Saturday, October 03, 2026

Sweety,Naughty,Crazy (2026)- ஸ்வீட்டி ,நாட்டி ,கிரேசி -தமிழ் - சினிமா விமர்சனம் ( அடல்ட் ரொமாண்டிக் காமெடி டிராமா)@ஆஹா தமிழ் ஓடிடி

 



இது ஒரு தர லோக்கல் படம்,ஆண்களுக்கானது.13/2/2026  காதலர் தினத்துக்கு முன் தினம் திரையரங்குகளில் வெளியாகி  21/8/2026 முதல் ஆஹா தமிழ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது



ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் ,நாயகி இருவரும் காதலர்கள்.இவங்க காதல் வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.நாயகியின் தோழிகள் ஒரு முறை நாயகியைத்தூண்டி விடுகிறார்கள்.நீ அவனுடன் டேட்டிங்க் போ என உசுப்பேற்றி விடவே நாயகி நாயகனைக்கட்டாயப்படுத்தி  ஊட்டி அழைத்து செல்கிறார்.

அங்கே அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது நாயகன் குற்ற உணர்ச்சி தாங்காமல் ஒரு உண்மையை சொல்லி விடுகிறான்.

நாயகன் படிக்கும்போது ஒரு ட்யூசன் டீச்சருடன் ஒருமுறை உறவு கொண்டு விட்டான் என்ற முன் கதையை சொல்கிறான்.

இதனால் கடுப்பான நாயகி பிரேக்கப் செய்கிறாள்.

சில தினங்கள் கழித்து நாயகி சமாதானமாகி நாயகனுடன் இணைகிறார்.இந்த முறை அவுட்டோர் போனபோது நாயகியுடன் இரண்டாம் முறை இணையும் நாயகன் இந்த முறை இரண்டாவது ரகசியத்தை உடைக்கிறான்.

அதாவது முன்பொருமுறை 45 வயது ஆண்ட்டியுடன் நாயகன் எதிர்பாராதவிதமாக உறவுகொள்ள நேர்ந்த பிளாஸ்பேக் கதை.

இந்த முறையும் நாயகி கோபம் கொண்டு நாயகனை பிரேக்கப் செய்கிறாள்.மீண்டும் சமாதானமாகி இணைகிறாள்.

நாயகி திடீரென ஒரு நாள் நாயகனை ரெஜிஸ்டர் ஆபீஸ் வரச்சொல்லி அவனைத்திருமணம் செய்து கொள்கிறாள்.

திருமணம் முடிந்த கையோடு நாயகி நாயகனை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறாள்.


அது வீடு  இல்லை ,பங்களா.நாயகி பெரிய கோடீஸ்வரி.நாயகிக்கு ஒரு அக்கா உண்டு .திருமணமானவர்.அக்கா கணவர் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார்.

நாயகியின் அப்பா இந்தத்திருமணத்தை எதிர்த்தாலும் அம்மா எதிர்க்கவில்லை.ஆரத்தி எடுக்க வந்த நாயகியின் அம்மா ,அக்கா இருவரையும் பார்த்த நாயகனுக்கு அதிர்ச்சி.

நாயகன் முன்பொரு நாளில் கரெக்ட் செய்த ட்யூஷன் டீச்சர்  தான் நாயகியின் அக்கா.அந்த 45 வயது ஆண்ட்டி தான் நாயகியின் அம்மா.


இந்த ரகசியம் நாயகியின் குடும்பத்தில் இருக்கும்  ஆண்களுக்குத்தெரியாது.

இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.


நாயகனாக  லைன்மேன்(2024) படத்தில் நாயகனாக நடித்த   திரிகண் தான் நடித்திருக்கிறார்.நடிக்கவெல்லாம் இல்லை.சும்மா ஜாலியாக வந்து போகிறார்.

நாயகியாக ஸ்ரீஜிதா கோஸ் கிளானராக வந்து போகிறார்.இவருக்கும் நடிக்க வாய்ப்பில்லை.

நாயகியின் அக்காவாக ,ஸ்கூல் மிஸ் ஆக இனியா வந்து போகிறார்.

நாயகியின் அம்மாவாக  சுந்தரா ட்ராவல்ஸ் ராதா நடித்திருக்கிறார்.இவருக்குக்கொஞ்சம் நடிக்க வாய்ப்பு.பிந்து மாதவி மாதிரி இருந்தவர் பிந்துகோஷ் மாதிரி ஆகி விட்டார்.

நாயகி,நாயகியின் அக்கா,நாயகியின் அம்மா என 3 கேரக்டர்கள் போதாது,ஒத்தைப்படையாக வருகிறது என்று இயக்குநர் நினைத்தாரா?தெரியவில்லை.நாயகியின் வீட்டுப்பணிப்பெண்ணாக  ஒரு ஆண்ட்டி கதைக்கு சம்பந்தமில்லாமல் வருகிறார்.


நாயகியின் அப்பாவாக தம்பி ராமய்யாவுக்குக்காமெடி செய்யக்கொஞ்சம் வாய்ப்பு.

நாயகியின் அக்கா கணவராக சத்யன் கொஞ்சம் சிரிப்பு மூட்டுகிறார்.

நாயகனிடம் கதை கேட்கும் வார்டனாக இயக்குநர் ரவி மரியா சிரிப்புக்காட்டுகிறார்.

க்ளைமாக்சில் டாக்டராக மதன் பாப் கெஸ்ட் ரோலில் வருகிறார்.


எஸ் என் அருணகிரியின் இசையில் இரண்டு பாடல்கள் சுமார் ரகம்.சுமாரான படத்துக்கு சுமாரான  பாட்டுப்போதும் என நினைத்திருக்கலாம்.

ஸ்ரீ விஜயா ஸ்ரீயின் ஒளிப்பதிவில் படத்தில் வரும் நான்கு முக்கியப்பெண் கேரக்டர்களை கிளாமராகக்காட்ட முனைந்திருக்கிறது.

கே குமாரின் எடிட்டிங்கில் படம் 140 நிமிடங்கள் ஓடுகிறது.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஜி ராஜ சேகர்


சபாஷ். டைரக்டர்


1.  ஒரே ஒரு பங்களா,4 பெண்கள் ,3 ஆண்கள் மட்டுமே வைத்து நாடகம் போல் லோ பட்ஜெட்டில் ஒரு படம் கொடுக்க முயற்சித்திருக்கிறார்


2  சில டபுள் மீனிங்க் காமெடிகள் சி செண்ட்டர் ஆடியன்சைக்கவரும் விதத்தில்.....


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1  கார் டிரைவர் சரக்கடித்து மட்டையாகி காருக்குள்ளே வாமிட் எடுத்து அட்டூழியம் செய்தும் அவரைக்கண்டிக்காமல் நாயகியின் அம்மா சொல்லும் காரணம் நகைப்பு.வீட்டு வேலைக்காரியின் புருசன் அவன்.


2  நாயகியின் இந்நாள் கணவன் நமது முன்னாள் ஒரு நாள் காதலன் என்பது தெரிந்து இரு பெண்களும் அடிக்கும் லூட்டிகள் ஓவரோ ஓவர்

3 க்ளைமாக்சிலாவது பேருக்கு ஒரு படிப்பினை மெசேஜ் சொல்வார் என்று பார்த்தால்.....



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 18+. டபுள் மீனிங் டயலாக்ஸ்



CPS கமெண்ட் -  கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாத நம்பவே முடியாத அடல்ட் காமெடிப்படம்.ரேட்டிங்க். 1.5/5

Sweety Naughty Crazy
Theatrical release poster
Directed byRajasekar G
Written byRajasekar G
Produced byR. Arun
Starring
CinematographyC. Vijayasri
Edited byK. Kumar
Music byS. N. Arunagiri
Production
company
Arun Visualz Productions
Release date
  • 13 February 2026
Running time
140 minutes
CountryIndia
LanguageTamil