Tuesday, December 19, 2017

பூக்கடைகள்ல உயரமான ஆளை வேலைக்கு வைக்க மாட்டாங்க.ஏன்?

சன் டிவி ல ஜெ வோட அந்தரங்கம் பத்தி தோண்டிட்டிருக்காங்க பேட்டிங்கற போர்வைல.அடுத்ததா ஜெயா டிவி ல கொஞ்ச நாள் கழிச்சு தானைத்தலைவரோட ரகசியங்கள்?=============
2 சபரிமலை ஐயப்ப பக்தர்கள் 60 % பேர் குடிகாரர்கள்தானாம்.வருசத்தில் ஒரு மாசமாவது ஒழுங்கா இருப்போம்னு மாலை போடறாங்களாம்
=============
3 ஒரு குடிகாரனை இன்னொரு குடிகாரன் குடிகாரன்னு கூப்ட்டா அதை பெருமையா நினைச்சுக்கும் குடிகாரன் குடிப்பழக்கம் இல்லாதவன் அப்டி கூப்ட்டா கோபிப்பான்
============
4 அந்த அம்ருதாவையும் பேட்டி எடுத்துப்போடுங்கப்பா.தீபா மாதிரியே நமக்கு எதுனா எண்ட்டர்டெயின்மெண்ட் கிடைக்கும்
===========
5 சம்பளம்,இன்சென்ட்டிவ்,சைடு இன்கம்னு நாம 1 லட்சம் சம்பாதிக்கவே 3 மாசம் கடுமையா உழைக்க வேண்டி இருக்கு.அரசியல்வாதிங்க அசால்டா கோடில புரள்றாங்க
============
6 குருவே!எனக்குப்பிடித்தவரின்

குற்றங்குறைகளுக்கு வக்காலத்து வாங்குவேன் ,இது தப்பா?
எக்காலத்துக்கும் தப்புதான் ,திருந்த விட மாட்டீங்க


===========


7 உனக்கு மேல இருக்கிறவங்களப் பார்த்து மனம் தளராதே .இடி விழுந்தா முதல் பாதிப்பு மேல் மாடில குடி இருப்பவர்களுக்கே


=========


8 MCR ,ராம்ராஜ் வேட்டிகள் அவர்கள் சொந்த தயாரிப்பு கிடையாது.மதுரைல வாங்கி அவங்க லேபிள் போட்டு விற்கறாங்க.பிராண்ட் வேல்யூ ஏமாற்றங்கள்===========


9 RK நகர் வாக்காளர் எணணிக்கை எவ்வளவோ அவ்வளவு குக்கர்கள் தொகுதில வந்து இறங்கும்
ரெடி ஸ்டாக் வைத்திருப்போர்க்கு லாட்டரி பிஸ்னெஸ்


================


10 ஒரு படைப்பாளனின் படைப்புக்கு கிடைக்கும் மரியாதையை விட அது இந்த பத்திரிக்கையில் வந்தது எனும் பிராண்ட் வேல்யூ கிடைத்த பின்பே அதிகம் பாராட்டு


==============

11 பிரபல எழுத்தாளர் ஜ ரா சுந்தரேசு (பாக்கியம் ராமசாமி) நேற்று இரவு 11.40 க்கு உயிர் நீத்தார்.இரங்கல்கள் ( 7/12/17)


================

12 மீனராசிஅன்பர்களே!2018−2020 சனிப்பெயர்ச்சி பலன்

+ சொந்தத்தொழிலில் லாபம்,தொட்டது துலங்கும்
− வாகன விபத்துகள் நிகழலாம்,எச்சரிக்கை

============


13 கேன்வாட்டர் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஆபத்து# நம் முன்னோர்கள் எல்லாம் கிணறு,ஆறு,ஏரி,குளம் தண்ணீரை அள்ளிக்குடிக்கல?அதையே நாமும் குடிக்கனும்


===============


14 சிபிராஜின் சத்யா (தெலுங்கு ரீமேக்) ஹிட் என தகவல்.கேரளாவில் ரிலீஸ் ஆகல.ஏ சென்ட்டரில் இவர் படம் ஹிட் ஆனது இதுவே முதல் முறை.வாழ்த்துகள்


=============

15 இந்த வார ரிலீஸ் ரிசல்ட்
3 மொக்கை − கொடிவீரன் −39
2 டப்பா − ரிச்சி −39
1 ஏ செண்ட்டர் ஹிட் - சத்யா ( நான் இன்னும் பார்க்கல)


=============


16 டாக்டர்,நாட்டு சர்க்கரை ,அஸ்கா 2 ம் ஒரே அளவு கலோரிதான்னு சிலர் சொல்றாங்களே?

ஆனா அஸ்கா ல கெமிக்கல் கலக்கறாங்க.நாட்டு சர்க்கரை இயற்கை வடிவம்


=============17 பொண்ணுங்க நடமாட்டம் இருக்கற டைமா பாத்து "ரெம்பவே சோகமா இருக்கேன்."னு ஸ்டேட்டஸ் போடுவான் நெட் தமிழன்============


18 தன் பக்கம் நியாயம் இருந்தும் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர் மீது தனிநபர் தாக்குதல் நிகழ்த்தாமல் ஒதுங்கிச்செல்பவரே வீரர்!


============


19 என்னமோ இவங்க வீட்ல மாவே இல்லாத மாதிரியும,யாரும் சமையலே,பண்ணாத மாதிரியும்தான் நெட்தமிழன் சிலாகிப்புகள்.வாவ் மேடம் இட்லி!? இதுல டபுள்மீனிங்வேற

===========


20 பூக்கடைகள்ல உயரமான ஆளை வேலைக்கு வைக்க மாட்டாங்க.ஏன்னா ஆள் உயரம்னா கை நீளமா இருக்கும்.முழம் போடும்போது கம்பெனிக்கு நட்டம்


============

0 comments: