
முதல் படம் வெற்றிப்படமாக குடுத்தால் 2வது படம் அடி வாங்கும் என்பது கோலிவுட் செண்ட்டிமெண்ட்.ஆர் பார்த்திபன்,ஆர் பாண்டியராஜன்,விக்ரமன் வரிசையில் அந்த செண்ட்டிமெண்ட்டுக்கு வலு சேர்த்து இருக்கிறார் எம் சசி குமார்.
1992களில் ராஜெஷ்குமார் உட்பட பல நாவல் ஆசிரியர்கள் நாவலில் ஒரு புதிய உத்தியை கொண்டு வந்தார்கள்.அதாவது 3 வெவ்வேறு தளங்களில் அத்தியாயத்துக்கு அத்தியாயம் கதை பயணிக்கும்,கடைசியில் 3 தளங்களையும் ஒரே அலை வரிசையில் இணைப்பார்கள்.அந்த டெக்னிக்கை இயக்குநர் ஓவர் வன்முறையோடு,சொல்லி இருக்கிறார்.
ஈரொடு என் கே கே பி ராஜா மாதிரி இட ஆக்கிரமிப்பில் ஆர்வமுள்ள அரசியல்வாதியின் கதை,அம்பானி மாதிரி பிஸ்னெசில் ஆர்வம் உள்ள ஒரு தொழில் அதிபரின் கதை,கலாச்சார சீர்கேட்டால் பாதை மாறிய கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது இந்த 3 கதையையும் புத்திசாலித்தனமாக இணைத்து சொதப்பி இருக்கிறார் இயக்குநர்.

ஒரு இயக்குநராக ஜெயித்த சமுத்திரக்கனி நடிகராகவும் ஜெயித்திருக்கிறார்.போலீஸ் யூனிஃபார்ம் போடமலேயே போலீஸ் கம்பீரத்தை காட்டும் போதும் சரி,கடமை கண்ணியம் கட்டுப்பாடு சத்யராஜ் மாதிரி இயலாமை+கோபத்தை வெளிப்படுத்தும்போதும் சரி அப்ளாஸை அள்ளுகிறார்.ஒரே ஒரு இடத்தில் இதுதாண்டா போலீஸ் ராஜசேகரை இமிடேட் பண்ணி விறைப்பாக நடக்கிறார்.மற்றபடி அவரது நடிப்பு கனகச்சிதம்.
அரசியல்வாதியாக வருபவரின் அசால்ட்டான நடிப்பும்,அவரது பாடி லேங்குவேஜ்ஜும் ஓக்கே.அவருக்கு வசனம் பக்கபலமாக கை கொடுக்கிறது.ஹீரோயின் சுமாரான ஃபிகர்தான்.ஆனால் அபிநயா அந்தக்குறையை சரிகட்டி விடுகிறார்.அவரது நடிப்பும் கண்ணியமான தோற்றமும் கிளாஸ் ரகம்.தம்பியாக வந்து பழி வாங்கும் புதுமுக நடிப்பு மிரட்டல் ரகம்.தனுஷுக்குத்தம்பி மாதிரி இருந்து கொண்டு அ வர் செய்யும் ஆக்ஷன் காட்சிகள் நம்பும்படி இல்லை என்றாலும் கதை ஓட்டத்தில் தெரியவில்லை.
படத்தில் லாஜிக் இல்லாத காட்சிகள்
1. பெரும்பாலான காலேஜ் பெண்கள் நைட் கிளப்புக்கு போகிறவர்கள்.தண்ணி அடிப்பவர்கள் என்பது மாதிரி சித்தரித்து இருப்பது.
2.ஒரு பெண்ணை மாஸ் ரேப் பண்ணும் கொடிய அரசியல்வாதியின் மகனுக்கு மெல்லிய உணர்வான காதல் வருவது போல் காண்பிப்பது.
3.அப்பா சரக்கை கிளாசில் ஊற்றி வைக்க மகள் எடுத்து அதை சர்வசாதாரணமாக அடிப்பது கலாச்சார சீர்கெட்டின் உச்சம்.
4. ஒரு பிரபல ஹாஸ்பிடலில் புகுந்து சர்வசாதாரணமாக ஒரு மாணவன் மெயில் மோசடி செய்வது.

படத்தில் பாராட்டத்தக்க அம்சங்கள்
1. போலீஸ் கமிஷனர் அக்யூஸ்ட் வீட்டுக்கு விசாரணைக்கு போகும்போது அந்த அக்யூஸ்ட் போலீஸ் கமிஷனரின் வீட்டில் போய் மிரட்டுவது
2.போலீசின் தீவிர கண்காணிப்பில் இருக்கும்போதே மாமாவின் பேக்கை அபேஷ் செய்யும் புத்திசாலித்தனமான சீன்.
3. க்ளைமாக்ஸ் ஃபைட்டில் 3 பேரை ஒரே ஒரு சின்னப்பையன் சண்டை போட்டு சமாளிப்பதை நம்பும்படி ,காட்டிய ஸ்டண்ட் மாஸ்டரின் புத்திசாலித்தனம்.
4 நந்தா படத்தை ஞாபகப்படுத்தினாலும் குடும்பமே தற்கொலைக்கு முனையும் அந்த செண்ட்டிமெண்ட் சீன்.
5.அபிநயா தான் ஊமை என்பதை காலேஜ் போர்டில் ஐ ஆம் எ சைலண்ட் ஸ்பீக்கர் என எழுதிக்காட்டுவதும் அதைத்தொடர்ந்து வரும் சீன்களும்.
6. த ரெசிடெண்ட் ஈவில் படத்தை தழுவி எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் ப்ழிவாங்கல் கோரமாக இருந்தாலும் விறு விறுப்பு.
வசனகர்த்தா தியேட்டரில் அப்ளாஸை அள்ளிய இடங்கள்
1. சார்,குளிக்க வெந்நீர் கிடைக்குமா?
யோவ்,இது லாட்ஜா?லாக்கப்பா?
2. அக்யூஸ்ட்டை போலீஸ் ஒரு கேள்வி கேக்கறதுக்குள்ள போலீஸை மேலிடம் 1000 கேள்விகள் கேட்டுடுது.
3. என்ன மிரட்டறீங்களா? நான் கவர்மெண்ட் ஸ்டாஃப்.
யோவ்,கவர்மெண்ட்டே நாங்கதான்யா.
4. இத்தனை பேரு லேடீஸ்க்கு அலையறாங்களே? எல்லாரையும் திருப்த்திப்படுத்தனும்னா நான் தான் மும்பைல போய் ஆபரேஷன் பண்ணிக்கனும்.
5. நீ யார் எனக்கு பில் கட்டறதுன்னு கோபமா சொன்ன அவ எனக்கு பில் கட்டீட்டு போறா,அப்போ அவ எனக்கு யாரு?
6. உனக்கு உன் பெயரையே தமிழ்ல ஒழுங்கா சைன் பண்ணத்தெரியலை,வேலாயுதம்னு சைன் பண்ணச்சொன்னா வோலாயுதம்னு துணைக்கால் போடறே..
7. சார் வாட் ஈஸ் திஸ்....வீ ஆர் ஃப்ரம் பிக் பிளேஸ்
பளார்...
எதுக்கு சார் அடிக்கறீங்க?
உங்களை எல்லாம் அடிச்சாத்தான் தமிழே வருது வாய்ல..
8. கூடிய சீக்கிரம் போஸ்டர் ஒட்டறோம்,தெய்வம் பெற்றெடுத்த தெய்வ மகனேன்னு...
9. யோவ்,அதிகாரிங்க நீங்களே முடிவு எடுத்திட்டா அரசியல்வாதிங்க நாங்க எதுக்கு?
10 ஆஃப்டர் ஆல் அரசியல்வாதிங்களால மக்கள் நினைக்கறவரைதான் பதவில இருக்க முடியும் ,போலீஸ் வேலை அப்படியா?
11. அரசியல்வாதியை டிசைன் பண்றதே எங்களை மாதிரி பிஸ்னெஸ்மேன்தான்யா.
ஒளிப்பதிவு,பாடல்கள் அனைத்தும் ஓக்கே ரகம்.வந்தனமாம் வந்தனம் பாட்டில் ஓப்பனிங்க் ஸ்டெப் அபாரம்.கை தட்டலை அள்ளிக்கொள்கிறது.சோக வரிகள் ,ஆனால் கும்மாளமான இசை,துள்ளலான டான்ஸ் ஸ்டெப் என அருமையான கலவை .அதே போல் விலைவாசி சுகவாசி பாட்டும் ஓக்கே.
சகோதரியை ரேப் செய்த வில்லன் குரூப்பை பழி வாங்கும் அரதப்பழசான கதையை சசி ஏன் எடுத்தார் என தெரியவில்லை.திரைக்கதை காப்பாற்றும் என எதிர்பார்த்து புத்திசாலித்தனமாக காட்சிகளை நகர்த்தினாலும் கை கொடுக்கவில்லை.பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சசி.
ஏ, பீ சி அனைத்து செண்ட்டர்களிலும் 15 நாட்களை தாண்டாது.
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் விமர்சன மார்க் - 40
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - சுமார்