Wednesday, February 09, 2011

நல்ல நேரம் VS கெட்ட நேரம்

http://lh5.ggpht.com/_ilb4DaDhZFA/SSHVJH4vz_I/AAAAAAAAA70/DuWpsXHs66w/s800/sel.png
ஒரு மனுஷனுக்கு நல்ல நேரம் எப்போ ஸ்டார்ட் ஆகும்னு யாராலும் சொல்ல முடியறதில்ல.ஆனா ஒவ்வொரு மனுஷனோட வாழ்க்கைலயும், நல்ல நேரமும் உண்டு. கெட்ட நேரமும் உண்டு. சில வருடங்களுக்கு முன்னால கோகுலம் கதிர் என்ற மாத இதழில் காதலர் தினத்துக்கான ஸ்பெஷல் கவிதைப்போட்டி வெச்சாங்க.அதுல கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்குனது எஸ் சி கலையமுதன் சுக்கம்பட்டி, சேலம்... அவர் இப்போ சாதாரண கிளார்க் உத்தியோகம்தான் பார்க்கிறார்.2வது பரிசு வாங்குனது நான். அந்த கவிதை தான் இங்கே.. நானும் ஏதோ குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

பிளாக்ல கொட்டறதை சொல்லலை. ஆஃபீஸ்ல கொட்டற குப்பையை சொன்னேன்.3 வ்து பரிசு வாங்குனவரு தஞ்சை  யுக பாரதி.இப்போ பாடல் ஆசிரியரா சினிமால ஜொலிக்கறாரு.நான் பொறாமைலயோ, ஆற்றாமைலயோ சொல்றதா யாரும் நினைக்காதீங்க..சும்மா ஒரு தகவலா பரிமாறிக்கிறேன்.. அவ்வளவுதான்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmp8yjwW0hbiU47jvyVN9-5huv_rpmqw9phxpGf0Wu_CJ3ho3ZjNaq9O1peNgY_AkCwhuFV8C4kFjx-kBE6Q4vQBiTblcwHN770QH6OA9Eh8SXQi0o3UxcaPU_1DSSY8MF7pDBuBDZNGmu/s1600/tear-drop-Widescreen+Wallpapers-Angelslover.com.jpg
கவிதைப்போட்டிக்கான தலைப்பு காதல் நேரம்

ஒவ்வொரு முறை வீட்டின் கூரையில்

காகம் வந்து கரையும்போதும்,

காற்றினால் வீட்டின் வாசல் கதவு

லேசாய் ஆடும்போதும்,

பக்கத்து வீட்டில் செருப்பு விடும் சத்தம் கேட்கும்போதும்,

என் வலது கண் துடிக்கும்போதும்

இடது கண் துடிக்காத போதும்,

ரோஜாவோடு குல்கந்து கலந்த வாசம் வீசும்போதும்,

கொலுசு சத்தம் கேட்காத எச்சரிக்கை நடை பாத ஒலியின் போதும்

எட்டிப்பார்ப்பேன்

அவள்தான் வந்து விட்டாளோ என.....

http://in.yimg.com/movies/movietalkies/20080110/18/jodhaaakbar-2008-1b-1_1199969127.jpg
டிஸ்கி - இந்த கவிதைப்போட்டில வின் பண்ணுனவங்களுக்கு வால்கிளாக் பரிசுன்னும், அதை (ரேப் ஸ்பெஷலிஸ்ட்) மன்சூர் அலிகான் தருவார்னும் அறிவிச்சாங்க... 13 வருஷம் ஆகியும் இன்னும் தர்லை...சமீபத்துல ஃபோன் பண்ணி பத்திரிக்கை ஆஃபீஸ்ல கேட்டேன்...எடிட்டர்ட்ட கேட்டு சொல்றோம்னாங்க... ( நான் நினைக்கிறேன்.. ஃபோனை  அட்டெண்ட் பண்ணுனதே அந்த எடிட்டராத்தான் இருக்கும்னு.. ஹா ஹா)

32 comments:

மாணவன் said...

vadai... :))

மாணவன் said...

கவிதை சூப்பர் பாஸ்...:))

MANO நாஞ்சில் மனோ said...

வடை போச்சே...

மாணவன் said...

//அதுல கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்குனது எஸ் சி கலையமுதன் சுக்கம்பட்டி, சேலம்... அவர் இப்போ சாதாரண கிளார்க் உத்தியோகம்தான் பார்க்கிறார்.2வது பரிசு வாங்குனது நான். அந்த கவிதை தான் இங்கே.. நானும் ஏதோ குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

பிளாக்ல கொட்டறதை சொல்லலை. ஆஃபீஸ்ல கொட்டற குப்பையை சொன்னேன்.3 வ்து பரிசு வாங்குனவரு தஞ்சை யுக பாரதி.இப்போ பாடல் ஆசிரியரா சினிமால ஜொலிக்கறாரு.நான் பொறாமைலயோ, ஆற்றாமைலயோ சொல்றதா யாரும் நினைக்காதீங்க..சும்மா ஒரு தகவலா பரிமாறிக்கிறேன்.. அவ்வளவுதான்.//

இதுலேருந்து என்னா தெரியுது யாரு பர்ஸ்ட்டுங்குறது முக்கியம் இல்ல கடைசிலேருந்து யாரு பர்ஸ்ட்டுக்கு (முன்னுக்கு) வராங்கறதுதான் முக்கியம்... :)))

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை அருமை....

வைகை said...

அருமையான கட்டுரை தொடருங்கள்... :))

வைகை said...

மாணவன் said...
/

இதுலேருந்து என்னா தெரியுது யாரு பர்ஸ்ட்டுங்குறது முக்கியம் இல்ல கடைசிலேருந்து யாரு பர்ஸ்ட்டுக்கு (முன்னுக்கு) வராங்கறதுதான் முக்கியம்... :))////

இந்த சிலம்பு , சிம்புன்னு பேரு உள்ள ஆளுகளே இப்பிடித்தானோ? :)))

வைகை said...

மாணவன் said...
கவிதை சூப்பர் பாஸ்...:)///


ஓஓ...இது கவிதையா? அப்ப கவிதை சூப்பர் பாஸ்...:

மாணவன் said...

//வைகை said...
அருமையான கட்டுரை தொடருங்கள்... :))//

என்னாது கட்டுரையா??? :))

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை சூப்பரா இருக்குலே மக்கா.......
அந்த கடிகாரத்தை கண்டிப்பா போராடியாவது வாங்கிரும் ஓய்....

மாணவன் said...

// வைகை said...
மாணவன் said...
/

இதுலேருந்து என்னா தெரியுது யாரு பர்ஸ்ட்டுங்குறது முக்கியம் இல்ல கடைசிலேருந்து யாரு பர்ஸ்ட்டுக்கு (முன்னுக்கு) வராங்கறதுதான் முக்கியம்... :))////

இந்த சிலம்பு , சிம்புன்னு பேரு உள்ள ஆளுகளே இப்பிடித்தானோ? :)))//

உண்மையத்தானே அண்ணே சொன்னோம்... ஹிஹி

நீங்களே பாருங்க நம்ம சிபி சார் விசயத்துலகூட மூனாவது பரிசு வாங்குன கவிஞர் யுகபாரதி இன்னைக்கு இவங்களவிட டாப்பா இருக்காருல்ல...

சிபி சார்கூட பரவாயில்ல... ஆனால் முதல் பரிசு வாங்குனவரு இன்னும் கிளார்க்காதான் இருக்காராம்... :)))

அதனால சொன்னேன்... :))

மாணவன் said...

// வைகை said...
மாணவன் said...
கவிதை சூப்பர் பாஸ்...:)///


ஓஓ...இது கவிதையா? அப்ப கவிதை சூப்பர் பாஸ்...://

அதவிட உங்க கமெண்ட் சூப்பர் :))

வெளங்காதவன்™ said...

எம்புட்டு போன் போட்டாலும் அசரவே மாட்டீங்களா?

போன் போட்டுத் திட்டனும்னு நெனச்சேன்...
ஜஸ்ட் மிஸ்ஷு...

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ் தலைப்ப பார்த்ததும் கொஞ்சம் மிரண்டுபோயிட்டேன் பதிவு படிச்சதுக்கு அப்புறம்தான் புரிந்தது பாஸ்

ரஹீம் கஸ்ஸாலி said...

வால்கிளாக் உங்களுக்கு கிடைக்கலை சரி. முதல் பரிசு பெற்ற எஸ் சி கலையமுதனுக்கும், மூன்றாம் பரிசு பெற்ற யுக பாரதிக்குமாவது பரிசு கிடைச்சுச்சான்னு கேட்டீங்களா இல்லியா?

கலையன்பன் said...

கவிதையும்
கவிதையின் பின்னுள்ள
கதையும் அருமை!

raji said...

ஃபர்ஸ்ட் செகண்ட் ரேங்கிங்ல என்ன இருக்கு சார்?
கவிதை நல்லாருக்காங்கறதுதான் முக்கியம்
கவிதை சூப்பர்

சேலம் தேவா said...

//இந்த கவிதைப்போட்டில வின் பண்ணுனவங்களுக்கு வால்கிளாக் பரிசுன்னும், அதை (ரேப் ஸ்பெஷலிஸ்ட்) மன்சூர் அலிகான் தருவார்னும் அறிவிச்சாங்க... 13 வருஷம் ஆகியும் இன்னும் தர்லை..//

இது உங்களுக்கு நல்ல நேரம்.அந்தாளு கையில வாங்கறதுக்கு... :)

சேலம் தேவா said...

//இந்த கவிதைப்போட்டில வின் பண்ணுனவங்களுக்கு வால்கிளாக் பரிசுன்னும், அதை (ரேப் ஸ்பெஷலிஸ்ட்) மன்சூர் அலிகான் தருவார்னும் அறிவிச்சாங்க... 13 வருஷம் ஆகியும் இன்னும் தர்லை..//

இது உங்களுக்கு நல்ல நேரம்.அந்தாளு கையில வாங்கறதுக்கு... :)

சேலம் தேவா said...

மத்த ரெண்டுபேர் கவிதைய போட்டாலும் நாங்க படிப்போம். :)

Philosophy Prabhakaran said...

குருவும் சிஷ்யனும் போட்டி போட்டு பதிவெழுதுறீங்க தானே...#டவுட்

Philosophy Prabhakaran said...

ஸ்டில்ஸ் எல்லாம் படு மொக்கை...

Philosophy Prabhakaran said...

// (ரேப் ஸ்பெஷலிஸ்ட்) மன்சூர் அலிகான் //

அடப்பாவிகளா... இப்படி எல்லாம் வேற பட்டம் கொடுக்குறாங்களா...

Philosophy Prabhakaran said...

உங்களுக்கு நேரம் சரியில்லை போல இருக்கு...

Unknown said...

கவித சூப்பரு

13 வருசத்துக்கு முந்தய மாடல் கடிகாரம் அவங்க கிட்டே இப்போ ஸ்டாக்கு இருந்திருக்காது.

இல்லனா உங்க பெற சொல்லி ஏற்கனவே அந்த எடிட்டரு பிச்சகாரத்தனமா ஆட்டைய போட்டுட்டாரோ என்னவோ ஹி ஹி!!

Unknown said...

ஆடிட்டர் ஆட்டைய போட்டிட்டார் போல..ஹிஹி

கோவை நேரம் said...

சரி விடுங்க. பாஸு....இந்த காதலர் தினத்துக்கு கண்டிப்பா கொடுத்திடுவாங்க ....

Unknown said...

என் வலது கண் துடிக்கும்போதும்

இடது கண் துடிக்காத போதும்


இது எல்லாம் காதலில் தான் சாத்தியம்


அருமையான கவிதை உங்களை சமுகம் ரொம்ப மிஸ் பண்ணிட்டது

Speed Master said...

போன் செய்த காசுக்கு நீங்களே ஒரு வால் கிளாக் வாங்கிய்ருக்கலாம்

Arun Prasath said...

கவிதை எல்லாம் சூப்பர்... இது உங்க நல்ல நேரமா கெட்ட நேரமா?

செல்வா said...

கவிதை அருமை அண்ணா ..
பரிசு கிடைக்கலேன்னா கவலைய விடுங்க .. ஹி ஹி

Thirumalai Kandasami said...

இது நல்லா இருக்கே ..

நானும் ஒரு பத்து எழுதி கவிதைனு சொன்னேன்.யாரும் ஏத்துக்கலை.
ஒரு ரெண்டு மட்டும் லைட்டா கவிதை மாதிரி தெரியும்..படிச்சிட்டு ,மறக்காம கமெண்ட் போடுங்க ..
அந்த லிங்க் இதோ,,

http://enathupayanangal.blogspot.com/2010/12/blog-post.html