Showing posts with label பதிவு உலகம். Show all posts
Showing posts with label பதிவு உலகம். Show all posts

Friday, December 31, 2010

2010 -ன் டாப் 10 பதிவர்கள் (புதிய தலைமுறை)

08070.jpg (321×357)
இந்த ஆண்டில் பதிவுலகில் யார் யார் எல்லாம் என் மனதைக்கவர்ந்தார்கள் என்ற தனிப்பட்ட லிஸ்ட் இது.ஏற்கனவே டாப்பில் இருக்கும் பதிவர்கள் மன்னிக்க.

1. பன்னிக்குட்டி ராம்சாமி - பொதுவாக நகைச்சுவையாக எழுதுபவர்கள் எல்லோர் மனதையும் கவர்கிறார்கள்.அந்த வகையில் தான் எழுதும் பதிவுகளில் மட்டுமல்லாமல் கமெண்ட்களில் கூட காமெடியை அள்ளித்தெளித்து கலக்கும் இவர்தான் என்னைப்பொறுத்தவரை நெம்பர் ஒன்.வலைச்சரம் ஆசிரியராகப்பொறுப்பேற்றதும் இவரது பன்முகத்திறமை வெளிப்பட்டது,தனது வாசிப்புத்திறன் முழுவதையும் வெளிப்படுத்தி புதிய பதிவர்களை அட்டகாசமாய் அறிமுகப்படுத்தி ஏகோபித்த ஆதரவைப்பெற்றார்,கமெண்ட்ஸ் வாங்குவதில் நாமெல்லாம் 10 ,   20 என்று தாளம் போடும் நேரத்தில் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் பெற்று அதிலும் சாதனை புரிந்தார்.டயலாக் டெலிவரியில் கவுண்டமணியின் அவதாரமாக அனைவர் மனதிலும் நின்றவர்.தமிழ்மணம் டாப் 20 லிஸ்ட் வர ஆரம்பித்த பிறகு அதுவரை வாரம் ஒரு பதிவு போடும் பழக்கம் உள்ள பலரும் தினசரி  ஒரு பதிவு போட்ட போதும் தனது வழக்கப்படி வாரம் 3 பதிவு  என தொடர்பவர்.இதுவரை எந்த வம்பு வழக்கிலும் சிக்காதவர்..


2. கே ஆர் பி செந்தில் - குமுதத்தில் வரும் பயோடேட்டா போல் இவரும் பயோடேட்டாவில் கலக்குபவர்.சமூக விழிப்புணர்வு கட்டுரையிலும் சரி ,கவிதையிலும்  சரி இவரது டச் உண்டு.அலாஸ்கா ரேங்க்கில் செம ஸ்பீடாக முன்னேறி வருகிறார்.எல்லோரிட்மும் நட்பு பாராட்டும் நல்ல மனிதர்.

3. சேட்டைக்காரன் - யார் மனதையும் புண்படுத்தாமல் காமெடி பண்ணுவது ரொம்ப கஷ்டம்,அந்த கஷ்டமான வேலையை ஈசியாக செய்து வருபவர்.பெரும் பாலும் குடிகாரர்களை மையமாக வைத்து நக்கலாக பதிவு போடுபவர்,அரசியல் நையாண்டியில் தேசியப்பார்வையும் உண்டு.எழுத்தில் ஆபாசம் துளி கூட கலக்காமல் கண்ணியமாக எழுதுபவர்.இவரது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு பதில் போடுவதில்லை என்ற ஒரே ஒரு குறை மட்டும் உண்டு.

4. பட்டாபட்டி - சென்னை பஷையில் இவரது திட்டுக்களைக்கேட்கவே ஒரு கூட்டம் உண்டு.இவரது பதிவுகள் செம காமெடி.குறிப்பாக காங்கிரஸை போட்டு தாக்குவார்.யாரைப்பற்றியும் ,எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்.தனது மனதிற்கு எது சரி என தோன்றுகிறதோ அதை கலக்கலாக எழுதுபவர்.

5.வந்தேமாதரம் சசி - பதிவுலகில் டெக்னிக்கலான மேட்டர்ஸை பதிவு போட்டே புகழ் பெற்றவர்.அலாஸ்கா ரேங்க்கில் முன்னணியில் இருப்பவர்.சினிமா விமர்சனம்,ஜனரஞ்சக பதிவுகள் போட்டு முன்னேறும் பதிவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர்.பதிவர்களுக்கு டெக்னிக்கலான சந்தேகம் எது வந்தாலும் தீர்த்து வைப்பவர்.

6. ம தி சுதா -  இலங்கைப்பதிவர்.இவரது பல கட்டுரைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. அவ்வப்போது ஜனரஞ்சகமாகவும் எழுதுவார்.டாஸ்போர்டு ஓப்பன் பண்ணி எப்போதும் ஆன்லைனில் இருப்பார்.சுடு சோறு எனக்கே வார்த்தை பிரபலம்.

7.கோமாளி செல்வா - மொக்கைப்பதிவுகள் போட்டே சக்கையாக முன்னேறுபவர்.வட எனக்கே வாசகம் பிரபலம்.வடைவங்கி என இவருக்கு இவரே பட்டம் குடுத்துக்கிட்டார் (யாரையும் எதற்கும் எதிர்பார்க்கக்கூடாதாம்).இவரது வயது ரொம்பக்குறைவாக இருந்தாலும் நிறைவான பதிவுகள் கலக்கல்.

8.மங்குனி அமைச்சர் - இம்சை அரசன் 23ம் புலிகேசியின் லோகோவைப்பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்.இவரது எழுத்துக்களில் காமெடி தெறிக்கும்.சென்னைப்பதிவரான இவர் மற்றவர்களுடன் பழகுவதில் சகஜமானவர் என்ற நல்ல பெயர் பதிவுலகில் உண்டு.

9 . சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் பதிவர்.இவர் வாங்கி வந்த வரம் அப்படி.ஆஃபீஸ் டைம்லயே அனைத்து பதிவுகளையும் டைப் செய்து,கமெண்ட்டும் போடும் ஒரே பதிவர்.மற்றவர்களை கலாய்ப்பதில் மன்னர்.யார் எந்த பதிவு போட்டாலும் அதில் போய் இந்த ஜோக் ஏற்கனவே 4 வருஷத்துகு முன்பே நான் எழுதிட்டேன் என காமெடி பண்ணுவார்.இவர் பணி புரியும் ஆஃபீஸ் இன்னும் இழுத்து மூடாமல் இருப்பது ஆச்சரியம்.

10 - நல்ல நேரம் சதீஷ் - டைட்டில் வைப்பதில் மன்னன்.எனக்கு பதிவுலக குரு.அரசியல் நையாண்டி,சட்டயர் காமெடி எழுத்துக்கள் இவரது பலம்.இவரது அலாஸ்கா ரேங்க் முன்னேற்றம் அபார வேகம்.சூப்பர் ஹிட் போஸ்ட் போட்டால் சர்வ சாதாரணமாக 3000 ஹிட்ஸ் அடிப்பவர்.ரஜினி ரசிகர் ,ஜோதிடர்

டிஸ்கி - 2011 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்

Tuesday, November 16, 2010

தமிழ்மணம் டாப் 20 பிளாக்ஸ் - பதிவர்களிடையே ஏற்பட்டிருக்கும் எழுச்சி

தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
தமிழ்மணம் டாப் 20 பிளாக் தர வரிசப்பட்டியல் வெளியான பிறகு எங்கே பார்த்தாலும் இதைப்பற்றியே பேச்சு.பதிவர்களிடையே பரபரப்பு..உற்சாகம்.இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றன.?

பிளஸ்

1.வெற்றி பெறும் பதிவர்களுக்கு பாராட்டுகள்,வாழ்த்துக்கள் குவிவதால் பதிவர்களுக்கிடையே புரிதல்,சந்தோஷம்,படைப்புத்திறனின் ஊக்குவிப்பு வளர்கிறது.

2.இதுவரை ஏதோ ஒரு பதிவு போட்டோம் என்ற எண்ணத்திலிருந்து இனி தரமான நல்ல பதிவு போட்டு பேர் வாங்க வேண்டும்,இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.

3.ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறிக்கொள்வது,கேலி பேசுவது,அடுத்த பதிவு எப்போ என கேட்டுக்கொள்வது என சிந்தனை முழுவதும் பதிவு பற்றியே குவிகிறது.

4.பதிவர்களின் படைப்பில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.மொக்கைப்பதிவு போட்டவர்கள் அரசியல்,சமூக விழிப்புணர்வு என வெரைட்டி காண்பிக்கிறார்கள்.கவிதை எழுதுவதில் தபுசங்கர்க்கு நிகரானவர் என பெயர் பெற்ற கவிதைக்காதலன் சமீபத்தில் சினிமா விமர்சனம்,சினிமா கட்டுரை என கலக்குவது ஒரு உதாரணம்.

5.அங்கீகாரம் மட்டுமே ஒரு படைப்பாளனை ஊக்குவிக்கும் என்ற நியதியின் படி தமிழ்மணத்தின் அங்கீகாரத்துக்காக படைப்பாளிகள் ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்,அவர்கள் சிந்தனைகள் எல்லாம் பதிவின் தரத்தை மேம்படுத்துவதில் இருப்பது நல்ல வரவேற்கத்தக்க மாற்றம்.

6.சினிமா விமர்சனத்தின் அடையாளம் என புகழப்பட்ட கேபிள் சங்கரின் மைனா பட விமர்சனத்தின் இண்ட்லி ஓட்டுக்களை விட ஃபிலாசபி பிரபாகரனின் இண்ட்லி ஓட்டுக்கள் அதிகம் ஆனதும்,அந்த விமர்சனத்தை கேபிள் சங்கர் சாரே பாராட்டியதும் ஆரோக்யமான மாற்றம்.

7.விசிட்டர்ஸ் டுடே ஆவ்ரேஜ் 300 டூ 500 கொண்டுள்ள கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒரே ஒரு இடுகை மூலம் 1000 விசிட்டர்ஸ் வரவைத்ததும்,அவர் தொடர்ந்து 2 வாரங்களாக நெம்பர் 8 பிளேஸ்சில் இருப்பதும் பாராட்டத்தக்கது.


8.என்கவுண்ட்டர் சரியா ,தவறா என ஒரே ஒரு கேள்வி கேட்டு மங்குனி அமைச்சர் பெற்ற தமிழ்மண ஓட்டுக்கள் பிரம்மிக்கத்தக்க சாதனை.அவரது சொல்லாடல்,நகைச்சுவை நயம் இதெல்லாம் நாம் பின்பற்ற வேண்டியது..

9.பதிவும் நகைச்சுவை,பதிவின் தரத்தை விட பின்னூட்டங்களீன் மூலம் நகைச்சுவையை அள்ளித்தெளித்து கலாய்த்தல் எனும் நவீன காமெடி மூலம் பன்னிக்குட்டி ராமசாமி,மங்குனி,பட்டாபட்டி,சிரிப்புப்போலீஸ் ரமேஷ்  இவர்கள் 4 பேரும் பெறும் பின்னூட்டங்கள் சர்வ சாதாரணமாக 200 தொடுவது உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

10.நல்ல நேரம் சதீஷ் சன் டி டி ஹெச்,ஐ சி ஐ சி  2 பதிவுகள் மூலம் தனது பாணீயிலிருந்து விலகி புதிய பாதையில் போய் பாராட்டுக்களையும் ஜீஜிக்ஸில் ரூ 500 பரிசும் பெற்றதும் பாராட்டத்தக்கது.தொப்பிதொப்பி அரசியல் கார்ட்டூன் பதிவின் மூலம் அட்டகாசமான ராஜ் பாட்டையை தொடங்கியதும் நல்ல ஆரம்பமே...

11. புதிய தலை முறை இதழில் வந்த யுவகிருஷ்ணாவின் கட்டுரைப்படி அலெக்ஸா ரேங்க்கிங்க்கில் முதல் 2 இடங்களைப்பிடித்ததாக சொல்லப்படும் கேபிள் சங்கர் (62000 +), ஜாக்கி சேகர் (80000 +) இருவரும் ஜனரஞ்சக பதிவர்கள்,சினிமா விமர்சனம் ,நாட்டு நடப்பு,என சகலமும் கலந்து கட்டி அடிப்பவர்கள்.இவர்களை விட அலெக்ஸா ரேங்க்கில் முன்னிலை வகிக்கும் வந்தே மாதரம் சசி (56670) டெக்னிக்கல் பதிவுகளை மட்டுமே போட்டு குறுகிய காலத்தில் இந்த அளவு வளர்ச்சி பெற்றது அபாரமானது.

டிஸ்கி - நான் தினமும் 2 மணீ நேரம் மட்டுமே நெட்டில் உள்ளதால் அதிகமாக பிற தளங்களுக்கு செல்ல முடிவதில்லை.எனவே என் லிஸ்ட்டில் வராத எத்தனையோ தளங்கள் கலக்கிகொண்டிருக்கலாம்.அவர்கள் என்னை மன்னிக்க.


மைனஸ்

1.ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் இந்த 3 மட்டுமே தர வரிசையை நிர்ணயிக்கிறது.நல்ல படைப்புக்கள் பல இந்த 3ம் இல்லாமலே வந்து போய்க்கொண்டிருக்கின்றன.

2.கமெர்சியல் சினிமா,ஆர்ட் ஃபிலிம் என 2 வகையில் படங்களை தர வரிசைப்படுத்துவது போல் பிளாக்கிலும் 15 பிளாக்ஸை ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் மூலம் தேர்ந்தெடுத்து 5 பிளாக்சை தர வரிசையில் தேர்ந்தெடுக்கலாம்.

3.அப்படிக்கூறியதற்காக இப்போது வரிசைப்படுத்திய 20 பிளாக்குகளும் தரம் இல்லாதவை என அர்த்தம் அல்ல.இவைகள் தரமானவை தான்.ஆனால் யாராலும் கவனிக்கப்படாத தரமான பிளாக்குகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.

4.எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி  3 ஃபிலாசபி பிரபாகரன்  4 குசும்பன்  5 கும்மாச்சி.

5  ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம்.

பிளஸ்களை மேன்மேலும் பிளஸ் ஆக்குவோம்,மைனஸ்களை பிளஸ் ஆக்கும்முயற்சியில் ஈடுபடுவோம்,அனைவரும் உழைப்போம் எல்லோரும் மாற்றி மாற்றி வெற்றி காண்போம்.வெற்றியிலும் ,உழைப்பிலும் தானே மனிதனின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது?