Friday, November 26, 2010

கொலைக்கேசில் மாட்டிய ஆளுங்கட்சித்தலைவர்


1. “மன்னா!  மற்போர்  புரியலாமா,  விற்போர்  புரியலாமா  என்று  எதிரிநாட்டு மன்னன்  அறைகூவல்  விடுக்கிறான்!”

“தளபதி!  சொற்போர்  புரியலாம்  என்று  கூறு.  அப்போதுதான்  நமக்கு  எந்தச்  சேதாரமும்  இருக்காது!”2. “நம்ம  தலைவர்,  கொலை  கேஸ்ல  கோர்ட்  விசாரணையின்போது  ஏதோ கோக்குமாக்கா  குறுக்குக்  கேள்வி  கேட்டாராமே?”

“ஆமா,  சின்னப்  பசங்க  கொலை  செஞ்சா,  சிறுவர்  சீர்திருத்த்ப்  பள்ளியில  போடறீங்க.  ஆனா,  பெரியவங்க  கொலை  செஞ்சா  மட்டும்  ஏன்  முதியோர்  சீர்திருத்தப்  பள்ளியில  சேர்க்காம,  ஜெயில்ல  போடறீங்கனு  கேட்டாரு!”3. “சொத்துக்  குவிப்பு  வழக்குல  உங்களை  கோர்ட்  ரிலீஸ்  பண்ணிடுச்சே...  இதைப்  பத்தி  என்ன  நினைக்கறீங்க  த்லைவரே?”

“இந்த  மாதிரி  சாட்சி  கிடைக்காம  கேஸ்  தடுமாறும்னு  தெரிஞ்சிருந்தா,  இன்னும்  அதிகமா  சொத்து  சேர்த்திருக்கலாமேன்னுதான்!”4. “மந்திரியாரே,  எதிரி  மன்னன்  தகவலை  புறா  மூலம்  அனுப்பாமல்,  மைனா  மூலம்  அனுப்பியுள்ளானே,  ஏன்?”

“புரியவில்லையா  மன்னா! உங்களுடையது  மைனாரிடி  அரசு  என்று  சுட்டிக்காட்டுகிறான்!”5. “ம்ன்னர்  சேடிப்  பெண்ணைப்  பார்த்து  ‘உன்னை  எல்லாம்  வைக்க  வேண்டிய  இடத்தில்  வைக்க  வேண்டும்’  என்கிறாரே...  அவளிடம்  அப்படி என்ன  தவறு  கண்டார்?”

“நீ  வேற!  மன்னர்  சேடிப்  பெண்ணின்  அழகில்  மயங்கி,  அந்தப்புரத்தில் வைக்கத்  திட்டம்  போடுகிறார்!”6. “அமைச்சரே!  அண்டை  நாட்டு  அரசர்கள்  என்  மீது  என்ன  அபிப்ராயம்  வைத்திருக்கிறார்கள்?”

“மன்னா!  உங்களிடம்  பொது  வாழ்வில்  நேர்மையும்  இல்லை...  போர்  வாழ்வில்  கூர்மையும்  இல்லை  என்றுதான்  அபிப்ராயப்படுகிறார்கள்!”7. “என்னதான்  கெட்ட  செய்தியாக  இருக்கட்டும்...  தூது  வந்த  புறாவின்  முதுகில்  நீங்கள்  அப்படி  ஓங்கி  அடித்திருக்கக்  கூடாது  மன்னா!”

“அதனால்  என்ன  அமைச்சரே!”

புற  முதுகிட்டவர்  என்ற  அவப்  பெயரோடு  புறா  முதுகில்  இட்டவர்  என்ற  அவப்  பெயரும்  சேர்ந்துகொண்டதே!”8. “தலைவர்  கார்ல  போறப்ப  குழியில  விழுந்து,  படுகாயம்  அடைஞ்சுட்டாரு!”

“அதுக்காக  பள்ள  நிவாரண  நிதி  வசூல்  பண்ணக்கிளம்பிடறதா?”9. “தலைவரோட  தமிழ்ப்  பற்றுக்கு  ஒரு  அளவே  இல்லாமப்போச்சு!”

“எப்படிச்  சொல்றே?”

“உதட்டில்  வரும்  உமிழ்  நீர் கூட  தமிழ்  நீராக  வர  ஆசைப்படுகிறேன்னு ஏகத்துக்கும்  உதார்  விடறாரே!”

28 comments:

KANA VARO said...

கலக்குங்கோ!

KANA VARO said...

வடை, பாயாசம், சோறு, கறி எல்லாம் எனக்குத்தான்...

சௌந்தர் said...

“ஆமா, சின்னப் பசங்க கொலை செஞ்சா, சிறுவர் சீர்திருத்த்ப் பள்ளியில போடறீங்க. ஆனா, பெரியவங்க கொலை செஞ்சா மட்டும் ஏன் முதியோர் சீர்திருத்தப் பள்ளியில சேர்க்காம, ஜெயில்ல போடறீங்கனு கேட்டாரு!”/////

இது பரிசீலனை செய்யப்படவேண்டிய விசயம்

சௌந்தர் said...

படம் நல்லாருந்தா கனிமொழி சூப்பர்னு விமர்சனம் எழுதுவேன் ஆ ராசா கோவிச்சுக்குவாரு,படம் சரி இல்லைனா கனிமொழி தேறாதுனு விமர்சனம் எழுதுவேன்,அழகிரி அண்ணன் அடிக்க வந்துடுவாரு.////

எப்படி இருந்தாலும் உங்களுக்கு அடி நிச்சயம்

Chitra said...

சௌந்தர் said...

படம் நல்லாருந்தா கனிமொழி சூப்பர்னு விமர்சனம் எழுதுவேன் ஆ ராசா கோவிச்சுக்குவாரு,படம் சரி இல்லைனா கனிமொழி தேறாதுனு விமர்சனம் எழுதுவேன்,அழகிரி அண்ணன் அடிக்க வந்துடுவாரு.////

எப்படி இருந்தாலும் உங்களுக்கு அடி நிச்சயம்


...... ப்ச்..... என்ன செய்ய போறாரோ?

சம்பத் said...

Super..super.. ;-)

சம்பத் said...

Kani joke super...but overo? ;-)

Unknown said...

கனிமொழி ஜோக் சூப்பர்!! :))

Arun Prasath said...

ஜோக் எல்லாம் எப்பவும் போல சூப்பர்... ஆமா அந்த போட்டோல இருக்க பொண்ணு யாரு?

karthikkumar said...

பட்டைய கெளப்புறீங்க போங்க கனிமொழி ஜோக் சூப்பர்

Unknown said...

நான் சீரியஸ் பதிவுன்னு தலைப்ப பாத்து ஏமாந்திட்டேன் ...

NaSo said...

ஏழாவது ஜோக் சூப்பர் அண்ணே!!

NaSo said...

பத்தாவது ஜோக்குக்காக இந்த முறை ஆட்டோ நிச்சயம்!

வைகை said...

என்ன சிபி?!!!!!!! கனிமொழி பேரப்போட்டதுக்கே கோட்டைவரை அனுப்புனாங்க!! இப்ப ஜோக்கே போட்ருக்கிங்க, பார்லிமென்ட் வரைக்கும் போறதா உத்தேசமா?!!!!!

சசிகுமார் said...

as usual nice post

தமிழ்க்காதலன் said...

செந்தில் ஒரு சந்தேகம்.
நீங்க இப்பத்தான் இப்படியா..? இல்லை
எப்பவுமே இப்படியா...?
இது தீபாவளியின் பாதிப்பா.....
சரவெடி சிரிப்புகளை அள்ளித் தெளிக்கிறீர்கள் போங்கள்.
ரசித்து சிரித்தேன். அருமை.
நம்ம பக்கம் வாங்களேன்....

ஆர்வா said...

ஜோக்ஸ் எப்பவும் போல அருமை நண்பரே.. எழுத்துக்கள்'ல இருக்கிற பிழைகளை கொஞ்சம் கவனியுங்க..

ஆர்வா said...

கனிமொழியை வெச்சி நீங்க ஒரு தனிமொழி ஆரம்பிச்சிடுவீங்க போல இருக்கே..

ஆர்வா said...

டைட்டில்ல ஏன் இப்படி ஒரு கொலைவெறி?

Anonymous said...

டைட்டில்,கடைசி ஜோக் பிரச்சனை வரும்படி இருப்பதால் உடனே மாற்றி விடவும்..நீக்கவும்

Anonymous said...

ஜோக்ஸ் எல்லாமே சூப்பர்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யயோ அந்தக் கடைசி ஜோக்கு......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாம் கலக்கல்ஸ்... அதிலும் 2, 5, 7 பின்னிட்டீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்ககிட்ட உள்ள கெட்ட பழக்கமே இதுதான், நல்ல டிக்கட்டு படமா போட்டுட்டு அது யாரு என்னன்னு வெவரமே சொல்றதில்லே?

Anonymous said...

அய்யயோ அந்தக் கடைசி ஜோக்கு......?//
இப்படி புலம்ப வைக்கத்தான் ஒரு டிரிக்..மொக்கை ஜோக் தான்

Anonymous said...

டைட்டில்ல ஏன் இப்படி ஒரு கொலைவெறி//
தமிழ்மணத்துல டாப் 20 ல முதல் இடம் பிடிக்கத்தான்...உதை வாங்குற அறிகுறி எல்லாம் தெரிய ஆரம்பிச்சும் திருந்த மாட்டேங்குறாரு...

Anonymous said...

உங்ககிட்ட உள்ள கெட்ட பழக்கமே இதுதான், நல்ல டிக்கட்டு படமா போட்டுட்டு அது யாரு என்னன்னு வெவரமே சொல்றதில்லே//
போன் நெம்பர் வேணுமா..சிபி சார் அந்த நம்பரை அதான் அந்த நம்பரை கொடுத்துடுங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present sir