Tuesday, September 12, 2017

நில் நில் பதில் சொல் சொல் விடமாட்டேனே

பத்திரிகைக்காக நிர்வாண போஸ் கொடுத்தாரா தீபிகா?: தீயாக பரவிய போட்டோ இதழ் மேக்சிமம் காபி வித்திருக்குமே?


===============

2 நாட்டில் உள்ள சிறைகளிலேயே வசதியானது பரப்பன அக்ரஹார சிறைதான்.. எஸ்வி.சேகர் # ஷாப்பிங் போலாம் ,டூர் போலாம் இன்னும் என்ன வேணும்?

===============

3 அதிமுக மாநில மகளிரணி இணை செயலாளராக தன்னை நியமித்ததற்கு பண்ருட்டி MLAசத்தியா எதிர்ப்பு # சபாஷ்.சம்பந்தப்பட்டவருக்கே"தகவல் சொல்லலயா?


================

4 காவிரி விவகாரத்தில் தனக்கு உள்ள பொறுப்பை மத்திய அரசு தட்டி கழிக்க முடியாது-உச்சநீதிமன்றம்
சொல்புத்தியும் இல்ல ,சுயபுத்தியும் இல்ல

=====================================================


5 'அரசனை நம்பி புருஷனை கைவிட்டுவிடாதீர்கள்..!''- அணிகளுக்கு கெடு விதிக்கும் டி.டி.வி.தினகரன் # உதாரணமே தப்பு.புருசனை யார் மதிக்கறாங்க இப்போ?


================

6 EPS க்கு சசிகலா தான் Cm பதவியை வழங்கினார் - முன்னாள் அமைச்சர் பழனியப்பன்...
மோடி"க்கு ஏன் பயப்படறாரு?

=================

7 தாக்குதல் நடத்துவதுதான் பிரதமர், ஆர்எஸ்எஸ், பாஜகவின் அரசியல் பாதை: ராகுல்காந்தி # நம்ம பாதை ஊழல் மட்டும்?


==================

8 மக்கள் இணையதளம் மூலம் வீட்டில் இருந்தபடியே போலீசில் புகார் அளிக்கும் திட்டம்் # நேர்ல குடுத்தாலே கண்டுக்க மாட்டாங்க.கிடப்புல போட்டுடுவாக


==================

9 பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் மீண்டும் செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருகிறது: நடிகை ஓவியா நீங்க உள்ளே போனாத்தான் TRP எங்கேயோ போகும்


==================

10 அதிமுகவில் இருந்து சிறு துரும்பு கூட வெளியே செல்ல நாங்கள் விரும்பவில்லை-செல்லூர் ராஜூ# கட்சிப்பணம் பூரா நமக்கு மட்டும்?

=================

11 தினகரனின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் எதிர்ப்பு # குழம்புன குட்டைலதான் மீன் பிடிக்க முடியும்?

==================

12 கட்சியை வழிநடத்தக் கூடிய தலைமையாக தினகரன் விளங்குவார்: காங். எம்.எல்.ஏ விஜயதாரணி
# காங் கட்சியையா?


===================

13 சீன பொருட்களை புறக்கணிக்க பாபா ராம்தேவ் வேண்டுகோள் # சைக்கிள் கேப் ல பதஞ்சலிக்கு மார்க்கெட்டிங்?

==================

14 எங்களைப் பொறுத்தவரையில் தினகரன் அதிமுகவிலேயே இல்லை: கே.பி.முனுசாமி # எங்களைப்பொறுத்தவரை பழைய அதிமுக வே இல்லை


===================

15 பெண் எம்ஜிஆராக வாழ்ந்து காட்டியவர் ஜெ"−CM Eps # தேர்தல் வரப்போகுது போல


=================

16 அமைச்சர் உதயகுமார் மாறி மாறி பேசுவதில் கைதேர்ந்தவர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தாக்கு # கேப்மாரி,மொள்ளமாரி மாதிரி?

==================

17 இந்திராகாந்தியை கல்லாலும் சொல்லாலும் தாக்கியது நினைவிருக்கிறதா? - ஸ்டாலினுக்கு தமிழிசை ?
நில் பதில் சொல் சொல் விடமாட்டேனே மொமெண்ட்

===================

18 திமுக நடத்தும் அனைத்து போராட்டங்களும் கேலிக்குரியது- கே.பி.முனுசாமி# நாம பண்ணினதெல்லாம் கேளிக்கைக்குரியதா?

==================

19 ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்படுவதற்கு திமுவும், -வுமே காரணம் - அன்புமணி.
தமிழ்நாடு நாசமாப்போக காரணம்

===================

20 சசிகலாவையும், தினகரனையும் சார்ந்து அதிமுக அம்மா அணி இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்.# சாருண்ணியும்"இல்ல ஒட்டுண்ணியும் இல்லன்னா எப்டி?


=================


0 comments: