கு ஜோடியாக வரும் ஃபாரீன் ஃபிகர் 10 நிமிடங்களே வந்தாலும்
நிறைவான நடிப்பு.(நல்ல ஃபிகர்)

6.கமல் திரிஷா இடையே நடக்கும் கவிதைபரிமாற்ற பாட்டு (வறுமையின்
நிறம் சிவப்பு படத்தில் வரும் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது பாட்டின்
சிச்சுவேஷ்னின் உல்டாவாக இருந்தாலும்)

7. கண்களை குளிர்விக்கும் ஒளிப்பதிவு.

8.மாதவனின் வித்தியாசமான நடிப்பு

9. நிலாவை புட்டு வெச்சேன்.உன் நெற்றில ஒட்ட வெச்சேன்.
பாட்டு வரிகள் படமாக்கப்பட்ட விதம்
.
10. சேதாரம் இல்லாமல் பாட்டு ஹம்மிங்க்

வசனகர்த்தாவாக கமல் ஜொலித்த இடங்கள்

1. டியர்,நான் உனக்காக இந்த உலகத்தையே உன் காலடியில் கொண்டுவந்து
போடறேன்.

வேணாம்,அது பாட்டுக்கு அப்படியே இருக்கட்டும்,யாருக்காகவும் யார்
காலடியிலும் அது இருக்க வேண்டாம்.பிச்சைக்காரன் காலடில கூட சில
சமயம் உலகம் இருக்கறதா நினைச்சுக்கறான்

2. மேரேஜ்க்குப்பிறகு நீ நடிக்க வேணாம்.

மேரெஜ்க்குப்பிறகு நீங்க வேலைக்குபோகாம வீட்டோட இருங்கன்னா கேட்பீங்களா?

நீ என்னை லவ் பண்றியா ?இல்லையா?

ஐ லவ் மை புரொஃபஷன் ஆல்சோ

3. மேடம் நீங்க மட்டும் என் படத்துல நடிக்க ஓக்கே சொல்லீட்டா நான்
உங்க காலுக்கு செருப்பா இருப்பேன்.

லெஃப்டா?ரைட்டா?

4. அவன் அவளை ரொம்ப லவ் பண்றான் ,அதனாலதான் சந்தேகப்படறான்
(பொசசிவ்னெஸ்)

லவ்ல ச்ந்தேகம் வரலாமா?

5. சங்கீதா- என் பாலிசி எல்லாம் ஆப்பிளை எடு,காசை குடு,பக்கத்துல
வந்து படு,அவ்வளவுதான் ரொம்ப சிம்ப்பிள்

6. கட்டிக்கப்போற கணவனுக்கு கடுக்கா குடுக்கற பொண்ணுங்களால தான்
இந்த உலகத்துல சுனாமி வருது,எரிமலை வெடிக்குது

7. இங்கே பாருங்க,தப்பு பண்ணனும்னு நினைக்கறவ உள்ளூர்ல அதுவும் கேரவன் வேன்ல தப்பு பண்ண மாட்டா,வெளிநாடு போயிடுவா.

8. இந்த உலகத்துல நேர்மையா இருக்கற பொண்ணுக்கு திமிர்தானே வேலி,அது இல்லைன்னா மேஞ்சிட்டு போயிடுவானுங்களே? (செமயான வசனம்)


9. குழந்தைங்க தூங்குதா இல்லையான்னு அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும்.

10 நல்லவங்களுக்கு எப்பவும் ஒண்ணும் ஆகாது,அவங்களை கடவுள் காப்பாத்துவார்.

11. அவர் இன்னைக்கு ஃபோன்ல என் கிட்டே ரொம்ப ஸ்வீட்டா பேசுனார்டி

ரொம்ப தண்ணியோ?

12.  எல்லா கள்ளக்காதலர்களும் காவிக்கலர்ல டிரஸ் போடறாங்க,அது ஏன்/

13. அம்மா,யூ ஆர் எ ஜீனியஸ்,கரிநாக்கு தேவதை.

14. அவன் செம கட்டைடி

ச்சீ

அவங்க மட்டும் சொல்றாங்க?அவனுக்கு கண்டிப்பா மேரேஜ் ஆகி இருக்கும்.

எப்படிடி சொல்றே/

எல்லாம் ஒரு அனுபவம் தான்.

15. ஆம்பளைங்க தப்பு பண்றப்ப பெல்ட் பக்கிள்ச்ல ,பேண்ட் பாக்கெட்ல
கை விட்டுக்குவாங்க (ஏம்ப்பா அப்படியா?)
பொம்பளைங்க தப்பு பண்றப்ப கூந்தலை கோதி விட்டுக்குவாங்க (என்னே ஒரு
கண்டுபிடிப்பு) பாடி லேங்குவேஜ் ஈஸ் த கீ.


16.  என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் அதை விதின்னாங்க,ஆனா என்னைப்பொறுத்தவரை அது ஒரு ஆக்சிடெண்ட்,வலி மட்டும் வயிற்றுக்குள்ள பாம்பு மாதிரி நெளிஞ்சுட்டே இருக்கு.

17 நீங்க பக்திமானா?

நான் புத்திமானா அப்படிங்கறதே கேள்விக்குறியா இருக்குது.

18. பொண்ணுங்க மனசை ஆம்பளைங்க நீங்க எப்படி புரிஞ்சுக்கறீங்க?

ஹா ஹா அட்லீஸ்ட் 33% கூடவா புரிஞ்சுக்க முடியாது?

19. வீரத்தோட மறுப்பக்கம் மன்னிப்பு,வீரத்தோட உச்சகட்டம் அகிம்சை

20. நான் இப்போ எங்கே இருக்கேன்னு சொல்லுங்க பார்ப்போம்?
அது தெரியல,ஆனா தண்ணில இருக்கீங்க..

21.அங்கே ஒரு உயிரும் ,காதலும் ஊசலாடிட்டு இருக்கு
ஒன்ஸ்மோர் பிளீஸ்,டைட்டில் சூப்பரா இருக்கு.

22.(DEEP) டீப்பா பேசறே...

நோ தீபா பேசறேன்.

23. அவரு ஒரு கவிதை சொல்றதா சொன்னாரு,பொறுத்துக்குங்க.

நான் பொறுத்துக்குவேன்,தமிழ் பொறுத்துக்குமா?
 .
24. அபூர்வ சிந்தாமணிகள் 1000 பேர் இருக்கற இந்த கோலிவுட்டில் தலை என்ன வால் கூட தெரியறது கஷ்டம்தான் .

25.  என் உயிரை விடறதுக்கு சாதாரணமா இருக்கு,ஆனா என்னோட உயிரா இருக்கற அவ உயிர் விடறதை நேர்ல பார்க்கற கொடுமை இருக்கே...

படத்தில் வள வள என வசன மழை பொழிந்துகொண்டே இருப்பது பெரிய மைனஸ்,அதிலும் ஆங்கில வசனங்கள் அதிகம்.கமல் பொதுவாகவே தனது மேதாவிலாசத்தை காண்பிப்பார்,இதில் வசனகர்த்தா வேற கேக்கனுமா?

நடிப்பில் கமல் ஒரு ஜீனியஸ் என்பதில் ஒரு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மகாநதி ,குணா படங்களுக்கு பிறகு உலக நாயகன் பட்டம் கிரீடம் வந்த பிறகு அவருக்கு தான் திரையில் தனியாகத்தெரிய வேண்டும் என்ற ஆவேச உந்துதல் ஏற்பட்டு இருக்கிறது.அது ஓவர் ஆக்டிங்கில் கொண்டு போய் விட்டு விடுகிறது.

மாதவன்,திரிஷா,சங்கீதா 3 பேரும் ரொம்ப இயல்பாக நடித்து பெயரை தட்டி செல்கையில் கமல் ரொம்பவே திணறுகிறார்.ஆனால் கடைசி 40 நிமிடங்களில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் கமல் தன் நகைச்சுவை நடிப்பில்.

க்ளைமாக்சில் கமல் திரிஷா கூட ஜோடி சேருவதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம்,ஆனால் மாதவன் 40 வயசான சங்கீதா கூட ஜோடி சேர்வது நகைக்க வைக்கும் டர்னிங்க் பாயிண்ட்.(ரசிகர்களை மாக்கான்கள் என்று நினைத்தாரோ?)

கமல் ரசிகர்கள்,காமெடி பிரியர்கள் பார்க்கலாம். ( காமெடி என்றால் பஞ்ச தந்திரம்,பம்மல் கே சம்பந்தம் மாதிரி முழு நீள காமெடி கிடையாது,கடைசி 40 நிமிடம் மட்டும் )

ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள்,பி சி செண்ட்டர்களில் பொங்கல் வ்ரை ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சன மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே

49 comments:

எல் கே said...

ஒலக நாயகன் ரசிகர்கள் பொங்கப் போறது நிச்சயம்

Ram Sridhar said...

படம் வெளிவந்த முதல் நாளிலேயே பெரிய அளவில் வரவேற்பு பெற்றுவிட்ட நிலையில், எல்லா பதிவர்களைப் போலவே நாமும் படம் நன்றாக இருக்கிறது என்று எழுதக்கூடாது, எழுதினால் நம் "தனித்தன்மை" (?) என்னாவது என்ற என்ற எண்ணத்தில் வேண்டுமென்றே படம் நன்றாக இல்லை என்று விமர்சனம் எழுதியது மாதிரி இருக்கிறது.

priyamudanprabu said...

enna irunthalum rasini padam pola varuma sir ??!?

pichaikaaran said...

சபாஷ் . சரியான விமர்சனம்

KANA VARO said...

எனக்கும் கிட்டத்தட்ட இதே பீலிங்ஸ் தான்..

ரஹீம் கஸ்ஸாலி said...

திரிஷா உதடு பத்தி ஒண்ணுமே சொல்லலியே தல...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:((

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

naalaikku pathuttu solren. namma blog pakkam varrathu

மாணவன் said...

விமர்சன பகிர்வுக்கு நன்றி அண்ணே

எப்படி இவ்வளவு வசனங்களை ஞாபகம் வைத்துகொண்டு எழுதுகிறீர்கள்

தொடர்ந்து கலக்குங்க..........

சி.பி.செந்தில்குமார் said...

எல் கே said...

ஒலக நாயகன் ரசிகர்கள் பொங்கப் போறது நிச்சயம்


அவங்க பொங்கறாங்களோ இல்லையோ நீங்க எடுத்துக்குடுத்திட்டீங்க

சி.பி.செந்தில்குமார் said...

RAM SRIDHAR said...

படம் வெளிவந்த முதல் நாளிலேயே பெரிய அளவில் வரவேற்பு பெற்றுவிட்ட நிலையில், எல்லா பதிவர்களைப் போலவே நாமும் படம் நன்றாக இருக்கிறது என்று எழுதக்கூடாது, எழுதினால் நம் "தனித்தன்மை" (?) என்னாவது என்ற என்ற எண்ணத்தில் வேண்டுமென்றே படம் நன்றாக இல்லை என்று விமர்சனம் எழுதியது மாதிரி இருக்கிறது.

appadi அப்படி இருந்தா நந்தலாலா.மைனா.தா போன்ற படங்களை எல்லோர் போலவும் சிறப்பா எழுதலையா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பிரியமுடன் பிரபு said...

enna irunthalum rasini padam pola varuma sir ??!?

மாட்டி விட்ருவீங்க

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பார்வையாளன் said...

சபாஷ் . சரியான விமர்சனம்

அப்பாடா முதல் பாராட்டு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger KANA VARO said...

எனக்கும் கிட்டத்தட்ட இதே பீலிங்ஸ் தான்..

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரஹீம் கஸாலி said...

திரிஷா உதடு பத்தி ஒண்ணுமே சொல்லலியே தல...

ஹ ஹ ஹா கமல் அதுல கை வெக்கலை

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...

:((

????

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

naalaikku pathuttu solren. namma blog pakkam varrathu

இதோ வந்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

மாணவன் said...

விமர்சன பகிர்வுக்கு நன்றி அண்ணே

எப்படி இவ்வளவு வசனங்களை ஞாபகம் வைத்துகொண்டு எழுதுகிறீர்கள்

தொடர்ந்து கலக்குங்க..........

நன்றி

Ramesh said...

//நீ நீல வானம் பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் கலக்கல்.அதில்
ஒரு சீனில் ஒரு செடி தனது இலைகளாக குழந்தையின் பாதங்களை
வைத்திருப்பது ஒண்டர்ஃபுல் கற்பனை.//

அது குழந்தையோட பாதங்கள் இல்லைங்க.. கமலோட மனைவியா வர்ற அந்த ஃபாரின்காரங்களோட கால்.. அடுத்த காட்சியிலேயே.. அவங்க காலை பெயிண்ட்ல வெச்சி சுவத்துல கமல் வைப்பார் (பாட்டு முழுசும் ரிவர்ஸ் இல்லியா) கவனிக்கலைங்களா..

karthikkumar said...

நெறைய மைனஸ் வோட்டு விழுந்திருச்சு போல.... :))

karthikkumar said...

விமர்சனம் சூப்பர் தல

Arun Prasath said...

என்ன தல இவ்ளோ மைனஸ் வோட்?

THOPPITHOPPI said...

///
ஊமை விழிகள்,கேப்டன் பிரபாகரன் போன்ற ஆக்‌ஷன் சப்ஜெக்டில்
ஒரு பில்டப்புக்காகவும்,ஹீரோ எப்போ வருவார்?நடக்கும் அநியாயத்தை
எப்போ தட்டி கேட்பார் என்ற டெம்ப்போவை எகிற வைக்கவும் ஹீரோ
அறிமுகத்தை வேண்டும் என்றே தள்ளிப்போடுவது உண்டு.
///

என்னங்க சார் நேத்து டிவில ஊமை விழிகள் படம் பார்த்திங்க போல?

Unknown said...

//எல்லா கள்ளக்காதலர்களும் காவிக்கலர்ல டிரஸ் போடறாங்க,அது ஏன்//

அது அவங்க போடற துணியோட கலர்ல ப்ரச்னை இல்லை.. பாக்குற 'காமாலை' ஹாசனோட பார்வைல இருக்கு..மத்த கலரைப்போட்டுட்டு மத்தவங்க பண்ற அட்டூழியத்தை எல்லாம் பத்திப் பேசுற தைரியமும் / நேர்மையும் காமாந்தஹாசன் கிட்ட கிடையாது அதான் வசனம் இப்டி வருது..

Abhi said...

மிகச்சரியான விமர்சனம் சிபி... நான் மூன்றாம் கோணத்துல விமர்சனம் எழுதிட்டு வந்து பாகுறேன்.. நீங்களும் நானும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் எழுதியிருக்கோம்...
http://inthiya.in/ta/?p=2073

இம்சைஅரசன் பாபு.. said...

அம்பு முரிஞ்சிருச்சி போல இருக்கு .........

ஆனந்தி.. said...

ஓகே ஓகே..:)))

வைகை said...

இத காமெடியா எடுக்கிறதா சீரியஸா எடுக்கிரதான்னு அவங்களே கொலம்பிருக்காங்க! நம்மளையும் கொளப்பிட்டாங்க! நடுநிலையான விமர்சனம்!

Unknown said...

நல்ல விமர்சனங்க..

எல் கே said...

//அவங்க பொங்கறாங்களோ இல்லையோ நீங்க எடுத்துக்குடுத்திட்டீங்க//

velai mudinjathu

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நேர்மையான விமர்சனம் சிபி.....கமலிடம் இயல்பான நடிப்பு போய் வெகுனாட்களாகிவிட்டது!

செல்வா said...

//மாதவன்,திரிஷா,சங்கீதா 3 பேரும் ரொம்ப இயல்பாக நடித்து பெயரை தட்டி செல்கையில் கமல் ரொம்பவே திணறுகிறார்.ஆனால் கடைசி 40 நிமிடங்களில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் கமல் தன் நகைச்சுவை நடிப்பில்./

எனக்கு தெரியும் .. கமலுக்கு காமெடி ரொம்ப ரொம்ப அருமையா வரும் அண்ணா .. ஆனா சிலர் இந்த கடைசி காட்சிகள் போர் அப்படின்னு சொல்லுறாங்க .. நீங்க இதுதான் கலக்கல் அப்படின்னு சொல்லுறீங்க .. எப்படியோ நான் பார்ப்பேன் .!

vasan said...

ப‌ட‌த்தோட‌ பாதி க‌தை வ‌ச‌ன‌த்தை எப்ப‌டி ஞாப‌க‌ம் வைச்சிருக்கிங்க‌! அவ்வ‌ள‌வு ஒன்றுத‌லா செந்தில்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

சரியான விமர்சனம்

Srini said...

ஹலோ.. என்னை மாதிரி தீவிர கமல் ரசிகனோட டென்சனை எகிற வெக்கிறீங்களே ? படம் என்னவோ நீங்க எழுதுன மாதிரிதான் இருந்துது... என்ன பண்ணி தொலையறது உண்மைய ஒத்துகிட்டுதான ஆவனும் ?! சரியான விமர்சனம்..!!

sathishsangkavi.blogspot.com said...

:)

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//படம் போட்டு 20 நிமிடங்கள் கழித்துத்தான் ஹீரோவே அறிமுகம் ஆகிறார்//
//படத்தின் கடைசி
40 நிமிடங்கள் மட்டும் ரவி இயக்கி இருக்கலாம்//

அடிக்கடி டைம் பாத்தா படம் பார்க்க முடியாது :) :) :)

Philosophy Prabhakaran said...

// பகீரதப்பிரயத்தனம் //

என்ன இது... கெட்டவார்த்தை எல்லாம் யூஸ் பண்ணக்கூடாது...

Philosophy Prabhakaran said...

// காதலி மீது பெரும்பாலும் காதலன் சந்தேகப்பட மாட்டான்,அப்படி சந்தேகப்பட்டால் அது உண்மையான காதலே இல்லை //

தத்துவம்... தத்துவம்,... அப்படியே அடிச்சு ஆடுங்க...

Philosophy Prabhakaran said...

// கமலுக்கு பொதுவாக ஒரு குணம் உண்டு.தன்னுடன் நடிக்கும் ஹீரோவை டம்மி பண்ணி விடுவார் //

நூற்றுக்கு நூறு உண்மை வரிகள்... அன்பே சிவம் படத்திலும் மாதவன் டம்மி தான்...

Philosophy Prabhakaran said...

மானாவாரியாக மைனஸ் ஓட்டு வாங்கியிருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

Unknown said...

இந்த அறிவு ஜீவிங்க பிரச்சினையே இதுதான் - தவறுகளை ஒத்துகொள்ள மாட்டாங்க.

என்னது திரிசா உதடு தப்பிடுச்சா - என்னாது காந்தி செத்துட்டாரா!

satheesh said...

தலைவா நீ ரஜினி ரசிகரா இருக்கலாம் . அதுக்குன்னு நல்லா ஒரு என்டர்டைன்மென்ட் படத்தை நல்லாயில்லைன்னு சொல்றது சரியில்லை

satheesh said...

தலைவா நீ ரஜினி ரசிகரா இருக்கலாம் . அதுக்குன்னு நல்லா ஒரு என்டர்டைன்மென்ட் படத்தை நல்லாயில்லைன்னு சொல்றது சரியில்லை

Anonymous said...

super vimarsanam

Anonymous said...

தலைவா நீ ரஜினி ரசிகரா இருக்கலாம் . அதுக்குன்னு நல்லா ஒரு என்டர்டைன்மென்ட் படத்தை நல்லாயில்லைன்னு சொல்றது சரியில்லை//
no cp vijay rasikar

ஜோதிஜி said...

rhyming தலைப்பு

Jai said...

நல்ல விமர்சனம்...இன்னும் கொஞ்சம் தாக்கி இருக்கலாம்...இறுதிக்காட்சிகள் மிக மிக சினிமாத்தனமாக இருக்கின்றன...கடைசி 40 நிமிடங்கள் கூட பஞ்சதந்திரம், பம்மல் போன்ற படங்களின் அருகில் கூட வராது...திரைக்கதையில் கமல் வெகுவாக சறுக்கியிருக்கிறார்.....தென்மேற்கு பருவக்காற்று இந்த படத்தை அடித்துச் சென்று விடும்...

சசி ராஜா said...

வேண்டா வெறுப்பாய் படம் பார்த்த மாதிரி தெரியுது, விமர்சனத்தைப் படிக்கையில்..

படம் நன்றாய்த்தான் இருக்கிறது, பார்க்க என் விமர்சனம்:
http://alonealike.blogspot.com/2010/12/good-to-see.html