Monday, September 18, 2017

காமெடி டைம்ஸ் ஆப் இந்தியா

தன்மானத்திற்காக முரசொலி பவளவிழாவில் கலந்துகொண்டேன் - கமல் # சன்மானத்திற்காக டிவி ஷோ பிக்பாஸ்லயே கலந்துக்குறவர்தானேனு"ஜனங்க சொல்லிட்டா?

==============

2 தேவைப்பட்டால் கட்சியை அறுவை சிகிச்சை செய்யப்படும்_டிடிவி தினகரன்
# ஆபரேசன் பண்ண வேண்டிய பெரிய டாக்டரே,ஜெயில்ல இருக்காரே?


================

3 தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் - மு.க.ஸ்டாலின் # நம்பிக்கை தான் சார் வாழ்க்கை

===============


4 எட்டாக்கனிக்கு கொட்டாவி விடுபவர் ஸ்டாலின், கறந்த பால் மடி புகாது,கருவாடு மீன் ஆகாது, −அமைச்சர் ஜெயக்குமார் # "தாமரை"க்கனி ஆதரவு தைரியம்?

=========================


5 மோசடி என்ற வார்த்தைக்கு பொருத்தமானவர் டி.டி.வி.தினகரன் - Eps # தன் பதவிக்கு ஆபத்து எனில் OPS ,EPS எல்லோரும் 1

================


6 அதிமுக ஒன்றும் லட்சுமிபுரம் கிணறு கிடையாது ஓ.பி.எஸ் மீது TTV.தினகரன் தாக்கு # அதையே விட்டுத்தராதவரு இத விட்டுத்தருவாரா?


===============

7 எங்களை 420 என தினகரன் கூறுயது டிடிவி தினகரனுக்குத் தான் பொருந்தும் - CM EPS # எல்லாரும் சீட்டிங் பெலோஸ் தான்


=============

8 மூக்குப்பொடி சாமியார். தஞ்சை பெரியகோயில்..; தினகரனின் ஆன்மிக தேடல்! # உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்.தப்பு செஞ்சா பரிகாரம் தேடனும்


===============

9 ஜன கன மன இருக்கும் வரை திராவிடத்தை அழிக்க இயலாது - கமல்ஹாசன்
# 2ஜி ஊழல் ,காயத்ரி மந்திரம் பத்தியும் கருத்து சொல்க


=================


10 ஜெ ஆத்மா என்னை தொடர்பு கொண்டு பேசியிருக்கு- SV.சேகர் # "தத்துப்பிள்ளை" நீங்க தான் னு சொன்னதா அடிச்சு விடுங்க,அதை நம்பவும் ஒரு கூட்டம் உண்டு


================

11 எங்கள் ஆட்சி சிறப்பாகவே உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்
# நமக்கு"நாமே"சர்ட்டிபிகேட்"திட்டம்


========================


12 2022' ல் புதிய இந்தியாவை உருவாக்குவோம் - மோடி # மாத்தறேன் மாத்தறேன்னு ஏமாத்திட்டேதானே இருக்கீங்க?


==================


13 தமிழ் தெரியாவிட்டாலும் தினமும் முரசொலியை வாசிப்பேன் - டைம்ஸ்ஆப் இந்தியா அருண்ராம். டைம்ஸ் ஆப் இந்தியா


================


14 சசிகலா தலைமையின் கீழ் உள்ளதுதான் உண்மையான அதிமுக: சு ் சுவாமி வுக்கு ஒரே ஒரு தலைமை உள்ளது என்பதே"பொய்யானதே

=============


15 ”அரசியல் சாக்கடையில் கால் வைப்பது கமலுக்கு தேவையில்லாத வேலை” -நாஞ்சில் சம்பத்
நாம சாக்கடை ல கடைய போட்டிருக்கமே அது பரவால்லியா ?

==============

16 காங்கிரஸ் தலைவர்கள் விரைவில் சிறைக்கு செல்லப்போகிறார்கள்-சுசாமி.
,திலீப் வந்தபின் ஜெயில் எல்லாம் ஜூஜூபி


================

17 மத்திய அரசின் திட்டங்களை எல்லாம் தமிழக அரசு கண் மூடித்தனமாக ஆதரிக்கிறது வைகோ # கண்கட்டு வித்தை க்காரர் ஆணை அப்டி


=================


18 பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை முயற்சி ஓவியாவிற்கு போலீஸ் சம்மன்# போலீசே ஓவியா ஆர்மிதான்யா"என் சிப்ஸூ.செல்பி எடுத்துக்க பிளான்


=================

19 அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தேர்தல் ஆணையத்தின் தவறான முடிவே காரணம்-சு.சாமி# அதுக்கும் மோடி மந்திரம் தான் காரணம்


=================


20 இரட்டையர்கள் இணைந்தால் இரட்டை இலை கிடைக்கும்- தமிழிசை# தாமரைக்கு ஆதரவு தந்தால் இலை உங்கள்"வசம்னு மெசேஜ் தர்லயா?


================

0 comments: