Monday, December 18, 2017

கடவுளுக்கே GST போட்ட தலைவர்

Rkநகர் இடைத்தேர்தல்:MGR, ஜெ., ஆசியோடு வேட்புமனு தாக்கல் செய்யும் விஷால் # பாவம்.அவங்க 2 பேரும் எத்தனை பேருக்குத்தான் ஆசிர்வாதம் பண்ணுவாங்க?==========
2 125 கோடி இந்தியர்களையும் கடவுளாக எண்ணி சேவை புரிந்து வருகிறேன்- மோடி

GST போட்ட தலைவர் னு சரித்திரம் பேசும்


==============


3 அரசியலில் எங்களுக்கு எதிரி திமுகதான் - அமைச்சர் ஜெயக்குமார் # அதிமுக அமைச்சர்களோட வாய்தான்"முத எதிரி


==============


4 ஆர்.கே.நகரில் திமுக வெற்றி பெறுவதை எவராலும் தடுக்க முடியாது - வைகோ# ஆமா,அப்டிதான் நினைச்சோம்.இப்போதான் நீங்க ஆதரிச்ட்டீங்களே,இனி டவுட்தான்


==============


5 எனது மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது - ஜெ.தீபா # வேணும்னே தப்பா பில்லப் பண்ணிட்டாங்க போல================
6 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் டிசம்பர் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு! # தீர்ப்பு “பம்பரம்”மாதிரி வேகமா வருது,நல்ல ராசி
================7 புல்லட் ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் போகட்டும் - மோடி # மாட்டு வண்டில போலாம்னா சாலை சரி இல்லையே, அதை முதல்ல ரெடி பண்ணுங்க
==============
8 காங்கிரஸ் தலைவரானதும் ஔரங்கசீப்பாக மாறிடுவார் ராகுல்காந்தி - மோடி#சீப் னா தேவலை,காஸ்ட்லி ன்னாதான் செலவு===========


9 இடைத்தேர்தலை முன்னிட்டு RK நகரில் 69 ரவுடிகள் கைது - காவல்துறை # ரவுடிங்களை கைது பண்ணனும்னா இடைத்தேர்தலோ பொதுத்தேர்தலோ வரனுமா?


===========

10 ஜெ.தீபாவின் வேட்புமனு நிராகரிப்பு -செய்தி # நல்லவேளை,நிராகரிச்ட்டாங்க குடும்பம் ஒத்துமையா இருக்கும் .டிசம்பர் மாசம் வேற


============

11 2ஜி வழக்கின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதை டிசம்பர் 21 ஆம் தேதி பார்க்கலாம்- கனிமொழி # மோடி தலைவர்ட்ட எதுனா சிக்னல் கொடுத்திருப்பாரோ?


==============

12 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்லில் திமுகவுக்கு ஆதரவு: பிக் பாஸ் ஜூலி # பிரமாதமான சகுனம்.நேத்து வை கோ ,இன்னைக்கு இந்த போகோ.ஜெகஜோதியா இருக்கு


============


13 நடிகர் விஜயின் 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது!
படத்துக்கு அடுத்து இந்தப்படம்தான்


============

14 எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது நியாயம் அல்ல ; இளைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா ?- விஷால் கேப்ல 40+ கேட்டகிரியை இளைஞர் ங்கறாரு


============


15 விஷால், தீபா அரசியலில் பாலபாடம் கற்க வேண்டும் - எச்.ராஜா # PHD முடிச்ச நாம சாரணர் தேர்தல்ல ஏன் கேவலமா தோத்தோம்?


=============


16 திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் - தமிழக அரசு அறிவிப்பு
சைக்கிள்களுக்கு இலவசம் # நடந்து போய்ட்டாலும் பிரச்னை இல்ல


============

17 ஆர்.கே. நகரில் மதுசூதனனை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.# ஆதரிப்பவர்கள் மானம் மரியாதையை இழப்பாங்களா?


=============

18 மது குடிப்பதற்கான குறைந்தபட்ச வயதை 23-ஆக உயர்த்த கேரள அமைச்சரவை முடிவு: # விஷத்தை 45 வயசுல குடிச்சாலும் விஷம்தானே?அமிர்தமாவா ஆகப்போகுது?


============

19 தீபா வெற்றி
பெற்று விடுவார் என்ற
அச்சத்தால் தான், அவருடைய
வேட்பு மனு நிராகரிப்பு - மாதவன்
# அப்போ திமுக மனு மட்டும் எப்டி ஏத்துக்கிட்டாக?


============

20 அராஜக ஆட்சியிலிருந்து கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும்− விஷால் # ஆண்டவர் கமல் கவனத்துக்கு


===========

0 comments: