Wednesday, September 20, 2017

கேட்கறவன் கேனயன்னா எல்லா பொண்ணுங்களையும் சினேகன் தன் தங்கையா நினைக்கறார்ம்பார்

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேற, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யத் தயார் - கருணாஸ் # சினிமாலயே"நடிச்சாச்சு,நாடகம் போடமாட்டமா?==============2 அதிமுக எம்எல்ஏக்கள் கடத்தி ஒளித்து வைக்கப்பட்டுள்ளனர்.. தினகரன் # இதுக்கு விதை நாம போட்டது,கூவத்தூர் ரிசார்ட்


============

3 தீபா ஜெயலலிதா போல சிகப்பா இருக்கிறார் - தமிழருவி மணியன்
# விட்டா காயத்ரியை மாநிற ஜெ னு சொல்வார் போல


==============

4 ட்விட்டரில் தீமையான கருத்துக்களே ஆதிக்கம் செலுத்துவதால் வெளியேறுகிறேன்' - சிம்பு சாங்குக்கே பீதி யை காட்டியவர் யாரோ?


================

5 ஜெ மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன் # நல்ல வேளை,சசிகலா இப்டி கேட்கலை
டோட்டல் தமிழகமே ஜெர்க் ஆகி இருக்கும்

==================

6 அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை Pmஇடம் தெரிவித்தேன் - OPS # கேட்கறவன் கேனயன்னா எல்லா பொண்ணுங்களையும் சினேகன் தன் தங்கையா நினைக்கறார்ம்பார்

================

7 கமல் ஆக்டராக பேசுகிறார் நான் டாக்டராக பேசுகிறேன் - தமிழிசை # அவர் களை எடுப்பேன் கறாரு,நீங்க (எங்க)உயிரை எடுப்பேன் கறீங்க?


================


8 ஊழல்வாதிகள் தலைதெறிக்க ஓடும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது: மோடி # அவங்க மட்டுமா?பொதுநலவாதி,பொதுஜனம் எல்லாரும்தான்


=================

9 இந்தியாவுக்கு தமிழகம் முன்னோடி மாநிலம்: CM EPS # நான் முந்தி நீ முந்தி னு ஓடி ஓடி மோடியை சந்திப்பதில்தானே?


==================


10 துன்பங்கள் பல வரினும் விவசாயிகள் கடும் உழைப்பினால் சாதனைகளையே படைத்து வருகின்றனர்: மோடி # பிரதமரை சந்திக்கமுடியலைங்கற வேதனைகளை விட்டுட்டாரு


==================

11 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் சாதாரண ஜனவரி மாதமாக இருக்காது -் மோடி # ஸ்பெஷல் ரண மா இருக்கும் போல


=====================

12 பெப்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் கமல் ஏன் குரல் கொடுக்கவில்லை - தமிழிசை போராடினப்ப பிரதமர் சந்திக்கனும்னு நீங்க ஏன் குரல் தரல?


====================

13 ஊழல்களும், குற்றங்களும் நடந்தும் எந்த கட்சியும் Epsசை ராஜினாமா செய்ய சொல்லாதது ஏன்? -கமல் # அப்போ திமுக வை இவர் கட்சியாவே மதிக்கல போல


===================

1 4தேவையில்லாமல் சிங்கத்துடன் மோதிக்கொண்டு இருக்கிறார் கமல்"− அமைச்சர் ராஜேந்திர பாலாஜி # இல்லையே,சூர்யா வும்"கமலும் பிரண்டஸ் ஆச்சே?


==================

15 தனி மனிதவாழ்க்கையிலேயே ஒழுக்கமாக கமல் நடந்து கொள்ளவில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி # பொது வாழ்க்கை ல நம்ம பிளாஸ்பேக் யாராவது கிளறிட்டா?


===================

16 ஜெயலலிதாவின் சாயலில் உள்ளதால் மக்கள் தீபாவை ஏற்பார்கள்-ஈவிகேஎஸ்
# இப்டித்தான் கே,பாக்யராஜ் −யோகராஜ் ,ரஜினி− நளினிகாந்த் க நினைச்சாக.நடக்கல


===================


17 சசிகலாவை கேள்வி கேட்க
ADMK ல் யாருக்கும் அதிகாரம் இல்லை
- வெற்றிவேல் MLA
# விட்டா ஜட்ஜ் ,ஜெயிலர் யாருக்கும் அதிகாரம் இல்லைம்பார் போல


=====================


18 அதிமுக இணைப்பு விஷயத்தில் சாய்பாபா காட்டும் திசையில் செல்வேன்-ஓபி எஸ்
# இப்டித்தான் ரஜினி பாபா னு பிளாப் படம் தந்தாரு.அடுத்தது நீங்க


==================


19 நாட்டில் தலித் மக்கள் அச்சம், அச்சுறுத்தலுடன் வாழ்கின்றனர் – ப.சிதம்பரம் இருக்கட்டும்.உங்க பையன் இப்போ எங்கே?


==================


20 உலக அளவில் ஊழல் -முதல் 10 ல் 4 ஆம்
இடத்தை பெற்றுள்ளதுDMK # 4 பேர் குடும்பத்துல சொத்து சேர்த்தா"4 பேர் 4 விதமா பேசத்தான் செய்வாக


==================

0 comments: