Thursday, December 02, 2010

ஈரோடு ஹாஸ்பிடலில் நடந்த நூதன மோசடி

http://www.aintreehospitals.nhs.uk/Library/2008_images/Operation%20taking%20place.jpg 
20 நாட்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது.சேலம் நகர தமிழ் முரசு

பத்திரிக்கையின் சப் எடிட்டர் திரு வேல்முருகன் அவர்களிடமிருந்து எனக்கு
 ஒரு ஃபோன் வந்தது.”செந்தில்,திருச்சில இருந்து நம்ம நண்பர் ஒருத்தர்
ஒரு மேரேஜ் அட்டெண்ட் பண்ண ஈரோடு வந்திருக்கார்.அவரும்,அவரது
மனைவியும்,மேரேஜ் முடிஞ்சி திருச்சி திரும்பறப்ப அவருக்கு திடீர்னு
ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு,இப்போ அவங்க ஈரோடு மூலப்பாளையம்
பக்கத்துலதான் இருக்காங்க,உடனே போய் பாருங்க,அவங்களுக்கு ஹெல்ப்
பண்ணுங்க” என்றார்.

நான் உடனே சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தேன்.108க்கு ஃபோன் போட்டிருக்கிறார்கள்.எங்கேஜ்டு டோனாக தொடர்ந்து வரவே  வேறு பிரைவேட் ஹாஸ்பிடலில் சேர்க்க முடிவு செய்தோம்.அருகில் சவீதா ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப் அருகே செங்குந்தர் ஸ்கூல் பக்கத்தில்
விஜயா ஹாஸ்பிடலில் சேர்த்தோம்.டாக்டர் செக் பண்ணி பார்த்து விட்டு
யுனிவர்சல் ஹாஸ்பிடல் என ஒரு ஹாஸ்பிடல் அருகில் இருப்பதாகவும் அங்கே சேர்க்கும்படியும்அறிவுறுத்தினார்.அதன்படியே செய்தோம்.பேஷண்ட் திருச்சி நகர தமிழ் முரசு

பத்திரிக்கையின் எடிட்டர்.அவரது மனைவி திருமணத்துக்கு வந்ததால் கழுத்து நிறைய நகையுடன் இருந்தார்.அவரது பகட்டான தோற்றத்தை பார்த்து டாக்டர் என்ன நினைத்தாரோ? (வேற என்ன நினைத்திருப்பார் ,கறந்துடலாம்னு நினைச்சிருப்பாரு). என்னை தனி அறைக்கு அழைத்தார்.

“ சார்,பேஷண்ட்டுக்கு மைல்டா ஹார்ட் அட்டாக் வந்திருக்கு,இதுக்கு உடனே ட்ரீட்மெண்ட் பண்ணனும்.ரூ 3000 க்கு ஒரு ஊசி போடனும்.இன்னொண்ணு ரூ 8000க்கு இருக்கு,லாஸ்ட்டா ரூ 25,000 க்கு ஒரு ஊசி இருக்கு.இதுதான் சேஃப்.நீங்க டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லுங்க.என்றார்.நான் நண்பரின் மனைவியிடம் போய் நிலைமையை சொன்னேன்.அவர் அழுதுகொண்டே
இருந்தார்.எதுவும் பேசக்கூடிய நிலையிலோ,முடிவு எடுக்கும் சூழ்நிலையிலோ அவர் இல்லை.இந்த மாதிரி நெருக்கடியான நேரத்தில் என்ன செய்வது என்று எனக்கும் தோன்றவில்லை.அவர் பணம் ஏதும் எடுத்து வரவில்லை
நண்பரின் பர்சில் ஏ டி எம் கார்டு எதுவும் இல்லை.எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து

நான் டாக்டரிடம் “சார் ,அவரது சொந்தக்காரங்க எல்லோரும் திருச்சியில்தான் இருக்காங்க.எனவே இப்போதைக்கு ரூ 3000 ஊசியே போடுங்க..ஓரளவு நிலைமை சரி ஆனதும் அவங்க திருச்சி போய்ட்ரீட்மெண்ட் பார்த்துக்குவாங்க.” என்றேன்.

உடனே டாக்டருக்கு கோபம் வந்து விட்டது”.எனக்கென்ன?நீங்க சொல்ற ஊசி போடறேன்.”என்று சொல்லி விட்டு ஐசி யூனிட்டுக்கு சென்று விட்டார்.அரை மணி நேரம் கழித்து பேஷண்ட்டை போய் பார்த்தோம்.ஸ்லீப்பிங்க் டோஸ் கொடுக்கப்பட்டிருந்ததால் அவர் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்.அவருக்கு வயது 47.இதற்கு முன் ஹார்ட் அட்டாக் வந்ததே இல்லையாம்.

சிறிது நேரம் கழித்து டாக்டர் அழைத்தார்,” சார்,கே எம் சி ஹெச் (கோவை மெடிக்கல் செண்ட்டர்) கொண்டுபோயிடுங்க.அதான் பெஸ்ட்.இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க ,அந்தம்மா கிட்டேயும் சைன் வங்கனும் என்றார்.

அவர் இன்னும் அழுது கொண்டே இருந்தார்.எனக்கு டாக்டரின் நோக்கம் தெளிவாக விளங்கி விட்டது. ஹாஸ்பிடல்களுக்குள் ஒரு லிங்க் இருக்கிறது.ஒரு டாக்டர் இந்த ஹாச்பிடலில் சேர்த்த் விடுங்கள் என்றால் அவருக்கு ஒரு கமிஷன் உண்டு.இப்படி மாற்றி விடுவதால் நமக்கு டாக்டர் மேல் நம்பிக்கை வரும்.மெண்ட்டல் டென்ஷன் ஜாஸ்தி ஆகும்மேட்டர் சீரியஸ் என செலவு செய்ய தயார் ஆகி விடுவோம். நான் சார் பேஷண்ட் கண் விழிக்கட்டும் ,அது வரை இங்கேயே இருக்கொம் “என்றேன்.

3 மணி நேரம் கழித்து பேஷண்ட் கண் விழித்தார்.நார்மல் நிலைக்கு கிட்டத்தட்ட வந்து விட்டர்ர், இப்போதான் அவரது மனைவிக்கு திருப்தியே,அழுகையை நிறுத்தி சகஜ நிலைக்கு வந்தார். டிஸ்சார்ஜ் ஆகி திருச்சி கிளம்பினர்.

இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேன்ண்டிய பாடங்கள்

1.  35 வயது நிரம்பியவர்கள் கம்ப்ளீட் பாடி செக்கப் செய்து கொள்வது நல்லது.

2.  எப்போதும் பேங்க்கில் ஒரு குறிப்பிட்ட தொகை சேமிப்பில் வைத்திருக்கவேண்டும்.   ஏ டி எம் கார்டு கைவசம் இருக்க வேண்டும்.

3  .கல்யாணத்துக்கு வெளியூர் போகும்போது நகைகள் அதிகம் அணிய வேண்டாம்.கண்ணை  உறுத்தும் வகையில் அணிவதை தவிர்க்கனும்.

4.  பிரைவேட் ஹாஸ்பிடல் சேஃப்டி என்ற எண்ணத்தை அகற்றிக்கொள்ள வேண்டும்.

5.  40 வயதுக்குப்பிறகு தனியே வெளியூர் பயணம் செல்வதை தவிர்க்கனும்.

6.  சிக்கலான சூழ்நிலைகளில் பதட்டப்படாமல் முடிவு எடுக்க மனதை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும்.

டிஸ்கி - பின் விசாரித்த வகையில் ஈரோட்டில் பல ஹாஸ்பிடல்களில் இந்த மாதிரி லிங்க் இருப்பதாகவும்,அட்மிட் பண்ணி 2 மணி நேரத்தில் அந்த ஹாஸ்பிடல் போ, இந்த ஹாஸ்பிடல் போ என பந்தாடப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.இது பற்றி விசாரனைகள் நடந்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் நல்லது.ரமணா படத்தில் வருவது போல் நடக்கும் ஹாஸ்பிடல் கொள்ளைகளைதடுக்க நம்மால் முடிந்தவரை பாடுபடுவோம்.

74 comments:

வைகை said...

இங்கதான் மழை விடாம பெய்யுதுன்னு பாத்தா வலைல உங்க பதிவு மழையும் விடாம பொழியுது!!!!!

வைகை said...

நல்ல பதிவு சிபி!!! நம்மவர்களில் நிறையபேருக்கு இந்த விழிப்புணர்வே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை!!!

Arun Prasath said...

ரமணா படத்தில் வந்தது, உண்மை சம்பவம் சார், அது பத்தி ஜூ வி ல வந்திருக்கு, கோயம்புத்தூர்ல தான் நடந்தது

THOPPITHOPPI said...

டாக்ட்டர கடவுள் மாதிரின்னு சொன்னதால காணிக்க கொடுத்தாதான் உயிரை காப்பாத்துவாங்க போல

எஸ்.கே said...

இந்த மாதிரி ஹாஸ்பிடல்கள் மாற்றுவது இப்போதெல்லாம் அதிகமாக நடக்கிறது! அதுபோல் பிரைவேட் ஹாஸ்பிடல்களில் அளவுக்கு அதிகமாக பணம் பிடுங்குவது நடக்கத்தான் செய்கிறது! ஆனால் நம் அவசர நிலையில் அவர்கள் சொல்வதற்கு ஏற்ப நடக்கும் நிலையே உள்ளது!

வெங்கட் said...

நல்ல பயனுள்ள பதிவு..!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

காசு பார்க்கும் தொழிலாகி விட்டதே...

Anonymous said...

அருமையான தகவல்..கே.எம்.சி.ஹெச் தான் ஹார்ட் சம்பந்தமானத்ற்கு பெஸ்ட்..முதலில் அங்கு சேர்த்து இருக்கலாம்..முதலில் பேசண்டுக்கு டிரீட்மெண்ட் கொடுத்திருக்க வேண்டும்

Anonymous said...

ஈரோடு ஹாஸ்பிடல்ஸ்கோவைக்கு அடுத்த படியாக அதிக பணம் பிடுங்கும் நகரம்

Anonymous said...

எனக்கு தெரிந்தவரை கே.எம்.சி.ஹெச் பீஸ் கம்மிதான்..லோடஸ் தான் அதிகம்..சாக்கு மூட்டையில் தான் பணம் கொண்டு போக வேண்டும் என்பார்கள்

karthikkumar said...

இன்னைக்கு நெலமைல கல்வியும் மருத்துவமும் செம பிசினெசா இருக்குல்ல சார்

செல்வா said...

இப்படியெல்லாம் பணம் புடுன்குராங்களா .?

சௌந்தர் said...

இந்த டாக்டர்களே இப்படி தான் அவர்கள் நோக்கம் பணம் மட்டுமே

சௌந்தர் said...

ஹலோ சார் இந்த சி.பி. செந்தில்குமார் ப்ளாக் அட்ரஸ் கொடுங்க

ஹரிஸ் Harish said...

கொடுமை தான்...

Jawahar said...

ஆஸ்பத்திரிகள் பிராஃபிட் செண்ட்டர்களாக என்றைக்கு மாறினவோ அப்போதிலிருந்து யாருக்கும் அங்கே பொறுப்பே இல்லை. அனுபவமில்லாத சின்னச் சின்ன பையன்களை ஷிஃப்ட் நேரத்தில் இன்சார்ஜாக வைத்துக் கழுத்தை அறுக்கிறார்கள். உயிர் போகிறது என்கிற போது மறுபடி முதலிலிருந்து டெஸ்ட் செய்ய வேண்டும் என்கிறார்கள். நாலு நாளில் குணப்படுத்த முடிந்த சீக்குகளை பதினைந்து நாள் இழுக்கிறார்கள்.

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிற நிலை வருபவர்கள் பாவம் செய்தவர்கள்!

http://kgjawarlal.wordpress.com

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
This comment has been removed by the author.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஈரோட்டில் அவசர நிலையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் அட்மிட் ஆகிறவர்களின் நிலை மிகவும் வருந்தத்தக்கதாகவே இருந்துவருகிறது .
அப்படிப்பட்ட ஆஸ்பத்திரிகளை மக்களுக்கு நாம் இனம் காட்ட வேண்டும் .
அதனைச் செய்த தாங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் .

அதோடு அவைகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலைப்பதிவர்கள் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் .

அதற்கு நான் என்றும் தயாராக இருக்கிறேன் .

இணைந்து மக்கள் பணி செய்வோம்

இளங்கோ said...

கொடுமை :( .

அன்பரசன் said...

ரமணா...
:(

ILA (a) இளா said...

லோட்டஸ் எல்லாத்துக்கும் முன்னோடி, இதுக்கும் அவுங்கதான் கடைசியா கடைய பெருசா போட்டவங்க..

Unknown said...

how do u know abt the medicne,dnt giv the bad opinion on medical treatment lik what u think,,, if u hav the doubt just ask the name of the injection and try to find the price n any pharmacy or u can use the internet,u will find it.and the facility ask the what the facility do the patient need... and try to find n the hospital u know r someone of ur friends know....

dnt blame anything if u doesn't know guys.... if ur not happy the bill what they give you go to the consumer court....u will find the solution.

everyone is human being not all the hospital ,, not all the doctors are the same, they know the value of life more then what u do...

வைகை said...

if ur not happy the bill what they give you go to the consumer court....u will find the solution./////////

i thing you are a doctor, every people trust you and treat you like a god! because everybody want to save a life, why should you ask them to go to consumer court?!!! this way you are prof yourself and accept you are all doing very good business!!!! after how you are say, we don't know about medicine!!! our country 100% people not satisfaction about your billing,its true!!!! if everybody going to consumer court for solution?!!!!!! think about it and realize yourself!!! thanks!!!

இம்சைஅரசன் பாபு.. said...

செந்தில் சொன்னது ஒரு வகை தான்......நம்ம வடிவேலு சொன்னது மாதிரி எப்படி ஏமாத்தலாம் ன்னு ரூம் போட்டு யோசிப்பாங்க போல இந்த மருத்துவர்கள் .........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

வைகை said...

நல்ல பதிவு சிபி!!! நம்மவர்களில் நிறையபேருக்கு இந்த விழிப்புணர்வே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை!!!///

எல்லா பசங்களும் தூங்கிகிட்டா இருக்காங்க.

உருப்படியான பதிவு...

தினேஷ்குமார் said...

நல்ல பதிவு பாஸ்

பகிர்ந்தமைக்கு நன்றி பாஸ்

Chitra said...

சிக்கலான சூழ்நிலைகளில் பதட்டப்படாமல் முடிவு எடுக்க மனதை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும்...... Good advice.

மருத்துவமனையை வியாபாரம் ஆக்கி... ம்ம்ம்ம்..... வேதனையும் கண்டிக்கப்பட வேண்டியதும்.

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//

வைகை said...

நல்ல பதிவு சிபி!!! நம்மவர்களில் நிறையபேருக்கு இந்த விழிப்புணர்வே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை!!!///

எல்லா பசங்களும் தூங்கிகிட்டா இருக்காங்க.///////

நான் நம்மவர்களுன்னு சொன்னத நீங்க எப்படி எடுதுகிட்டிங்க? நான் நம்ம நாட்டுலன்னு பொதுவா சொன்னேன்,
" எல்லா பசங்களும் தூங்கிகிட்டா இருக்காங்க" இதோட அர்த்தம் கோபமா இல்ல ஆதங்கமா?!! புரியல ரமேஷ்

ராசு மாமா (நண்பேண்டா..) said...

என்ன கொடுமை சார் இது?

ப.கந்தசாமி said...

கொடுமையிலும் மகாக்கொடுமைங்க இது.

Philosophy Prabhakaran said...

இவனுங்க திருந்த மாட்டாங்க... திருந்தவே மாட்டாங்க... எது எதுல விளையாடனும்னு அறிவே இல்லாத விவஸ்தை கெட்டவனுங்க...

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

இங்கதான் மழை விடாம பெய்யுதுன்னு பாத்தா வலைல உங்க பதிவு மழையும் விடாம பொழியுது!!!!!

தினமும் ஒரு ப்திவு

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வைகை said...

நல்ல பதிவு சிபி!!! நம்மவர்களில் நிறையபேருக்கு இந்த விழிப்புணர்வே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை!!!

adhee அதே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Arun Prasath said...

ரமணா படத்தில் வந்தது, உண்மை சம்பவம் சார், அது பத்தி ஜூ வி ல வந்திருக்கு, கோயம்புத்தூர்ல தான் நடந்தது

ஆமா தெரியும்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger THOPPITHOPPI said...

டாக்ட்டர கடவுள் மாதிரின்னு சொன்னதால காணிக்க கொடுத்தாதான் உயிரை காப்பாத்துவாங்க போல

ம் ம் நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

எஸ்.கே said...

இந்த மாதிரி ஹாஸ்பிடல்கள் மாற்றுவது இப்போதெல்லாம் அதிகமாக நடக்கிறது! அதுபோல் பிரைவேட் ஹாஸ்பிடல்களில் அளவுக்கு அதிகமாக பணம் பிடுங்குவது நடக்கத்தான் செய்கிறது! ஆனால் நம் அவசர நிலையில் அவர்கள் சொல்வதற்கு ஏற்ப நடக்கும் நிலையே உள்ளது!

எஸ் ,
எஸ் கே

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

நல்ல பயனுள்ள பதிவு..!!ந்

நன்றி வெங்கட்

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

காசு பார்க்கும் தொழிலாகி விட்டதே...

நன்றி ஜெயந்த்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான தகவல்..கே.எம்.சி.ஹெச் தான் ஹார்ட் சம்பந்தமானத்ற்கு பெஸ்ட்..முதலில் அங்கு சேர்த்து இருக்கலாம்..முதலில் பேசண்டுக்கு டிரீட்மெண்ட் கொடுத்திருக்க வேண்டும்

பதட்டத்தில் தோணலை

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஈரோடு ஹாஸ்பிடல்ஸ்கோவைக்கு அடுத்த படியாக அதிக பணம் பிடுங்கும் நகரம்

ஆமா சென்னையும் தான்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எனக்கு தெரிந்தவரை கே.எம்.சி.ஹெச் பீஸ் கம்மிதான்..லோடஸ் தான் அதிகம்..சாக்கு மூட்டையில் தான் பணம் கொண்டு போக வேண்டும் என்பார்கள்

ஆமா ஆனா ஹாஸ்பிடல் நீட்டா கிராண்டா ஷோவா இருக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger karthikkumar said...

இன்னைக்கு நெலமைல கல்வியும் மருத்துவமும் செம பிசினெசா இருக்குல்ல சார்

ஆமா கார்த்தி

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

இப்படியெல்லாம் பணம் புடுன்குராங்களா .

அதே

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சௌந்தர் said...

இந்த டாக்டர்களே இப்படி தான் அவர்கள் நோக்கம் பணம் மட்டுமே
நல்லவங்களும் இருக்காங்க தேடனும்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger சௌந்தர் said...

ஹலோ சார் இந்த சி.பி. செந்தில்குமார் ப்ளாக் அட்ரஸ் கொடுங்க

நானே எப்பவாவது ஒரு நல்ல மேட்டர் போடறேன் அது பொறுக்கலையா?

சி.பி.செந்தில்குமார் said...

ஹரிஸ் said...

கொடுமை தான்...

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Jawahar said...

ஆஸ்பத்திரிகள் பிராஃபிட் செண்ட்டர்களாக என்றைக்கு மாறினவோ அப்போதிலிருந்து யாருக்கும் அங்கே பொறுப்பே இல்லை. அனுபவமில்லாத சின்னச் சின்ன பையன்களை ஷிஃப்ட் நேரத்தில் இன்சார்ஜாக வைத்துக் கழுத்தை அறுக்கிறார்கள். உயிர் போகிறது என்கிற போது மறுபடி முதலிலிருந்து டெஸ்ட் செய்ய வேண்டும் என்கிறார்கள். நாலு நாளில் குணப்படுத்த முடிந்த சீக்குகளை பதினைந்து நாள் இழுக்கிறார்கள்.

ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிற நிலை வருபவர்கள் பாவம் செய்தவர்கள்!

http://kgjawarlal.wordpress.com

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஈரோட்டில் அவசர நிலையில் தனியார் ஆஸ்பத்திரிகளில் அட்மிட் ஆகிறவர்களின் நிலை மிகவும் வருந்தத்தக்கதாகவே இருந்துவருகிறது .
அப்படிப்பட்ட ஆஸ்பத்திரிகளை மக்களுக்கு நாம் இனம் காட்ட வேண்டும் .
அதனைச் செய்த தாங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் .

அதோடு அவைகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலைப்பதிவர்கள் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் .

அதற்கு நான் என்றும் தயாராக இருக்கிறேன் .

இணைந்து மக்கள் பணி செய்வோம்

நன்றி சார்,நீங்க முன்னோடியா இருந்து எங்களுக்கு வழி காட்டுங்க

சி.பி.செந்தில்குமார் said...

இளங்கோ said...

கொடுமை :( .

நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

ரமணா...
:(

நன்றிண்ணா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ILA(@)இளா said...

லோட்டஸ் எல்லாத்துக்கும் முன்னோடி, இதுக்கும் அவுங்கதான் கடைசியா கடைய பெருசா போட்டவங்க..

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger sasikala said...

how do u know abt the medicne,dnt giv the bad opinion on medical treatment lik what u think,,, if u hav the doubt just ask the name of the injection and try to find the price n any pharmacy or u can use the internet,u will find it.and the facility ask the what the facility do the patient need... and try to find n the hospital u know r someone of ur friends know....

dnt blame anything if u doesn't know guys.... if ur not happy the bill what they give you go to the consumer court....u will find the solution.

everyone is human being not all the hospital ,, not all the doctors are the same, they know the value of life more then what u do...

மேடம் உங்க கருத்தை நீங்க சொன்ன ம்மாதிரி என் அனுபவத்தை நான் பகிர்ந்துக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

வைகை said...

if ur not happy the bill what they give you go to the consumer court....u will find the solution./////////

i thing you are a doctor, every people trust you and treat you like a god! because everybody want to save a life, why should you ask them to go to consumer court?!!! this way you are prof yourself and accept you are all doing very good business!!!! after how you are say, we don't know about medicine!!! our country 100% people not satisfaction about your billing,its true!!!! if everybody going to consumer court for solution?!!!!!! think about it and realize yourself!!! thanks!!!

நன்றி வைகை ,உரிமையாக பதில் சொன்னதுக்கு.நான் உடனுக்குடன் பதில் போட முடிவதில்லை.ஆன்லைனில் டெயிலி ஒருமணீ நேரமே செலவழிக்க முடியுது

சி.பி.செந்தில்குமார் said...

இம்சைஅரசன் பாபு.. said...

செந்தில் சொன்னது ஒரு வகை தான்......நம்ம வடிவேலு சொன்னது மாதிரி எப்படி ஏமாத்தலாம் ன்னு ரூம் போட்டு யோசிப்பாங்க போல இந்த மருத்துவர்கள் .....

நன்றி பாபு

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

வைகை said...

நல்ல பதிவு சிபி!!! நம்மவர்களில் நிறையபேருக்கு இந்த விழிப்புணர்வே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை!!!///

எல்லா பசங்களும் தூங்கிகிட்டா இருக்காங்க.

உருப்படியான பதிவு...

அப்போ இர்த்தனை நாள் போட்டது உருப்படி இல்லாததா?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

நல்ல பதிவு பாஸ்

பகிர்ந்தமைக்கு நன்றி பாஸ்

நன்றி தினேஷ்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger Chitra said...

சிக்கலான சூழ்நிலைகளில் பதட்டப்படாமல் முடிவு எடுக்க மனதை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும்...... Good advice.

மருத்துவமனையை வியாபாரம் ஆக்கி... ம்ம்ம்ம்..... வேதனையும் கண்டிக்கப்பட வேண்டியதும்.

நன்றி சித்ரா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//

வைகை said...

நல்ல பதிவு சிபி!!! நம்மவர்களில் நிறையபேருக்கு இந்த விழிப்புணர்வே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை!!!///

எல்லா பசங்களும் தூங்கிகிட்டா இருக்காங்க.///////

நான் நம்மவர்களுன்னு சொன்னத நீங்க எப்படி எடுதுகிட்டிங்க? நான் நம்ம நாட்டுலன்னு பொதுவா சொன்னேன்,
" எல்லா பசங்களும் தூங்கிகிட்டா இருக்காங்க" இதோட அர்த்தம் கோபமா இல்ல ஆதங்கமா?!! புரியல ரமேஷ்

வைகை ,ரமேஷ் ஒரு காமெடி பேர்வழி,சும்மா கலாய்க்கறாரு அதி எல்லாம் சீரியசா எடுத்துக்க வேணாம்

சி.பி.செந்தில்குமார் said...

ராசு மாமா (நண்பேண்டா..) said...

என்ன கொடுமை சார் இது?

வருகைக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

DrPKandaswamyPhD said...

கொடுமையிலும் மகாக்கொடுமைங்க இது.

நன்றி டாக்டர் சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger philosophy prabhakaran said...

இவனுங்க திருந்த மாட்டாங்க... திருந்தவே மாட்டாங்க... எது எதுல விளையாடனும்னு அறிவே இல்லாத விவஸ்தை கெட்டவனுங்க...

பிரபாவுக்கு எப்பவும் கோபம் ஜாஸ்தியோ

IKrishs said...

Payanulla pathivu ithu!
(kurippaga tips ..)

Nanri..

Madurai pandi said...

நம்மள அந்த ரமணா தான் காப்பாத்தனும்!!!

Jayadev Das said...

எங்கள் உறவினர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்த போது வண்டி விபத்துக்குள்ளாகி தலையில் மூன்று இடங்களில் காயம் ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை, இரத்த அழுத்தம் இரண்டுமே இருந்தது. மயக்கமடைந்துவிட்டார். சேலத்தில் மிகப் பிரபலமான மருத்துவர் ஒருவரிடம் காட்டியிருக்கிறார்கள் [Everybody says he is number 1 in Neurology!]. அவரும் அங்கே போ இங்கே போ என்று அலைக்கழித்து பின்னர், "தலையில் பலத்த அடி, மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மூன்று கட்டமாக ஆபரேஷன் செய்ய வேண்டும், வெளியில் இருந்து ஸ்பெஷலிஸ்ட்களை அழைக்க வேண்டும் என்று பயமுறுத்தி இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும், என்று கூறியிருக்கின்றனர். அவர்கள் இதற்க்கு முடியாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். வீட்டிலிருந்து பெங்களூரில் இருந்த எனக்கு தொலைபேசியில் அழைத்து, இங்கு ஏதோ மருத்துவமனை
இருக்கிறதாமே என்று தோராயமாக கேட்டனர், எனக்கு அது NIMHANS -தான் என்று கொஞ்சம் குழப்பத்திற்க்கப்புறம் பொறியில் தட்டியது. அடிபட்டவர் மயக்க நிலையிலேயே இருப்பதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் சொன்னார்கள். NIMHANS எப்படி வருவது என்று வழி சொல்லி, உடனே காரில் பெங்களூருக்கு கொண்டுவந்து சேருங்கள் என்றேன், அவர்களும் அதே கணமே புறப்பட்டு காலையில் வந்து சேர்த்தனர். உடனே எல்லா காயங்களையும் ஆபரேஷன் செய்தனர், நோயாளிக்கு மயக்கம் தெளிந்தது பேச ஆரம்பித்தார், மூன்றே நாட்களில் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் வேண்டுமானால் இன்னும் ஒருமாதம் கழித்து வந்து பாருங்கள் என்றனர். இதற்க்கு கட்டணம் மூவாயிரம் ரூபாய் மட்டுமே! அவர் இன்றும் நலமாக உள்ளார்!

Ravi kumar Karunanithi said...

நல்ல பதிவு சிபி!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அடிப்படையிலேயே தவறு இருக்கிறது. லஞ்சமாக நாற்பது லட்சம் ஐம்பது லட்சம் என்று பணம் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கும் அவல நிலைதான் எல்லாவற்றிற்கும் காரணம். கொடுத்துப் படிப்பவன் எப்படி நியாயமாய் வைத்தியம் பார்ப்பான்?

ARJUN said...

it is usual to give fibrinolytics after a heart attack...it prevents further complications to the heart due to blood clots...the drugs are costly though. as a dr its our duty to give all the options to a patient.i donno wat iis wrong in that.. think from a doctors view. dont be biased. just google about the drug and then come and comment here.

@vidya subramaniam: you need not pay 40 lakh for a seat in government college. and appx 75% of doctors are from govn colleges only.its not fair to accuse all doctors in general. further mind ur words

regarding doctors fee: it depends on the doctor and well, i donno wat should i write here. tell me if u r a dr, wil u do service for free. after 9 years of studies(do u know how hard it is to study and complete medicine) its his right to get the fee one demands.. if u could not afford it tats not our problem and its the duty of government to provide decent health care to all in govn hospitals. u should be getting mad at the government and not at us.. சேவை பண்ண வர அரசியல் வாதிகளே (எம் எல் எ, எம் பீ )சம்பளம் வாங்கும் போது நாங்க மட்டும் ப்ரீ யாஹ் சேவை செய்யனும்னு எதிர் பார்த்தா எப்டி சார்.
anybody can tell anything(no body is perfect in this world) but in my service i havent seen any patient being refused basic treatment for not having money.

சி.பி.செந்தில்குமார் said...

கிருஷ்குமார் said...

Payanulla pathivu ithu!
(kurippaga tips ..)

Nanri..

நன்றி கிருஷ்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மதுரை பாண்டி said...

நம்மள அந்த ரமணா தான் காப்பாத்தனும்!!!

நீங்க கேப்டன் ரசிகர் ஆக்கும்?

சி.பி.செந்தில்குமார் said...

ஜெயதேவ் சார் உங்க அனுபவத்தை பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

Ravi kumar Karunanithi said...

நல்ல பதிவு சிபி!

நன்றி ரவி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

அடிப்படையிலேயே தவறு இருக்கிறது. லஞ்சமாக நாற்பது லட்சம் ஐம்பது லட்சம் என்று பணம் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கும் அவல நிலைதான் எல்லாவற்றிற்கும் காரணம். கொடுத்துப் படிப்பவன் எப்படி நியாயமாய் வைத்தியம் பார்ப்பான்?

எஸ் மேடம்

சி.பி.செந்தில்குமார் said...

மிஸ்டர் ரவி,நான் இலவசமாக பார்க்க சொல்ல்வில்லை.ஆபத்து நேரத்தில் பேரம் எதற்கு என்றேன்?

நாரதர் கலகம் said...

சி பி யின் பதிவுகளிலேயே மிக சிறந்த பதிவு , தகவலுக்கு நன்றி