Showing posts with label RHYME. Show all posts
Showing posts with label RHYME. Show all posts

Wednesday, February 09, 2011

நல்ல நேரம் VS கெட்ட நேரம்

http://lh5.ggpht.com/_ilb4DaDhZFA/SSHVJH4vz_I/AAAAAAAAA70/DuWpsXHs66w/s800/sel.png
ஒரு மனுஷனுக்கு நல்ல நேரம் எப்போ ஸ்டார்ட் ஆகும்னு யாராலும் சொல்ல முடியறதில்ல.ஆனா ஒவ்வொரு மனுஷனோட வாழ்க்கைலயும், நல்ல நேரமும் உண்டு. கெட்ட நேரமும் உண்டு. சில வருடங்களுக்கு முன்னால கோகுலம் கதிர் என்ற மாத இதழில் காதலர் தினத்துக்கான ஸ்பெஷல் கவிதைப்போட்டி வெச்சாங்க.அதுல கலந்துக்கிட்டு முதல் பரிசு வாங்குனது எஸ் சி கலையமுதன் சுக்கம்பட்டி, சேலம்... அவர் இப்போ சாதாரண கிளார்க் உத்தியோகம்தான் பார்க்கிறார்.2வது பரிசு வாங்குனது நான். அந்த கவிதை தான் இங்கே.. நானும் ஏதோ குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

பிளாக்ல கொட்டறதை சொல்லலை. ஆஃபீஸ்ல கொட்டற குப்பையை சொன்னேன்.3 வ்து பரிசு வாங்குனவரு தஞ்சை  யுக பாரதி.இப்போ பாடல் ஆசிரியரா சினிமால ஜொலிக்கறாரு.நான் பொறாமைலயோ, ஆற்றாமைலயோ சொல்றதா யாரும் நினைக்காதீங்க..சும்மா ஒரு தகவலா பரிமாறிக்கிறேன்.. அவ்வளவுதான்.
http://4.bp.blogspot.com/_-unA16njxiM/TRyKZf8Yh0I/AAAAAAAAAPk/4osguzqORKk/s1600/tear-drop-Widescreen%2BWallpapers-Angelslover.com.jpg
கவிதைப்போட்டிக்கான தலைப்பு காதல் நேரம்

ஒவ்வொரு முறை வீட்டின் கூரையில்

காகம் வந்து கரையும்போதும்,

காற்றினால் வீட்டின் வாசல் கதவு

லேசாய் ஆடும்போதும்,

பக்கத்து வீட்டில் செருப்பு விடும் சத்தம் கேட்கும்போதும்,

என் வலது கண் துடிக்கும்போதும்

இடது கண் துடிக்காத போதும்,

ரோஜாவோடு குல்கந்து கலந்த வாசம் வீசும்போதும்,

கொலுசு சத்தம் கேட்காத எச்சரிக்கை நடை பாத ஒலியின் போதும்

எட்டிப்பார்ப்பேன்

அவள்தான் வந்து விட்டாளோ என.....

http://in.yimg.com/movies/movietalkies/20080110/18/jodhaaakbar-2008-1b-1_1199969127.jpg
டிஸ்கி - இந்த கவிதைப்போட்டில வின் பண்ணுனவங்களுக்கு வால்கிளாக் பரிசுன்னும், அதை (ரேப் ஸ்பெஷலிஸ்ட்) மன்சூர் அலிகான் தருவார்னும் அறிவிச்சாங்க... 13 வருஷம் ஆகியும் இன்னும் தர்லை...சமீபத்துல ஃபோன் பண்ணி பத்திரிக்கை ஆஃபீஸ்ல கேட்டேன்...எடிட்டர்ட்ட கேட்டு சொல்றோம்னாங்க... ( நான் நினைக்கிறேன்.. ஃபோனை  அட்டெண்ட் பண்ணுனதே அந்த எடிட்டராத்தான் இருக்கும்னு.. ஹா ஹா)

Sunday, February 06, 2011

சகி...நீ நடிக்கறது சகிக்கலை

http://keturahweathers.theworldrace.org/blogphotos/theworldrace/keturahweathers/love2.jpg
யதார்த்த உலகம்  நமக்கெதற்கு?

வா, பெண்ணே.. முகமூடியை அணிந்து கொள்வோம்..


மனசு நினைப்பதை உன் கண்கள் சொல்ல

வெளியே வர முட்டுக்கட்டையாய்

உன் மவுனம்...

தினமும் பார்த்தும் பாராதது போல்

உன் அலட்சிய முகபாவம்.

நடைமுறை உலகில்

நாலு பேருடன்

பொய்யாய் சிரித்து செயற்கையாய் நடந்து ...
 http://farm4.static.flickr.com/3214/2746389145_652abe6215.jpg
யதார்த்த உலகம்  நமக்கெதற்கு?

வா, பெண்ணே.. முகமூடியை அணிந்து கொள்வோம்..

உலக அரங்கில

நல்ல நடிகர்கள் என்று பெயர் எடுப்போம்.

Wednesday, January 26, 2011

குடியரசு தின ஸ்பெஷல் சிந்தனைகள்

http://www.udumalaiinfo.com/news/wp-content/uploads/2010/01/indexphp.jpg
1.  குடியரசு விழா கொண்டாட

     தேடப்படுகிறது

     தியாகிகள் லிஸ்ட்.

http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/nnozizi//mywebdunia/UserData/DataU/unnikris/images/restricted/20-03-2009/babies_107_.bmp

2. எட்டு மணிக்கு வரும் கலெக்டருக்காக

    ஆறு மணியிலிருந்தே பசியோடு

   காத்துக்கொண்டிருந்தன குழந்தைகள்.


http://1.bp.blogspot.com/_8JnUyGhEj_U/S_flMbcS95I/AAAAAAAAAR0/onE2-gxkoxg/s1600/pic_1178393734.jpg

3.  ஆகஸ்ட் 14, அக்டோபர் 1,ஜனவரி 25

  குடி மக்களிடம் விழிப்புணர்வு

விடிஞ்சா டாஸ்மாக் லீவ்..இப்பவே வாங்கி ஸ்டாக் வெச்சுக்கோ..

http://4.bp.blogspot.com/_ai8JhTp6ops/Sg73Xg6xwRI/AAAAAAAAAjA/_a2HQS_PYIY/s400/Boss.JPG


4. குடியரசு தின ஸ்பெஷல் நிகழ்ச்சி

கலைஞர் டி வி யில்

நமீதாவின் மனம் திறந்த பேட்டி.

Saturday, January 22, 2011

3 லைன்ல எழுதிட்டா அது ஹைக்கூவா?

http://www.howtogetridofstuff.com/wp-content/uploads/how-to-get-rid-of-chapped-lips.jpg 
1. உச்சரிக்கும்போது

உதடுகள் கூட ஒன்று சேர்வதில்லை

காதல்http://vadakaraivelan.files.wordpress.com/2008/09/currencyjpg.jpg
2. தொட்டுப்பார்க்க மட்டுமே சொந்தம்

பேங்க் காஷியர்

எண்ணும்  பணம்.http://upload.wikimedia.org/wiktionary/ta/thumb/3/36/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg/210px-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF.jpg
3. கல்லறையே கருவறை

சமாதியில் 

முளைத்த செடி.http://lh4.ggpht.com/_3XkpeCTgBBA/Sjd29T_HjPI/AAAAAAAADqM/tHqoF1ldj-0/s400/roma.jpg
4.மச்சினியை ரசிக்கையில்

மனைவியின் முகம் ஞாபகம்.

இடமாறு தோற்றப்பிழை.


5.நிழலை விட நீ மோசம்...

இரவில் கூட என் 

பின்னாலேயே வந்து விடுகிறாயே..உன் நினைவுகள்.

http://lh4.ggpht.com/_3XkpeCTgBBA/SJ0O_PZmg4I/AAAAAAAAAwo/1_vro-1i1nA/s800/anjali_or_anupama092.jpg
6.   கூட வரும் மனைவி மட்டும் கண்ணகியாகவும்

எதிர்ப்படும் மற்றவர் மனைவிகள் மாதவிகளாகவும்

இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது ஆணகள் மனது.

டிஸ்கி 1- ஹைய்யா .. நானும் ஹைக்கூ எழுதிட்டேன்.. இதுதான் முதல்ல வெச்ச டைட்டில் .ஆனா இதைப்படிச்சுட்டு நீங்க என்ன சொல்லப்போறீங்கன்னு யோசிச்சுப்பார்த்து அந்த கமெண்ட்டையே டைட்டில் ஆக்கீட்டேன்.ஹி ஹி எங்களை எல்லாம் யாரும் இறக்க முடியாது.. நாங்களே இறக்கிக்குவோம்ல..


டிஸ்கி 2 - மேலே உள்ள படங்களில் இருப்பது என் மச்சினியும் அல்ல மனைவியும் அல்ல.. ஆனா அப்படி இருக்க அவங்களுக்கு சம்மதம்னா நமக்கும் சம்மதமே.. ஹி ஹி ....இப்படிக்கு கிடைச்ச ஃபிகரை வளைச்சுப்போட துடிப்போர் சங்கம்.கவர்மெண்ட் அப்ரூவ்டு ( ரொம்ப முக்கியம்)

Wednesday, January 05, 2011

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் 2

http://1.bp.blogspot.com/_-Uuy8SKqbgw/SxFbmZTcKsI/AAAAAAAABu8/mfMo4QMESGA/s200/vikatan.jpg 
கோடம்பாக்கத்திலும் சரி,இலக்கியவாதிகள்,படைப்பாளிகள்,எழுத்தாளர்கள்,வாசகர்கள் வட்டத்திலும் சரி ஆனந்த விகடனில் ஒரு படைப்பு வருகிறது என்றால் அதற்கு கிடைக்கும் 
மரியாதையே தனி.எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டம் ஆனந்த விகடனின் பொற்காலம் எனலாம்.மற்ற இதழ்களில் 10 ஜோக்ஸ் வருவதும் ஆனந்த விகடனில் ஒரு ஜோக் வருவதும் ஒன்றுதான்.

அதே போல் கவிதைகள் கணையாழி இதழில் வந்தால் பெருமைதான் என்றாலும் ஆனந்த விகடனில் வந்தால் 8 லட்சம் வாசகர்களை அது சென்றடைகிறது என்பதால் அதன் வீச்சு அதிகம்.

படைப்பு அனுப்பி 7 நாட்களில் பரிசீலித்து பிரசுரம் செய்து விடுகிறார்கள் என்பது மற்ற பத்திரிக்கைகளோடு ஒப்பிடுகையில் செம ஸ்பீடு.வாரா வாரம் வியாழன் அன்று விகடன் வருகிறது என்றால் நாம் புதன் கிழமை ஒரு படைப்பை அனுப்பினால் அது பிரசுரிக்க தகுதி பெற்றால் அடுத்த வியாழன் அன்று பிரசுரம் ஆகி விடும்.

முகவரி - ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை,சென்னை 600008. மெயில் அட்ரஸ் [email protected] 

1.ஜோக்ஸ் - அந்தந்த வாரத்தில் டாப்பிக்கல் மேட்டர் என்ன என்று பாருங்கள்.அதை நையாண்டி செய்து எழுதுங்கள்.அரசியல் நையாண்டிகளுக்கு முன்னுரிமை தருவார்கள்.டாக்டர் ராம்தாஸ்,கலைஞர், ஜெ ,கேப்டன் இவர்களது அறிக்கைகளை தொடர்ந்து கவனித்து வாருங்கள்.(அதுவே செம காமெடியாக இருக்கும் )அதை நக்கல் அடித்து எழுதினால் போதும்.உதாரணத்துக்கு ஆ ராசா மேட்டர் பாப்புலர் ஆன வாரத்தில் ஜோக்பாட் அந்தஸ்துடன் ரூ 300 பரிசு பெற்ற  ஒரு ஜோக் 

என் பையனை ராசா மாதிரி வளர்க்கப்போறேன்..

வேணாம்ங்க.. நல்ல படியா வளருங்க..

மேட்டர் ரொம்ப சிம்ப்பிளாகவும், சுருக்கமாகவும், சொல்ல வந்த கருத்தை நச் என சொல்லி இருப்பதையும் பாருங்கள்.தனி மனித அந்தரங்க தாக்குதல்கள் இல்லாமல் பொது வாழ்க்கை பற்றி மட்டும் எழுதுங்கள்.ஏ ஜோக்குகள்,வக்கிர எழுத்துக்கள் இவற்றை தவிர்க்கவும்.உத்வேகத்துடன் எழுத வேண்டும்.ஒரு ஜோக்கிற்கு ரூ 100 சன்மானம் தர்றாங்க.இதில் என்ன காமெடி என்றால் ஆனந்த விகடன் ரூ 6 என விற்கப்பட்ட போதும் சன்மானம் ஒரு ஜோக்கிற்கு ரூ 50 என தந்தார்கள்.இரண்டரை மடங்கு விலை ஏறிய பிறகு விலை ஏற்ற மற்றும் விகிதாச்சார முறைப்படி பார்த்தால் ரூ 250 தர வேண்டும். ஆனால் அப்படி எல்லா, காசை கணக்கு பார்த்து எழுதினால் முன்னேற முடியாது.

நமது படைப்பு பிரசுரம் ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் எழுத வேண்டும்.பொதுவாக ஒரு துறையில் நாம் இறங்கி வெற்றி பெற வேண்டும் எனில் அதே துறையில் வெற்றி பெற்ற மற்ற சாதனையாளர்களை கவனிக்க வேண்டும்.காப்பி அடிக்க அல்ல. இன்ஸ்பைரேஷனுக்காக. 
ஆனந்த விகடனில் ஜோக் எழுதி சாதனை படைத்தவர்கள் 3 பேர்.
1. ஹாய் மதன்.  2 படுதலம் சுகுமாரன் 3 . வி சாரதிடேச்சு

முன்ஜாக்கிரதை முத்தண்ணா,சிரிப்புத்திருடன் சிங்காரவேலு போன்ற தலைப்புகளில் மதனின் ஜோக்குகள் பக்கம் பக்கமாக வந்து ஹிட் ஆனது. இவருக்கு கார்ட்டூன் போட வரும் என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்.ஆனால் நாம் ஜோக் மட்டும் கார்டில் எழுதி அனுப்பினால் போதும் .ஒரு கார்டுக்கு 2 ஜோக் மட்டும் எழுதவும்.எழுதி கீழே உங்கள் பெயர் ,ஊர் பெயர் எழுதவும்,பின் பக்கத்தில் அட்ரஸ் எழுதவும்.ஊரின் மெயின் போஸ்ட் ஆஃபீசில் போஸ்ட் செய்யவும்.

எம் ஜி ஆரின் ஆட்சிக்காலத்தில் ஆனந்த விகடனில் வந்த அட்டைப்பட ஜோக்கிற்காக அதன் ஆசிரியர் ஒரு நாள் சிறையில் இருந்த வரலாற்று சிறப்பு மிக்க ஜோக்கை எழுதி புகழ் பெற்றவர் படுதலம் சுகுமாரன்,

வி சாரதி டேச்சு வார்த்தை ஜால ஜோக் எழுதுவதில் கில்லாடி.ஒரு சாம்ப்பிள்.,
நானும் ,ரஜினியும் ஒரே இலைலதான் சாப்பிட்டோம்.

நிஜமாவா? அவ்வளவு நெருக்கமா?

ம்ஹும்,அவரும் வாழை இலைலதான் சாப்பிட்டார்,நானும் வாழை இலைலதான் சாப்பிட்டேன்.

நீங்க 10 ஜோக் எழுதுனா அதை உங்க நண்பர்கள்,நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.ஏன்னா நாம எது எழுதுனாலும் நம்ம மனசுக்கு அது பிரமாதம் என்றுதான் தோன்றும்.மற்றவர்கள் சொல்வதே சரியாக இருக்கும்..

டாக்டர்கள் ஜோக்,சினிமா சம்பந்தப்பட்ட ஜோக் ஈசியா செலக்ட் ஆகும்.சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களைக்கண்டு நாம் பொங்கி எழுவோமே,அந்தக்கோபத்தைக்கூட ஜோக்காக மாற்றலாம். 2 பக்க கட்டுரையை விட 2 வரி ஜோக்கின் வீரியம் அதிகம்.

ஒரு பத்திரிக்கையை வாங்கினால் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி பிடிக்கும்,ஆனால் எல்லோருக்கும் பிடித்த பகுதி ஜோக் தான்.சிந்திக்க ,எழுத எல்லாத்துக்கும் ஜோக்தான் பெஸ்ட்.

ஆரம்பத்தில் நான் கவிதைதான் எழுதி வந்தேன்..அது மக்களை போய் அதிகம் ரீச் ஆகவில்லை(ஒரு வேளை எனது சரக்கு சரி இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்)பிறகுதான் என் ரூட்டை மாற்றினேன்.

ஆனந்த விகடனில் வந்த எனது முதல் ஜோக்

ஜட்ஜ் - பஸ்ல மணிபர்சை  பிக்பாக்கெட்அடிச்சியா?

கைதி - மணி பர்சை பாலு அடிச்சான்,கந்தசாமி பர்சைத்தான் நான் அடிச்சேன்.

ஆனந்த விகடன் அட்டைப்படத்தில் வந்த எனது முதல் ஜோக்

என் ரத்தத்தின் ரத்தமே அப்படின்னு மேடைல பேசுனது தப்பா போச்சு.

ஏன் தலைவரே?

கட்சி பல குரூப்பா பிரிஞ்சிடுச்சு.

2. கவிதை 

ஆனந்த விகடனில் கவிதை எழுதி வரவைப்பதும் ,அரசியல்வாதியை நேர்மையாக நடக்கவைப்பதும் ஒன்றுதான். மிக அரிது. ஆனால் ஆதலையூர் சூர்யகுமார்,நாவிஷ் செந்தில்குமார்,டி அய்யப்பன் போன்றவர்கள் சர்வசாதாரணமாக கலக்கி வருகிறார்கள். ஒரு பக்க கவிதைக்கு ரூ 300 தர்றாங்க. கவிதையின் சைஸை பொருத்து ரூ 100 ,  ரூ 200 என மாறும்.

ஏ4 வெள்ளைத்தாளில் எழுதி கவரில் வைத்து அனுப்பவும்.காதல் கவிதைகள் எழுதுவதை விட வித்தியாசமான அனுபவங்கள், சமூக அவலங்கள்,பெண்கள் மனது, குழந்தைகள் சம்பந்தப்பட்ட கவிதைகள் அதிகம் வருகிறது.

3. சிறுகதை - முன்பெல்லாம் விகடனில் 4 கதை வந்தது.இப்போ ட்ரெண்ட் மாறிடுச்சு. கதையை யாரும் விரும்ப்பி படிக்கறதில்லை,பொறுமையும் இல்லை.மேம்போக்காக புரட்டுவதே  ஃபேஷன் ஆகிடுச்சு. ஏ4 ஷீட்டில் 8 பக்கம் வரும்படி எழுதினால் விகடனில் 3 பக்கம் வரும்படி அமையும். 2 மாதம் கழித்து வரும் (செலக்ட் ஆனா) . நீங்கள்  படைப்பு அனுப்பி 1 மாதத்தில் உங்களுக்கு தகவல் வந்துடும். உங்க கத செலக்ட் ஆகி இருக்கு. இந்த கதை வேறு புக்குக்கு அனுப்பலை, என் சொந்தக்கற்பனையே என உறுதி மொழிக்கடிதம் கேட்டு வாங்கிக்கொள்வார்கள்.
பொதுவாக விகடனில் கட்டுரைகள் எழுத உள்ளேயே ஆள் இருக்காங்க. அதனால அதை விட்டுடுங்க. இப்போ புதுசா அலை பேசுதே என்ற பகுதியில் ட்விட்டரில் நம் மக்கள் ட்வீட்டுவதை போடறாங்க, இதில் சாதனை படைக்கும் அளவு படைப்புகள் வந்தது பரிசல்காரன் கிருஷ்ணகுமார், திருப்பூர்.இவரை எனக்கு 15 வருடங்கள் முன்பே தெரியும். மாத இதழ்களில் கவிதையில் கலக்கியவர். கே பி கிருஷ்ணகுமார் திருப்பூர் என வரும், பட்டுக்கோட்டை பிரபாகர் நடத்தும் ஊஞ்சல் மாத இதழில் பின்னி எடுத்தார்.
சிலர் பத்திரிக்கைகளுக்கு படைப்பு அனுப்பும்போது எடிட்டருக்கு கவரிங்க் லெட்டர் வைத்து அனுப்புவது உண்டு. டியர் சார் ஒரு கவிதை அனுப்பி இருக்கேன் ,தயவு செஞ்சு பிரசுரிக்கவும்  என இருக்கும் இது தேவை இல்லாதது. அதே போல் பத்திரிக்கைக்கு ஃபோன் போட்டு சார் நான் அனுப்புன மேட்டர் வந்துச்சா? செலக்ட் ஆச்சா? எனவும் கேட்க வேண்டாம் . 

தகுதி உடைய படைப்புகள் தானாக தேர்வு பெறும். ஆர்வக்கோளாறில் நம் தகுதியை இழக்கக்கூடாது.

வலைப்பூக்கள் நடத்தும் பதிவர்கள் அனைவரும் பத்திரிக்கை உலகை கலக்க வேண்டும் என்பதே என் ஆசை.ஏன் எனில் பதிவுலகம் அதிக பட்சம் 10,000 பேர் படிக்கறாங்க. அதிலும் நம்ம எழுத்தை எல்லாம் அதிக பட்சம் 2000 பேர்தான் படிக்கறாங்க. ஆனால் பத்திரிக்கை யில் எழுதினால் அது குறைந்தபட்சம் எட்டு லட்சம் மக்களை சென்றடைகிறது என்பதை மறக்க வேணாம்.மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

டிஸ்கி - 1. அடுத்த வாரம் என்றதும் அப்பாடா ,பிளாக் 6 நாள் லீவா?தப்பிச்சோம்டா சாமி என யாரும் மனப்பால் குடிக்கவேண்டாம் (அதென்ன மனப்பால்?மன டீ ,மன காப்பி எல்லாம் கிடையாதா?) இந்தத்தொடர் அடுத்த வாரம் மீண்டும் வரும் , மற்றபடி எனது மொக்கை ஜோக்குகள்  தினமும் தொடரும்

டிஸ்கி 2 - சிலர் என்னை வம்புக்கு இழுத்து பதிவு போடறாங்க,நான் கோபப்பட்டு பதிலடி கொடுப்பேன்,பதிவுலகில் அடுத்த சண்டையை ஆரம்பிப்போம் என ,அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது சாரி எனக்கு சண்டை போடத்தெரியாது,மொக்கை பதிவுகளை மட்டுமே எழுத தெரியும்.எந்த எழுத்து நல்ல எழுத்து என்பதை காலம் தீர்மானிக்கும்.

Wednesday, December 29, 2010

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி?

http://www.viyapu.com/news/wp-content/uploads/2009/10/pen1.jpg
கடந்த 5 மாதங்களாக நான் பார்வையிட்ட பதிவுகளை ,பதிவர்களின் திறமையை பார்க்கும்போது ,பத்திரிக்கைத்துறைகளில் எழுதி கலக்க சரியான ஆட்கள் நம் பதிவர்கள்தான் என எண்ணத்தோன்றுகிறது.எனது 18  வருட பத்திரிக்கை உலக அனுபவங்களை வைத்து பதிவர்களுக்கு உபயோகமாக ஒரு பதிவு போட்டால் என்ன என தோன்றியது.ஜன ரஞ்சகப்பத்திரிக்கைகளில் எப்படி எழுதுவது என்பதைப்பற்றி ஆழமான பார்வையாக இது இருக்கும்.


இப்போது வெளி வரும் தமிழ்ப்பத்திரிக்கைகளில் தின மலர் வாரமலர் சன்மானம் தருவதிலும்,படைப்புகளை வெளியிட்டு வாசகர்களை ஊக்குவிப்பதிலும் முன்னணியில் இருக்கிறது.பிறகு ஆனந்த விகடன்,குமுதம்,குங்குமம் என வரிசை நீள்கிறது.வாரம் ஒரு பத்திரிக்கை பற்றி விளக்கமாக பார்ப்போம்.ஈரோடு,தஞ்சை,சேலம்,திருச்சி உட்பட்ட ஏரியாக்களுக்கு தனி வாரமலர் புக் வருகிறது.அதற்கான முகவரி தினமலர் வாரமலர். த பெ எண் 7225,சென்னை 600008. அது போக கோவை,திருப்பூர்,சென்னை உட்பட பெரும்பாலான ஊர்களில் வரும் வாரமலர் புக் அட்ரஸ் தினமலர் வாரமலர். த பெ எண் 517,சென்னை 600008.ஜோக் வெளியிட்டு சன்மானம் தருவதில் வாரமலர் நெமப்ர் ஒன் இடத்தில் உள்ளது. ஒரு ஜோக்குக்கு ரூ 500 பரிசு, அது போக ஜாக்பாட் ஜோக் ஒன்றுக்கு வாரம் ரூ 1000 பரிசு.வேறு எந்த புக்கும் இவ்வளவு பரிசு தருவதில்லை.வாரம் 6 ஜோக்ஸ் பிரசுரம் ஆகிறது.ஆனால் எந்த அளவுக்கு பணம் அதிகமா தோணுதோ அந்த அளவு போட்டியும் அதிகம். தினம் 5000 ஜோக்குகள் வாரமலர் இதழ் அட்ரஸுக்கு சராசரியாக போகிறது. 8 கட்டமாக தேர்வு நடக்கிறது.அரசியல்,டாக்டர்,ஊழல் சம்பந்தப்பட்ட ஜோக்குகள் வரவேற்கப்படுகின்றன.வேறு பத்திரிக்கைகளில் வந்த ஜோக் அல்லது உல்டா ஜோக் அனுப்புவர்கள் வக்கீல் நோட்டீஸ் பெறுவார்கள். ரொம்ப ஸ்ட்ரிக்ட்.படைப்புகளை (ஜோக்ஸ்) போஸ்ட் கார்டில் மட்டுமே அனுப்ப வேண்டும்.ஒரு கார்டில் ஒரு ஜோக் மட்டும் எழுத வேண்டும்.படைப்பு அனுப்பி 2 மாதம் கழித்துத்தான் பிரசுரம் ஆகும்.பொறுமை மிக அவசியம்.

http://graphics8.nytimes.com/images/2007/05/30/business/30pen.600.jpg
கவிதை - இதற்கு ரூ 1250 பரிசு. 20 வரிகளில் இருக்க வேண்டும், காதல் கவிதைகள்,சமூக விழிப்புணர்வுக்கவிதைகள் வரவேற்கப்படுகின்றன,ஏ 4 ஷீட்டில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும்.அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுத வேண்டும்.தினமும் சராசரியாக 400 கவிதைகள் வருகின்றன.


சிறுகதை - 4 பக்கங்களில் (ஏ 4 ஷீட்) எழுத வேண்டும். சன்மானம் ரூ 1500. நகைச்சுவை,சோகம் செண்ட்டிமெண்ட் கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்குப்போட்டி குறைவு. தினமும் சராசரி 200 கதைகள் வருகின்றன. வாரம் ஒரு கதை பிரசுரம் ஆகிறது.


இது உங்கள் இடம் - நமது அனுபவங்கள், நாம் சந்தித்த மனிதர்கள்,வித்தியாசமான நிகழ்ச்சிகள் எது வேணாலும் எழுதி அனுப்பலாம்.

முதல் பரிசு பெறும் கடிதங்கள் ரூ 1500 பரிசும் ,2வது பரிசு பெறும் கடிதங்கள் ரூ 1000 பிறகு ஆறுதல் பரிசு பெறும் கடிதங்கள் ரூ 500 பரிசு பெறுகிறது.


இது போக அர்ச்சனை என்ற பெயரில் வாசகர் கடிதம் ,கேள்வி பதில் அதற்கும் பரிசு உண்டு. ரூ 250, ரூ 500 என பரிசு உண்டு.

கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னால பொண்ணு பாக்கறது மாதிரி எந்த பத்திரிக்கைக்கு எழுத விரும்பறமோ அந்த புக்க்கை வாங்கி அல்லது லைப்ரரில போய் ஒரு கிளான்ஸ் பார்த்தா ஒரு ஐடியா கிடைக்க்கும்.

அடுத்த வாரத்தில் ஆனந்த விகடன், குமுதம் பற்றி எழுதறேன்.

டிஸ்கி - இந்தப்பதிவு  மற்றவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னுதான் எழுதறேன்.இது ஹிட் ஆகாம காலை வாரிடுச்சுன்னா அடுத்து பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்ற சீன் பட விமர்சனம் போட்டுவேன்...ஹா ஹா ஹா