Thursday, December 07, 2017

10 சசிகலா வுக்கு சமமான மாபியா

ஜனவரியில் அரசியல் கட்சி அறிவிக்கிறார் ரஜினி: சத்தியநாராயணராவ்.# DMK Vs ADMK போல் இனி கமல்,vs ரஜினி?


==========


2 நகைக்கடை
திறப்பு விழாவில்
கலந்து கொண்ட
ரசிகர்களால் போக்குவரத்து
நமீதாவை காண வந்த
#"ஜ்வல்ஸ் ஷாப்பில்"ஜொள்ஸ்"மழை?
நெரிசல்-செய்தி


======================


3 விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது −CM EPS # கடலை போடறவங்க ளுக்கு ஒரு நற் செய்தி


===============


4 vஆர் கே நகர் இடைத்தேர்தலில் டி டி வி தினகரன் போட்டி.# சிங்கம் களத்துல இறங்கிடுச்சு.கல்லா கட்டப்போறது யாரு?


==============


5 அன்புச்செழியனின் மேலாளர் முருகன்குமார், - மிரட்டியது உண்மைதான் என வாக்குமூலம் # குற்றம் நிரூபிக்கப்பட்டால் அன்புசெழியனுக்கு 10 வருசம்


==============


6 அன்புச்செழியனை எல்லாம் வளரவிட்டா / வெளில விட்டா 10 சசிகலா வுக்கு சமமான மாபியா ஆகிடுவார்


==============


7 சாப்பாட்டில் குறை கூறியதினால் கணவரை அடித்து கொன்ற மனைவி-செய்தி # வீட்டோட மாப்ளையா இருந்து மாமியார் சமையலை கிண்டல் பண்ணி இருப்பான்


===============


8 மோடி ஒரு பயங்கர நடிகர், தேர்தலுக்கு முன்னதாக அழுவார் பாருங்கள் -ராகுல் காந்தி # 2 பேரும் அழுதுக்குங்க,மக்களை அழ வைக்காம இருந்தா சரி=============


9 திரைப்படத்துறையில் கந்து வட்டி இல்லை; சரத்குமார் # நாட்டாமை ,தீர்ப்பை மாத்துங்க


==============


1`0 புண்ணிய ஆன்மாக்களின் துணையோடு ஆர்.கே.நகர் தேர்தலில் வரலாற்று வெற்றி காண்போம் -Ops
# ஒரு ஆன்மா ஜெ ,மத்தது எங்களுக்கு தெரியாம இன்னும் இருக்கா?


==============


11 கொடி சின்னம் உள்பட அனைத்து வாத்தியங்களையும்
அதிமுகவுக்கே தேர்தல் ஆணையம் கொடுத்துருக்கு - செல்லூர் ராஜூ # ஜால்ரா சத்தம் ஜாஸ்தியா இருக்கே?


==============


12 ஆளுநர் மாளிகையை இன்னொரு தலைமைச் செயலகமாக்கும் முயற்சி – ஸ்டாலின் # இரட்டை இலை ஆட்சி ல எல்லாமே 2. cm கூட 2


=============


13 ஊழல் மூலம் சம்பாதித்த ரூ.6,400 கோடியை அரசிடம் ஒப்படைத்தார் சவுதி இளவரசர் # திமுக ,அதிமுக இன்ன பிற உதிரிகள் இதை பாலோ பண்ணா நல்லாருக்கும்


===============


14 Rkநகரில் போட்டியிட கங்கை அமரன் மறுப்பு - புதிய வேட்பாளரை தேடும் பாஜக
# வேட்பாளர் கிடைப்பதே சிரமம்.பிரபலமா வேற இருக்கனும் − தமிழிசை mindvoice


==============


15 ஆர்.கே.நகர் தேர்தல்: 24 மணி நேரத்தில் 24 ரவுடிகள் கைது! # இடைத்தேர்தல்ல "தானா சேர்ந்த கூட்டம்"


============16 பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” நடிகர் சிம்பு பேட்டி # இப்டி நீட்டி முழக்குனதுக்கு பதிலையே சொல்லி இருக்கலாம்


============


17 இரட்டைஇலை சின்னத்தை எதிர்த்து நிற்கும் தகுதி, திமுகவுக்கு மட்டுமே உள்ளது - செல்லூர் ராஜூ. # ஆமா தாதாவுக்கும் இன்னொரு தாதாவுக்கும்தான் போட்டி


=============


18 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் முடிவு - செய்தி # வரலெட்சுமி,லட்சுமிமேணன் 2 பேருக்கும் அங்கே ஓட்டு கிடையாது,தில்லுதான்


============19 அதிக பெட்ரோல் விற்பனை நிலையங்கள் : இந்தியாவிற்கு 3 வது இடம் -நம்மாளுதான் பொடக்காலிப்பக்கம் இருக்கும் பொட்டிக்கடைக்கு புல்லட்ல போவான்


=============


20 முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினர்களின் வீடுகள் அமலாக்கத்துறை சோதனை! # மகன் அப்பா னு பேமிலி பிரண்ட் ஆகிட்டாங்க போல


================

0 comments: