Monday, December 04, 2017

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

ப்ளூ வேல் போன்ற ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்ய இயலாது:மத்திய அரசு
# டிஜிட்டல் இந்தியா வாழ்க


============


2 மோடி துக்ளக் போல் செயல்படுகிறார். −மம்தா பானர்ஜி # பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் னு வாக்காளருக்கு வாழ்த்து சொல்றாரா?


============

3 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு-திருநாவுக்கரசர் # மைனசும் மைனசும் சேர்ந்தா அரசியல்ல பெரிய மைனஸ் ,கணக்கில் −×−=+


============


4 70 புதிய மணல் குவாரிகள் அமைத்தால் தமிழகம் பாலைவனமாகும் - அன்புமணி # இப்போ மட்டும் சோலைவனமாவா இருக்கு?


============


5 விவசாயிகள் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் FB வாட்ஸ் அப் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரிகள் அவங்களைப்பத்தின மீம்ஸ்தான் ஓடிட்டு இருக்கு


===========


6 சசிகுமார் ஒத்துழைப்பு கொடுக்காததால் அன்புசெழியனை பிடிப்பதில் தாமதம் # ஆள் வெச்சு மிரட்டப்பட்டாரா?விலை பேசிட்டாங்களா?தெரில


============


7 ‘‘லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு’’ பா.ஜனதா பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை # Gst கழிச்சது போக 72 லட்சமாம்


============


8 சின்னம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற காலம் இதுவல்ல-தினகரன் காசை விட்டெறிஞ்சா கழுதை"சின்னத்துக்குக்கூட ஓட்டு கிடைக்கும்கறார்


============


9 இழந்த சின்னத்தை 2வது முறையாக பெற்றது அதிமுக மட்டுமே.. அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மிக்க சின்னத்தை 2 முறை இழந்ததுல என்ன பெருமை?


===========


10 வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்- டிடிவி தினகரன்
# அப்போ தேர்தல்ல தொகுதி மக்களுக்கு full கன்பர்ம்?


============


11 வாழைப்பழத்தில் நின்ற வேட்பாளர் கூட ஜெயித்திருக்கிறார் - தினகரன் # வழுக்கி விட்ரப்போகுது,ஜாக்கிரதை===========


12 எதிர்காலத்தில் தேர்தலில் சின்னம் என்கிற விஷயமே இருக்காது : சீமான் # எதிர்காலத்துல நம்ம கட்சி அப்டியே இருக்குமா?தெரில


=============13 RK நகர் தேர்தலில் மீண்டும் ஒரு பிரபலத்தை நிறுத்துவோம்-தமிழிசை # பிராப்ளம்தான்


===========


14 மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை கொடூரமாக தாக்கிய இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து நீக்கம்! # சபாஷ்.அப்டியே ஒரு 2 வருசம் தீட்டி உள்ளே தள்ளுங்க


============


15 “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து அரசியல் சூழலுக்கேற்ப முடிவு செய்யப்படும்” -தமிழிசை # ரைட்டு ,டெல்லி ல இருந்து ஏதோ சிக்னல் கிடைச்சிருக்கு


============


16 அன்புச் செழியன் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க உஷார்படுத்தப்பட்ட விமான நிலையங்கள்..! ஏர்போர்ட்ல என்ன வேல?சரணடையலாமில்ல?


============


17 நகர் இடைத் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு”- திருமா # யோசிச்சு நல்ல முடிவு எடுக்கறதா நேத்து சொன்னாரு,இதான் அந்த நல்ல முடிவா?ரைட்டு


=============


18 தமிழகத்தில் பாஜக ஆட்சி
அமைந்த பின்பு தான் என்
உயிர்போகும்-தமிழிசை
வரம் வேணும் கறதைத்தான் விக்ஸ் னு சுத்தி சுத்தி எழுதி இருக்காங்க


==============


19 இரட்டை இலையில் யார் போட்டி யிட்டாலும் வெற்றி பெறுவார்கள் - மதுசூதனன் # அது MGR செல்வாக்கு,மத்தவங்க எல்லாம் செல்லாக்காசு


=============


20 தினகரனுக்கு தொப்பி சின்னம் தரகூடாது - தமிழிசை
# யார் யார்க்கு என்ன சின்னம் தரலாம்?னு முடிவெடுக்கனும்னு ஆசை இருந்தா தேர்தல் கமிஷனில் சேர்க


=============

0 comments: