Sunday, September 03, 2017

புரியாத புதிர் - சினிமா விமர்சனம்

Image result for puriyatha puthir posterஹீரோ இசைப்பொருட்கள் விற்பனையகத்தில் நண்பருக்கு உதவியாக இருக்கார், ஹீரோயின் இசைக்கருவி வாங்க கடைக்கு வர்றார்.2 பேருக்கும் லவ் ஸ்டார்ட் ஆகுது ( மெல்லிசை தான் ஆதி டைட்டில், அதுக்கு மேட்ச் ஆக வேணாமா? அதுக்குதான் 2 பேரும் இசை சம்பந்தப்பட்ட ஃபீல்டு), முதல் 30 நிமிசம் இவங்க லவ் எபிசோடு ஓவியா பிக்பாஸ் போர்சன் போல சுவராஸ்யமா போகுது.

திடீர்னு காயத்ரி மாதிரி ஒரு வில்லத்தனம் திரைக்கதை ல நுழையுது, அதாவது ஹீரொயின் ஜவுளிக்கடைல டிரஸ் மாத்தறது , பாத்ரூம்ல குளிக்கறது இதை எல்லாம் யாரோ வீடியோ எடுத்து  நித்தமும் ஆனந்தமே மாதிரி ஹீரோசெல்லுக்கு அனுப்பறாங்க. அதை அனுப்ச்சது  யாரு?எதுக்காக அப்டி ஹீரோவை மெண்ட்டல் டார்ச்சர் பண்றாங்க என்பது தான் பின் பாதி திரைக்கதை 


தங்க மீன்கள் , தரமணி ஆகிய படங்களில் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணி ஆற்றிய  ரஞ்சித் ஜெயக்கொடி தான் இதன் இயக்குநர் , முதல் படம் என்ற நெர்வஸ் இல்லாமல் அசால்ட்டாக திரைக்கதை அமைத்திருக்கிறார்

ஹீரோவா நேச்சுரல் ஆக்டர் விஜய் சேதுபதி,ரொமான்ஸ் காட்சிகளிலும் சரி  பதட்டமான சீன்களிலும் சரி மனிதர் சிக்சர் அடித்திருக்கிறார். அந்த போலீஸ் ஸ்டேஷன் சீனில் புகார் கொடுக்கும் காட்சி அபாரம்.இயக்குநர் போலீசால் ஏதோ ஒரு வகையில் பர்சனலாக பாதிக்கப்பட்டிருப்பார் போல . அவர்களது மாமாத்தனமான எச்சை புத்தியை தோல் உரித்துக்காட்டி இருக்கார் , சபாஷ்


ஹீரோயினா நடுவில கொஞ்சம் பக்கம் காணோம் புகழ் காயத்ரி. இதை ஏன் இவ்ளோ விளக்கமா சொல்றேன்னா நம்மாளுங்க பிக் பாஸ் காயத்ரி. மேல இருக்கற கடுப்புல இந்தப்படத்தை தவிர்த்துடக்கூடாதுனுதான். அந்த வில்லி வேற , இந்த கில்லி வேற . படத்தின் மொத்த பாரத்தையும் தாங்க  வேண்டிய ஆள் , குருவி தலையில் பனங்காய் கதை தான், ரொமான்ஸ் காட்சியில் கலக்கியவர் , த்ரில்லர் காட்சியில் பாஸ் மார்க் தான் வாங்கி இருக்கிறார்


இன்னொரு நாயகியாய் வரும், மஹிமா நம்பியார் ஒரு சராசரி 50  மார்க் ஃபிகர் தான் , ஆனா அவர் அதி அற்புத அழகி போல் வசன்ங்ளில் முன் மொழியப்படுவது ஏனோ?ஃபிளாஸ்பேக் காட்சிகளில் அழுத்தம் இல்லை

பாடல்கள் 3 தேறுது , பின்னணி இசை பக்கா . ஒளிப்பதிவு குட்

எடிட்டிங் அருமை , மொத்தமே 2 மணி நேரப்படம்தான் , ஆனால் பின் பாதி இழுவை போல் தோணுது 

Image result for puriyatha puthir poster


சபாஷ் டைரக்டர் 

1 முதல் 30 நிமிட  ரொமான்ஸ் காட்சிகள் , ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி பயாலஜி , பிசிக்ஸ் எல்லாம் ஒர்க் அவுட் ஆனது 


2 யார் அந்த வீடியோவை அனுப்பறாங்க என்ற சஸ்பென்சை கடைசி வரை காப்பாற்றியது

3  ப்ளூவேல் கேம் போல் ஹீரோவுக்கு கட்டளைகள் பிறப்பித்து அதை நிறைவேற்ற வைக்கும் உத்தி 

4  இயக்குநர் ட்விட்டரில் இருப்பதால் படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் பிரபல ட்வீட்டர்கள் பேர் தான் உதா நாயகி மீரா , நாயகன் கதிர் )

Image result for naduvula konjam pakkatha kaanom gayathri

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1 பெண்களின் அந்தரங்க செயலை  செல் ஃபோனில் படம் பிடித்து அனுப்புவது தவறு என்பதுதான் படத்தின் மெசேஜ், ஆனால் அதை வலியுறுத்தும் நாயகியே ஒரு பழி வாங்கலில் அவருக்கு எந்த  எதிர் வேலையும் செய்யாத ஒரு பெண்ணின் கில்மா போஸ்ட்டை ஃபேஸ்புக்கில் பதிவேற்றுவது ஏன்?


2 ஹீரோ மற்றும் அவரது நண்பர்கள் பற்றிய ஃபிளாஸ்பேக் காட்சியில் அழுத்தமான சம்பவங்கள் இல்லை

3  ஹீரோவின் ஒரு நண்பர் அவரது ஆஃபீஸ் எம் டி யின் மனைவியை கரெக்ட் பண்ணியதை அறிந்த எம் டி ஃபேஸ்புக்கில் அந்த ஃபோட்டோ வந்ததும் ரகசியமாக அவரை வெளி இடத்துக்கு  வரச்சொல்லி செட்டில் பண்ணாமல் ஆஃபீசிலேயே கத்தி கூப்பாடு போடுவது ஏனோ? ( இதை பார்த்து ஆஃபீசில் மற்ற “கேட்ச் பாண்டியன்கள்” ட்ரை பண்ண மாட்டாங்களா?)


4  ஹீரோயின் செல் ஃபோனை எடுக்கும் ஹீரோ அதில் உள்ள கேலரி ஃபோட்டோவை எப்படி ஃபார்வார்டு பண்ண முடிந்தது . பொண்ணுங்க ஃபோனை லாக்  பண்ணி வெச்சிருப்பாங்களே?


5  டவல் கட்டிக்கொண்டு தான் மஹிமா நம்பியார் பேசுகிறார், அதை வீடியோ எடுக்கும் நாயகி இதான் கான்செப்ட். ஆனால் மார்ஃபிங்க் செய்யப்பட்டு டாப்லெஸ் போல் காட்டப்படுவது எப்படி?

6  அந்த கருத்த ஒல்லிய  உருவம் நாயகியின் செட்டப் ஆளா? கதைக்கு சம்பந்தம் இல்லாதவரா? விளக்கம் இல்லை ( எடிட்டிங்கில் கட் ஆகி இருக்கும்)

7 நாயகியின்  அபார்ட்மெண்ட் அவ்ளோ பிரம்மாண்டமா இருக்கு , ஆனா அதுக்கு ஒரு வாட்ச்மேன் கூடவா இல்லை ?

8 நாயகனை ஃபோனில் மிரட்டும் ஆண்குரல் யார்? 


Image result for ranjit jeyakodi


டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி


நச் டயலாக்ஸ்

 1 சுவராஸ்யம் மட்டும் வாழ்க்கை இல்லை,நிம்மதிதான் வாழ்க்கை

நமக்கு நடக்கறவரை நிஜத்தோட வலி எப்பவும் நமக்கு முழுசா தெரியாது

3 உனக்கு என்ன டிரஸ் பிடிக்கும்?

 ஸ்கூல் யூனிஃபார்ம்

போட்டுக்காட்டுவியா?

ம் 

போடாம காட்டுவியா? 

டேய்  #PuriyaathaPuthir 

4 தனியா ஒரு பொண்ணு இருக்கறது  தெரிஞ்சா போதும் , நம்மாளுங்க கிளம்பிடுவாங்களே லவ் பண்ண #PuriyaathaPuthir 


5 ஒரு அழகிய இதயத்துக்குள் நுழைவதற்காக திருட்டுச்சாவி போடப்பட்டுள்ளது  #PuriyaathaPuthir 

6 டியர், நான் ஒண்ணு சொல்லட்டா?

 ம் 

அது வந்து....

வேணாம், சொல்லாத , சிலது சொல்லாம இருப்பதும் அழகுதான்  #PuriyaathaPuthir 

7  உலகத்துக்கு முன்னாடி  நிர்வாணமா இருப்பது, நிக்கறது எவ்ளோ வலினு இப்போ புரியுதா?


8  மீரா  , யார் கூட இருக்கே?

 வாட்?

இப்போ எங்கே இருக்கே? யார் கூட இருக்கே?


Image result for ranjit jeyakodi

சி பி கமெண்ட் -  - செல்போன் வீடியோ பதிவு பரப்பல் பற்றிய பெண்களுக்கான விழிப்புணர்வுப்படம்.ரஞ்சித் ஜெயம்.விகடன் 42 ,ரேட்டிங் 3/5

ஏ செண்ட்டரில் ஹிட் ஆகும், பி சி செண்ட்டர் ஆடியன்சை கவர்வது சிரமம்
கேரளா - கோட்டயம் - அனுசுரா தியேட்டரில் படம் பார்த்தேன்

0 comments: