Tuesday, November 09, 2010

இம்சை அரசன் VS மங்குனி அமைச்சர்1. “மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார்?”

“பிச்சைக்காரனாக மாறுவேடத்தில் நகர்வலம் வந்த மன்னரிடம் ஒரு ஆள், ‘தூ! இதெல்லாம் ஒரு பொழப்பா’னு திட்டிட்டுப் போனானாம்!”
2. “மன்னா! எப்போது போர்க்களம் வந்தாலும், நீங்கள் போரிட வருவதே இல்லை. கூடாரத்திலேயே தங்கி விடுகிறீற்கள்!”“அதனாலென்ன தளபதி?”

“உங்களுக்கு ‘கூடாரம் கொண்டான்’ என்று பட்டப்பெயர் சூட்டிவிட்டார்கள் நம் மக்கள்!”
3. “மன்னா! எதிரி நாட்டு மன்னருக்கு என்ன தைரியம் இருந்தால், நம் இருப்பிடத்துக்குள்ளேயே வந்து ‘யாரங்கே’ என்று குரல் கொடுப்பார்?”

“ஐயையோ தளபதி! உணர்ச்சிவசப்பட்டு நாம் ஒளிந்திருக்கும் இடத்தை சத்தம் போட்டு காட்டிக் கொடுத்துவிடாதே!”
4. “மோஹனா... உன் ஞாபகமா வெச்சுக்க உன் போட்டோ ஒண்ணு குடேன்”

“ஏய் மிஸ்டர்... செருப்பு பிஞ்சிடும்”

“போட்டோ தானே கேட்டேன். பேட்டாவா கேட்டேன்?”
5. “கலி முத்திடுச்சுனு புலம்பிட்டு இருந்த தலைவர், இப்போ களி முத்திடுச்சுனு புலம்பறாரே”

“இப்போ... ஜெயில்ல தானே இருக்காரு?”
6. “ஸ்கூலுக்கு ஏன் ரெண்டு நாளா வரலை...?”

“எங்கப்பாதான் சொன்னாரு. ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மதிப்பிருக்காதுன்னு”7. “எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும் பாட்டிலோட க்யூவில் நிற்கறாக்க?”

“ ‘சரக்கு’ ரயில் வருதாம்.”
8. “வெற்றி! வெற்றி! போரில் மகத்தான வெற்றி!”

“எழுந்திருங்கள் மன்னா. பொழுது விடிந்து ரொம்ப நேரமாகிவிட்டது.”
9. “ஏன் லேட்?”

“பைக் பஞ்சர்!”

“பஸ்ல வர்றது?”

“பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்லை!”
10. “உங்க மாமியார் எமனோட போராடறாரு!”

“அவங்க எப்பவும் இப்படித்தான் டாக்டர். யார் கூடயாவது மல்லுக்கட்டிக்கிட்டே இருப்பாங்க!”
11. “டாக்டர், நாய் என்னை கடிச்சிடுச்சி!”

“எங்கே?”

“அடையாறுல ஒரு தடவை. அண்ணா நகர்ல ஒரு தடவை!”
12. “ அத்தான்,எதுக்கு விடிக்காலையில அஞ்சு மணிக்கு என் முகத்துல தண்ணீர் தெளிக்கிறீங்க?”

“உங்கப்பாதான் உன்னை பூ மாதிரி பார்த்துக்கணும்னு சொன்னாரு!”

14. “உன் வேலைக்கு சம்பந்தமே இல்லாம கழுத்துல டை கட்டி இருக்கீயே?”

“இள நரையை மறைக்க ‘டை’ யூஸ் பண்ணுன்னு சொன்னாங்க.”
15. எழுத்தாளர் 1: “உங்க கதையைப் பாராட்டி இருபத்தேழு லெட்டர் வந்திருக்கு”

எழுத்தாளர் 2: “சரியாப் பாருங்க, முப்பது இருக்கணும், நான் தானே எண்ணித் தபாலிலே சேர்த்தேன்”
16. “தடிமாடு... க்ளாஸ்ல பேசக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்...”“அதை நான் சரியா எண்ணலை சார்...”

53 comments:

Chitra said...

6. “ஸ்கூலுக்கு ஏன் ரெண்டு நாளா வரலை...?”

“எங்கப்பாதான் சொன்னாரு. ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மதிப்பிருக்காதுன்னு”

.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சரிதானே!

Anonymous said...

“உங்க கதையைப் பாராட்டி இருபத்தேழு லெட்டர் வந்திருக்கு”

எழுத்தாளர் 2: “சரியாப் பாருங்க, முப்பது இருக்கணும், நான் தானே எண்ணித் தபாலிலே சேர்த்தேன்//
அட்ரா,,அட்ரா..தூள் ஜோக்

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா கவுத்துட்டியே ............. எதோ நானும் மங்குனியும் சண்டை போடுற மாதிரி பதிவு போட்டு இருப்பன்னு நினச்சு வந்தா.....பல்பு .!!!!!!!

சி.பி.செந்தில்குமார் said...

Chitra said...

6. “ஸ்கூலுக்கு ஏன் ரெண்டு நாளா வரலை...?”
“எங்கப்பாதான் சொன்னாரு. ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மதிப்பிருக்காதுன்னு”
.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சரிதானே!

நன்றி சித்ரா

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

“உங்க கதையைப் பாராட்டி இருபத்தேழு லெட்டர் வந்திருக்கு”

எழுத்தாளர் 2: “சரியாப் பாருங்க, முப்பது இருக்கணும், நான் தானே எண்ணித் தபாலிலே சேர்த்தேன்//
அட்ரா,,அட்ரா..தூள் ஜோக்

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா கவுத்துட்டியே ............. எதோ நானும் மங்குனியும் சண்டை போடுற மாதிரி பதிவு போட்டு இருப்பன்னு நினச்சு வந்தா.....பல்பு .!!!!!!!

பாபு,நீங்க சொன்ன மாதிரி தான் ஒரு மேட்டர் ரெடி பண்ணூனேன்,மங்குனி என்ன நினைப்பாரோனு ஜகா வாங்கிட்டேன்,நீங்க 2 பேரும் ஓக்கே சொன்னா போட்டுருவோம்

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

“உங்கப்பாதான் உன்னை பூ மாதிரி பார்த்துக்கணும்னு சொன்னாரு!”

இது சூப்பர்

ILA (a) இளா said...

ஆவி?

அன்பரசன் said...

//இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா கவுத்துட்டியே ............. எதோ நானும் மங்குனியும் சண்டை போடுற மாதிரி பதிவு போட்டு இருப்பன்னு நினச்சு வந்தா.....பல்பு .!!!!!!!//

நானும் அதையேதான் நெனச்சேன்.

சிவராம்குமார் said...

\\9. “ஏன் லேட்?”

“பைக் பஞ்சர்!”

“பஸ்ல வர்றது?”

“பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்லை!”\\

இதுக்கு பேருதான் நக்கலா!!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மங்கு ...,
இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போச்சு ....,ஹா ஹா ஹா ....,இது இதுக்காகவே உன்னக்கு பிரபல பதிவர் தரனும் செந்தில்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////7. “எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும் பாட்டிலோட க்யூவில் நிற்கறாக்க?”

“ ‘சரக்கு’ ரயில் வருதாம்.”////

எங்களுக்குலாம் பாட்டில் தெவையில்ல, நாங்கள்லாம் ட்ரெய்னோடவே போறவங்க!

சி.பி.செந்தில்குமார் said...

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

“உங்கப்பாதான் உன்னை பூ மாதிரி பார்த்துக்கணும்னு சொன்னாரு!”

இது சூப்பர்

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

ILA(@)இளா said...

ஆவி?

adheeஅதே சார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger அன்பரசன் said...

//இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா கவுத்துட்டியே ............. எதோ நானும் மங்குனியும் சண்டை போடுற மாதிரி பதிவு போட்டு இருப்பன்னு நினச்சு வந்தா.....பல்பு .!!!!!!!//

நானும் அதையேதான் நெனச்சேன்.

அடடா அடடா சாரி

சி.பி.செந்தில்குமார் said...

சிவா said...
\\9. “ஏன் லேட்?”
“பைக் பஞ்சர்!”
“பஸ்ல வர்றது?”
“பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்லை!”\\
இதுக்கு பேருதான் நக்கலா!!!

ஹி ஹி ஹி நன்றி சிவா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மங்கு ...,
இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போச்சு ....,ஹா ஹா ஹா ....,இது இதுக்காகவே உன்னக்கு பிரபல பதிவர் தரனும் செந்தில்

நன்றி நரி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said... ////7. “எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும் பாட்டிலோட க்யூவில் நிற்கறாக்க?”
“ ‘சரக்கு’ ரயில் வருதாம்.”////
எங்களுக்குலாம் பாட்டில் தெவையில்ல, நாங்கள்லாம் ட்ரெய்னோடவே போறவங்க!

யோவ் ரம்சாமி சாரி ராம்சாமி,ஜீஜிக்ஸ்ல இணைச்சிருக்கீங்க போல.ரூ 500 பருசு கிடைக்க வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

அருமை அருமை அருமை வாழ்த்துகள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா.. :-))

all jokes are realllyyy good.. :-)

சி.பி.செந்தில்குமார் said...

யாதவன் said...

அருமை அருமை அருமை வாழ்த்துகள்

நன்றி சார்

சி.பி.செந்தில்குமார் said...

Ananthi said...

ஹா ஹா ஹா.. :-))

all jokes are realllyyy good.. :-)

நன்றி ஆனந்தி,எப்படியோ என் பிளாக் வந்துட்டீங்க...

karthikkumar said...

ஏன் லேட்?”

“பைக் பஞ்சர்!”

“பஸ்ல வர்றது?”

“பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்லை!”////
நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல

karthikkumar said...

அப்புறம் கவிதையெல்லாம் எழுதுவீங்கல்ல பதிவா போடலாமே

NaSo said...

அண்ணே உங்க போட்டோ சூப்பர்!

NaSo said...

நான் தான் 25

தினேஷ்குமார் said...

பாஸ் வணக்கம்
குட் மார்னிங்
நமஸ்தே
நமஷ்கார்
அஸ்லாம் அலைக்கும்

தினேஷ்குமார் said...

நாகராஜசோழன் MA said...
நான் தான் 25

யோவ் உண்மையசொல்லு நீ யூத்தா நாங்க நம்பனும் 25 வயசுல இருந்திருப்ப இப்ப சொல்லு

சசிகுமார் said...

டைட்டில் வைப்பதில் கில்லாடி ஆளுதான் நீங்கள் அப்ப சீக்கிரமே முன்னேரிடுவீங்க.

செல்வா said...

//“ஐயையோ தளபதி! உணர்ச்சிவசப்பட்டு நாம் ஒளிந்திருக்கும் இடத்தை சத்தம் போட்டு காட்டிக் கொடுத்துவிடாதே!”//

இது செம ..!!

செல்வா said...

//“எங்கப்பாதான் சொன்னாரு. ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மதிப்பிருக்காதுன்னு”//

நீங்க யார சொல்ல வரீங்க ..?!

செல்வா said...

//“எழுந்திருங்கள் மன்னா. பொழுது விடிந்து ரொம்ப நேரமாகிவிட்டது.”//

என்னங்க , கனவுல கூட சந்தோசமா இருக்க விடமாட்டேங்குறீங்க

செல்வா said...

//“அதை நான் சரியா எண்ணலை சார்...//

அந்தப் பையன் நீங்கதானே ..

ஆர்வா said...

///7. “எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும் பாட்டிலோட க்யூவில் நிற்கறாக்க?”

“ ‘சரக்கு’ ரயில் வருதாம்.”///

அட.. அட.. எத்தனையோ வாட்டி சென்ட்ரலுக்கு போயிருக்கேன்.. இப்படி ஒரு ஐடியா வந்ததே இல்லையே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present sir

மாதேவி said...

2,6, 7, 10. :)))

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா கவுத்துட்டியே ............. எதோ நானும் மங்குனியும் சண்டை போடுற மாதிரி பதிவு போட்டு இருப்பன்னு நினச்சு வந்தா.....பல்பு .!!!!!!!

பாபு,நீங்க சொன்ன மாதிரி தான் ஒரு மேட்டர் ரெடி பண்ணூனேன்,மங்குனி என்ன நினைப்பாரோனு ஜகா வாங்கிட்டேன்,நீங்க 2 பேரும் ஓக்கே சொன்னா போட்டுருவோம்////

டபுள் ஓகே.....என்ன கெட்டவார்த்தைல மட்டும் திட்டாதீக ?

மங்குனி அமைச்சர் said...

என்னப்பா என் போடோ அவுட் ஆப் போகஸ்ல இருக்கு , அத சரிபண்ணு ? வரலாற போல இமேஜும் ரொம்ப முக்கியல்ல

மங்குனி அமைச்சர் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மங்கு ...,
இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போச்சு////

இதுக்கு செந்தில் எவ்ளோ பரவாஇல்லை , ஏன் நரி இப்ப இங்க மானத்த பத்தி யாராவது பேசினாங்களா ? நீ ஏன் எடுத்து குடுக்குற ? மாட்டிவிடுறதே உனக்கு பொழப்பா போச்சு

சி.பி.செந்தில்குமார் said...

Blogger karthikkumar said...

அப்புறம் கவிதையெல்லாம் எழுதுவீங்கல்ல பதிவா போடலாமே

waan நான் எழுத ரெடி,யார் படிக்க ரெடி?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

அண்ணே உங்க போட்டோ சூப்பர்!

ஓஹோ அப்போ நான் சரி இல்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

நாகராஜசோழன் MA said...

நான் தான் 25

ஹி ஹி இன்னும் நெம்பர் சொல்லிட்டுதான் இருக்கீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் வணக்கம்
குட் மார்னிங்
நமஸ்தே
நமஷ்கார்
அஸ்லாம் அலைக்கும்

ஓக்கே உங்களுக்கு பல மொழி தெரியும் ஒத்துக்கறேன்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger சசிகுமார் said...

டைட்டில் வைப்பதில் கில்லாடி ஆளுதான் நீங்கள் அப்ப சீக்கிரமே முன்னேரிடுவீங்க.

டைட்டில் எல்லாம் நல்லா வெச்சு என்ன புண்ணியம் சசி.. சரக்கு நல்லாலையே?

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//“எங்கப்பாதான் சொன்னாரு. ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மதிப்பிருக்காதுன்னு”//

நீங்க யார சொல்ல வரீங்க ..?!

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

//“அதை நான் சரியா எண்ணலை சார்...//

அந்தப் பையன் நீங்கதானே ..

ஆமா ஆமா

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger கவிதை காதலன் said...

///7. “எதுக்கு ரயில்வே ஸ்டேஷன்ல எல்லோரும் பாட்டிலோட க்யூவில் நிற்கறாக்க?”

“ ‘சரக்கு’ ரயில் வருதாம்.”///

அட.. அட.. எத்தனையோ வாட்டி சென்ட்ரலுக்கு போயிருக்கேன்.. இப்படி ஒரு ஐடியா வந்ததே இல்லையே..

உங்களுக்கு கவிதை யோசிக்கவே நேரம் சரியா இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present sir

இங்கே யாரும் அட்டெண்டன்ஸ் எடுக்கலை வந்தா ஏதாவது நிறை குறை சொல்லனும்...

சி.பி.செந்தில்குமார் said...

மாதேவி said...

2,6, 7, 10. :)))

நன்றி மாதேவி

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அமைச்சர் said...

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா கவுத்துட்டியே ............. எதோ நானும் மங்குனியும் சண்டை போடுற மாதிரி பதிவு போட்டு இருப்பன்னு நினச்சு வந்தா.....பல்பு .!!!!!!!

பாபு,நீங்க சொன்ன மாதிரி தான் ஒரு மேட்டர் ரெடி பண்ணூனேன்,மங்குனி என்ன நினைப்பாரோனு ஜகா வாங்கிட்டேன்,நீங்க 2 பேரும் ஓக்கே சொன்னா போட்டுருவோம்////

டபுள் ஓகே.....என்ன கெட்டவார்த்தைல மட்டும் திட்டாதீக

ஓஹோ அப்போ நல்ல வார்த்தைல என்ன வேணா திட்டலாமா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger மங்குனி அமைச்சர் said...

என்னப்பா என் போடோ அவுட் ஆப் போகஸ்ல இருக்கு , அத சரிபண்ணு ? வரலாற போல இமேஜும் ரொம்ப முக்கியல்ல

கூகுள் பிராப்ளம்.மங்குனின்னாலே பிராப்ளம்தான்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger மங்குனி அமைச்சர் said...

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மங்கு ...,
இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போச்சு////

இதுக்கு செந்தில் எவ்ளோ பரவாஇல்லை , ஏன் நரி இப்ப இங்க மானத்த பத்தி யாராவது பேசினாங்களா ? நீ ஏன் எடுத்து குடுக்குற ? மாட்டிவிடுறதே உனக்கு பொழப்பா போச்சு

ஹி ஹி ஹி

thamizhparavai said...

ரசித்தேன் :)