Monday, September 11, 2017

அரசியலில் காமெடி செய்யப்பிறந்தவர்

கமல்
சினிமா வாய்ப்பு இல்லாததால் இருப்பை காட்டுகிறார்- நாஞ்சில் சம்பத் # விஸ்வரூபம்2, சபாஷ் நாயுடு,தலைவன் இருக்கின்றான் −பயம்,கண்ல தெரியுது

=================

2 ஜெயில் சாப்பாட்டை வாயில் வைக்க முடியலை.. தினகரனிடம் புலம்பிய சசிகலா # அப்போ இத்தனை நாளா வீட்டுச்சாப்பாடு தான் போய்ட்டு இருந்திருக்கு?

===============

3 இந்தியாவில் 100 பாலங்கள் எந்த நேரமும் இடிந்து விழலாம்.. நிதின் கட்காரி # இதை சொல்ல வெட்கப்படனும் சென்றாயன்

================

4 தமிழக அரசு புதிய அணைகளை ஏன் கட்டக்கூடாது?: உச்சநீதிமன்ற நீதிபதிகள் # தெர்மாக்கோல்லயே 10 லட்சம் அடிச்சாங்க.அணைகள்னா கோடிக்கணக்குதான்

===============

5 அதிமுகவின் குழப்ப நிலையை பயன்படுத்தி ஆட்சிக்கு வரமாட்டோம்−ஸ்டாலின் # மீன் தொட்டில மீன் பிடிக்கமுடியாதவர் குழம்பிய குட்டைலயா பிடிக்கப்போறார்?

=================

6 கேரவனுக்கு அனுமதியின்றி மின்சாரம் எடுத்த தனுஷ்.. அபராதம் விதித்தது மின்சார வாரியம்! சம்சாரத்தையே அசால்ட்டா தூக்கறவர்யா

================

7 கருப்புபணத்தை மீட்க வெகுதூரம் செல்லவேண்டி உள்ளது - மோடி #

கவர்மெண்ட் காசுல,செலவுல எவ்ளோ தூரம் வேணா செல்லலாம்

===============

8 பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சோதனைகள் வருவது இயல்பு தான் அமைச்சர் விஜயபாஸ்கர் # சோதனை =ரெய்டு?

==============

9 தயாராகிறது முதல்வன் -2: ரஜினி நடிக்கிறார்!?
ஓவியா ,வில்லன் ஸ்டாலின் இப்டி புக் பண்ணிட்டா பட்டாசா இருக்கும்

===============

10 நடப்பது ஊழல் அரசு என்ற மைத்ரேயன் எம்.பி.யின் கருத்துக்கு, பதில்கூற விரும்பவில்லை -Mp ஜெயக்குமார்

# பதில் கூற முடியலை?


================

11 பலரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையில் எங்கள் ஆட்சி நடக்கிறது - எடப்பாடி பெருமிதம் # கூவத்தூர் ல கரெக்ட் பண்ணின கூவம் ஆட்சி என்பதாலா?

==================

12 நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குக் கிடைக்க வாய்ப்பில்லை” −பொன்.ராதா # மொத்தத்துல நம்மால தமிழகத்துக்கு எந்த பயனும் இல்ல?


==================

13 OPSஅணியில் இருந்து வந்தால் ரூ.5 கோடி தருவதாக டிடிவி, EPSஅணியினர் பேரம் பேசுகின்றனர்: சண்முகநாதன் OPS MLA # 5 கோடியே 50 ரூபா ஒரு தரம்


===============

14 தேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம் # பிரபாகரன் .வீரப்பன்",மல்லய்யா ரேஞ்ச்க்கு வந்துட்டார் போல

=================

15 அரசுக்கு நெருக்கடி கொடுக்க நாங்கள் விரும்பவிலை - ஸ்டாலின்# அப்டி கொடுத்தா 2ஜி"தீர்ப்பில் எதிரொலிக்குமோ?னு பயம்


==================

16 தமிழகத்தை ஆளப்பிறந்தவர்

தினகரன்-நாஞ்சில்சம்பத்
# அரசியலில் காமெடி செய்யப்பிறந்தவர் சம்பத்==================

17 விரைவில் அனைவரும் இணைக்கப்படுவர்: திண்டுக்கல் சீனிவாசன் # திகார்?சென்னை சென்ட்ரல்?எந்த ஜெயிலில்?


==================

18 மாமியாருடன் கள்ளக்காதல் தகராறில் மருமகன் கொன்று புதைப்பு: மாமனார் பகீர்...# வீட்டோட மாப்ளை ஆக்கினா இப்டி ஒரு அபாயம் இருக்கா?

=================

19 கட்சி அலுவலகத்திற்குள்

தினகரன் வந்தால்
கைது செய்யப்படலாம்
-எடப்பாடி
# அமைதிப்படை படம் பாத்துட்டார் போல


==================

20 இறப்பை பதிவு செய்வதற்கு அக்டோபர் 1 முதல் ஆதார் எண் கட்டாயம் - மத்திய அரசு # நிம்மதியா வாழத்தான் விடலை,சாகவும் விட மாட்டாங்க போல

================

0 comments: