Wednesday, September 13, 2017

ஆளாளுக்கு கொள்ளை அடிச்சா ஆளுங்கட்சிக்கு என்ன மரியாதை?

சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்கு பதில்அளிக்க 10லட்சத்தில் ரோபோ# அப்போ பேங்க் ஸ்டாப்ஸ் யாருக்கும் பதில் சொல்லதெரியாதா?

================

2 நேற்றுவரை ஆட்சியில் இருந்துவிட்டு குடிநீருக்காக போராட்டமா?ஓபிஎஸ்ஸுக்கு துரைமுருகன் கண்டனம்
# நாம அதைக்கூட பண்ணல

================

3 வாரத்தில் திங்கள்/ வெள்ளி யில் மக்கள் கைத்தறி ஆடைகளை அணிந்து நெசவாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் - CM EPS # 234 * 55,000 =1,28.70,000

===================

4 அதிமுகவில் பாஜக தலையீடு என்பது ஒரு யூகம்: தமிழிசை # மதியூகிகளின் யூகம்

================

5 மத்தியஅரசின் திட்டங்களை தமிழக அரசு ஆதரித்தால் எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றனர்: தமிழிசை இல்லாம"அரசியல்வாதி ஆத்தோட போகமாட்டான்

===============

6 தமிழகத்தில் தற்போதைய நல்லாட்சி தொடர வேண்டும்.− எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் # ஆட்சி தொடரனும்னு வேணா"சொல்லிக்குங்க.நல்லாட்சியா?

===============

7 வெங்கய்ய நாயுடுவின் வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது: தமிழிசை# துண்டை போட்டு வைப்போம்,பிற்காலத்தில் உதவும் மொமெண்ட்


===============


8 பெரம்பலூரில் முதல்வர் EPS பேசிக்கொண்டு இருக்கும்போதே கலைந்து சென்ற மக்கள்- செய்தி
# பிக்பாஸ் ஷோ டைம் வரை பேசிட்டே இருந்தா?

================

9 கட்சியில் நடப்பது பங்காளி தகராறு - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் # யார் யாருக்கு எவ்ளோ பங்கு என்பதிலா?


===================


10 "அரசியலுக்கு வர விருப்பம் இல்லை" -் உதயநிதி ஸ்டாலின் # கலைஞர் ஸ்டாலினை CM ஆக விடலை,ஸ்டாலின்" உதயநிதியை வர விடலை.குட் பேமிலி

==================

11 எனக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது - OPS # பிளானே செக்யூரிட்டி மூலமாத்தானாம்

================

12 ஜவுளித் தொழிலில் ஜாப் ஒர்க்கில் GST 18% ல் இருந்து 5% ஆக்கிய அருண் ஜெட்லி! # உணவு ,உடை / விவசாயி,நெசவாளி காக்கப்பட்டா சரிதான்

================

13 MGR ,் ஜெ தமிழகத்திற்கு கிடைத்த வரம்: CM Eps # நமக்கு கிடைத்த பதவி எதிர்பாராம கிடைச்ச அபூர்வ பிரசாதம்


================

14 மத்திய பிரதேசத்தில் பரபரப்பு : ரூ.20 ஆயிரம் கோடி மதிப்புள்ள வெங்காயம் மாயம் நாயுடு வெற்றியை"இப்டீ கொண்டாடறாங்களா?

=================

15 GSTகாரணம் காட்டி மக்களிடம் கொள்ளை லாபம் அடித்தால் கடும் நடவடிக்கை - ஜெயக்குமார்
கொள்ளை அடிச்சா ஆளுங்கட்சிக்கு என்ன மரியாதை?

===================

16 ஒரு எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சரியாக செயல்படுகிறார் -வைகோ # அது தெரிஞ்சுதான் ஜனங்க ஆளுங்கட்சி ஆக்கல

=================

17 மத்திய, மாநில அரசுகள் இணைந்து வறுமையை ஒழிக்க வேண்டும் - வெங்கய்யா நாயுடு
பேச்சு கேட்காதவங்களை ரெய்டு மூலம் ஒழிச்சுட்டு இருக்கீங்க

===================

18 Eps & Dmk இடையே கூட்டணி −OPS # அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

===================

19 து.பொ.செ.பதவியே கேள்விக்குறி என்பதால் தினகரன் செய்த நியமனம் செல்லாது-MP.ஜெயக்குமார்
# பொதுச்செயலாளர் ஜெயிலில் இருப்பதால் தில்லுதுர ஆகிட்டாக

================

20 ஐந்து ஏக்கர் நிலம் இருந்தால் ரேஷன் பொருட்கள் ரத்து - தமிழக அரசு # நல்ல வேளை ,5 இருந்தா அரசு 1 பிடுங்கிக்கும்னு சொல்லல

===================

1 comments:

'பரிவை' சே.குமார் said...

தொகுப்பு அருமை...
முகநூலில் வாசித்தவை இங்கும்.
வாழ்த்துக்கள்.