Saturday, December 02, 2017

மாண்புமிகு மாணவன்"னா எல்லாருக்கும் இளக்காரம்

சசிகலாவிடம் இருந்து 5 கோடி மதிப்புள்ள நகைகள் 1,430 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்- வருமான வரித்துறை # பிடிச்சது கடுகளவு , அடிச்சது கடல் அளவு- சசி மைண்ட் வாய்ஸ்==============
2 உள்ளாட்சி தேர்தலில் தனியாகதான் நிற்போம் - சரத்குமார் # ஏன்? ராதிகா கூட சேர்ந்துதான் நில்லுங்க, ராடன் டிவி ல 15 ஓட்டாவது கிடைக்கும்
===============3 நம்பி வந்தோம் நடுத்தெருவில் நிற்கிறோம்!”.. கொதிக்கும் மைத்ரேயன் எம்.பி!# விட்டா நடுத்தெருவையும் பட்டா போட்டுக்குவீங்க, அதானே அரசியல்வாதிங்க?
===============
4 நம்பி வந்தோம் நடுத்தெருவில் நிற்கிறோம்!”.. கொதிக்கும் மைத்ரேயன் எம்.பி!# விட்டா நடுத்தெருவையும் பட்டா போட்டுக்குவீங்க, அதானே அரசியல்வாதிங்க?
==============
5 சிங்கத்தை விட மாடுகளை கண்டுதான் மக்கள் அதிகம் பயப்படுகின்றனர் -லாலு பிரசாத் யாதவ் # அது உங்க ஊர்ல, எங்க ஊர்ல சிம்மம்னா கிடு கிடுனு நடுங்கிக்கிடந்தாங்க
===============
6 ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டது நாங்கள்தான்: கடலோரப்படை கமாண்டர் ராமாராவ் # இனி நிர்மலா சீதாராமன் முகத்தை எங்கே கொண்டு போய் வெச்சுக்குவார்னு நினைக்கும்போதுதான் கஷ்டமா இருக்கு==============
7 திமுக நிகழ்ச்சிக்கு யாரும் பேனர் வைக்க கூடாது-நெல்லை திமுக முப்பெரும் விழாவில் செயல் தலைவர் ஸ்டாலின் பேச்சு # பேனர் வேண்டாம் எனறு சொன்ன தானைத்தளபதி வாழ்க-னு யாராவது பேனர் வெச்சுடப்போறாங்க
============
8 முட்டை விலை கூடியதால் 69 லட்சம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு முட்டைகளை அனுப்பாமல் நிறுத்திய அரசு # விலை ஏத்துனதே அதுக்குத்தானோ?
============
9 மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்படும்-தமிழிசை # அதுக்கு முன் இது கோஷ்டி மோதல்னு அடிச்சு விட்ட ஹெச்.ராஜா,நிர்மலா2 பேரும் மன்னிப்பு கேட்கனும்

==========================
10 நெருக்கடியில் இருந்து நாட்டை காக்க பாஜகவை அனைவரும் ஆதரிக்கனும்

-அன்புமணி
ஒரு நெருக்கடின்னா நாட்டுக்கே நெருக்கடினு நினைச்சுக்கறாரு


===============

11 திரைத்துறையினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிப்போம்: தமிழிசை# பாதிப்ரச்சனைகள் உங்க கட்சிக்காரங்களாலதான் வருது


=================

12 என்னை 5 பேர் காதலித்து ஏமாற்றினர் நடிகை ராய்லட்சுமி பகீர் தகவல்-நயன் தாராவுக்கு அபிஷியலா டப் பைட் தர முடியல்.பர்சனலா சரிக்கு சரி போட்டி


===============


13 திமுக,அதிமுக,பாஜக கட்சிகளுடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை
-டாக்டர் ராமதாஸ்
விருமபினா "அன்பு மணி ஆகிய நான்"னு மேடை ஏற முடியாது


===============


14 ஊழலில் திளைக்கும் துறையாக பத்திரப்பதிவுத் துறை உள்ளது
-சென்னை உயர்நீதிமன்றம்
கமல் ரசிகர் போல.பாய்ண்ட் எடுத்துக்கொடுக்கறாரு


===============


15 இரட்டை இலை சின்னத்துடன் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம் - தம்பிதுரை # நீங்கதான் தைரியமான ஆளேச்சே,சின்னத்தை பத்தி ஏன் கவலை?


================


16 புதிதாக 70 மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு −அதிர்ச்சி அளிக்கிறது :ஸ்டாலின்.#,நம்ம ஆசைல யாராவது மண் அள்ளிப்போடறது நமக்கு 1ம் புதுசில்லையே?


==============


17 ஓபிஎஸ் கலந்துகொண்ட விழாவுக்கான செலவை ஈடுகட்ட மாணவர்களிடம் தலா 150 ரூபாய் வசூலித்த பள்ளி-செய்தி
"மாண்புமிகு மாணவன்"னா எல்லாருக்கும் இளக்காரம்


======================

18 புதிய மணல் குவாரிகளை திறந்தால் தமிழகம் பாலைவனமாகும் சூழல்வரும்் :ஸ்டாலின். ஆகிட்டா ஏகப்பட்ட மணல் கிடைக்கும்.மேலும் பல குவாரிகள்


===============


19 உ.பி அரசு 500 கைதிகளுக்கு பரோல் கொடுத்தும், வீட்டிற்கு செல்ல மறுக்கின்றனர்
சொந்த சம்சாரம் தொல்லை,அதுக்கு மாமியார் வீடே பெட்டர்


==============


20 தேர்தல்ஆணையத்தில் கொடுக்கப்பட்ட J கையெழுத்தில் உயிரோடு இருப்பவர்களின் கைரேகையில் உள்ள ரிட்ஜட்ஸ் இல்லை
உயிர்ப்பு இல்லாமதான் இரு்க்கு


================

0 comments: