Tuesday, December 05, 2017

இப்போ பேர் கெட்டா பரவால்லயா?

என்னுடைய அரசியல் கட்சியின் பெயரையும், கொள்கையையும் விரைவில் வெளியிடுவேன் -் கமல் # டிசம்பர் 11 க்குள்ள வெளியிடவும்
12 க்குப்பின் ரஜினி.


================

2 அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம்; உதயக்குமார் # பொதுவா திருடங்க திருடும்போது ஒத்துமைதான்.பங்கு பிரிக்கும்போதுதான் சண்ட வரும்


=============


3 பகவானை பட்டினி போடுவதாலேயே இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. எச் ராஜா! # ஏழை தான் கடவுள்,அப்டி நினச்சா நீங்க சொல்றது சரி


====================4 இந்துக்கள் 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.. மடாதிபதியின் பேச்சால் சர்ச்சை # முத பேபிக்கு ஆதார் கார்டு வாங்கறதுக்குள்ள வயசாகிடும் போல


================


5 அரசியலில் எந்த கட்சியும் தீண்டத்தகாதது இல்லை... மக்கள் நலன் கருதி கூட்டணி: கமல் # நீங்களும் சராசரி அரசியல்வாதி போல் பேசினா எப்டீ?


===========


6 OPs.Eps் இருவர் உடம்பிலும் ஓடுவது எம்ஜிஆர் ரத்தம் - கோவை செல்வராஜ் # பாராட்றதா நினைச்சு பிரச்னை பண்ணிட்டு இருக்காரு.தமிழ் நுணுக்கமான மொழி


===============


7 கனடாவில் காதலுக்காக கண்களில் பச்சைக் குத்திய பெண்..காதலும் போச் கண்ணும் போச்# கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் நல்லநேரம் போனபின் பூஜைபுனஷ்காரம்


==============

8 விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து விலகி 60 இளைஞர்கள் எச்.ராஜா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.. Bjp காரனே நம்பமாட்டாப்டி


==============


9 துப்பாக்கியை பார்த்தே பயப்படாத நாங்கள், தொப்பிய பாத்தா பயப்பட போறோம் - தமிழிசை#தில் இருந்தா குருவி ,சுறா பாருங்க.Ff பண்ணாம புல்லா பாக்கனும்


===============


10 தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலையும் விரைந்து நடத்த வேண்டும் - இல. கணேசன்
# சின்னம் கிடைச்சிடுச்சுல்ல ,இனி பாருங்க வேகத்தை


=============


11 மீண்டுவந்த இரட்டை இலை மீண்டும் பிரிந்துவிடுமோ என்று தோன்றுகிறது−தமிழிசை # ரைமிங் நல்லாருக்கு ,டைமிங்கும் ஒத்துப்போகுதே?அப்டி நடந்தா நல்லதுதா


==============


12 VN ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கியது போல், தினகரன் ஒதுங்க வேண்டும்!” : அமைச்சர் வேலுமணி # ஒதுக்க வேண்டியவங்க யார்னு ஜனங்க முடிவு பண்ணுவாங்க


==============


13 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை!@ம பி # குற்றவாளி 5000 அபராதம் கட்டி வெளில வராம இருந்தா சரி


==============


14 இடைத்தேர்தலுக்குப் பிறகும் திமுகவுடன் கூட்டணி தொடரும்− திருமா # அண்ணன் புத்திசாலி,அடுத்த பந்திக்கு இப்பவே துண்டு போட்டு இடம் பிடிக்கறாரு


===========


15 ஜெ வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் CM EPS.-OPS # அப்டி சொன்னாதான் துணை முதல்வர் பதவி தப்பிக்கும்னு சொன்னாங்களா?


=============


16 நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோ உண்மைதான். 7 ஆண்டுகள் ஆய்வு செய்து டெல்லி தடயவியல் துறை அறிக்கை ஏழரையை கண்டுபிடிக்க 7 வருசம்?தண்டசம்பளம்


=============


17 ஜெவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், ஜெ வின் மகள் நான் எனும் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை
- அம்ருதா மனு # இப்போ பேர் கெட்டா பரவால்லயா?


==============


18 அழைப்பு விடுக்கப்பட்டது உண்மை...துணை முதல்வரால் பங்கேற்க இயலவில்லை: ஆர்.பி.உதயகுமார் குறுக்கே வந்துட்டதால சகுனம்"சரி இல்ல?


============

19 ஜெ வின் மகள் நான்தான் என கூறி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா மனு # தீபா தூங்கிட்டு இருந்ததுபோல் இவர் கோமால இருந்தாரா?


=============


20 எஸ்.ஏ.சந்திரசேகர் குடும்பத்தை ஏழுமலையான் பார்த்துக் கொள்வார்: ஹெச்.ராஜா # இவரு பெரிய முனிவரு,சாபம் விடறாரு.ஏசு மன்னிப்பாராக


===========
0 comments: