Friday, November 05, 2010

உத்தம புத்திரன் -மொக்கை காமெடி - சினிமா விமர்சனம்


ஷாஜகான் பட விஜய் கேரக்டர் தான் இந்தப்பட ஹீரோ தனுஷ்க்கு,லவ் ஜோடியை சேர்த்து வைக்கறது தான் இவரது வேலை ,ஹாபி எல்லாம்.சொந்த மாமா பெண்ணையே அப்படி சேர்த்து வைக்கும் தியாகி.இவரது லவ் எப்படி சேர்த்து வைக்கப்படுகிறது என்பதுதான் கதை,அதை கில்லி,சந்தோஷ் சுப்ரமணியம் என பல பட வாசனைகளுடன் மொக்கை காமெடிகளுடன் கரை சேர்த்து இருக்கிறார் இயக்குநர்.

ரஜினியின் மாப்பிள்ளை என்பதற்காக தனுஷ் தனது பெயரை டைட்டிலில் அவர் போலவே பில்டப்புடன் வர வைப்பதெல்லாம் ஓவர்.மற்றபடி அவர் இந்தப்படத்தில் ரொம்பவே அடக்கி வாசித்து இருக்கிறார்.அவரது நடிப்பில் நல்ல மெச்சூரிட்டி.

ஜெனிலியா (ஹரிணி) தான் நாயகி.அருண் ஐஸ்கிரீம் மாதிரி ஜில்லென்று இருக்கிறார்.(தொட்டுப்பார்க்கவில்லை.ஒரு உத்தேசமா சொன்னது).இவரது நடிப்பில் பல இடங்களில் சந்தோஷ் சுப்ரமணியம்,சச்சின் என நினைவுபடுத்தும் காட்சிகள் அதிகம்.அவர் சிரிக்கும்போது மட்டும் கேமராவை லாங்க் ஷாட்டில் வைத்தது கேம்ராமேனின் புத்திசாலித்தனம்.

  
12 வருடங்களுக்கு முன்னால் பூவெல்லாம் கேட்டுப்பார்,மின்சாரக்கண்ணா என ஒரே மாதிரி கதை அமைப்பில் 17 படங்கள் 30 நாட்களில் ரிலீஸ் ஆனது.இது 18வது படம்.டூ லேட்.காதலர்கள் ஓடிப்போகாமல் தங்கள் குடும்பங்கள் தங்களை ஏற்றுக்கொள்ள அவர் வீட்டில் இவர் ஐக்கியமாவதும்,இவர் வீட்டில் அவர் ஐக்கியமாவதும்,செண்ட்டிமெண்ட்டாக அவர்கள் மனம் கவர்ந்து பின் கல்யாணம் செய்து கொள்வதும் தான் கதை.

தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே,ஹம் ஆப் கே ஹேங்க் கோன் போன்ற ஹிந்திப்படங்களையும் இயக்குநர் விட்டு வைக்கவில்லை.முடிந்தவரை சுட்டு இருக்கிறார்.படம் ஃபுல்லா ஏகப்பட்ட கேரக்டர்கள்,ஏகப்பட்ட வசனங்கள்.கே பாக்யராஜ் ஹீரோவுக்கு பெரியப்பா கேரக்டர்.நல்ல குணச்சித்திர நடிப்பு.அனுபவம் கை கொடுக்கிறது.மனைவியை ஃபோனில் கொஞ்சும் காட்சியில் தியேட்டரில் செம கை தட்டல்.

நான் கடவுள் பட வில்லன் மொட்டைபாஸ் தான் இதிலும் வில்லன்.ஆள் செம ஆகிருதி.சண்டைக்காட்சியில் அவர் காட்டும் சீற்றமும்,பாடி லேங்குவேஜும் அருமை.ஆனால் அந்தோ பரிதாபம் அவர் பட ஓப்பனிங்கிலும்,கிளைமாக்ஸ்சிலும் தான் வருகிறார்.

அட


ரசிக்கவைத்த மொக்கை காமெடிகள்-

1.சுவாமி சமாதி நிலைல இருக்காரு.     அய்யய்யோ,எப்போ செத்தாரு?

அட மூதேவி,தியான  நிலைல இருக்காரு.


2.நீ பரீட்சைல பாஸ் ஆகிடுவியா?         நீ எப்படி எழுதி இருக்கே?


செமயா,80 மார்க் வரும்.               அப்போ நானும் பாஸ்தான்,ஏன்னா உன் ஆன்சர் பேப்பர்ல என் எக்சாம் நெம்பரை எழுதிக்குடுத்துட்டு வந்துட்டேன்.

 3. நீங்க யாரு?நான் எங்கே இருக்கேன்?

அது எப்படி மயக்கத்துல இருந்து எந்திரிக்கிற எல்லா ஹீரோயினும் மறக்காம இந்த ஒரே டயலாக்கை ரிப்பீட் அடிக்கறீங்க?

4.  லேடீஸ் - எனக்காக லிஃப்ட் குடுப்பீங்களா?

உங்களுக்காக உயிரையே கொடுப்போம்.

அய்யய்யோ,அப்போ லிஃப்ட் எப்படி குடுப்பீங்க?

5. அவ உன்னை லவ் பண்ணுவாங்கறதுக்கு என்ன கேரண்டி?

கேரண்டி வாரண்டி பார்த்து வர்றதுக்கு லவ் என்ன கிரண்டரா?

6.எதுக்குடா மறுபடியும் இந்த வீட்டுக்கு வந்தே?

பக்கத்து வீட்டுக்குத்தான் முதல்ல போனேன்,அவங்கதான் உன் வீடு அதுனு அனுப்பி வெச்சாங்க.

7. அவன் அடிச்சது எனக்கு வலிக்கவே இல்லை.    எப்படி?

டெயிலி அடி வாங்குனா எப்படி வலிக்கும்? மரத்துடுச்சு.

8. உன்னை அந்த்ப்பொடிப்பையன் அப்படி கொட்டிட்டு போறான் ,சும்மாவே இருக்கியே?

விடு ,அக்கவுண்ட்ஸ் எழுத்றப்ப 15 லட்சம் ஃபைன் போட்டுட்டேன்.

அடபாவி.


9. தனுஷ் - எப்படி இளைச்சுட்டேன் பார்த்தீங்களா?

டேய்,நீ எப்போ குண்டானே,இளைக்கறதுக்கு..?

10. இவனை சேத்துக்கலாமா?வீட்டை விட்டு துரத்தி விட்டுடலாமா?

வெளில துரத்தி விட்டா சம்பாதிக்க துப்பு இருக்கற மாதிரி தெரியல,அதனால சேர்த்துக்குவோம்.

11. ஒரே ஒரு ஃபோட்டோவை பார்த்துட்டு லைஃப் லாங்க் ஒரு பொண்ணை லைஃப் பார்ட்னரா சேர்த்துக்கறது எப்படி?

சரி,நான் வேணா பொண்ணு வீட்ல சொல்லி இன்னும் நாலஞ்சு ஃபோட்டோ தர சொல்லட்டா?

12. ஏன் தரைல உக்கார்றீங்க,மேலே உக்காருன்னு சொன்னது தப்பா போச்சு.

ஏன்?

சேர்ல உக்காராம டைனிங்க் டேபிள் மேல ஏறி உக்காந்துக்கறான்.

13.   மாப்ளை,என்ன படிச்சிருக்கீங்க?       நீதி,நேர்மை.

ஓஹோ,சத்தியம்,அஹிம்சை இதெல்லாம் அரியரா வெச்சிருக்கீங்களோ?

14. தனுஷ் - எங்க வீட்ல எல்லாரும் செம ஷார்ப்,அதனால ரொம்ப ஜாக்கிரதையா அவங்க கிட்டே நடந்துக்கோ.

ஜெனிலியா - பின்னே,எல்லோரும் உன்னை மாதிரி யா இருப்பாங்க?




ஏப்பா அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்,எல்லாரும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?பல இடங்களில் கண்ட்டிநியூட்டி மிஸ்ஸிங்க்.குறிப்பா தனுஷ் மொழு மொழு முகத்துடன் வரும் சீனுக்கு அடுத்த சீன் தாடியுடன் வருகிறார்.


அதே போல் மணக்கோலத்தில் இருக்கும் ஜெனிலியா 20 முழம் மல்லிகைபூவுடன் ஒரு ரூமில் இருக்கிறார்,அவர் ரூமை விட்டு வெளியே வரும் போது 5 முழம்தான் இருக்குது. (ரொம்ப முக்கியம்,படத்தை பாக்காம உன்னை யார் பூவை அளந்து பாக்க சொன்னது?)

சூட்கேசில் விவேக் 25 லட்சம் பணம் வைத்திருப்பதாக சொல்கிறார்,அதை திரந்து காட்டும்போது 1000 ரூபாக்கட்டு 17 தான் இருக்கு.


அப்புறம் டைரக்டருக்கு ஒரு அட்வைஸ். (ஆரம்பிச்சுட்டாண்டா)


படத்தோட ஓப்பனிங்க்ல இவ்வளவு நீளமான ,விறு விறுப்பான சேசிங்க் சீன்வைப்பது ரொம்ப ஆபத்து,ஏனெனில் ஆடியன்ஸ் அந்த டெம்போவில் ஸ்பீடு ஆகும்போது திடீர் என காட்சி மாறும்போது படம் ஸ்லோவாக போவது மாதிரி தெரியும்.


இயக்குநரின் புத்திசாலித்தனத்துக்கு ஒரு சாம்ப்பிள்

வில்லன் குரூப் காதலர்களை துரத்தி வரும்போது இருவரும் ஒரு சந்தில் நெருக்கமாக நிற்கையில் ஹீரோவின் சமீபம் ஹீரோயினுக்கு தர்மசங்கடமாக இருக்கு,அப்போ அவ சொல்றா,ஏய்,இதை அட்வாண்ட்டேஜ்ஜா எடுத்துக்காதே.பிறகு வேறொரு காட்சியில் வில்லன் ஹீரோயினை துரத்தி வரும்போது ஹீரோவை பயத்தில் கட்டிப்பிடிக்கும் போது ஹீரோ அதே டயலாக்கை ரிப்பீட் அடிக்கையில் செம அப்ளாஸ்.

ஃபோட்டோவை உடைத்தது வேறொருவர் என தெரிந்தும் ஹீரோயின் பழியை தான் ஏற்றுக்கொள்வது ,பின் உண்மை தெரிந்து அவரிடம் அனைவரும் நெகிழ்வது ரொம்ப பழைய செண்ட்டிமெண்ட்ஸ்.ஓல்டு  ஈஸ் கோல்டு  என டைரக்டர் நினைத்திருப்பாரோ?

எமோஷனல் ஏகாம்பரமாக வரும் விவேக் ரொம்ப நாளுக்குப்பிறகு ரசிக்க வைக்கிறார்.வழக்கமாக் ஓவராக அலட்டும் அவருக்கு இந்தப்படத்தில் அண்டர் பிளே ஆக்டிங்க்.தனுஷை வில்லன் குரூப்புக்கு அறிமுகப்படுத்துகையில் “இவன் எங்கக்கா மவன்,சின்ன வயசுல இவன் பாக்க என்னை மாதிரியே இருப்பான் என பீலா விட தனுஷ்,  அப்போ பெரிய வயசுல நான் உங்க சாயல்ல இருப்பேனா? என கேட்பது செம லந்து.


  கன்ஃபியூஷன் ஆஃப் கான்ஸ்ட்டிடியூஷன் ஆஃப் த லூஸ் மோஷன் - சப் கான்சியஸ் என இவர் கலாய்ப்பது கலக்கல் ரகம்.தனுஷ் இவரிடம் ,புத்திசாலி காக்கா மட்டும் தான் ஜாடில இருக்கற தண்ணிய குடிக்க ஜாடில கல்லை போடும். என சொல்ல அப்போ என்னை புத்திசாலிங்கறியா?காக்கைங்கறியா என கேட்பது தூள்.

ஒவ்வொரு முறை சியர்ஸ் சொல்லும்போது விவேக்கின் டம்ளர் உடைக்கப்டுவதும் சிரிப்பை வரவ்ழைக்கும் காமெடியே,நீ ஒருத்தன் போதும்டா,ஊர்ல ஒரு பையன் தண்ணி அடிக்க மாட்டான் என புலம்புவது செம மொக்கை.

பெண்களை கவர பல செண்ட்டிமெண்ட் வசனங்களாக போட்டு தாக்குகிறார் இயக்குநர்.

1. கூட்டிட்டுபோய் மேரேஜ் பண்ண நினைக்கலை,மேரேஜ் பண்ணி கூட்டிடு போகனும்னு நினைக்கிறேன்.

2.ஒரு பொண்ணுக்கு கணவன்,குழந்தை 2 மட்டும் தான் வீடு உலகம் எல்லாம் அப்படிப்பட்ட பொண்ணை கண்கலங்காம வெச்சு காப்பாத்த வேண்டியது ஒரு ஆணோட கடமை இல்லையா? (கே பாக்யராஜ்)

பாடல் வரிகள் சுத்தமா புரியலை.புரிஞ்சவரை மனதைக்கவர்ந்த வரி

ஆத்துக்குள்ளே அம்மிக்கல்லா போனேனே.

யாரடி நீ மோகினி படத்தில் பாலக்காட்டு பக்கத்துலே ஒரு அப்பாவி ராஜா ரீ மிக்ஸ் பாட்டு செம ஹிட்டு ஆனதால் இந்தப்படத்திலும் அப்படி ஒரு பாட்டு.

கட்டிப்பிடி கட்டிப்பிடி விட்டுப்பிடி விட்டுப்பிடி (ஆஹா,என்னே ஒரு இலக்கிய நயம்.)

இடைவேளை வரை படம் நல்லா போகுது,அதுக்கப்புறம் டப்பிங்க் படம் போல் இழுவை,நம்ப முடியாத காட்சிகள்,என்னதான் காமெடியா இருந்தாலும் லாஜிக் கொஞ்சமாவது வேண்டாமா?

கதையைப்பற்றி எல்லாம் கவலை இல்லை சும்மா ஜாலியா இருந்தா சரி என நினைப்பவர்கள் பார்க்கலாம்.வன்முறை காட்சீகள்,முகம் சுளீக்கவைக்கும் வசனங்கள் இல்லாதது படத்துக்கு பிளஸ்.

ஆனந்த் விகடன் மார்க் 43

குமுதம் ரேங்க்கிங்க்  - ஓகே

ஏ செண்ட்டர் - 75 நாட்கள் பி சி செண்ட்டர்கள்  35 டூ 50 நாட்கள்

டிஸ்கி - காலைக்காட்சி 10 மணிக்கு ஆரம்பித்து  1 மணிக்கு முடியும் (படம் 3 மணீ நேரம்)எப்படி 1 மணிக்கே விமர்சனம் எழுத முடிந்தது என சந்தேகப்படுபவர்களுக்கு ஒரு வார்த்தை இந்த விமர்சனம் லேப் டாப்புடன் தியேட்டரில் இருந்தே சுடசுட எழுதப்பட்டது.ஒரு குத்து மதிப்பாக டைப் செய்ததால் எழுத்துப்பிழை,இலக்கணப்பிழை இருந்தால் பொறுத்தருள்க.

26 comments:

எஸ்.கே said...

படம் சுமார்தானா!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

எஸ்.கே said...

அது எப்படி வசனமெல்லாம் கவனிச்சு எழுதுறீங்களோ! பாராட்டுக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க சார்,பண்டிகை நாள்ல முத வட

சி.பி.செந்தில்குமார் said...

Blogger எஸ்.கே said...

அது எப்படி வசனமெல்லாம் கவனிச்சு எழுதுறீங்களோ! பாராட்டுக்கள்!

நன்றி சார்,படிக்கறப்ப பாடத்தை கவனிக்கலை,இதைகவனிச்சு என்ன பிரயோஜனம் சார்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சார்,உங்களுக்கும் வாழ்த்துக்கள்

அன்பரசன் said...

//டிஸ்கி - காலைக்காட்சி 10 மணிக்கு ஆரம்பித்து 1 மணிக்கு முடியும் (படம் 3 மணீ நேரம்)எப்படி 1 மணிக்கே விமர்சனம் எழுத முடிந்தது என சந்தேகப்படுபவர்களுக்கு ஒரு வார்த்தை இந்த விமர்சனம் லேப் டாப்புடன் தியேட்டரில் இருந்தே சுடசுட எழுதப்பட்டது.ஒரு குத்து மதிப்பாக டைப் செய்ததால் எழுத்துப்பிழை,இலக்கணப்பிழை இருந்தால் பொறுத்தருள்க.//

இதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஆமா..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

தினேஷ்குமார் said...

bass r u online there

சி.பி.செந்தில்குமார் said...

அன்பரசன் said...

//டிஸ்கி - காலைக்காட்சி 10 மணிக்கு ஆரம்பித்து 1 மணிக்கு முடியும் (படம் 3 மணீ நேரம்)எப்படி 1 மணிக்கே விமர்சனம் எழுத முடிந்தது என சந்தேகப்படுபவர்களுக்கு ஒரு வார்த்தை இந்த விமர்சனம் லேப் டாப்புடன் தியேட்டரில் இருந்தே சுடசுட எழுதப்பட்டது.ஒரு குத்து மதிப்பாக டைப் செய்ததால் எழுத்துப்பிழை,இலக்கணப்பிழை இருந்தால் பொறுத்தருள்க.//

இதெல்லாம் ரொம்ப ஓவர்.. ஆமா..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

hi hi ஹி ஹி நன்றி அன்பரசன்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

bass r u online there

aamaa ஆமா சொல்லுங்க,நான் எப்பவும் ஆன் லைன் தான்.பெண் லைன் போறதே இல்லை.சொல்லுங்க என்ன மேட்டர்?நீங்க செல்லுல ட்ரை பண்றப்ப சினிமா தியேட்டர்ல இருந்தேன்

varagan said...

சினிமாதுறையில் தாங்கள் காட்டும் அதீக முயற்சியை மற்ற subjects மற்றம் வேறு துறைகளிலும் காட்ட வேண்டுகிறேன்.

மற்றபடி சுடச்சுட செய்திகளுக்கு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்

வராகன்.

varagan said...

தீபாவளி வாழ்த்தக்கள் உங்களுக்கும் மற்றம் உங்கள் குடும்ப மற்றும் வலைபதிவு நண்பாகள் அணைவருக்கும்

அன்புடன்

வராகன்.

சி.பி.செந்தில்குமார் said...

2wanRi varaakan saar நன்றி வராகன் சார் உங்கள் வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும்,ஆலோசனைக்கும்.எனக்கு தெரிந்ததை நான் பண்றேன்,மக்கள் அதிகம் விரும்புவது

1.சினிமா

2.அரசியல்

3.நகைச்சுவை

எனவே அதில் என் திறமையை வளர்த்துக்கொண்டேன்.கவிதை,கட்டுரை சமூக விழிப்புணர்வுக்கட்டுரைகள் எழுதிப்பார்த்தேன்,படிக்க ஆள் வர்லை.எனவே என் ரூட்டை மாற்றிக்கொண்டேன்,தங்கள் மேலான ஆலோசனைக்கு காத்திருக்கிறேன்

சி.பி.செந்தில்குமார் said...

வராகன் சொல்ல மறந்துட்டேன்,உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்

சிவராம்குமார் said...

நானும் கேள்விப் பட்டேன்... சும்மா பீல் குட் படம் எடுக்கிரேன்னு அரைச்ச மாவையே அறைக்கிறாங்க...

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சிவா

ILA (a) இளா said...

நெஜமாவே தீபாவளி அன்னிக்குன்னா இப்படித்தான் பதிவு படிக்க ஆரம்பிக்கனும். தீவாளி வாழ்த்துகள்!~

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி சார்,உங்களுக்கும் அதே வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப்படத்துக்குலாம் இப்போ விமர்சனம் எழுதலேன்னு யாரு அழுதா? சுடச்சுட விமர்சனம், அதுவும் தியேட்டருக்கே லேப்டாப்போட போயி! சரி சரி, மைனா படத்துக்கு எப்போ விமர்சனம்? மொதல்ல அதப் போடுங்க!

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ராம்சாமியின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று மதியம் 3 மணீக்கு...

Philosophy Prabhakaran said...

காமெடி மொக்கைகள் சூப்பர்... உங்கள் பதிவை படித்தபிறகு படம் பார்க்க அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது...

சௌந்தர் said...

எனக்கு இந்த படம் மொக்க படம் முதலே தெரியும்..!

சி.பி.செந்தில்குமார் said...

philosophy prabhakaran said...

காமெடி மொக்கைகள் சூப்பர்... உங்கள் பதிவை படித்தபிறகு படம் பார்க்க அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது...


நன்றி பிரபாகரா

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சௌந்தர் said...

எனக்கு இந்த படம் மொக்க படம் முதலே தெரியும்..!

ஓஹோ நீங்க சினிமா ஜோசியரா?

உண்மைத்தமிழன் said...

தம்பி.. இதெல்லாம் ரொம்ப ஓவரு..! இப்படியெல்லாம் எழுதிதான் வலையுலகத்தைக் காப்பாத்தப் போறீங்களா..? பொழப்பப் பாருங்கப்பா. நான்தான் வெட்டி ஆபீஸர். வீட்ல யாருமில்லை. அதான் ஊர் சுத்துற நேரத்துல படத்தைப் பார்த்து பொழுதைக் கழிக்கிறேன்னா.. உங்களுக்கென்ன? குடும்பஸ்தன்.. வீடடைப் பொறுப்பா பார்த்துக்க வேணாம்..!?

சி.பி.செந்தில்குமார் said...

hi hi ஹி ஹி ஹி என்னண்ணே இப்படி சொல்லீட்டீங்க?நானும் வெட்டாஃபீஸ்தான்