Showing posts with label TOP 10. Show all posts
Showing posts with label TOP 10. Show all posts

Wednesday, January 09, 2013

டாப் 10 திரைக்கதை 2012 - தமிழ் சினிமா

http://2.bp.blogspot.com/-RGCQjQ9knVo/T6KrNbYq2HI/AAAAAAAAAyI/jkP4GVkWDSc/s1600/Vazhakku-Enn-18-9-Movie-Stills-03.jpg,
2012 ல நிறைய நல்ல படங்கள் வந்திருக்கு. அதுல  மக்கள் ரசிக்கத்தவறிய பல படங்கள் லிஸ்ட்ல இருக்கு. அதாவது படங்கள் குவாலிட்டியா இருந்தும் வசூல் ரீதியா  பிரமாதமா ஓடலை. இப்போ நாம பார்க்கப்போவது  நல்ல திரைக்கதை உள்ள படங்கள் லிஸ்ட் .


 இதுல அஜித்தின் பில்லா 2 , விஜய்யின் துப்பாக்கி மாதிரி மசாலா படங்கள் இடம் பெறாது .மாமூல் மசாலாக்கள் தவிர்த்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் நல்ல சினிமாக்கள் லிஸ்ட் இது .
இதுல புதுமையான விஷயம் கம் ஆச்சரியம் தரும் விஷயம் என்னான்னா  டாப் டென் படங்களில் 3 படங்கள் குறும்பட இயக்குநர்கள் காதலில் சொதப்புவது எப்படி? மீராவுடன் கிருஷ்ணா,லீலை,ஒரு கல் ஒரு கண்ணாடி,வழக்கு எண் 18/9, , ராட்டினம், மாலை பொழுதின் மயக்கத்திலே,நான் ஈ,அட்டகத்தி,நான்,சாட்டை,சாருலதா,பீட்சா,நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்,நீர்ப்பறவை, பச்சை என்கிற காத்து ,தடையறத்தாக்க , மதுபானக்கடை என 18 படங்கள் நல்ல வித்தியாசமான திரைக்கதை உள்ள படங்கள்


 பச்சை என்கிற காத்து   வன்முறை ஓவர்  என்பதால் தகுதி இழக்குது , தடையறத்தாக்க  இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் நீர்ப்பறவை  ஈழப்பிரச்சனை, மீனவப்பிரச்சனை பற்றி அதிகம் சொல்லாம குடிகாரர்களுக்கு எதிரான படமா திசை திரும்பினதாலும் , க்ளைமாக்ஸ் செய்ற்கையா இருந்ததாலும் அவுட். ராட்டினம் இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம் ,,  , நான் ஈ நேரடித்தமிழ்ப்பழம் இல்லை டப்பிங் என்பதால் அது தகுதி இழக்குது ( விகடனில் விமர்சனம் கூட போடலை ) மீராவுடன் கிருஷ்ணா  தேவை இல்லாமல் சைக்கோ கேரக்டர் மாதிரி காட்டி  இருப்பதால் அதையும் தள்ளிடலாம், மதுபானக்கடை முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இருக்கு , ரிஜக்டட்

http://l1.yimg.com/bt/api/res/1.2/jPJuIkjX0Irx2Z8cLXVS2g--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00NzM7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/film_760_163624000000.jpg


10.   மாலை பொழுதின் மயக்கத்திலே - ஒரே ஒரு காபி ஷாப்ல ஒரு படத்தோட மொத்தக்கதையையும் சொல்ல துணிச்சல் வேணும். சில பல குறைகள் இருந்தாலும் மிகவும் நுணுக்கமான  மூளை இருந்தால் மட்டுமே இப்படி ஒரு ப்டம் எடுக்க முடியும்,இந்தப்பட ஹீரோயின் செம அழகு , ஆனால் பாவம் அல்பாயுசு , படம் ரிலீஸ் ஆகி சில மாதங்களில்  ஏதோ நோய் தாக்கி இறந்து விட்டார்.ஒரு லவ் ஜோடி புதுசா உருவாகுது , இன்னொரு மேரீடு ஜோடி பிரிவதற்காக அங்கே வந்து பின் சேர்ந்துடறாங்க . 2  செட் ஜோடி , காபி ஷாப் ஊழியர்கள் 2 பேர் , ஓனர்  மொட்தமே 5 பேர்தான் மெயின் கேரக்டர்ஸ். வெல்டன் ஒர்க்


பட விமர்சனம் படிக்க -http://www.adrasaka.com/2012/07/blog-post_6127.html9. அட்டகத்தி -  கதைக்களம் ஒரு டவுன் பஸ் , கிராமத்துக்காதல் , மிக எளிய திரைக்கதை , பார்த்தேன் ரசித்தேன் பட பாதிப்பு ஆங்காங்கே இருந்தாலும்  இது நல்ல முயற்சி . பாடல்கள் படத்துக்கு மிகப்பெரிய பலம் , போஸ்டர் டிசைனில் கூட இயக்குநர் கைவண்ணம்


பட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/08/blog-post_15.html
8. சாட்டை  -விஜய் டி வி ல வந்த 7 சி தொடரின் பாதிப்பில் வந்த படம் போல் தோற்றம் தந்தாலும் இது நம் சமூகத்துக்கு மிகவும் தேவையான சமூக சீர்திருத்தப்படம். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன் உதாரணம். ஹீரோவின் நடிப்பு படத்தின் தரத்தை தூக்கி நிறுத்தியது . இயக்குநர் எந்த வித காம்ப்ரமைசும் செய்ய்யாமல் ( க்ளைமாக்ஸ் தவிர்த்து ) மிக பிரமாதமாக திரைக்கதை அமைத்திருந்தார் .படத்தில் வசனங்கள் கலக்கலாக இருந்தது


பட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html
 7. லீலை - இந்தப்படத்தின் பெரிய மைனசே டைட்டில் தான், நிறையப்பேரு இது ஏதோ கில்மாப்படம்னு நினைச்சுட்டாங்க . ஆனா இது ஒரு கண்ணியமான காதல் கதை , ஹீரோ புதுசு , ஹீரோயின் அழகு என்றாலும் மார்க்கெட்டிங்க் சரி இல்லாததால் மக்களை அதிகமா ரீச் ஆகலைபட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/04/blog-post_5558.html6. காதலில் சொதப்புவது எப்படி?  -9 நிமிஷ குறும்படத்தை 2 மணி நேரப்படமா டெவலப் பண்றது தனி டேலண்ட் தான். காதலர்களுக்கு இடையே நுழையும் ஈகோ மோதல் தான் கதை . காதலர்கள் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் எப்படி சண்டை போட்டுக்குவாங்க என்பதை இதை விட அழகியலா சொல்லி விட முடியாது .
பட விமர்சனம் படிக்கhttp://www.adrasaka.com/2012/02/blog-post_18.html


http://www.cinegoer.com/telugu-cinema/gallery/exclusive/rupamanjari1/rupa-manjari-pics-in-naan-tamil-movie-2-3.jpg
5.  சாருலதா - பிரியாமணிக்கு லைஃப் டைம் படம் .ட்வின்ஸ்களை வெச்சு காமெடி , ஆள் மாறாட்டக்குழப்பங்கள்  , ஓவர் செண்ட்டிமெண்ட் பார்த்து சலிச்ச கண்களுக்கு இந்த க்ரைம் த்ரில்லர் புதுசு . மாற்றான் இதே கதை என்று சொல்லபப்ட்டதால் மக்கள் அதையே பார்த்துக்கலாம் என இதை தவிர்த்திருக்கலாம். ரிலீஸ் டைமிங்க் சரி இல்லை . ஆனா முக்கியமான படம் . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் 


பட விமர்சனம் படிக்க


http://www.adrasaka.com/2012/09/blog-post_7975.html
4. நான்  -விஜய் ஆண்ட்டனிக்கு  மிகப்பெரிய திருப்பு முனைப்படம் , இதுல தான் அவர் அறிமுகம் ஆகறார். ஆனாலும் ஹாலிவுட் படங்களூக்கு இணையான க்ரைம் த்ரில்லர் . மக்கள் கவனிக்காததுக்கு முக்கியக்காரணம்  ஹீரோ புதுசு , மார்க்கெட்டிங்க் டெக்னிக்  சுமார் . மூளைக்காரன் ஒருத்தன் எப்படி எபப்டி எல்லாம் ஃபோர்ஜரி பண்றான் , எப்படி ஜெயிக்கிறான் எற ஆண்ட்டி ஹீரோ கதைதான் , ஆனா அபாரமான திரைக்கதை 


பட விமர்சனம் படிக்க 
3.  வழக்கு எண் 18/9 - இந்தக்கால கலாச்சார சீர்கேடுகளான ஆசிட் வீச்சு , தனக்கு கிடைக்காத ஃபிகர் வேற எவனுக்கும் கிடைக்கக்கூடாது  என்ற டீன் ஏஜ் இன் ஆண்ட்டி ஹீரோயிசங்களை ஆவணப்படுத்தி இருந்தார் . பேக் டிராப்பில்  ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முறை அருமையான  படமாக்கம் 
2.  நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் -கஜினி படத்துல ஏ ஆர் முருகதாஸ்  யூஸ் பண்ண ஷார்ட் டைம் மெமரி லாஸ் மேட்டரை அவர் க்ரைம் ஆக்‌ஷன் க்கு யூஸ் பண்ணார், அதே சப்ஜெக்ட்டை இவர் காமெடிக்கு யூஸ் பண்ணி இருந்தார் . இந்தக்கதையை சொல்லி படம் எடுக்கப்போறேன்னா யாரும் நம்ப மாட்டாங்க , ஆனா இயக்குநர் பட்டாசைக்கிளப்பி இருந்தார் . ஆனா ஏ செண்ட்டர் ரசிகர்களைக்கவர்ந்த  அளவு பி சி சரியாப்போகலை . கமல் , கிரேசி மோகன் சந்தானம் கூட்டணீயா இருந்தா கமர்ஷியலா போய் இருக்கும் , முக்கியமான படம் 


பட விமர்சனம் படிக்க 
1. பீட்சா - நான் பல மொழிகளில் பல பேய்ப்படங்கள் பார்த்திருக்கேன் . ஆனா இந்தப்படம் மிரட்ன அளவு எந்தபப்டமும் மிரட்டுனதில்லை . 40 நிமிட டார்ச்லைட் ஷாட் கலக்கல் . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்கள் அற்புதம்  . இது ஹாலிவுட்ல எடுத்தா அள்ளிக்கும் . தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படம், ஆனாலும் பிரமாதமான வெற்றி பெறவில்லை என்பதில் வருத்தமே  


பட விமர்சனம் படிக்க 
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc6/282363_391384040929634_1381247657_n.jpg
a
diSki - தனிப்பட்ட முறையில் நான் மிகவும் ரசித்துப்பார்த்து சிரித்த படம் 
ஒரு கல் ஒரு கண்ணாடி ( ஓகே ஓகே )  -இதுவும் காதல் கதைதான், காலங்காலமாக வந்த ஒரு தலைக்காதல் கம் தறுதலைக்காதல்தான். ஆனா திரைக்கதைல  போர் அடிக்காம காட்சிகளை அமைச்ச விதம் பிரமாதம் , சந்தானம் தான் ஹீரோ , உதயநிதி அவருக்கு சப்போர்ட்டிங்க் கேரக்டர். சிரிக்க சிரிக்க கதை சொல்லும் விதம் அழகு . இந்தப்படம் ரிலீஸ் ஆகும் முன் வந்த டி வி விளம்பரங்கள் படத்துக்கு பெரும்பலம்.  இந்த ஆண்டின் சிற ந்த  மார்க்கெட்டிங்க் டெக்னிக் என்று ஒரு விருது இருந்தா இதுக்கு தரலாம். அதே போல் இந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்குசித்திரம் விருதும்

பட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/04/blog-post_228.html

Tuesday, January 25, 2011

விஜய் -ன் டாப் 10 படங்கள்

dd9cdc28-d2a7-495c-ace4-1e758b651a481.jpg (450×256)
பொதுவா டாப் 10 படங்கள் மாதிரி பதிவை யாராவது தொடர்பதிவுக்கு அழைச்சாத்தான் போடறாங்க.. என்னை யாரும் அழைக்காமயே போட 2 காரணம்.

1. என்னை யாரும் மதிக்கற மாதிரி தெரியல ( ஹி ஹி வழக்கமா நடக்கறதுதானே..)2.குடும்பத்துல எல்லாரும் அழைச்சிட்டுபோய் பொண்ணு பாக்கற வைபவம் என்னதான் கலகலப்பு இருந்தாலும் நாமா தனியா போய் சைட் அடிக்கறதுல ஒரு கிளு கிளுப்பு இருக்கத்தான் செய்யுது..

10. கண்ணுக்குள் நிலவு. ஃபாசில் இயக்கிய இந்தப்படம் வசூல் ரீதியா தோல்விப்படமா இருந்தாலும் ,விஜய்க்கும்,அவரது ரசிகர்களுக்கும் இது முக்கியமான படம்.அவர் நடிச்ச படங்கள்லயே அதிக அளவு வித்தியாசமான முக பாவங்களை வெளிப்படுத்துன படம் இதுதான்.வித்தியாசமான சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஆனா அந்த சஸ்பென்ஸ் ஓவர்டோஸ் ஆகி தங்களை ஏமாத்தறதா ரசிகர்கள் நினைச்சதன் விளைவு படம் அவுட்.தன்னால் கொலை செய்யப்பட்டதா நம்புன பொண்ணு தன் கண் முன்னால உயிரோட வர்றப்ப விஜய் காண்பிக்கும் ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்ஸ் டாப் கிளாஸ்.ஷாலினி விஜய் லவ் சீன்ஸூம் ரொம்ப கவிதையா இருக்கும்.ஈரோடு அபிராமியில் 13 நாட்களே ஒடியது.

9. ஷாஜகான் - நண்பனின் காதலியை அவனோடு சேர்த்து வைக்கும் ஹீரோவின் கதைதான். சாதாரண இந்தக்கதை விஜய்-ன் ஸ்பெஷல் ஆனது    விஜய் ஸ்மார்ட்டான கலரில் சர்ட் அணிந்து போட்ட டான்ஸ் ஸ்டெப்கள் ஒண்டர்ஃபுல்.டான்ஸ் மாஸ்டர் சொல்லித்தந்ததை மட்டும் ஆடி விட்டுப்போகாமல் தனது ஸ்டைலில் ஸ்பெஷலாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தவிப்பு இந்தப்பாடலில் எதிரொலிக்கும்.காதலை விட்டுக்கொடுக்கும் பெரும்பாலான படங்கள் கமர்ஷியல் சக்‌சஸ் ஆவதில்லை என்ற பொது விதியின் படி இந்தப்படமும் ஓடவில்லை.ஈரோடு ராயலில் 28 நாட்களே ஓடியது.

8.ஃபிரண்ட்ஸ்- விஜய் -ன் மார்க்கெட் டவுன் ஆகும்போதெல்லாம் அவருக்கு கை கொடுப்பது கேரளாதான். சித்திக் இயக்கிய இந்தப்படம் சத்தமே இல்லாமல் வந்து சக்கை போடு போட்டது.காமெடி கலக்கல் படம். வடிவேல் சர்வசாதாரணமாக விஜய்யை வாடா போடா என சகட்டு மேனிக்கு திட்டுவது போல் காட்சிகள் இருந்தாலும் விஜய் பெருந்தன்மையாக அதில் நடித்து பாத்திரத்துக்கு உயிர் ஊட்டினார்.பன்ச் டயாலக்கை நம்பாமல் திரைக்கதையயும்,காமெடியையும் நம்பினால் சக்சஸ் என்று உணர்த்திய படம்.ஈரோடு சண்டிகாவில் 80 நாட்கள் பின் சங்கீதாவில் 25 நாட்கள் ஓடியது

7.வசீகரா -இந்தப்படம் விஜய்-ன் வித்தியாசமான காமெடி சென்சை உணர்த்திய படம்.படம் முழுக்க நகைச்சுவை தோரணங்கள் கொடி கட்டிப்பறக்கும்.நெஞ்சம் ஒரு முறை வா என்றது பாட்டில் விஜய் சினேகா இருவரும் எம் ஜி ஆர் சரோஜா தேவி போல் ஆடி நடித்த இந்தப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெறாமல் போனது ஏமாற்றம்தான்.ஆனால் இதே போல் ரஜினிக்கும் மிஸ்டர் பாரத்தில் நடந்தது, என்னம்மா கண்ணு சவுக்கியமா? பாடல் காட்சியில் ரஜினி,சத்யராஜ் இருவரும் கலக்கலாக நடனம் ஆடி அவரவர் ஸ்டைலில் அசத்தி இருந்த போதும் ரசிகர்கள் பிரமாதமாய் ரசிக்கவில்லை.ஈரோடு அன்னபூரணி தியேட்டரில் இது 23 நாட்களே ஓடியது.

6.பிரியமுடன் - விஜய்க்கு அவரது கேரியரில் முக்கியமான படம்.கிட்டத்தட்ட சைக்கோ கம் வில்லன் கேரக்டர்..பாஜிகர் படத்தில் ஷாரூக்கான் நடித்த கேரக்டர்.இந்தப்படம் பார்க்கும்போது இது எடுபடாது.. தமிழில் ஓடாது என்றே நினைத்தேன். ஆனால் படம் ஹிட்.கவுசல்யாவின் அப்பாவை பேசிக்கொண்டே மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யும்போது விஜய் பிரமாதமாய் நடித்தார்.அதேபோல் க்ளைமாக்ஸ்சில் தனது காதலைப்பற்றி சொல்லிக்கொண்டே உயிர் விடும் காட்சியிலும் கலக்கினார்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 53 நாட்கள் ஓடியது.

trisha_n_vijay.jpg (400×397)
5.திருமலை. - தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா, ஸ்ரீ வித்யாவுக்கு பாத்ரூமில் சோப்போடுவது மாதிரி சீன்களில் எல்லாம் நடித்து பேரை கெடுத்துக்கொண்ட விஜய் இந்தப்படத்தில்தான் ஆக்‌ஷன் ரூட்டில் பயணிக்க ஆரம்பித்தார்.வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் மாதிரி இதுல ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான் என பேசிய பன்ச் டயலாக் சூப்பர் ஹிட்.விஜய் -ன் கேரியர் புது பாணியில் வெளிப்பட அடி கோலிய படம்.அதே போல் ஜோதிகாவுக்கு நிகராக டான்ஸ் காட்சியில் முக பாவங்களை சட் சட் என மாற்றி நடித்த படம்.ஈரோடு ராயல் தியேட்டரில் இது 43 நாட்கள் ஓடியது.

4.குஷி -இயக்குநர் எஸ் ஜே சூர்யா செய்த உருப்படியான ரெண்டே காரியம் 1. வாலியில் அஜித்தை இயக்கியது.. 2. குஷி படத்தில் விஜய்யை இயக்கியது. எம் ஜி ஆர் காலத்தில் வந்த அன்பே வா பட KNOT தான். ஆனால் படம் முழுக்க ஜாலியாக போகும். என் இடுப்பை பாத்தியா? -இல்ல பாக்கல போன்ற பிரசித்தி பெற்ற வசனம் இதில் உண்டு.மேட்டோ ரீனா மேட்டோ ரீனா விசில் அடிக்கும் நிலவு தானா..பாட்டில் டான்ஸ் கொடி கட்டி பறக்கும்.கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாளா மும்தாஜின் நடனமும் ஃபேமஸ்.இந்தப்படத்தில் ஜோதிகா பல இடங்களில் ஓவர் ஆக்டிங்க் பண்ணி இருப்பார், விஜய் அண்டர்பிளே ஆக்டிங்க் பண்ணி சமப்படுத்தி இருப்பார். ஈரோடு ஆனூர் தியேட்டரில் இந்தப்படம் 70 நாட்கள் ஓடியது.

3.காதலுக்கு மரியாதை - விஜய் என்றால் விடலைப்பசங்கதான் ரசிகர்கள், சங்கவி கூடத்தான் சுத்துவார் என்ற இமேஜை உடைத்து தமிழ்த்திரை உலகையே கலக்கு கலக்கிய படம் .இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் பிரமாதமாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வகையில் இருக்கும்.ஷாலினியின் நடிப்பும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் இருக்கும்.2 பேரும் போட்டி போட்டு நடித்திருந்தாலும் இது ஒரு இயக்குநர் படம். ஃபாசில் பின்னி பெடல் எடுத்த படம்.இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.க்ளைமாக்சில் இருவரின் காதலுக்கும் குடும்பம் ஓக்கே சொல்லும்போது ஒரு பின்னணி இசை வரும் பாருங்க.. சான்ஸே இல்லை..மேஸ்ட்ரோ மேஸ்ட்ரோதான்.இன்னும் கூட லவ் சப்ஜெக்ட் என்றால் இந்தப்படத்தைத்தான் ஸ்டோரி டிஸ்கஷன்போது இயக்குநர்கள் சொல்றாங்க.காவலன் பட விமர்சனங்களில் தினத்தந்தி, த ஹிந்து, ஸ்டார் டஸ்ட் போன்ற பத்திரிக்கைகள் விஜய்க்கு இன்னொரு காதலுக்கு மரியாதை என்றே குறிப்பிட்டுள்ளன.விஜய்-ஷாலினி இருவரும் புக்ஸ்டாலில் முதன்முதல் காதல் பார்வைகளை பரிமாறிக்கொள்ளும் சீன் கவிநயம்.அபிராமி தியேட்டரில் 64 நாட்கள் தேவி அபிராமி தியேட்டரில் 40 நாட்கள் மொத்தம் 104 நாட்கள் ஈரோட்டில் ஓடியது.

2. துள்ளாத மனமும் துள்ளும் -சார்லி சாப்ளின் படத்தில் வந்த கதையை ஆளாளுக்கு உல்டா பண்ணி இந்த டைமில் 12 படங்கள் வந்தன. கார்த்திக்கின் நிலவே முகம் காட்டு படம் மட்டும்தான் ஞாபகம் இருக்கு.ஈரோடு ராயலில் இந்தப்படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது ரசிகர்கள் அடித்த கமெண்ட் 3 மாசத்துக்கு வேற படம் போட மாட்டாங்க..க்ளைமாக்சில் இன்னிசை பாடி வரும் இளம் காற்றுக்கு உருவம் இல்லை பாட்டுக்கு சிம்ரன் விஜய் இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.விஜய்க்கு டான்சில் சரிக்கு சரி சிம்ரன்தான்.படத்துல வேற எந்த செலவும் இல்லை. சிம்ப்பிளா வந்து லாட்டரி அடிச்சுது.ஈரோடு ராயலில் 103 நாட்கள் ஓடியது.

1. கில்லி- ரஜினிக்கு எப்படி பாட்ஷா முக்கியமான திருப்பு முனையோ அது மாதிரி விஜய்க்கு கில்லி முக்கியமான படம். அவர் நடித்து அதிக நாட்கள் ஓடிய படமும் இதுவே.. ( 205 நாட்கள்). கபடி வீரராக வரும் விஜய்க்கு படம் பூரா திரிஷாவைக்கூட்டிக்கொண்டு ஓடும் வேலைதான். பிரகாஷ்ராஜின் ஹாய்   செல்லம் டயலாக் செம ஃபேமஸ்..அப்படிப்போடு போடு பாட்டுக்கு விஜய் ஆடும் ஆட்டம் இளசுகளை துள்ளி ஆட வைத்தது.இந்தப்படத்தைப்பார்த்து காப்பி அடித்தே விஷால் பல படங்களில் நடித்தார்.நான் இந்தப்படத்தை பார்க்கும்போது படம் ஓக்கே நல்லாருக்கு என்றுதான் நினைத்தேன்.. ஆனால் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்.இதற்குப்பிறகு வந்த விஜய் படங்களை கில்லியோடு ஒப்பிட்டு அதுமாதிரி இது இல்லையே என பேச ஆரம்பித்தார்கள்..இது எல்லா ஹீரோக்களுக்கும் நடப்பதுதான்,,

டிஸ்கி 1 - இந்த லிஸ்ட்டில் காவலன் ஏன் இல்லைன்னா இப்போதானே படமும் வந்தது,, படத்தோட விமர்சனமும் வந்தது..பொண்ணு பார்த்த அனுபவம் கேட்டா லேட்டஸ்ட்டா பார்த்த பொண்ணு (மனைவி)பற்றி யாரும் சிலாகிச்சுக்கறதில்லை.அது மாதிரி...

டிஸ்கி 2 - இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது நல்ல நேரம் சதீஷ், சிரிப்புபோலீஸ் ரமேஷ்,ஃபிலாசபி பிரபாகரன்.. இதுல என்ன காமெடின்னா ரமேஷ்க்கு விஜய்னா உயிரு,,(!!) சதீஷ்க்கு விஜய்னா சொந்த சம்சாரம் மாதிரி( அவங்கவங்க சம்சாரத்தை யார் இப்போ ரசிக்கறாங்க?)  பிரபாகரன் தல அஜித் ரசிகர்.. பாப்போம் என்ன நடக்குதுன்னு..


Friday, December 31, 2010

2010 -ன் டாப் 10 பதிவர்கள் (புதிய தலைமுறை)

08070.jpg (321×357)
இந்த ஆண்டில் பதிவுலகில் யார் யார் எல்லாம் என் மனதைக்கவர்ந்தார்கள் என்ற தனிப்பட்ட லிஸ்ட் இது.ஏற்கனவே டாப்பில் இருக்கும் பதிவர்கள் மன்னிக்க.

1. பன்னிக்குட்டி ராம்சாமி - பொதுவாக நகைச்சுவையாக எழுதுபவர்கள் எல்லோர் மனதையும் கவர்கிறார்கள்.அந்த வகையில் தான் எழுதும் பதிவுகளில் மட்டுமல்லாமல் கமெண்ட்களில் கூட காமெடியை அள்ளித்தெளித்து கலக்கும் இவர்தான் என்னைப்பொறுத்தவரை நெம்பர் ஒன்.வலைச்சரம் ஆசிரியராகப்பொறுப்பேற்றதும் இவரது பன்முகத்திறமை வெளிப்பட்டது,தனது வாசிப்புத்திறன் முழுவதையும் வெளிப்படுத்தி புதிய பதிவர்களை அட்டகாசமாய் அறிமுகப்படுத்தி ஏகோபித்த ஆதரவைப்பெற்றார்,கமெண்ட்ஸ் வாங்குவதில் நாமெல்லாம் 10 ,   20 என்று தாளம் போடும் நேரத்தில் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் பெற்று அதிலும் சாதனை புரிந்தார்.டயலாக் டெலிவரியில் கவுண்டமணியின் அவதாரமாக அனைவர் மனதிலும் நின்றவர்.தமிழ்மணம் டாப் 20 லிஸ்ட் வர ஆரம்பித்த பிறகு அதுவரை வாரம் ஒரு பதிவு போடும் பழக்கம் உள்ள பலரும் தினசரி  ஒரு பதிவு போட்ட போதும் தனது வழக்கப்படி வாரம் 3 பதிவு  என தொடர்பவர்.இதுவரை எந்த வம்பு வழக்கிலும் சிக்காதவர்..


2. கே ஆர் பி செந்தில் - குமுதத்தில் வரும் பயோடேட்டா போல் இவரும் பயோடேட்டாவில் கலக்குபவர்.சமூக விழிப்புணர்வு கட்டுரையிலும் சரி ,கவிதையிலும்  சரி இவரது டச் உண்டு.அலாஸ்கா ரேங்க்கில் செம ஸ்பீடாக முன்னேறி வருகிறார்.எல்லோரிட்மும் நட்பு பாராட்டும் நல்ல மனிதர்.

3. சேட்டைக்காரன் - யார் மனதையும் புண்படுத்தாமல் காமெடி பண்ணுவது ரொம்ப கஷ்டம்,அந்த கஷ்டமான வேலையை ஈசியாக செய்து வருபவர்.பெரும் பாலும் குடிகாரர்களை மையமாக வைத்து நக்கலாக பதிவு போடுபவர்,அரசியல் நையாண்டியில் தேசியப்பார்வையும் உண்டு.எழுத்தில் ஆபாசம் துளி கூட கலக்காமல் கண்ணியமாக எழுதுபவர்.இவரது பதிவுகளுக்கு வரும் கமெண்ட்ஸ்களுக்கு பதில் போடுவதில்லை என்ற ஒரே ஒரு குறை மட்டும் உண்டு.

4. பட்டாபட்டி - சென்னை பஷையில் இவரது திட்டுக்களைக்கேட்கவே ஒரு கூட்டம் உண்டு.இவரது பதிவுகள் செம காமெடி.குறிப்பாக காங்கிரஸை போட்டு தாக்குவார்.யாரைப்பற்றியும் ,எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்.தனது மனதிற்கு எது சரி என தோன்றுகிறதோ அதை கலக்கலாக எழுதுபவர்.

5.வந்தேமாதரம் சசி - பதிவுலகில் டெக்னிக்கலான மேட்டர்ஸை பதிவு போட்டே புகழ் பெற்றவர்.அலாஸ்கா ரேங்க்கில் முன்னணியில் இருப்பவர்.சினிமா விமர்சனம்,ஜனரஞ்சக பதிவுகள் போட்டு முன்னேறும் பதிவர்கள் இடையே இவர் வித்தியாசமானவர்.பதிவர்களுக்கு டெக்னிக்கலான சந்தேகம் எது வந்தாலும் தீர்த்து வைப்பவர்.

6. ம தி சுதா -  இலங்கைப்பதிவர்.இவரது பல கட்டுரைகள் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துபவை. அவ்வப்போது ஜனரஞ்சகமாகவும் எழுதுவார்.டாஸ்போர்டு ஓப்பன் பண்ணி எப்போதும் ஆன்லைனில் இருப்பார்.சுடு சோறு எனக்கே வார்த்தை பிரபலம்.

7.கோமாளி செல்வா - மொக்கைப்பதிவுகள் போட்டே சக்கையாக முன்னேறுபவர்.வட எனக்கே வாசகம் பிரபலம்.வடைவங்கி என இவருக்கு இவரே பட்டம் குடுத்துக்கிட்டார் (யாரையும் எதற்கும் எதிர்பார்க்கக்கூடாதாம்).இவரது வயது ரொம்பக்குறைவாக இருந்தாலும் நிறைவான பதிவுகள் கலக்கல்.

8.மங்குனி அமைச்சர் - இம்சை அரசன் 23ம் புலிகேசியின் லோகோவைப்பார்த்தாலே சிரிப்பு வந்து விடும்.இவரது எழுத்துக்களில் காமெடி தெறிக்கும்.சென்னைப்பதிவரான இவர் மற்றவர்களுடன் பழகுவதில் சகஜமானவர் என்ற நல்ல பெயர் பதிவுலகில் உண்டு.

9 . சிரிப்புப்போலீஸ் ரமேஷ் - 24 மணி நேரமும் ஆன்லைனில் இருக்கும் பதிவர்.இவர் வாங்கி வந்த வரம் அப்படி.ஆஃபீஸ் டைம்லயே அனைத்து பதிவுகளையும் டைப் செய்து,கமெண்ட்டும் போடும் ஒரே பதிவர்.மற்றவர்களை கலாய்ப்பதில் மன்னர்.யார் எந்த பதிவு போட்டாலும் அதில் போய் இந்த ஜோக் ஏற்கனவே 4 வருஷத்துகு முன்பே நான் எழுதிட்டேன் என காமெடி பண்ணுவார்.இவர் பணி புரியும் ஆஃபீஸ் இன்னும் இழுத்து மூடாமல் இருப்பது ஆச்சரியம்.

10 - நல்ல நேரம் சதீஷ் - டைட்டில் வைப்பதில் மன்னன்.எனக்கு பதிவுலக குரு.அரசியல் நையாண்டி,சட்டயர் காமெடி எழுத்துக்கள் இவரது பலம்.இவரது அலாஸ்கா ரேங்க் முன்னேற்றம் அபார வேகம்.சூப்பர் ஹிட் போஸ்ட் போட்டால் சர்வ சாதாரணமாக 3000 ஹிட்ஸ் அடிப்பவர்.ரஜினி ரசிகர் ,ஜோதிடர்

டிஸ்கி - 2011 அனைவருக்கும் நல்ல ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்