Tuesday, September 05, 2017

திருக்குறளை விட உயர்ந்ததா பகவத் கீதை, ?

எத்தனை கமல் ,ஸ்டாலின்கள் வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது− ஜெயக்குமார் # மொத்தத்தில் கல்லு மாதிரி யாருக்கும் பயன் இல்லாம இருக்கும்?

================

2 திமுக ஒரு புதைக்குழி அதற்கு இனி வாழ்க்கை கிடையாது: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் என்னவோ அடுத்த தேர்தல்ல டெபாசிட் வாங்கிடற மாதிரி


================


3 முதல்வராக வந்தால்தான் வாய் திறப்பேன் என்று சொல்லும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம்.. சீமான் அட்டாக் நீங்க சொல்ல வேண்டாம்


==============


4 திவாகரனும், தினகரனும் ஒன்று சேர்ந்தால் கழகம் காக்கப்படும்-் புகழேந்தி # திவா + தின ் = திவால்தினம்

===============


5 கமல், ரஜினி கவுன்சிலராகக்கூட ஜெயிக்க முடியாது! -தனியரசு # தனிநபர் செல்வாக்கு உங்களை விட 100 மடங்கு அதிகம்.ஒத்துக்கறீங்களா?


==================


6 6 ஆயிரம் கைதிகள் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.சைலேந்திரபாபு # ஷாப்பிங் போக வசதி செஞ்சு தராம இருந்தா சரி


=================


7 மோடியிடம் ‘நீட்’ பிரச்சினை குறித்து முதல்-அமைச்சர் பேசாதது ஏன்? மு.க.ஸ்டாலின் # பேசி பிரயோஜனம் இல்ல,கம்பி "நீட்"டிடுவாருனுதான்


=================


8 திருக்குறளை விட உயர்ந்ததா ்கீதை?; கலாம் மண்டபத்தில் பகவத்கீதை நூலை வைத்தது ஏன்?:வைகோ இருக்கறவங்க விவாதிக்க ஒரு டாபிக் சிக்கிடுச்சு


=================


9 அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிப்பதில் தவறில்லை : உச்சநீதிமன்றம்#காயத்ரிகளும் ,சசிகலாக்களும் என்ன செஞ்சாலும் சரிதான் போல


================


10 நீட் தேர்வு குறித்து பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை- சி.வி.சண்முகம்
# ஸ்டாலினைப்பத்தி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கு?னு அவர் கேட்டா?


=================

11 எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை மத்திய அரசே முடிவு செய்யும்: தமிழக அரசு -தமிழ்நாட்டில் எதா இருந்தாலும் மஅ முடிவு செய்யும்,தஅ அதை வழிமொழியும்.அதானே?

=====================

12 ரூ.79 கோடி கட்டிட ஒப்பந்தம் வழங்க ரூ.12 கோடி கையூட்டு கேட்ட அமைச்சர் அன்பழகன்: # பில்டிங் கட்டி தந்தவருக்குக்கூட அவ்ளோ மார்ஜின் கிடைக்காது


===============

13 சென்னை மெரினாவில் போலீஸ் கடும் சோதனை, இளைஞர்களின் செல்போனை தீவிரமாக சோதிக்கிறது போலீஸ் # பிட் பாத்துட்டா வம்பு,மெமரி கார்டை கழட்டிடுங்க


=================


14 திருக்குறளை விட உயர்ந்ததா பகவத் கீதை, ?− வைகோ # அது தெரியல.ஆனா பகவதி யை விட உயர்ந்தது புதிய கீதை


==================

15 பாஜக தவிர்க்க முடியாத சக்தி. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சக்தியை நிரூபிக்கும்:தமிழிசை
க்கு போட்ட சிவப்புக்கம்பள வரவேற்பு வேணுமா?

================


16 கமல் கட்சி தொடங்கினால் அதன் கொள்கை அடிப்படையில் வரவேற்பது குறித்து முடிவு செய்யப்படும்: திருமா # கொள்கைகள் புரியவே கொள்ளை வருசங்கள் ஆகுமே?


=================


17 குஜராத்மாநில
காங்கிரஸ்MLAக்கள்
பெங்களூரிலுள்ள
வைக்கப்பட்டுள்ளார்கள்
ரிசார்ட்ஸில்
# சபாஷ்.குஜராத்க்கே தமிழகம் முன்னோடி

================

18 தமிழகத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன், வேதனைப் படுகிறேன்: திருமாவளவன்.
# ஒரு ஜாதிக்கட்சி தலைவர் உருவானதுக்கு நாங்கதான் வேதனைப்படனும்


==================


19 உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனது சக்தியை நிரூபிக்கும் - தமிழிசை
# தனியா நின்னு நிரூபிக்குமா?இரட்டை இலை நிழலில் நின்னா?

=================20 யார் யாரோ அரசியலுக்கு வருவதாக கூறுகிறார்கள்;அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?:தம்பிதுரை
இல்லாத மக்கள் செல்வாக்கு ,ரசிகர் பலம்


================

0 comments: