Monday, December 04, 2017

சொந்த ஊரில் நொந்த அனுபவம்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்.. தீபா திட்டவட்டம்! # தூக்கத்துல அறிக்கை விடற வியாதி இருக்கும் போல==========
2 நாட்டில் காங்கிரஸ் கட்சியை இனியும் கொள்ளையடிக்க விட மாட்டோம்" -மோடி

ஷிப்ட் மாத்தி"விட்டாச்சில்ல?


================3 தினகரன் கூடாரம் காலி. அணியில் இருந்த 3 எம்.பி.க்கள் CM EPS வீட்டுக்குச் சென்று ஆதரவு தெரிவித்தனர் # அபாயகரமான பச்சோந்திகள் இவங்க எல்லாம்


===========


4 RK நகர் இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடாது – அன்புமணி # சரியான முடிவு.இடைத்தேர்தல்னா ஆளுங்கட்சியின் அராஜகம்தான்.நேர விரயம் ,பண விரயம்


===========5 "அண்ணா" தி.மு.க இனி "மோடி" தி.மு.க என அழைக்கப்படும் - முத்தரசன் # என்னது?மோடி திமுக வா? அதான் கலைஞரைப்போய் பார்த்தாரா?


============


6 நான் ஜெ வின் மகள் என்பது துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு தெரியும்-அம்ருத்தா
# எல்லா வண்டவாளமும் தெரிஞ்சவர்னா அவர் எவ்ளோ பெரிய இவரா இருப்பாரு?


==========


7 திருமாவளவனை பார்த்தால் ஏசு
மாதிரி தெரிகிறார் - 'அறம்' கோபி # அப்போ கிறிஸ்டியன் ஓட்டு பூரா நமக்குதான் −கலைஞர் மைன்ட் வாய்ஸ்=============
ஜெ வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் EPS - OPS # அதுக்குதான் 4 வருசம் தீட்னாங்க.அதே வழியில்னா இவருக்கும் உண்டு?


============


9 பாஜகவிற்கு ரஜினி உள்பட நல்லவர்கள் யார் வந்தாலும் வரவேற்போம் - எச்.ராஜா
பாஜக வுக்கு யார் எல்லாம் வர்றாங்களோ அவங்க நல்லவங்க?============


10 இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அங்குதான் நானும் இருப்பேன்: எம்.பி. கோகுலகிருஷ்ணன்#அப்போ"கடந்த 6 மாசமா தேர்தல் கமிஷன்"ஆபீஸ்லயா ஹால்ட்?=============


11 அவுட் சோர்ஸ் முறையில்

பணிகள் நியமனம் செய்வதை
அரசு கைவிடவேண்டும்
# மோடி கிட்டே சொல்றாரு போல
-ஸ்டாலின்===========


12 அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் RKநகர் தொகுதியில் மக்கள் உள்ளனர் - மருதுகணேஷ் (RKநகர் DMKவேட்பாளர்) ,அது போன மாசம்.இப்ப பாருங்க.லாட்டரி


===========


13 நான் ஏழை என்பதால், என்னை காங்கிரசார் அவமதிக்கிறார்கள்-மோடி
தேவல.எங்களுக்கு வரி விதிக்கறீங்களே?============


14 காங்கிரஸ் கட்சியினர்

இனி வரவேற்பு பேனர்கள்
வைக்கக்கூடாது
# அதான் கோர்ட்டே சொல்லிடுச்சே.வைக்க நினைச்சாலும் முடியாதே?
-திருநாவுக்கரசர்=============


15 மாற்றி மாற்றி பேசுவதில் டிடிவி தினகரன் வல்லவர்: ஜெயக்குமார்
,ஜெ,சசிகலா னு மாற்றி மாற்றி கால்ல விழுந்தவங்க"இப்டி சொல்றதுதான் காமெடி


=============


16 தேநீர் விற்றேன் சிலரைபோல் தேசத்தை விற்கமாட்டேன் - மோடி#நீங்க 2 பேரும் எதை வித்தாலும் வரி இல்ல,நாங்க எதை வித்தாலும் GST.இது எந்த ஊர் நியாயம்?


============


17 GSTயால் உயர்ந்த கூரியர் சேவை விலை : மீண்டும் தபால் நிலையங்களை நாடும் மக்கள் # சபாஷ்,இதே போல் வங்கிக்கணக்குக்கு குட்பை,அஞ்சலககணக்குக்கு"ஹாய்=============


18 உ.பி.யில் கொடுமை. அலங்கார செடிகளை தின்ற 8 கழுதைகளுக்கு 4 நாள் ஜெயில் தண்டனை# முறைப்படி வாட்ச்மேன்,செக்யூரிட்டி க்கு வார்னிங் தந்தா போதும்


=============


19 ஆர்.கே.நகர் எந்தக் கட்சிக்கும் ஆதரவும் கிடையாது - அன்புமணி # நாம யாருக்காவது ஆதரவு தந்தா தானே நமக்கு யாராவது பிற்காலத்துல ஆதரவு தருவாங்க?


==============20 குஜராத் மைந்தனை குஜராத்திலேயே அவமானப்படுத்துகிறார்கள் - மோடி
//சொந்த ஊரில் நொந்த அனுபவம் எல்லாருக்கும் உண்டு


=================

0 comments: