Showing posts with label LIST. Show all posts
Showing posts with label LIST. Show all posts

Friday, December 31, 2010

2010 -ன் டாப் 10 பதிவர்கள் (புதிய தலைமுறை)

08070.jpg (321×357)
இந்த ஆண்டில் பதிவுலகில் யார் யார் எல்லாம் என் மனதைக்கவர்ந்தார்கள் என்ற தனிப்பட்ட லிஸ்ட் இது.ஏற்கனவே டாப்பில் இருக்கும் பதிவர்கள் மன்னிக்க.

1. பன்னிக்குட்டி ராம்சாமி - பொதுவாக நகைச்சுவையாக எழுதுபவர்கள் எல்லோர் மனதையும் கவர்கிறார்கள்.அந்த வகையில் தான் எழுதும் பதிவுகளில் மட்டுமல்லாமல் கமெண்ட்களில் கூட காமெடியை அள்ளித்தெளித்து கலக்கும் இவர்தான் என்னைப்பொறுத்தவரை நெம்பர் ஒன்.வலைச்சரம் ஆசிரியராகப்பொறுப்பேற்றதும் இவரது பன்முகத்திறமை வெளிப்பட்டது,தனது வாசிப்புத்திறன் முழுவதையும் வெளிப்படுத்தி புதிய பதிவர்களை அட்டகாசமாய் அறிமுகப்படுத்தி ஏகோபித்த ஆதரவைப்பெற்றார்,கமெண்ட்ஸ் வாங்குவதில் நாமெல்லாம் 10 ,   20 என்று தாளம் போடும் நேரத்தில் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் பெற்று அதிலும் சாதனை புரிந்தார்.டயலாக் டெலிவரியில் கவுண்டமணியின் அவதாரமாக அனைவர் மனதிலும் நின்றவர்.தமிழ்மணம் டாப் 20 லிஸ்ட் வர ஆரம்பித்த பிறகு அதுவரை வாரம் ஒரு பதிவு போடும் பழக்கம் உள்ள பலரும் தினசரி  ஒரு பதிவு போட்ட போதும் தனது வழக்கப்படி வாரம் 3 பதிவு  என தொடர்பவர்.இதுவரை எந்த வம்பு வழக்கிலும் சிக்காதவர்..


2. கே ஆர் பி செந்தில் - குமுதத்தில் வரும் பயோடேட்டா போல் இவரும் பயோடேட்டாவில் கலக்குபவர்.சமூக விழிப்புணர்வு கட்டுரையிலும் சரி ,கவிதையிலும்  சரி இவரது டச் உண்டு.அலாஸ்கா ரேங்க்கில் செம ஸ்பீடாக முன்னேறி வருகிறார்.எல்லோரிட்மும் நட்பு பாராட்டும் நல்ல மனிதர்.

3. சேட்டைக்காரன் - யார் மனதையும் புண்படுத்தாமல் காமெடி பண்ணுவது ரொம்ப கஷ்டம்,அந்த கஷ்டமான வேலையை ஈசியாக செய்து வருபவர்.பெரும் பாலும் குடிகாரர்களை மையமாக வைத்து நக்கலாக பதிவு போடுபவர்,அரசியல் நையாண்டியில் தேசியப்பார்வையும் உண்டு.எழுத்தில் ஆபாசம் துளி கூட கலக்காமல் கண்ணியமாக எழுதுபவர்.இவரது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு பதில் போடுவதில்லை என்ற ஒரே ஒரு குறை மட்டும் உண்டு.

4. பட்டாபட்டி - சென்னை பஷையில் இவரது திட்டுக்களைக்கேட்கவே ஒரு கூட்டம் உண்டு.இவரது பதிவுகள் செம காமெடி.குறிப்பாக காங்கிரஸை போட்டு தாக்குவார்.யாரைப்பற்றியும் ,எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்.தனது மனதிற்கு எது சரி என தோன்றுகிறதோ அதை கலக்கலாக எழுதுபவர்.

5.வந்தேமாதரம் சசி - பதிவுலகில் டெக்னிக்கலான மேட்டர்ஸை பதிவு போட்டே புகழ் பெற்றவர்.அலாஸ்கா ரேங்க்கில் முன்னணியில் இருப்பவர்.சினிமா விமர்சனம்,ஜனரஞ்சக பதிவுகள் போட்டு முன்னேறும் பதிவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர்.பதிவர்களுக்கு டெக்னிக்கலான சந்தேகம் எது வந்தாலும் தீர்த்து வைப்பவர்.

6. ம தி சுதா -  இலங்கைப்பதிவர்.இவரது பல கட்டுரைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. அவ்வப்போது ஜனரஞ்சகமாகவும் எழுதுவார்.டாஸ்போர்டு ஓப்பன் பண்ணி எப்போதும் ஆன்லைனில் இருப்பார்.சுடு சோறு எனக்கே வார்த்தை பிரபலம்.

7.கோமாளி செல்வா - மொக்கைப்பதிவுகள் போட்டே சக்கையாக முன்னேறுபவர்.வட எனக்கே வாசகம் பிரபலம்.வடைவங்கி என இவருக்கு இவரே பட்டம் குடுத்துக்கிட்டார் (யாரையும் எதற்கும் எதிர்பார்க்கக்கூடாதாம்).இவரது வயது ரொம்பக்குறைவாக இருந்தாலும் நிறைவான பதிவுகள் கலக்கல்.

8.மங்குனி அமைச்சர் - இம்சை அரசன் 23ம் புலிகேசியின் லோகோவைப்பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்.இவரது எழுத்துக்களில் காமெடி தெறிக்கும்.சென்னைப்பதிவரான இவர் மற்றவர்களுடன் பழகுவதில் சகஜமானவர் என்ற நல்ல பெயர் பதிவுலகில் உண்டு.

9 . சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் பதிவர்.இவர் வாங்கி வந்த வரம் அப்படி.ஆஃபீஸ் டைம்லயே அனைத்து பதிவுகளையும் டைப் செய்து,கமெண்ட்டும் போடும் ஒரே பதிவர்.மற்றவர்களை கலாய்ப்பதில் மன்னர்.யார் எந்த பதிவு போட்டாலும் அதில் போய் இந்த ஜோக் ஏற்கனவே 4 வருஷத்துகு முன்பே நான் எழுதிட்டேன் என காமெடி பண்ணுவார்.இவர் பணி புரியும் ஆஃபீஸ் இன்னும் இழுத்து மூடாமல் இருப்பது ஆச்சரியம்.

10 - நல்ல நேரம் சதீஷ் - டைட்டில் வைப்பதில் மன்னன்.எனக்கு பதிவுலக குரு.அரசியல் நையாண்டி,சட்டயர் காமெடி எழுத்துக்கள் இவரது பலம்.இவரது அலாஸ்கா ரேங்க் முன்னேற்றம் அபார வேகம்.சூப்பர் ஹிட் போஸ்ட் போட்டால் சர்வ சாதாரணமாக 3000 ஹிட்ஸ் அடிப்பவர்.ரஜினி ரசிகர் ,ஜோதிடர்

டிஸ்கி - 2011 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்