Friday, September 22, 2017

அக்கப்"போர்" வரும்போது பாத்துக்கலாம்

EPS CM ஆக இருக்க காரணம் சசிகலா தான்- செல்லூர் ராஜூ# சசிகலா ஜெயிலில் இருக்கக்காரணம் ஜெ தான் , னும் அடிச்சு விடுங்க


================


2 பாமக அறிக்கைகளை கமல் படிக்க வேண்டும் - டாகடர் ராமதாஸ் # படிக்கா விட்டால் அவர் படப்பெட்டி தூக்கிச்செல்லப்படும்?


================


3 பெரிய திட்டங்கள் இருந்தா தெளிவா சொல்லுங்க”

கமலுக்கு கஸ்தூரி வேண்டுகோள் # சொல்லுங்க ன்னாலே"தடுமாறுவாரு.இதுல தெளிவா வேற சொல்லனுமா?

=================


4 ஒரு ரூபாய் க்ளினிக் அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகம் - செய்தி # க்ளீன் இந்தியா ல தான் பேர் வாங்க முடியல,க்ளினிக் இந்தியா விலாவது..

=================


5 ஜெ. மரணத்தில் மர்மம் இல்ல, வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது: (திவாகரன் மகன்)ஜெயானந்த் # பிக்பாஸ் பிந்துமாதவி போல் புதுபுது கேரக்டர் வருதே


=================

6 அரசுக்கு எதிராக கமல் பேசுவது வெறும் பேச்சுதான். அரசியல் களத்துக்கு வாங்க. சீமான் # இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பை ரணகளம் ஆக்கிடாக

================


7 பெங்களூருவில் தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்தனர் # தமிழர்களை பாத்து திருந்துங்கப்பா,ரைசாவுக்கு வோட்டிங்

=============


8 தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது இலக்கு: கமல் # கடந்த 50 வருசமா தமிழகத்துக்கு கிடைக்கவில்லை அந்த லக்கு

=================

9 ஜெ இல்லாத நிலையில் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பவர்களில், கமலஹாசனும் ஒருவர்-ஆர்.பி உதயகுமார் # Mr Rp! all for TRP

===================

10 தினகரனால் ஆட்சியிலும் , கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது - ஆர்.பி உதயகுமார் குட்டை னு இப்போ நீங்கதானே சொன்னீக?

=================


11 வாடகை தராததால் லதா ரஜினிகாந்த் நடத்தும் பள்ளியை கட்டட உரிமையாளர் பூட்டினார் "போர்" வரும்போது பாத்துக்கலாம்னு இருந்தார் போல

==================

12 கரூரிலிருந்து திருச்சி வரை காவிரி ஆற்றில் மணல் அள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை
இருந்து கரூர் வரை"அள்ளலாமா?னு கேட்பாக

===================

13 அதிமுக இன்னும் சில நாட்களில் 4, 5 அணிகளாக மாறும் : துரைமுருகன் # இலவு காத்த கிளி

==================

14 நில உரிமையாளர் தொல்லை கொடுக்கிறார்: லதா ரஜினிகாந்த் #10 கோடி பில்லைபாக்கி வெச்சா தொல்லை தராம ஆசீர்வாதமா தருவாங்க?

================

15 இனி தமிழகத்தின் அடுத்த

அம்மா மோடி தான் - தமிழிசை
# அவ்ளோ"சொத்துக்களை சேர்த்து வெச்ச மாதிரி தெரிலயே?


====================


16 BMW'ல் இருந்து Range Rover'க்கு மாறியது பிரதமர் மோடியின் அலுவல் வாகனம். இதுவரை மயில்வாகனத்தை மாத்தலை

====================


17 ட்ரம்பின் ட்விட்டால்

அமேசான் நிறுவனத்தின்
5.7பில்லியன் டாலர்
# ஒரே ஒரு ட்வீட்ல ரிவிட் அடிச்ட்டாரு
பங்குகள் வீழ்ச்சி


==================

18 இன்னும் 13 நாட்களில் ரஜினி புதிய கட்சி தொடங்குவார்: தமிழருவி மணியன் # ரஜினிக்காக வாய்ஸ் தர்றாரு,ஸ்கூல் வாடகையை எப்போ யார் தருவாக?

========================


19 சிலிப்பர் செல்" போல் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்; தேவைப்பட்ட நேரத்தில் ஆதரவாக வருவார்கள் : தினகரன் # MLA க்களுக்கு செம சம்பாத்யம்தான்

===================


20 தமிழகத்திற்கு பாதிப்பு இல்லாமல் காவிரியில் அணை கட்டி கொள்ளலாம்

-நீதிமன்றம் # அணை"கட்றதே தமிழ்நாட்டுக்கு வர்ற தண்ணியை தடுக்கத்தான்

=================

1 comments:

Unknown said...


Appreciate the recommendation. Let me try it out. gmail sign in