Friday, October 16, 2026

ஜெயிலர் 2 (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ஆக்சன் மசாலா)

 


மன்னன்,பாட்ஷா,படையப்பா படத்துக்குப்பின் ரஜினியின் மாஸ் தெறிக்கும் படங்கள் எதுவும் வந்ததில்லை என்ற குறையைப்போக்க வந்திருக்கும் படம் இது.கபாலி,காலா,அண்ணாத்த ,கூலி  என சுமார் ரகப்படங்களும் ,பேட்ட ,பேட்டையன் ,ஜெயிலர் ஓக்கே ரகப்படங்களும் தான் ரஜினியால் தர முடிந்தது.




இரண்டாம் பாகம் தமிழ் சினிமா வுக்கு செட் ஆகாது என்ற கோடம்பாக்க செண்ட்டிமெண்ட்சை உடைத்து முதல் பாகத்தை விடத்தரமான மசாலாப்படத்தைத்தந்ததோடு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படம் என்ற  மைல் கல்லை எட்டப்போகும் படம் இது.


ஸ்பாய்லர் அலெர்ட்


முதல் பாகத்தில் சிலைக்கடத்தல் கும்பலை,அதன் தலைவனை வில்லனான வினாயகனைத்தீர்த்துக்கட்டும்போது வில்லன் நாயகனிடம் சொல்கிறான்.எனக்குப்பின் ஒரு பெரிய நெட் ஒர்க்கே இருக்கிறது.


வில்லன் இறந்து 3 மாதங்கள் கல்த்து இந்தக்கதை ஆரம்பிக்கிறது.

முதல் பாக வில்லனின் நண்பனும் ,இரண்டாம் பாகத்தின் சைடு வில்லனும்,அவனுக்கு மேலே இருக்கும் மெயின் வில்லனும் , வில்லனின் அக்காவும் நாயகனைத்தேடிக்கொண்டிருக்கிறார்கள்.காரணம் வில்லன் வினாயக்கைகொலை செய்ததற்கு நாயகனைப்பழி வாங்க வேண்டும்.நாயகனிடம் இருக்கும் 6000 கோடி மதிப்பிலான 3 டிரக் கடத்தல் சிலைகளை மீட்க வேண்டும்.


நாயகன் இப்போது ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராகப்பணிபுரிகிறார்.லோக்கல் காமெடியன் ஒருவனிடம் பின் கார் டிரைவராகப்பணி புரிகிறார்.காமெடியனைபகடைக்காயாக வைத்து சைடு வில்லன் ,மெயின் வில்லன் இருவரையும் பிடிக்க வேண்டும் என்பது தான் நாயகனின் நோக்கம்.

நாயகனின் பின் புலம் தெரியாத் காமெடியன் நாயகனை அதட்டுவது ,விரட்டுவது ,மிரட்டுவது நாயகன் அதற்குப்பணிந்து போவது போல் பம்மாத்துக்காட்டுவது என முதல் பாதி காமெடியாகப்போகிறது.

அதற்குப்பின்  சைடு வில்லன் ,மெயின் வில்லன் ,வில்லனின் அக்கா எல்லோரையும் நாயகன் எப்படிக்கணக்குத்தீர்க்கிறார் என்பது மீதித்திரைக்கதை.

நாயகனாக ஒன்லி ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினி கலக்கி இருக்கிறார்.டான்ஸ் ஆடவில்லை,ஆக்சன் சீக்வன்ஸ் அதிகம் இல்லை.ஆனாலும் மாஸ் காட்டுகிறார்.

சைடு வில்லனாக சுராஜ் வெஞ்சாரமூடு காமெடி ,வில்லத்தனம் இரண்டிலும் கலக்கி இருக்கிறார்.

மெயின் வில்லனாக வரும். எஸ் ஜே சூர்யா வழக்கம் போல் ஓவர் ஆக்டிங்க். என்றாலும் ரசிக்க வைக்கிறார்.


வில்லியாக வரும் வித்யா பாலன் சரியான நடிப்பு.


காமெடியனாக வரும் நமோ நாராயணன்  முதல் பாதி கலகலப்பாகப்போக உதவி இருக்கிறார். யோகி பாபு கூடக்காமெடி செய்வது ஆச்சரியம்.வழக்கமாக மொக்கை தான் போடுவார்.

ரம்யா கிருஷ்ணன் ,மிர்ணா இருவருக்கும் அதிக வேலை இல்லை .வந்த வரை ஓக்கே 


படத்தின் இரண்டாம் ஹீரோ அனிரூத் தான்..பி ஜி எம் மில் பிரித்து மேய்ந்து விட்டார்.சேகா செக்குசேரா தீம் மியூசிக் வரும்போது. தியேட்டர் அதிர்கிறது கை தட்டலால்.


விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு அருமை.ஆக்சன் சீக்வன்ஸ் இன்சார்ஜ் சேத்தன் டிசோ.


எடிட்டிங்க் பக்கா .டைம்டியூரேசன் 165 நிமிடங்கள்..


பிளாக் காமெடியை நிரப்பி ,ஹீரோ பில்டப் சீன்களை சேர்த்து பக்காவான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் நெல்சன்.


சபாஷ் டைரக்டர்


1 பாட்ஷா வின் திரைக்கதை பாணியில் முதல் பாதியில் நாயகனை அண்டர்ப்ளே ஆக்டிங்க் செய்ய விட்ட விதம் இனி வரும் மாஸ் படங்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

2  நாடோடிகள் கட் அவுட் புகழ் நமோ நாராயணனை மெயின் காமெடியன் ஆக்கி யோகிபாபு,ரஜினி  ஆகிய மூவரையும்  வைத்து அமைக்கப்பட்ட காமெடி டிராக்கில் காமெடிக்குக்காமெடி,பில்டப்க்கு பில்டப்

3 இண்ட்டர்வெல் பிளாக் சீனில் வில்லனின் பக்கம் இருக்கும் அடியாட்கள் அனைவரும் நாயகன் பக்கம் வந்து நிற்பது மாஸ் சீன்.

4 வில்லியும் நாயகனும் முதன்முதலாக சந்திக்கும்போது நாயகனை வில்லி டீஸ் பண்ணுவதும்,அதற்கு அடுத்த சந்திப்பில் நாயகன் வில்லியை டீஸ் செய்வதும் மன்னன் பாணி மாஸ் சீன்.

5 நாயகனுக்கு 75 வயது ஆனதால் அவரை அதிகம் அலட்டிக்க விடாமல் சும்மா ஒரு இடத்தில் நிற்பது ,கொஞ்சம் நடப்பது. என்றே மாஸ் காண்பித்த இயக்குநரின் புத்திசாலித்தனம்.

6 செஸ் விளையாட்டே தெரியாத காமெடியன் வில்லனிடம் அவ்வப்போது செக் மேட் ஐடியா கொடுத்து சொதப்பும் காட்சிகள் காமெடி கலக்கல்.

7 டீக்கடையில் முதல் முதலாக நாயகன்  காட்டும் நிஜ முகம் தியேட்டரில் அப்ளாஸ். அள்ளிய தருணம்.


8 வில்லியின் அழகைக்கண்டு நாயகன் பிரமிப்பதும் ,கலாய்ப்பதும் அருமை.

9 அல்லபெல்லா பாட்டில்  பூரணி அண்ட் கோ ஆடும் டான்ஸ் ஸ்டெப்ஸ் ரசிக்க வைத்தது (இந்த டான்ஸ் படமாக்கும்போது பூரணி கர்ப்பமாக இருந்தாராம்)

10  கெஸ்ட் ரோல்களில் வரும் மோகன் லால் ,ஜாக்கிஷெராப் எடுபடவில்லை என்றாலும் ஹிருத்திக் ரோஷன் ,சிவராஜ்குமார் ,மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் நடிப்பு குட்.

11 மூன்றாம் பாகத்துக்கு லீடு கொடுத்த விதம் அருமை.அதில்  மெயின் வில்லி வித்யா பாலன்.போலீஸ் ஆபீசர் விஜய் சேதுபதி.

12. மாணிக்கத்தை நான் பார்க்கனும் என்ற கமிஷனர்  போலீஷ் கமிஷனர் ஆபீசுக்கு மாணிக் பாட்சா வரும்போது திடுக்கிட்டு எழுந்து நிற்கும் மாஸ் சீனை ரீ கிரியேட் செய்த விதம்



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 சைடு வில்லனான சுராஜ் வெஞ்சார மூடு ,வில்லியான வித்யா பாலன் ,நாயகன் ரஜினி மூவரும் தம் அடிக்கும் காட்சிகள் எதற்கு? அதெல்லாம் கெத்து என நம்பப்பட்டது 1980 களில்.இப்போது அய்யோ பாவம் கேன்சர் பேஷண்ட்ஸ் என எண்ணத்தோன்றுகிறது.

2 முதல் பாதியை விட பின் பாதி விறுவிறுப்புக்குறைவு.

3 முதல் பாகத்தை விட  கமர்ஷியல் விஷயங்கள் குறைவு.

4. கேமியோ பர்பார்மெர்கள் பெரிய அளவில் கவரவில்லை.

5 தேவையற்ற ஓவர் வன்முறை



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க். 16+


சி பி எஸ் பைனல் கமெண்ட். -  ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி மாஸ் மசாலா ஆக்சன் பிரியர்களுக்கும் இது விருந்து.ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் 46 ( விஜயின் கேரியர் பெஸ்ட் துப்பாக்கி மார்க் 44) .குமுதம் ரேங்க்கிங்க். நன்று. ரேட்டிங்க் 3/5







ரசித்த வசனங்கள்



1 அவனை யார்னு கண்டுபிடிச்சுட்டு வரச்சொன்னா அவனை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதைக்கண்டுபிடிச்சுட்டு வந்திருக்கே.

2 இன்னமும் ஒரு மாசத்துக்குள்ளே அவனைக்கண்டுபிடிக்கலைன்னா உன்னை யாராலும் அப்புறம் கண்டுபிடிக்க முடியாம போயிடும்

3 இவ்ளோ அடிச்சா எப்படித்தாங்கிக்கறது?

உங்களை தானே அடிக்கறாங்க?எனக்கு எப்படி வலிக்கும்?

4 அண்ணே ,உங்களை உள்ளூர்லயே யாருக்கும் தெரியாது,வெளியூர்ல எப்படி உங்களைக்கண்டு பயப்படுவாங்க?

5 மூர்த்தி அண்ணன் இங்கே வந்தா எங்களை மாதிரி calmமா எல்லாம் பேச மாட்டாரு,பரவாயில்லையா?


6 வண்டியை நீங்க எடுக்கறீங்களா?அவர் எடுக்கறதா?எனக்கேட்கச்சொன்னாரு மூர்த்தி அண்ணன்.


சாவி எங்க கிட்டே இருக்கும்போது அவர் எப்படி எடுப்பாரு?

7 எனக்கே தெரியாம எனக்கு உங்களைப்பிடிச்சிருச்சு.


8 செஸ்ல அவன் எடுத்தது யானையும் கிடையாது,அடிச்சது ராஜாவும் கிடையாது.ஆனா கான்பிடண்ட்டாப்பேசிட்டுப்போறானே?

9 இவ்ளோ பணத்தை சம்பாதிக்க ஐடியா குடுத்த உனக்கு எதாவது செய்யனும்.,1000  ரூபா வேணுமா?10 நூறு வேணுமா?100 பத்து வேணுமா?

10 பாரதி என்ன சொல்லி இருக்காரு?ஓடி விளையாடு பாப்பா,ஒரு கோடிக்கு ஒரு லட்சம் கமிஷன் அடி பாப்பானு சொல்லி இருக்காரில்லை?
11 ஒரு சாதா டிரைவர் எப்படி இப்படி அடிப்பான்?சம்திங்க் பிஷிங்க்.

மார்ஸ் க்கு ராக்கெட் விட்ட எலான் மஸ்க்கே ஒரு காலத்தில் டிரைவராத்தான் இருந்தார்


12 உனக்கு ஒரே ஆப்சன் தான் இருக்கு.செஸ் ல ராஜாவை எடுத்து ராஜாவை அடிச்சிடு

இவனுக்கு எது ராஜா?எது ராணி? எனத்தெரிஞ்சுக்கும் முன்பே இவன் யார்? என நாம் தெரிஞ்சுக்கனும்


13 நான் யார்?நான் யார்?எனக்கேட்டுட்டே இருந்தான்.தெரிஞ்சுக்காமயே போய் சேர்ந்துட்டான்.நான் யாருன்னு உன் கிட்டே சொல்றேன்.போய் சொல்லிடறியா?

14 இந்தாளோட ஸ்பெஷாலிடி என்னன்னா இந்தாளு ஏதாவது செஞ்சா இந்த ஆளை பாதிக்காது ,கூட இருக்கறவங்களைத்தான் பாதிக்கும்

அது உனக்கு எப்படித்தெரியும் ?

அந்தாளால பாதிக்கப்பட்டதுல நான் பர்ஸ்ட் ரேங்க்யா.


15 டப்புனு மாத்துடான்னா தப்பா மாத்திட்டானே?

16 பூனை தனியா ஒரு ரூமில் மாட்டிக்கிட்டா அது இப்படி அப்படி பண்ணி புலி மாதிரி மிமிக்ரி பண்ணும்.இவனும் அப்படித்தான் போல.

17 நீ அவனை ரீச் ஆகறதுக்குள் புல்லட் உன்னை ரீச் ஆகிடும்

18 சீரியசாப்பேசிட்டு இருக்கும்போது காமெடி எல்லாம் பண்ணக்கூடாது


19. பலசாலி யார்னு தெரிஞ்சுக்கறவன் தான் புத்திசாலி

20 நாமளா அவங்க இடத்துக்குப்போவதை விட அவங்களை நம்ம இடத்துக்கு வர வைப்பதுதான் புத்திசாலித்தனம்.
21. ஐம்பது வருசமா ரொம்பப்பேர்  என்னை முடிக்கனும்னு பார்த்தாங்க,ஆனா......