Tuesday, September 19, 2017

சசிகலா நினைத்திருந்தால்

தமிழகத்தில் எந்த திட்டப்பணிகளிலும் ONGC ஈடுபடவில்லை-செய்தி# அதென்ன தமிழக அரசா?செயல்படாம சும்மா இருக்க?


==============


2 கட்சியும் ஆட்சியும் EPS தலைமையில் தான் நடக்கிறது- சீனிவாசன்# ஆமா.ஆனா அந்த Eps க்கு யார் தலைமை?சசியா?மோடியா?அதான் ட்விஸ்ட்


===============

3 ஊழல் புகார் இல்லாத ஜெ தீபா தான் அதிமுக தலைமை ஏற்க தகுதியானவர் −EVKS மை வேணா ஏத்துக்கலாம்.டை அலர்ஜி இல்லையா?னு செக் பண்ணினா போதும்

================


4 எதிரிகள் எஃகு கோட்டையில் விரிசல் விழாதா என காத்திருக்கின்றனர்: சசிகலா#ஷாப்பிங் காம்ப்ளெக்சிலிருந்து அறிக்கை விடுவது சசி


===============


5 அ.தி.மு.க. இணைப்பு: பா.ஜனதா கட்ட பஞ்சாயத்து செய்யவில்லை - தமிழிசை # ஆனா தாயத்து கட்டிவிட்ட மாதிரி உங்க கட்சி ஆளுங்களைக்கண்டா பம்மறாங்களே?


==================


6 அதிமுகவில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது: தம்பிதுரை # டைவர்ஸ் எல்லாம் ஆகலை.ஆனா தனித்தனி வீட்ல இருக்காக"தம்பதி மொமெண்ட்


================


7 நான் மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்கியதில்லை - ஹெச். ராஜா

மாப்பி"கொஞ்சம் கூட வெட்கப்படாம ஒத்துக்கிட்டீங்க?


================

8 அதிமுக-விற்காக குண்டூசி கூட எடுத்துப் போடாதவர் டிடிவி. தினகரன் – மதுசூதனன் # இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தந்து ஜெயிலுக்கு போனாரே?


==================


9 தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது - 2அணியாக பிரிந்து கூட்டுக்கொள்ளை அடிக்கின்றனர் - அன்புமணி # கொள்ளை அடிச்சாலும் கூட்டு ஆகாது பார்முலா


================


10 நீட் தேர்வு விலக்குக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி செல்லவில்லை, தம்மீதுள்ள வழக்குகளை கவனிக்கவே சென்றுள்ளார் - அன்புமணி
# "நீட் " அட்டாக்


=================

11 ரஜினி , கமல் அரசியலுக்கு வந்தால் அதிமுகவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை: செல்லூர் ராஜு # வெளீல இருந்து எப்பவும் நமக்கு ஆபத்து வந்ததில்ல


==================

12 அமித்ஷா வருகையால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும்-பொன் ராதா # த்ரிசா வந்தா வேணா ட்ராபிக் ஜாம் ஆகும்


===============

13 தனியார் நிறுவனங்களின் 'செட் - டாப் பாக்ஸ் வாங்காதீர்கள் பொதுமக்களுக்கு - அரசு வேண்டுகோள் # கால்"காசு ஏமாந்தாலும் கவர்மெண்ட்கிட்டே ஏமாறவும்


================

14 ரஜினி, கமல் மக்களுக்கு என்ன செய்தார்கள்: செல்லூர் ராஜூ ஆவேசம் # ஆட்சில இருக்கறவங்களே எதுவும் செய்யல,அவங்க மேல பாய்ஞ்சா எப்டி?


================

15 அந்நிய முதலீடு மோசடி வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் கார்த்தி சிதம்பரம் ஆஜராகாததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் # தயவு"செஞ்சு ஆஜர் ஆகவும்


===============


16
ரஜினியும்,கமலும் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்- செல்லூர்ராஜு #"வாத்தியார்க்கே"வகுப்பெடுப்பா?


============


17 தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவை எடுப்போம்.−Ops # அரசியலுக்கு"முழுக்கு?


===============


18 தமிழகத்தில் 5,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் 5000னா எப்டியும் 50,000 இருக்கும்


=================

19 தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் # போன மாசமும் இப்டித்தான் சொன்னாரு


===================


20 சசிகலா நினைத்திருந்தால் ஜெ மறைந்த 5/12/16 லேயே Cmஆகியிருப்பார்: தினகரன் # அப்டி ஆகி இருந்தா அப்பவே அப்போலோ டவுட்ஸ் பூதாகரமா வெடிச்சிருக்கும்


=================

0 comments: