Saturday, September 16, 2017

சினேகனை சீனா அனுப்புவோம்.

திமுக கோ.சி.மணியின் மகன் அன்பழகனை கைது செய்தது அமலாக்கத்துறை; ரூ.80 கோடி அந்நிய செலாவணி மோசடி # அதிமுகவுக்கு திமுக சளைத்ததல்ல

================

2 விஜய் மல்லையா போல கார்த்தி சிதம்பரமும் வெளிநாட்டுக்கு ஓடிவிடுவார்... ஹைகோர்ட்டில் மத்திய அரசு # ஓட முடியாது.பிளைட்ல பறந்துவேணா போலாம்

===============

3 ரூ.799 முதல் டிக்கெட் - விமான நிறுவனம் அதிரடி சலுகை
# பேட்டா செருப்பு ரேட் மாதிரி இருக்கு

==============

4 224 கேன் குடிநீர் நிறுவனங்கள் தரமற்றவையாக அறிவிப்பு
# தெப்பக்குளம் ,ஆறு",கிணறு,ஏரி தண்ணீரை குடிச்சு நம்"முன்னோர் ஆரோக்யமா வாழ்ந்தாங்க

================

5 மோடியை
இரும்பு மனிதராக
பார்க்கிறேன்-ஹெச்.ராஜா
# எல்லோரும் விரும்பும் மனிதரா மாறினா தேவல

===================

6 அமைச்சர் செங்கோட்டையனுக்கு விவாதத்திற்கு அன்புமணி அழைப்பு 12.08.2017 # போனா அன்புமணி கிட்டே மாட்டிக்குவாரு,போகலைன்னா மீடியா கிட்டே.பாவம்


===============

7 ஆசிரியர் பணி இடமாறுதலுக்கு 5 லட்சம் வாங்கும் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
- அன்புமணி # பதவியை கோட்டை விடப்போறார்

================

8 அன்புமணிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை- செங்கோட்டையன்# பதில் சொல்ல தெரீல,முடியலனு ஓப்பனா சொல்ல முடியுமா?


================

9 பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த பலனும் இல்லை- நாடாளுமன்ற குழு#செய்கூலியும் அதிகம் ,சேதாரமும் அதிகம்


==================

10 பாம்பு கடியால் ஆண்டுக்கு 10,000 பேர் மரணம்.. ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்! ஸ்னேக் ,சினேகன்னாலே"ஆபத்துதான்


==================

11 அதிமுக மண் சட்டியல்ல... இமயமலை: அமைச்சர் ஜெயக்குமார் - அதான் எல்லா MLA ,M P களும் எவ"ரெஸ்ட்"டா இருக்கீங்களா?

================

12 வெளிநாட்டு பணத்தை உப்புமாவில் வைத்து கடத்த முயன்ற 2 பேர் கைது# 'உப்புமான்னா' எவனும்"ஸ்மெல்"பண்ண மாட்டான்னு நினைச்சது ரொம்ப தப்புமா


==================

13 தமிழகத்தில் தண்ணீரே இல்லாத போது தாமரை எப்படி மலரும்- நாஞ்சம்பத்
வந்தாலும் ",பன்னீர்" தெளித்தாலும் தாமரை தமிழகத்தில் தனித்து மலராது


=================

14 நாங்கள் காஷ்மீருக்குள் வந்தால் என்ன செய்வீர்கள்? - சீனா கேள்வி
சீனா அனுப்புவோம்.ஆபத்தை"எப்படி சமாளிக்கறீங்கனு பார்ப்போம்.யாருகிட்டே


==================

15 அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது.. அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம்! கோஷ்டிகள் உருவானாலும்"பதவிநாற்காலியை விட்டு"நகரமாட்டோம்


===================

16 ஒரு வீட்டுக்கு 12 மது பாட்டில்கள் வரை வைத்துக்கொள்ளலாம் : தமிழக அரசு அனுமதி.
# குடிமக்களிடம் சேமிப்புப்பழக்கம் வளர்த்தும் அரசு


===================

17 பாஜகவில் இணைய பல்வேறு கட்சிகள் விருப்பம்-பொன்னார்
"யார்"வந்தாலும்"அணைச்சுக்கும்"சினேகன் ஆச்சே?


==================

18 சசிகலாவால் நியமிக்கபட்ட துணை பொது செயலாளர் பதவி செல்லாது-முதல்வர் Eps # கட்சில எல்லாரும் செல்லாக்காசுதான் கறாரா?


==================

19 நடிகர் சங்கத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை-சரத்குமார்# ஆனா விஷாலுக்கும் உங்களுக்கும் "சம்பந்தம்" இருக்காமே?


===================

20 சசிகலாவை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கவில்லை - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு.. க்கு ஜாக்பாட்,இதான் சாக்குனு காய் நகர்த்தலாம்

==================

0 comments: