Saturday, December 02, 2017

ட்விட்டர் முன்னேற்றக்கழம்

கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் மத பிரச்னையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்: ஹெச்.ராஜா உங்க முதுகை கண்ணாடியில் பார்க்கவும்


============


2 ஜெயலலிதா கைரேகையில் குளறுபடிகள்: மருத்துவர் சரவணன் குற்றச்சாட்டு | ன்னாலே ஆரம்பத்துல இருந்தே குளறுபடிதான்


=============


3 ஒரு திருடரையும் தப்ப விடாமல் ரெய்டு செய்து பிடிக்க வேண்டும் - பழ.கருப்பையா ,எதிர்க்கட்சிதானே என்ற அலட்சியம் இல்லாமல் ரெய்டு செய்க==============


4 விஜயகாந்துக்கு ஏழரை சனி முடிந்தது... இனி வெற்றிகாந்த் தான் -செய்தி
# வை கோ வெளில போய் பல மாசம் ஆச்சே?


=============


5 தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாகி விடும்! அன்புமணி
# மணல் கொள்ளைக்காரர்களுக்கு இன்னும் கொண்டாட்டம்


==============


6 வருமான வரித்துறையின் அடுத்த இலக்கு, மன்னார்குடி -செய்தி
த வே பரமக்குடிக்கும் ஒரு காட்டு காட்டுவாங்கனு எதிர்பார்க்கலாம்


===============


7 திமுகவினர் பொய் பொய்யாக பேசுகிறார்கள் ... ஓபிஎஸ்.
# அவங்க டிப்போ ன்னா நாம குடோன்.


================


8 ‘கீழே விழுந்தால்தான் கையை ஊன்றவேண்டும், நாங்கள் நின்றுகொண்டிருக்கிறோம்’− தமிழிசை# வென்று விட்டால்தான் சாதனை,சும்மா நின்று கொண்டிருந்தா?


=============


9 அரசியலுக்கு வருவதற்கான அவசரம் இப்போது இல்லை: ரஜினி
வர்றதுக்குள்ளே கமல் களம் கண்டுடுவார் போல.லேட்டஸ்ட்டா வந்தாலும் லேட்டா வந்தா வேஸ்ட்


==============


10 வெற்று அறிக்கைகளை வெளியிடாமல் எதிர்க்கட்சியினர் மக்களுக்காக உழைக்க தொடங்க வேண்டும் -EPS # ஆளுங்கட்சி பிழைக்கனும்னா எதிர்க்கட்சி உழைக்கனும்?


=============


11 இரட்டைஇலைச்சின்னம் எங்களுக்கே கிடைக்கும்.தினகரன் கிடைச்சுட்டா பிரேக்கிங் நியூஸ்க்கு பஞ்சம் இருக்காது.கிடைக்கலைனா கட்சி பிரேக் ஆகிடும்


===============


12 நடிகை நமீதா நிச்சயதார்த்தம்! திருப்பதியில் கோலாகலம்!!!
மக்களை,நடிகை"ன்னா தொழில் அதிபரை மொட்டை போடறது சகஜம்தானே?


===============


13 மத்தியஅரசிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என யாரும் தமிழகஅரசுக்கு பாடம் நடத்த வேண்டாம்−OPS # காரியம் ஆகனும்னா யார் கால்ல வேணா விழுவோம்.

================


14 செய்த பாவம் தான் புற்றுநோய்க்கு காரணம்... அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் ஆஸ்பத்திரியே வேணாம்.பரிகார பூஜை ஸ்தலம் போதும்?


=============


15 அன்புச்செழியனுடன் அமைச்சர்களுக்கு தொடர்பு இல்லை – விஷாலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் ,அன்புச்செழியன் என்ன நடிகையா?


============


16 கமல் இனி டுவிட்டர் முன்னேற்றக்கழம் என்று பெயர் வைத்துக்கொள்ளலாம்! ஹெச்.ராஜா # அப்போ அவர் முன்னேற்றப்பாதைலதான் பயணிக்கறார்னு ஒத்துக்கறீங்க?


============

17 தமிழக அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை
- நத்தம் விஸ்வநாதன் # அதை அடக்கம் பண்ணி 11 மாசம் ஆகுது,ஜெ வ அடக்கம் பண்ணதும்ஆளாளுக்கு கருத்து சொல்றாக


==============


18 இரட்டை இலை சின்னத்தை
ஈபிஎஸ் ஒபிஎஸ் அணிக்கு
ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
-செய்தி
பாருங்க,நைசா ஓபிஎஸ் சை கழட்டிவிட்டுடுவாரு EPS


==============


19 கமல் பொதுவாழ்க்கைக்கு வந்தால் கவுரவமானவர்கள் தமிழகத்தில் வாழ முடியாது.
-Hராஜா # பாண்டவர்கள் வாழந்தா போதாதா?கவுரவர்கள் எதுக்கு?


==============


20 ADMKஜெ.தீபா அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.அவர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது−தேர்தல் ஆணையம் # இனி தீபா நிம்மதியா தூங்கற வேலை பார்க்கலாம்


==============

0 comments: