Monday, December 06, 2010

தா - எதிர்பாராத வெற்றிப்படம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjj85oNZd-wjLtFGjAZ7300vi2zdpQU39C2wehyphenhyphenW1hTCSFKltKLetP3POIjl56X7cX45Zhxxn7VA1A8XTJKPmg0AqLiksohnbHCQ3QOoahwHPnRbRQwCarfguPi35ItstuU01RV2IjroRY/s1600/thaa-tamil-movie-2010.jpg
கே பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படத்தோட ஒன் லைனை எடுத்துக்கிட்டு அதீத அன்பு எப்படி ஒரு மனுஷனோட வாழ்க்கையை பாதிக்குதுன்னு கொங்கு மண்டல மண்வாசனையோட நகைச்சுவையா சொல்லி இருக்காரு  புது இயக்குநரு,பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

படத்துல 90% புது முகங்களே..எல்லாரோட நடிப்பும் இயற்கையா இருக்கு.கத்தி,வெட்டு,குத்து,பஞ்ச் டயலாக் தலைவலி இல்லாம ஒரு அமைதியான கிராமத்துக்கதையைக்கொடுத்ததுக்காக புது இயக்குநரை வாழ்த்தலாம்.

தாழ்வு மனப்பான்மையும்,பொசசிவ்நெஸ்சும் உள்ள சாதாரண கிராமத்து ஆள் கேரக்டருக்கு  புதுமுகம் ஸ்ரீ ஹரி நல்ல தேர்வு.மிக இயற்கையாக டைரக்டர் எதிர்பார்த்த நடிப்பை வெளிக்கொணர்கிறார்.
புதுமுகம் நிஷா மஞ்சள் நிற நந்தியாவட்டப்பூ போல கொள்ளை அழகு.அவரது பாடிலேங்குவேஜ்,அவுட்புட் பிரபல நடிகைகள் நோட் பண்ணி ஃபாலோ பண்ண வேண்டிய ஒன்று.

பெண் பார்க்கப்போன இடத்தில் பார்த்த பெண்ணின் மீது காதல் கொள்ளும் மாப்பிள்ளை-காலேஜ் படிக்கும் பெண் படிக்காத மாப்பிள்ளையை வீட்டில் பார்த்து விட்டார்களே என மனசுக்குள் மருகி மெல்லவும் முடியாமல்,சொல்லவும் முடியாமல் தவிக்கும் மணப்பெண்ணின் மனசில் கொஞ்சம் கொஞ்சமாக ஹீரோ எப்படி இடம் பிடிக்கிறார்,அவர் காதலி மீது வைக்கும் அதீத அன்பால் என்ன பாதிப்பு நிகழ்கிறது என்பதே திரைக்கதை.



http://pirapalam.net/wp-content/uploads/2010/06/thaa.jpg
 நண்பர்கள் குழாம் சூழ ஹீரோ தண்ணி அடிக்க கிளம்பும்போதே படத்தில் கலகலப்பு தொடங்கி விடுகிறது.நான்கு நண்பர்களுக்கும் தனித்தனி பேக் கிரவுண்ட் கொடுத்து அவர்களை பார்வையாளன் மனதில் பதியவைக்கும் முயற்சியில் டைரக்டர் அநாசயமாய் கோல் போட்டு விடுகிறார்.
குறிப்பாக அந்த ஃபோட்டோகிராஃபர் கேரக்டரை மறக்கவே முடியாது.மனைவியிடம் கொஞ்சிப்பேசி நடித்து விட்டு தனது ஸ்டூடியோவுக்கு வந்து ஃபிகர்களை கரெக்ட் பண்ணும் சீனில் தியேட்டரில் செம அப்ளாஸ்.

ஏற்கனவே ஓவராக சாப்பிட்ட பிறகு நண்பர்கள் சரக்கடிக்க கூப்பிட்டதும்,இங்கும் அங்கும் ஓடி,எக்சசைஸ் செய்து,எல்லாம் பயனளிக்காமல் போன பிறகு ,வாயில் விரல் விட்டு வாமிட் எடுத்து வயிற்றை காலி ஆக்கி பின் பார்ட்டிக்கு போகும் கேரக்டரும் தூள்.


அப்போது சரக்கு அடித்து விட்டு பாடும் டப்பாங்குத்து பாட்டில் உபயோகப்படுத்திய நாட்டுப்புற மெட்டும்,தாரை தப்பட்டை இசைக்கருவிகளின் லயமும் செம.

ஃபிகரை கரெக்ட் பண்ண பஸ்சில் ஏறி பெண்கள் சைடில் வந்து கலாய்ப்பதும் கமலின் சத்யா படத்தில் அமலாவுடன் கமல் செய்யும் சேஷ்டைகளை ரிப்பீட் செய்வதும் கலகலப்பு.

 உயிர் ஊருக்கு உடல் பாருக்கு என்ற பஞ்சிங்க் லைனுடன் சங்கம் ஆரம்பித்து பார் என்பது டாஸ்மாக் பார் அல்ல உலகம் எனும் பார் என விளக்கம் அளிப்பதும் சூப்பர்.

 ஹீரோவின் நண்பர்களில் ஒருவர் மொக்கை ஃபிகருக்கு ரூட் போடுவதும் அந்தப்பேரழகி (!!??) அம்சவேணி அடிக்கடி ஒவ்வோரு ஆணின் வெற்றிக்குப்பின்னாலயும் ஒரு பொண்ணு இருப்பான்னு சொல்வாங்க,நான் உங்க வெற்றிக்குப்பின்னால இருக்க ஆசைப்படறேன்,நீங்க கண்ட கண்ட நாதேரிப்பசங்களோட எல்லாம் சேராதீங்க என சொல்லும்போது  தியேட்டரே அதிர்கிறது கை தட்டலால்.
இந்த சீனை காட்சிப்படுத்துகையில் இயக்குநரின் லாவகமான இயக்கமும்,டைமிங்க்சென்ஸும் வெளிப்படுகிறது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgj5637uxvwnbWU2_4K792yVYbYy2-I85928yrB40RCW2AcfiTKKP5hdhvhQy5B2io_BvfdGlxKQwGPL1DS5GjyiRiDpz66_ZghKHSuZIrnE5bu5AN1Y4uaqW0viLQQXbxAdVCQ7F8TKkst/s1600/thaa_tamil_movie_stills_gallery_02.jpg
கூட்டத்துல வந்திருக்கும் பெரியோர்களே பாட்டு கோவை மாவட்ட இசைக்கலக்கல்.தப்பாட்டம் எனப்படும் மாரியம்மன் கோவில் ஸ்டெப் ஆட்டம் போட்டு பின்னி எடுத்து விட்டார்கள்.

அதே போல் ஒரு கல்யாண விருந்தில் கஷ்டப்பட்டு ஒரு ஃபிகரிடம் ஐ லவ் யூ சொல்லும்போது அந்த ஃபிகர் என் விக்கலை நிறுத்துவதற்குத்தானே அப்படி சொன்னீங்க,ரொம்ப தேங்க்ஸ் என காலை வாரும்போது உம்மணாம்மூஞ்சிகள் கூட சிரித்து விடும்.

ஒரு சீனில் ஜோதி என பெயர் வருவது மாதிரி அகல் விளக்கில் டிசைன் செய்து காதலை வெளிப்படுத்தும் இடத்தில் ஆர்ட் டைரக்டர் பெயரை தட்டி செல்கிறார்.
அதீதமாக காதலியிடம் அன்பு வைப்பவர்களின் கண் பார்வையில் காதலியிடம் யார் பேசினாலும் ,பழகினாலும் பொறாமை,சந்தேகம்,கோபம் எப்படி வரும் என்பதை ரொம்ப எதார்த்தமாக எடுத்து சொல்வதில் இயக்குநர் தேர்ந்தவராக இருக்கிறார்.

படத்துக்கும், டைட்டிலுக்கும் சம்பந்தம் இல்லை.காதலியிடம் உள்ளத்தை அள்ளித்தா என கேட்பதாக வைத்து அதை சுருக்கி தா என வைத்திருக்கலாம்.ஆனால் படத்துக்கு ராஜேஷ்குமாரின் நாவல் தலைப்பான இறந்தவன் பேசுகிறேன் என்ற டைட்டில் மிகப்பொருத்தமாக இருக்கும் ,ஆனால் கோடம்பாக்க செண்ட்டிமெண்ட் செம்மல்கள் அதற்கு ஒத்துக்கொள்வார்களா என்ன?

http://travelindiasmart.com/images/trainWaiting.jpg
வசனகர்த்தாவின் பேனா துள்ளி விளையாடிய இடங்கள்.


1. ஆம்பளைக்கு எத்தனையோ விஷயங்களை பிடிக்க வெச்சுடலாம்,ஆனா பொம்பளைக்கு எதைப்பிடிக்கும்னு சொல்ல முடியாது.

2. எனக்கு 40 வயசு ஆனாலும் 20 வயசுப்பொண்ணை கரெக்ட் பண்றதுதான் என் லட்சியம்.

3. ஓசில சரக்கு அடிக்கறப்ப - தண்ணி கிளாசை கைல பிடிக்கறப்ப உலககோப்பையையே பிடிக்கற மாதிரி இருக்கு.

4. த்ண்ணி அடிக்க கூப்பிட்டீங்கன்னு வந்தா இப்படி 3 காலிக்குடம் குடுத்து  தண்ணி அடின்னு சொல்றீங்களே,இது நியாயமா?

5. இன்னைக்கு வள்ளலார் பிறந்த நாள்,அதனால டாஸ்மாக் எல்லாம் லீவ் ,தண்ணி அடிக்க முடியாது.

அதனால என்ன?அவரு தமிழ்நாட்டுலதானே பொறந்தாரு,நாம கேரளா போய் கள்ளு குடிப்போம்,நமக்கு லட்சியம்தான் முக்கியம்.

6.  லைட்டை ஆஃப் பண்ணீட்டா எல்லா பொண்ணுங்களும் ஒண்ணுதான்.

7.. நீ 10 பேரை அடிக்கறதால மட்டும் ஆம்பளை ஆகிட முடியாது.ஒரு பொண்ணோட மனசுல இடம் பிடிக்கறவன் தான் ஆம்பளை.

8. என்னடா மாப்ளை,கலர் ஏறிக்கிட்டே போகுது?

ஹி ஹி ஹி

ரொம்ப சந்தோஷப்படாதே,கறுப்புக்கூட ஒரு கலர்தான்.ஏன் கறுத்துட்டேன்னு கேக்க வந்தேன்.

9. பொண்ணுங்களுக்கு ஆக்‌ஷன் ஹீரோவை விட ரொமாண்டிக் ஹீரோவைத்தான் ரொம்பப்பிடிக்கும்.

10 .எதுக்குமே மடங்காத பொண்ணுங்க நல்லா பாடறவன் கிட்டயும் ,குரல் வளம் உள்ளவங்கிட்டேயும் மயங்கிடுவாங்க,

11. இப்போ பொம்பளைங்க் சொந்தமா எங்கே பேசறாங்க?டி வி சீரியல் பார்க்க வேண்டியது,அதுல வர்றதை அப்படியே நெட்டுரு போட்டு நம்ம கிட்டே பேசறது,இதைத்தானே பண்றாங்க?

12. தப்பு ரைட் எல்லாம் பார்த்துட்டு இருந்தா என்னோட பர்சனல் ஃபீலிங்கை நான் அனுபவிக்க முடியாது.

13. திடீர்னு நமக்கு லவ் ஆசை வந்துடும் ,அவளுங்களும் நம்மை ஏத்தி விட்டுட்டு  டாக்டர் பட்டம் வாங்கிட்டு போய்ட்டே இருப்பாளுங்க..

14.  நீ வா என் கூட ,உன்னை அந்த மாதிரி இடத்துக்கு கூட்ட்டிட்டு போறேன்,லவ்வோட கிளைமாக்சே அதுதான்.

15. சம்பந்தம் பண்றவங்க கொஞ்சம் ஏறி இறங்கிதான் போகனும்,பொண்ணு வீடும்,பையன் வீடும் சரிசமமா மல்லுக்கட்டீட்டு இருந்தா எப்படி?

இயக்குநர் தனிப்பட்ட முறையில் பெண்களால் பாதிக்கப்பட்டவர் போல,அங்கங்கே தனது கோபத்தை காட்டுகிறார்,ஆனால்  பெண்களின் ஒட்டுமொத்த குணமே அதுதான் என்பது போல ஒரு தவறான பாதையை காட்டுகிறது.

படத்தில் கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவும்,கோவை ஸ்லேங்கும்,இசையும் (அறிமுகம்) படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றது.இந்தப்படத்தின் போஸ்டர் டிசைனும் சூப்பர்.

இயக்குநர் கிளைமாக்சில் வைத்த ட்விஸ்ட் அகதா கிரிஸ்டியின் நாவலிலும் ,அமரர் சுஜாதாவின் சிறுகதையின் ஃபினிஷிங்க் டச்சையும் தன்னகத்தே கொண்டது,வெல்டன்.

இது போன்ற தரமான லோ பட்ஜெட் படங்கள் மக்களால் வரவேற்கப்படும்போது,ஹீரோயிச படங்களும் தாதா படங்களும் வழ்க்கொழிந்து போகும்.தயாரிப்பாளர்கள் ஹீரோவின் பின்னால் ஓடாமல் நல்ல கதாசிரியர் பின்னால் காத்திருப்பர்.ஒரு ஆரோக்கியமான மாற்றம் வரும்.

இந்தப்படம் நல்ல மார்க்கெட்டிங்க்கும் ,மக்களின் மவுத்டாக்கும்,பத்திரிக்கைகள்,ஊடகங்களின் விமர்சங்களும் 75 நாட்கள் ஓட வைக்கும் ,ஆனால் தியேட்டர் ஓனர்கள் அதுவரை பொறுமையாக இருக்கனும்,அட்லீஸ்ட் ஒரு வாரமாவது வெயிட் பண்ணனும்,நான் போறப்ப தியேட்டர்ல 56 பேர்தான் இருந்தாங்க.ஸ்லோ பிக்கப் ஆகும்.

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 46

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று.

டிஸ்கி - இந்த இடுகையின் கடைசியில் போடப்பட்டுள்ள ஸ்டில் நாம் வாழ்க்கையின் மறுபக்கத்தை உணர வேண்டும் என்ற படத்தின் அடிநாதத்துக்குகாக போடப்பட்டது.ஹி ஹி ஹி


அவசியம் படிங்க...

ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு 5.12.2010


.

44 comments:

Philosophy Prabhakaran said...

// கே பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு //
என்னுடைய பேவரிட் படங்களுள் ஒன்றாச்சே...

Philosophy Prabhakaran said...

ஐய்... வடையா...

Philosophy Prabhakaran said...

// பார் என்பது டாஸ்மாக் பார் அல்ல உலகம் எனும் பார் என விளக்கம் அளிப்பதும் சூப்பர் //
என்ன ஒரு வெளக்கமாத்து வெளக்கம்... வெளங்கிடும்...

Philosophy Prabhakaran said...

தா - கெட்டவார்த்தை இல்லையா...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

(;

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வசனகர்த்தாவின் பேனா துள்ளி விளையாடிய இடங்கள்///

நல்லா துள்ளுச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்த இடுகையின் கடைசியில் போடப்பட்டுள்ள ஸ்டில் நாம் வாழ்க்கையின் மறுபக்கத்தை உணர வேண்டும் என்ற படத்தின் அடிநாதத்துக்குகாக போடப்பட்டது.ஹி ஹி ஹி//

நல்லவேளை சொன்னீங்க..நான்கூட....

KANA VARO said...

விமர்சனப் புலி சி.பி.எஸ் வாழ்க!இந்த படத்தை இலங்கையில் தியேட்டர்கள் எதுவும் எடுக்கவில்லை.

வைகை said...

//வசனகர்த்தாவின் பேனா துள்ளி விளையாடிய இடங்கள்////////////

இது அந்த போட்டாவுக்கான கேப்சனா இல்ல உண்மைலே துள்ளுனுச்சா?!!!!

ரஹீம் கஸ்ஸாலி said...

மிக அருமையாக எழுதப்பட்ட கச்சிதமான விமர்சனம்.
உங்களின் விமர்சனம் படித்ததும் இந்த படத்தை பார்க்கும் ஆவல் கூடியுள்ளது.

இம்சைஅரசன் பாபு.. said...

ரைட்டு............

கவி அழகன் said...

கலக்கலா இருக்குங்க!

குரங்குபெடல் said...

"இந்தப்படம் நல்ல மார்க்கெட்டிங்க்கும் ,மக்களின் மவுத்டாக்கும்,பத்திரிக்கைகள்,ஊடகங்களின் விமர்சங்களும் 75 நாட்கள் ஓட வைக்கும் ,ஆனால் தியேட்டர் ஓனர்கள் அதுவரை பொறுமையாக இருக்கனும்,அட்லீஸ்ட் ஒரு வாரமாவது வெயிட் பண்ணனும்,நான் போறப்ப தியேட்டர்ல 56 பேர்தான் இருந்தாங்க.ஸ்லோ பிக்கப் ஆகும்."



கரெக்ட்தான் . . .சென்னை - போருர் தியேட்டரில்
இரண்டே நாளில் படம் நகர்த்தப்பட்டு
அனுஷ்காவின் தாகம் (வேதம்) திரையிடப்பட்டுள்ளது

ராஜகோபால் said...

// நீ வா என் கூட ,உன்னை அந்த மாதிரி இடத்துக்கு கூட்ட்டிட்டு போறேன்,லவ்வோட கிளைமாக்சே அதுதான்.//

கரெக்ட்தான்...

NaSo said...

ஒரு நல்ல திரைப்படத்திற்கு ஒரு சிறந்த விமர்சனம்.

NaSo said...

//இது போன்ற தரமான லோ பட்ஜெட் படங்கள் மக்களால் வரவேற்கப்படும்போது,ஹீரோயிச படங்களும் தாதா படங்களும் வழ்க்கொழிந்து போகும்.//

எல்லோரும் எதிர்பார்ப்பது இதைத்தான். பார்ப்போம் எப்போது நிறைவேறும் என்று!!

அருண் பிரசாத் said...

ஆ.வி ல 46 மார்க் வருமா? படம் பார்க்கலாமோ?

நண்பன் said...

அருமை

ஜி.ராஜ்மோகன் said...

படத்தை பத்தி நீங்களும் நல்லா விமர்சனம் எழுதி இருக்கீங்க !கேபிள் அண்ணனும் நல்லா எழுதி
எழுதி இருந்தார் ! இந்த மாதிரி படங்கள் வரவேற்கப்பட வேண்டும்.ஆனா திண்டுகல்லில் படத்தை ரெண்டே நாளில் தூக்கிட்டாங்க.

karthikkumar said...

ஆ.வி ல 46 மார்க் வருமா? படம் பார்க்கலாமோ?///
அப்போ பாக்கலாமே

a said...

நல்ல விமர்சனம்........

நண்பன் said...

Vijay sir ku Thanmaanam thaan mukkiyam, sun pics ku koduka koodathunu Vijay solrathaala Avara Neeka paakaaraanga.
Let them do it. Vijay has to save his dignity and no need to head shake for everything what Sun pics say.
So vijay sir for us 3idiots is not important and oly your important . Hope you yourself come out of 3idiots and make sun pics to let down…..

By Indhu on Dec 5, 2010
Guys forget 3idiots movie as a bad dream. Idhuvum kadanthu pogum. Now no main actors have their callsheet free and every hero are busy with their current project so let us see without vijay what shankar and production team going to do…

By Indhu on Dec 5, 2010
Gud mrng frnzzz,
see today deccan chronicle vijay has walked out of 3idiots.
And shankar plans to rope with sury@ for Amir role.
Surely i wont watch this movie if thats the case.

Indhu, as you said vijay is a gentlemen and now gets enough guts to face the hurdles that penned by sun pics .

By Abinaya on Dec 5, 2010
Gd news 2 vijay fans. .our thalapathy’s 3idiots is cnfrmed now. .jeeva nd srikanth were the othr rls in 3idiots. . Ileana is gng 2 pair wth our thalapathy. .shankar vil make tis mve in a big way. .source:today dhinamalar. .:-)

By GHILLI_GOKUL on Dec 5, 2010
Gd news 2 vijay fans. .our thalapathy’s 3idiots is cnfrmed now. .jeeva nd srikanth were the othr rls in 3idiots. . Ileana is gng 2 pair wth our thalapathy. .shankar vil make tis mve in a big way.

By GHILLI_GOKUL on Dec 5, 2010
Gd news 2 vijay fans. .our thalapathy’s 3idiots is cnfrmed now. .source:today dhinamalar

By GHILLI_GOKUL on Dec 5, 2010
YOU HAVE NOTICED THIS VIJAY IS NOT OUT OF 3IDIOTS BECAUSE HE RELEASES A SAMPLE AUDIO OF KAAVALAN AND HE WILL BUSY IN 3IDIOTS 8TH DEC.

By vicchu on Dec 5, 2010

Chitra said...

ஆஹா..... இந்த படம் பார்க்கலாம் போல..... நல்ல விமர்சனம்!

sathishsangkavi.blogspot.com said...

அருமையான விமர்ச்சனம்... இந்த வாரம் தமிழ்மணத்தில் டாப் 1 ஆக வர என் வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

தா - விமர்சனத்தில் படம் தரமானதுதான் என்று முத்திரையை ஆழப்பதித்திருக்கிறீர்கள்...
நான் மற்றவர்களின் விமர்சனமும் பார்த்தேன்... எல்லாம் அருமை என்றுதான் சொல்கின்றன....

சி.பி.செந்தில்குமார் said...
This comment has been removed by the author.
ம.தி.சுதா said...

///////////அது சரி எனக்கு சீபி கொஞ்சம் டீவீடீ தரணும் வாங்கித் தாங்களேன்.//

மானம் போகுதே..யோவ்..இது மாதிரி இன்னும் எத்தனை பிளாக்குல புலம்பி இருக்க/////////////

சே..சே அப்பிடியெல்லாம் செய்வனா உங்க தோஸ்த்துகிட்ட தான் சொன்னேன்..

ஆனா ஒண்ணு சண் ரிவியில கலாநிதிமாறனும் கலைஞரில முதல்வரும் ஜெயாவில அம்மாவும் ஒரு விளம்பரம் ஒசில பொடச் சம்மதமாம்.. அதுக்குள்ள கொடுத்திடணும்...

ம.தி.சுதா said...

அருமையான பார்வை ஒன்று சகோதரம்... படம் கட்டாயம் பார்த்தே தீரணும்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

THOPPITHOPPI said...

வழக்கம்போல் விமர்சனத்துடன் டயலாக் கலக்கல்

Unknown said...

நல்ல விமர்சனம்

Ramesh said...

ரொம்ப ரசிச்சு பாத்திருப்பீங்க போல.. பார்த்திடலாம்..

Unknown said...

ஒங்க ஊருபக்கம் பக்கம் படம் எடுத்ததுனால படம் நல்ல இருக்குனு சொல்றீங்க அப்படித்தானே .

Unknown said...

டிஸ்கில

என்னமோ அடிநாதம்னு சொல்லீர்க்கீங்களே அப்படினா என்ன மீனிங்

சிவராம்குமார் said...

விமரிசனம் அருமை வழக்கம் போல! சீக்கிரம் பாக்கணும் படம்!

Anonymous said...

சூப்பர்

Anonymous said...

தா வெற்றிபடமா...செம வசூல் ஆகுமா

Anonymous said...

களவாணி போல வருமா

Anonymous said...

ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு லிங் கொடுத்தற்கு நன்றி

நண்பன் said...

தம்பி சி.பி.செந்தில்குமார் நான் இனி உன்னோட blog க்கு வரமாட்டன்

நண்பன் said...

இனி இங்க ஒருத்தரும் வர வேண்டாம்

நண்பன் said...

நான் இனி நக்கலா ஒன்றும் எழுத மாட்டேன் .நாட்டுக்கு பிரயோசனமா எதாவது செய்யிறேன்

எஸ்.கே said...

விமர்சனம் வழக்கம்போல் அருமை!

damildumil said...

//நீங்க கண்ட கண்ட நாதேரிப்பசங்களோட எல்லாம் சேராதீங்க என சொல்லும்போது தியேட்டரே அதிர்கிறது கை தட்டலால்.//

//நான் போறப்ப தியேட்டர்ல 56 பேர்தான் இருந்தாங்க.ஸ்லோ பிக்கப் ஆகும்.//
56 பேரு கைத்தட்டுனாலே அரங்கம் அதிருமா?? நீங்க பாத்தது எந்த தியேட்டர்ல? home theatreலையா

வாசு said...

I went on sunday at Arcot to watch the movie after reading the review. But the film was taken away already. I was really upset and this is the second experience for me. The first one for "KATRATHU THAMIZH".
I have to wait for CD