Tuesday, December 11, 2012

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை டி.எஸ்.பி! டமால் டுமீல் பேட்டி

துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டாவைவிடத் துறுதுறுப்பாக இருக்கிறார் வெள்ளத்துரை டி.எஸ்.பி!



என்கவுன்டர் வெள்ளத்துரை என்பது இவர் சுட்டு வாங்கிய பட்டம். திருச்சியில் தொடங்கி திருப்பாச்சேத்தி வரை கடந்த 13 வருடங்களில் 12 உயிர்களைப் பறித்திருக்கிறது வெள்ளத்துரையின் துப்பாக்கி.



சமீபத்தில் எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபு மற்றும் பாரதி ஆகியோரை என்கவுன்டரில் வெள்ளத்துரை சுட்டுக் கொன்றது மனித உரிமை ஆர்வலர்கள் இடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்த, அது பற்றிய எந்தச் சலனமும் இல்லாமல் அடுத்த புரொமோஷனுக்காகக் காத்திருக்கும் உற்சாகத்துடன் என்னை எதிர்கொண்டார்.



தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டைச் சேர்ந்த இவர், எம்.ஏ, ஹிஸ்ட்ரி, எம்.ஏ. போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், எம்.எட். என பி.ஹெச்டி வரை முடித்தவர். 

''இவ்வளவு படிச்சுட்டு, எதுக்காக போலீஸ் வேலைக்கு வந்தீங்க?''  



''வேலை வெட்டி இல்லாம இருந்தேன்... வந்துட்டேன். படிப்பு முடிச்சிட்டு, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரியில் லெக்சரரா சேர்ந்தேன். மூணு வருஷத்துக்கு மேல தாக்குப்பிடிக்க முடியலை. அப்புறம் வேலைவெட்டி இல்லாம, வயல் வேலை பார்த்துட்டு இருந்தேன். அப்பத்தான் 1994-ல எஸ்.ஐ. செலெக்ஷனுக்குப் போனேன். 



97-ல் அப்பாயின்ட்மென்ட் கிடைச்சது. பெரிய லட்சியம் எல்லாம் வெச்சுக்கிட்டு காக்கி உடுப்பை மாட்டலை. மாசாமாசம் சம்பளம் குடுப்பாங்க. கஷ்டப்படாமக் கஞ்சி குடிக்கலாம். இதுதான் அப்ப எனக்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு. பயிற்சி முடிஞ்சு புதுக்கோட்டை கீரனூர்ல போஸ்டிங் போட்டாங்க. 99-ல திருச்சி பாலக்கரைக்கு புரொபேஷன் எஸ்.ஐ-யா வந்தேன். அப்பவே துப்பாக்கி தூக்கிட்டேன்!'' 



''உங்க முதல் என்கவுன்டர் அனுபவம்?''



''பாலக்கரை போஸ்டிங் எடுத்துக்கிட்ட மூணாவது மாசமே, அந்த அசைன்மென்ட் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை. திருச்சி லால்குடி கோர்ட்ல மாஜிஸ்திரேட் முன்னாடியே கூண்டுல நின்னுட்டு இருந்தவங்களைக் கழுத்தை அறுத்துக் கொன்னான் ரவுடியான கோசிஜன். அவன்தான் என் துப்பாக்கிக்கு முதல் வேட்டை. போலீஸைத் தாக்க வந்தப்போ குட்ஷெட் ரோட்ல வெச்சுப் போட வேண்டியதாப்போச்சு. 



அதுக்கு எல்லாரும் என்னைப் பாராட்டினப்போ, எனக்குள் எந்தச் சலனமும் இல்லை. இதோ இப்போ ரெண்டு பேரைச் சுட்டு வீழ்த்தினப்பவும் அப்படித்தான் இருந்தேன். அயோத்திக்குப்பம் வீரமணியைச் சுட்டுத் தள்ளினப்ப, எனக்கு பி.பி. பரிசோதித்த டாக்டர் நார்மல்னுதான் சொன்னாரு. நான் என்னோட காட்ஃபாதர்னு நினைக்கிறது திரிபாதி சாரைத்தான். அதேபோல, போலீஸ் ஆபீஸர்னா வால்டர் தேவாரம் மாதிரி இருக்கணும்னு நினைப்பேன். என் ஒவ்வொரு என்கவுன்டருக்கும் அவர்கிட்ட இருந்து பாராட் டுக் கடிதம் வரும். இப்பவும் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்!''




துடிக்கிறது அவரது செல்போன். எடுத்துப் பேசியவர், ''ஆத்தா சொல்லுத்தா... டாடி நல்லா இருக்கேன் தாயி. சாப்பாடு சாப்பிடலம்மா, பிஸ்கட்டும் பழமும் சாப்பிட்டேன். இன்னும் என்கொயரி முடியல. சரி தாயி, பெப்டிக் அல்சர் வந்துடாமப் பாத்துக்கிறேன் தாயி'' என்று முகம் மலரப் பேசி விட்டு நிமிர்ந்து பார்க்கிறார்.



''போன்ல உங்க மகளா?''


''ஆமா... எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. பொண்ணு மெடிக்கல் காலேஜ்ல மூணாவது வருஷம். பையன், டென்த் படிக்கிறான். என் பொண்ணு எனக்கு ரொம்ப செல்லம். இருந்தாலும், ரவுடிகளை சுட்டுத்தள்ளுறதுல அவளுக்கு இஷ்டமே கிடையாது. '


ஒரு உயிரைக் காப்பாத்துறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆனா, நீங்க சர்வசாதாரணமாக் சுட்டுக் கொன்னுட்டு வந்து நிக்கிறீங்களே டாடி. நான் மனுஷங்க உயிரைக் காப்பாத் தப் பயிற்சி எடுக்கிறேன். டிபார்ட்மென்ட்ல மத்தவங்க உயிரை எடுக்குறதுக்குன்னே உங்களை வெச்சிருக்காங்களே’னு அடிக்கடி என்கூட சண்டை  போடுவா!''

''அரசாங்கத்தின் பெயரால், அதிகாரத்தின் பெயரால் இப்படி உயிர்களைக் கொல்வது பாவம் இல்லையா? உங்கள் மனசாட்சி உறுத்தாதா? துப்பாக்கி தூக்கும்போது அதையெல்லாம் நினைத்துப் பார்க்க மாட்டீர்களா?'' 


''மக்களைப் பாதுகாக்கத்தானே அரசாங்கம் போலீஸை வெச்சிருக்கு. அந்த போலீஸையே கொலை செய்ற அளவுக்கு ரவுடிகளுக்குத் துணிச்சல் வந்துருச்சுன்னா, அது 'வார்’ இல்லையா? போருக்கு வந்த பிறகு பாவம், புண்ணியம் பார்த் துக்கிட்டு இருக்க முடியுமா? துடிப்பான இளைஞனா பணியில் சேர்ந்த ஆல்வின் சுதன் என்ன பாவம் செஞ்சான்? அவனுக்காக யாரும் ஏன் பரிதாபப்பட மாட்டேங்கிறீங்க? நேத்து என் கைல துப்பாக்கி இருந்த மாதிரி, அன்னைக்கு ஆல்வின் கைல துப்பாக்கி இருந்திருந்தா, அவன் செத்திருக்க மாட்டான்ல.


நான் விவசாயக் குடும்பத் தில் பிறந்தவன். நெல்லுக்குப் பக்கத்தில் களை வளரத்தான் செய்யும். சமயம் பார்த்து அதை நாசூக்காப் பிடுங்கி அழிக்கணும். இல்லைன்னா, நெல்லையே அழிச்சு வயலை யும் சீரழிச்சுடும். நாலாயிரம் பேர் நிம்மதியை, சந்தோஷத்தை நாலு பேரு கெடுக்குறாங்கன்னா, அந்த நாலு கிருமிகளை அழிக்கிறதுல தப்பே இல்லை. இதுக்காக நான் எப்பவும்  வருத்தப்பட்டதே இல்லை. வருத்தப்படவும் மாட்டேன். என்கவுன் டர் ஆபரேஷன் முடிஞ்சதும் ஏதாவது ஒரு அம்மன் கோயி லுக்குப் போய் சாமி கும்பிடு வேன். இப்போ மதுரை மீனாட்சி அம்மனைப் பார்க்கப் போறேன்!''


''நீங்க ஒரு ஏரியாவுக்கு போஸ்டிங் ஆன உடனே, அங்கே 'என்கவுன்டர்’ நடக்குது. அதுல என்ன மர்மம்?''


''டிபார்ட்மென்ட்ல எல்லார் துப்பாக்கியும் வெடிக்கும் சார். ஆனா, பிரச்னைக்குரிய ஏரியாக்களுக்கு நான் போனால், சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் இருக்கும்னு அதிகாரிகள் நினைக்கிறாங்க. சந்தர்ப்ப சூழல் சில நேரங்களில் அறிவிப்பு இல்லாம ஆர்ம்ஸ் தூக்கவெச்சிருது. அவ்வளவுதான்!''


'' 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை’ இதை உங்கள் மனைவி ரசிக்கிறாரா?''


''எப்படி ரசிப்பாங்க? என் மனைவி ராணி ரஞ்சிதம், அமெரிக்கன் கல்லூரியில் சாலமன் பாப்பையாவின் ஸ்டூடன்ட். எம்.ஏ. எம்.ஃபில். முடிச்சுட்டு, ஒரே ஒரு வருஷம் கெஸ்ட் லெக்சரரா வேலை பார்த்தாங்க. அப்புறம் இல்லத்தரசி ஆகிட்டாங்க. என்கவுன் டர் நடந்துட்டா, மத்தவங்க எனக்கு வாழ்த்துச் சொல் வாங்க. ராணி மட்டும், 'இதுவும் ஒரு பொழப்பா? இதுக்கு வாத்தியாராவே இருந்திருக் கலாம்’னு திட்டுவாங்க. அவங்க ரொம்பப் பயந்த சுபாவம்!'' - சிரித்தபடி மனைவியைப் பார்க்க, வெள்ளத்துரையை முறைத்தபடி பேசத் தொடங் கினார் ராணி ரஞ்சிதம்.


''வெளியில இருந்து பார்க்கிறவங்களுக்கு வேணும்னா, இவர் ஒரு ஹீரோவாத் தெரியலாம். ஆனா, குடும்பத்துல நாங்க படுறபாடு எங்களுக் குத்தான் தெரியும். காலையில தயிர் சாதத்தைக் கட்டிக்கிட்டுக் கிளம்பிட்டா, எங்கே போவார், எப்பத் திரும்ப வருவார்னு எதுவும் தெரியாது. திரும்ப அவர் முகம் பார்க்கிற வரை 'திக்திக்’குன்னே இருக்கும். வீட்டுக்குச் சொந்தக்காரங்க யாராவது புதுசா வந்தாக்கூட, 'இவங்க யாரா இருக்கும்? யாராச்சும் அனுப்பி வந்திருக்காங்களா?’னு சந்தேகப்பட வேண்டி இருக்கு. எதையும் வெளிப்படையா என்கிட்ட சொல்லவும் மாட்டாரு.


வீரமணி என்கவுன்டர் அன்னைக்கு, 'பையைக் கொடு... சிக்கன் வாங்கிட்டு வர்றேன்’னு போனார். நானும் மசாலா அரைச்சு வெச்சுட்டு உட்காந்திருந்தேன். ராத்திரி முழுக்க ஆள் வரலை. காலையில பாத்தா, டி.வி-ல வீரமணி என்கவுன்டர்னு நியூஸ் ஓடுது. டிபார்ட்மென்ட்டுக்காக இவ்வளவு உழைக்கிறாரு. ஆனா, மகளுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட, போன வருஷம் என் நகைகளை அடகுவெச்சேன்.


இதுவரை திருப்ப முடியலை. பிப்ரவரில மறுபடி ஃபீஸ் கட்டணும். அதுக்கு என்ன பண்றதுனு தெரியலை. இதைக் கூடத் தாங்கிக்கலாம். ஆனா, வெளியில போன மனுஷன், நல்லபடியாத் திரும்பி வரணு மேனு தினமும் பரிதவிச்சுக் கிடக்கிற நான்தான் தினம் தினம் ஒரு என்கவுன்டர் வேதனையை அனுபவிக்கிறேன்!'' எனக் கண் கலங்கினார் ராணி ரஞ்சிதம். கிளம்பும் முன் வெள்ளத் துரையிடம் அந்தக் கேள்வி யைக் கேட்டேன்.

''அது எப்படிங்க பிரபு, பாரதி இருந்த இடத்துக்கு நீங்க வந்து சேர்ந்தீங்க... தப்பி ஓடின அவங்க கையில் உடனே வெடிகுண்டு கிடைச்சது... எதுவுமே நம்புற மாதிரி இல்லையே?''


''போலீஸ் பிடியில் இருந்து அவங்க 12.50-க்குத் தப்பிக்கிறாங்க... 8.30 மணிக்குச் சம்பவம் நடக்குது. இடைப் பட்ட சுமார் 8 மணி நேரத்தில் அவங்க கையில் பெட்ரோல் குண்டு கிடைக்கிறதும் ஈஸி. அந்த நேரத்துக்குள்ள போலீஸ் அவங்களைக் கண்டுபிடிக்கிறது அதைவிட ஈஸி!''


thanx - vikatan

நீதிபதி கட்ஜூ சானியாமிர்சா ரசிகர் போல

1.ரூ 1600 க்கு விற்கப்பட்ட ஈமு கோழி முட்டை இப்போது கடும் வீழ்ச்சி.ஜஸ்ட் ரூ 100 தான் # ஈரோடு ,பெருந்துறை ,சென்னிமலை 
--------------------
2. கமல் முயற்சிக்கு தியேட்டர் அதிபர்கள் அலறுவது ஏன்னா பிளாக் டிக்கெட் வித்து கொள்ளை அடிக்க முடியாது என்பதால் தான்் 
--------------------
3. கணவன் கிட்டே வேலை வாங்கறதுல மனைவி கில்லாடி 
விளக்கை அணைங்க. 
ஏன்? நீ போய் ஆப் பண்ண மாட்டியா? 
-----------------
4. முதலிரவில் மனைவி - 
விளக்கை அதுக்குள்ளே அணைச்சுட்டீங்களே? 
ம்க்கும்.கரன்ட் வந்தாத்தானே ஆப் பண்ண ? 
-------------------
5. அன்பே! நின்னை சரண் அடைந்தா என் காதலை ஏத்துக்குவியா ? 
ம்.ஆனா சரணுக்கு என் அட்ரஸ் தெரியாதே? 
------------
6. டாக்டர்.டெயிலி 4 கி மீ வாக்கிங் போனா கால் வலிக்குது. என்ன பண்ண ? 
2 கி மீ வாக்கிங் போய்ட்டு அப்படியே ரிவர்ஸ்ல வா.சரி ஆகிடும் 
-------------------
7. துளசி -பொட்டு வைக்காத நீள் வட்ட நிலா # கடல் .70 மார்க் 
------------------
8. இன்ஸ்பெக்டர். என்னை 25 பேர் அன்பாலோ பண்ணிட்டாங்க.நடவடிக்கை எடுங்க . 
சட்டப்படி பசங்க உங்களை பாலோ பண்ணாத்தான் நடவடிக்கை எடுக்க முடியும் 
----------------
9. 2014- எம்.பி.தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஜெயா பச்சன்..# சரி சரி.சீன் போடாம வந்து சோறு போடு - அமிதாப் @் கிச்சன் 
---------------------
10. மிஸ் நீங்க பெயிண்டிங் எல்லாம் பண்ணுவீங்களா? 
நோ நோ கொஞ்சம் ஓவர் மேக்கப் போடுவேன்.பார்க்க பெயின்ட்டிங் மாதிரி இருக்கும் ஹி ஹி 
----------------------
11.  நீங்க கச்சேரில பாடி இருக்கீங்களாமே ? 
ஆமா பாட்டுக்கச்சேரி பார்க்கப்போன இடத்துல் அவங்க மேடைல பாடும்போது நான் கீழே இருந்து பாடுவேன். 
----------------------
13. அதிமுக அரசுக்கு பெருந்தன்மை இல்லை: கருணாநிதி: # திமுக அரசைப்போல் லஞ்சம் பெறும் தன்மை இல்லை - ஜெ 
-------------------
14. சார்.உங்க படத்துல மீனவர் பிரச்சனை க்கு தீர்வு சொல்லி இருக்கீங்களா? 
மணிரத்னம் - நோ நோ மீனவனை ஒரு மீன் விழியாள் லவ் பண்றா.அவ்ளவ்தான் 
------------------
15. மணிரத்னம் - பாட்டு பெரிய அளவில் ஹிட் ஆகலையே? 
ஏ ஆர் ஆர் - விடுங்க.படம் மட்டும் ஹிட் ஆகிடப்போகுதா ? # சும்மா 
----------------
16. ஏலே டியர் ,என்ன கோபம் ? 
சிட்டிபாய் இப்டி லே போட்டு பேசலாமா? 
ச்சீ மக்கு.இதுதான்நேர்நந்து விட்ட நேட்டிவிட்டி லவ் 
-----------------------


17. நாட்டின் வருமான வரி கட்டுவோர் வெறும் 2.7% பேர் தான்!: 3வது இடத்தில் கர்நாடகம், 4வது இடத்தில் தமிழகம் # 93% பேர் சீட்டிங்? 
------------------
18. இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஒரே நாடாக்க வேண்டும்-நீதிபதி கட்ஜூ # சானியாமிர்சா ரசிகர் போல 
-----------------------
 19. சென்னைக்கு வரும் வால்மார்ட்டை ஜெ அரசு தடுக்குமா- கலைஞர்# இந்த மாதிரி டபுள் கேம் ஆடும் சந்தர்ப்பவாதிளை ஒடுக்கும் - ஜெ 
---------------------
20. சாப்பிடும்போது சாதம் சிந்தாமல் சாப்பிடத்தெரியாதவர்கள் தனி ரூமில் யாருக்கும்தெரியாமல் சிந்திக்கனும் # ஆர்ட் ஃபிலிம் ட்வீட் 
---------------------
21. தமிழகத்தில் வால்மார்ட்டை தடுக்க வேண்டும் - கருணாநிதி # நல்ல வேளை, தீய சக்தியை துரத்தனும்னு சொல்லலை - ஜெ நக்கல் 
---------------------
22. மதிமுக ஒரு மலட்டுக் கட்சி ஒரு போதும் கருத்தரிக்காது - நாஞ்சில் சம்பத் ! # நரம்பில்லாத நாக்கு சார், உங்களை சொல்லி தப்பில்லை 
------------------------
23. மிஸ்! இன்னைக்கு சாயங்காலம் நீங்க இலவ்சமா இருக்கீங்களா? 
யோவ்! சாரி, ஆர் யூ ஃப்ரீ 
------------------
24. மதுரையில் நம்மை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது: மு.க.அழகிரி ஆவேச பேச்சு # கைது கூட செய்ய முடியாதா? - ஜெ நக்கல் கேள்வி 
------------------
25. சார்,டிடிஹெச்ல படம் பார்க்கும்போது கரண்ட் போய்ட்டா? கமல் -1000 ரூபா கட்டி படம் பார்க்கும் அளவு வசதி இருக்கு, யுபிஎஸ் க்கு பணம் நோ? 
-----------------------------

அஜித் உடல் இளைத்தார் # நடுவுல கொஞ்சம் தொப்பையை காணோம்


Photo: உன்னில் விதைக்கிறேன்

என்னை

வீழ்த்துவதும்

விருட்சமாக்குவதும்

காதல் 

உன் பொறுப்பு...
1.90% இந்தியர்கள் முட்டாள்கள் # ஐ ஜாலி.ஊரோடு ஒத்து வாழ்றேன் 



-----------------


2. ஹாங்காங்கில் ஒரே நேரத்தில், 300 நாய்களுக்கு பல் துலக்கப்பட்டு, கின்னஸ் சாதனைபடைக்கப்பட்டது# அந்த DOGடர் க்கு டாக்டர் பட்டம் குடுக்கல? 



--------------------


3. திருடிய பர்சை திருப்பிக்கொடுத்து விடு காதலி என் காதலி. வருடிய நிகழ்வுகளை மறந்ததென்ன காதலா என் காதலா # சும்மா 



--------------------



4. டாக்டர்.24 மணி நேரமும் க்ளினிக்லயே இருந்தா எப்டி ? 



அது என் சவுகர்யம்.நீங்க யார்? 



நான் யாரா? மேரேஜ் ஆல்பம் எடுத்துப்பாருங்க 



----------------------


5. உங்க படம் டி வி ல ரிலீஸ் ஆனா பாதிப்பில்லையா?எப்டி? 



70mm ல தியேட்டர்ல பார்த்தாலே என் படம் புரியாது.டிவில பார்த்தா புரிஞ்சுடுமா? 



-------------------


 
Photo: உன்னோடு கொண்டிருக்கும் 

இவ்வுணர்வின் பிடியை

புரியப்படா மொழிகளில் தான் 

கட்டிவைத்திருக்கிறது

காலம்



6. நைட்டி அணிந்து வாக்கிங் வரும் ஆண்ட்டிக்ளைக்கூட சகிச்சுக்கலாம்.துப்பட்டாவா ஈரல் துண்டு போர்த்திட்டு வர்றாங்க.முடியல 



------------------


7. டாக்டர்.நீங்க் ஏன் சிரிக்கும்போது கூட இங்க்லீஷ்லயே சிரிக்கறீங்க? 



தமிழ்ல சிரிச்சா சித்த வைத்தியர்னு சொல்லிடுவாங்க. 



----------------------


8. அத்தான் ,கடலை மிட்டாய் னா எனக்கு உயிர். 



நீ இன்னும் கடலையை விடலை? 



----------------------


9. டாக்டர்.டெய்லி காலைல 5 பாக்கெட் பிஸ்கெட் சாப்பிட்றேன்.கெடுதல் ஏதும் இல்லையே? 



உங்களுக்கு எந்தக்கெடுதலும் இல்லை.உங்க புருசன்தான் பாவம் 


-----------------


10. பல் பொருள் அங்காடி = டூத் பேஸ்ட் ,டூத் பிரஸ் , பல் பொடி விற்கும் கடை ? #சும்மா 



-------------------------


கோபம் வரும்போது ஒரு நிமிடம் தாமதித்தால் நூறு நாள் வேதனையிலிருந்து 
தப்பிக்கலாம்.

சிந்தித்துப்பாருங்கள் ஒரு நிமிடம் கோபப்பட்டதால் ,எத்தனை நல்ல விசயங்களை 
இழந்துள்ளோம்?

இனிய காலை வணக்கம்


11. அஜித் உடல் இளைத்தார் # நடுவுல கொஞ்சம் தொப்பையை காணோம் 





--------------------


12. பொண்ணு எப்டி ? 


சோ ஸ்வீட்.


மாப்ளை எப்டி ?


 சதா ட்வீட் 


------------------------


13. டிடிஎச் வெளியீட்டால் குடிமுழுகிப் போகாது...! - கமல் அதிரடி # அதாவது பரமக்குடி முழுகாது.ஹி ஹி 




-----------


14. டியர்.குரங்குக்கு பயிற்சி கொடுத்தா அது வேலை செய்யுமா? 



ஏன் செய்யாது?மேரேஜ்க்குப்பிறகு நீ சமையல் கத்துக்கல? 



------------------


15. உழவர் சந்தைல ஒரு சோளக்கதிர் 2 ரூபாக்கு பேரம் பேசும் தமிழன் அதை வேக வைத்து மசாலாமிக்ஸ் பண்ணி உதிர்்த்துத்தந்தா பிளேட் 40 ரூபா தர்றான் 



--------------------



இனிய காலை வணக்கம் நண்பர்களே...

16. டியர்.பைக்கை க்ளீன் பண்ணலையா? 


ஏன் நீ பண்ணமாட்டியா ? 


உங்க பாக்கெட்டை க்ளீன் பண்றதோட என் வேலை முடியுது 



---------------------------


17. ஓய்வின்றி உழைத்ததால் நான் மயங்கி விழுந்தது சாதாரண விஷயம் தான்.-ஸ்ருதி ஹாசன்.# "சித்தா"வைத்யம் ட்ரை பண்ணுங்க 



----------------


18. 2013 ஜூனிலிருந்து மின்வெட்டு இருக்காது - அமைச்சர் # ஹலோ நான் தான் சி எம் பேசறேன்.உங்க பேக்ஸ் மிஷின் ஆன் பண்ணுங்க - ஜெ 




----------------------


19. டாக்டர்.நான் என்ன சொன்னாலும் என் கணவர் ,குழந்தைங்க எல்லாம் பேக்கு மாதிரி சிரிக்கறாங்க. 



ஹா ஹா ஹா ஹி ஹி வி பு சி ;-))) 




-----------------


20. முதல்ல 4, 5 ஹிட் கொடுத்துட்டுத் தான் அஜீத்திடம் போகணும்: முருகதாஸ் # தீனா எடுக்கும்போது அதுதான் உங்க 6 வது படமா? 




-------------------


எப்போதுமே மற்றவர்களின் தரமான கருத்துக்கு மதிப்பு தர வேண்டும்.

இனிய இரவு வணக்கம்.

பை..பை..குட் நைட்



21. முறைப்படி கட்சி துவக்கினார் எடியூரப்பா:# ஹும்.இதை ஜீரணிக்க நாம சாப்பிடனும் இஞ்சி மொரப்பா 



---------------------



22. உங்க வீட்ல நாய் இருக்கா ? 



இல்லை ,ஆனா தேவைப்பட்டா நாங்களே கடிப்போம் 



---------------------


23. எங்களையெல்லாம் நாயைப் போல நடத்தினார் வைகோ... நாஞ்சில் சம்பத் # ஆனா நன்றி உணர்ச்சியை நீங்க காட்டவே இல்லையே? 




------------------


24. தடைகற்களை வெற்றிப் படிக்கட்டுகளாக்கியவர் சோனியா-கருணாநிதி # நீங்க படையப்பாவா? 




---------------------


25. பதிலையே கேள்வியாய் கேட்பவருக்கு கேள்வியையே் ஒரு பதிலாக அளிக்க னும் 



----------------------




டுடே டைம் பாஸ் @ டி வி



Monday, December 10, 2012

HIT LIST -சினிமா விமர்சனம்

http://www.kerals.com/kerala/wp-content/uploads/2012/09/The-Hit-List-Malayalam-Movie-Stills-1.jpgபோலீஸ் ஆஃபீசர் பொண்ணுன்னு தெரியாம 4 ரவுடிங்க அவளை ரேப் பண்ணிடறாங்க . அவர் என்கவுண்ட்டர்ல 3 பேரை கொலை பண்ணிடறாரு.4 வது ஆள் ஓவர் நக்கலாப்பேச  அவனைக்கொலை பண்ணாம “பீஸ்” பிடுங்கி அனுப்பிடறாரு. அவன் செம காண்ட் ஆகி சீரியல் கில்லரா மாறி போலீஸ் ஆஃபீசரா போட்டுத்தள்ளறான். அவனை எப்படி ஹீரோ கம் போலீஸ் ஆஃபீசர் பிடிக்கறார் என்பதே கதை .


தவமின்றிக்கிடைத்த வரமே சூப்பர் ஹிட் மெலோடி தந்த அன்பு பட ஹீரோ பாலா தான் இதுலயும் ஹீரோ, இயக்கம், தயாரிப்பு  எல்லாம்.பீர் சாப்பிட்டு  ஓவரா வீங்குன முகம். காட்டான் மாதிரி இருக்காரு. அதனால போலீஸ் கெட்டப் நல்லா பொருந்தி இருக்கு. பாவம் நடிப்புக்குத்தான் கஷ்டப்படுறாரு . 


மனைவியா காதல் சந்தியா , 13 நிமிஷம் வர்றார். ஒரு பாட்டு சீன்ல  லோ கட் ஜாக்கெட்ல ஸ்லோ மோஷன்ல ஓடி வர்றார். அது போதும்..இன்னொரு ஹீரோயின் இருக்காங்க. புதுமுகம் போல. நல்லா தான் இருக்கு. தேறிடும் .


வில்லன் நடிப்பு டாப் கிளாஸ். படம் பூரா அவர் ராஜ்யம்தான். அபார்ட்மென்ட் வாட்ச்மேனா அல்லது செக்யூரிட்டியா வரும் சசி கலிங்கப்பாவும் ஓக்கே


http://www.top10cinema.com/dataimages/17896/30-11-2012-17896-1-1.jpg



 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. சமுத்ரக்கனியை, நரேனை தலா 3 நிமிஷம் வர்ற காட்சிக்காக என்னமோ அவங்க தான் மெயின் ரோலே பண்ணின மாதிரி போஸ்டர்களில் , தியேட்டர் ஸ்டில்களில் , விளம்பரங்களில் மொள்ள மாரித்தனம் செய்தது .இது ஒரு மலையாளப்படம் என்ற வாசனையே தெரியாமல் பார்த்துக்கொண்டது 



2. ஹீரோ சாட்சியான வாட்ச்மேனை  கிளப் கூட்டிட்டுப்போய் சரக்கு அடிச்சுட்டு வாட்ச்மேனை பில் கட்டச்சொல்லும் எகத்தாளமான சீன்



3. தகதீனா தின்னா அப்டினு ஒரு குத்தாட்ட நைட் கிளப் பாட்டு செம கிக். 


4. வேட்டையாடு விளையாடு போலவே வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் குடுத்தது .. ஏன்னா ஹீரோவே தயாரிப்பாளரா இருந்தும் தங்கர் பச்சான் மாதிரி தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தாம  வில்லன் ரோலை கெத்தா காட்டினது



http://moviegalleri.net/wp-content/gallery/hit-list-movie-audio-launch/hit_list_movie_audio_launch_photos_stills_5a3f56d.jpg




மனம் கவர்ந்த வசனங்கள்



1.  எவன் கிட்டே மோதறோம்னு தெரிஞ்சுக்கிட்டு மோதுங்க . இப்படி ஆள் தெரியாம மோதுனா அட்ரஸ் இல்லாம போய்டுவீங்க ( நோ டவுட் , பஞ்ச் டயலாக்கேதான் ) 



2. பணம் கொடுக்கற மூஞ்சி எனக்குத்தேவை இல்லை. அது எவனா இருந்தா எனக்கென்ன? பணம் தான் தேவை 



3.  எல்லார் வாழ்க்கையிலும் நாம விரும்பும் சிலரும், நம்மை விரும்பும் சிலரும் இருப்பாங்க.. அவங்களை ஒரு நாள் நாம இழக்கத்தான் நேரிடும் 



4. நான் தண்ணி அடிக்கறது  எல்லாத்தையும் மறக்க , நீங்க தண்ணி அடிக்கறது  எதையும் மறக்காம இருக்க 




5. நஷ்டப்பரிகாரத்தை குடுத்துட்டாலும் நஷ்டம் ஆனது ஆனதுதானே? 



6. நீ என் எதிர்காலத்தைப்பத்தி கேட்டுட்டு இருக்கே.. ஆனா நான் இன்னும் கடந்த காலத்துல வாழ்ந்துட்டு இருக்கேன் 


7. உன் வாழ்க்கைல நீ கடைசியாப்பார்க்கப்போகும் முகம் என முகம் தான் ( ஹீரோ வில்லன் கிட்டே சொல்லும் பஞ்ச் )



http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2012/11/hitlist-movie-stills-32-300x200.jpg



 இயக்குநரிடம் ஏகப்பட்ட கேள்விகள் , லாஜிக் மிஸ்டேக்ஸ் இன்ஃபினிட்டிஸ்




1. ஹீரோ மனைவி இறந்த துக்கத்துல 2 வருஷமா இருக்கார் ஓக்கே, சஸ்பென்ஷன் முடிஞ்சதும்  டியூட்டில ஜாயின் பண்ணும்போது நீட்டா ஷேவ் பண்ணிட்டு ஜம்முனு பொக வேணாம்? 2 வருஷ தாடியோட  பஞ்சப்பரதேசி மாதிரி ( மன்னிக்க - இயக்குநர் பாலா, அதர்வா)  படம் முழுக்க தேவதாஸ் மாதிரி வர்றார்.  சகிக்கலை.. ஆளைப்பார்த்தா நமக்கு சுறு சுறுப்பு வரனும். தூக்கம் தான் வருது 




2. சைடு வில்லன் ஹீரோயினை ரேப் பண்ணனும்னு முடிவு பண்ணீட்டா பண்ணிட வேண்டியதுதானே? கேனயன் போல 20 அடியாளுங்க கூட போய் அவ கிட்டே “ நான் நினைச்சா இப்பவே உன்னை ரேப் பண்ண முடியும், ஆனா பண்ண மாட்டேன், 7 நாள் கழிச்சுத்தான் பண்ணுவேன்னு கெடு குடுத்துட்டு வர்றானே? அது என்ன கோயில் கும்பாபிஷேகமா? நல்ல நாள் பார்த்து பண்ண? ஒன்றே செய் , நன்றே செய் , அதுவும் இன்றே செய்னு பெரியவங்க  சொல்லி இருக்காங்க இல்லை? ராஸ்கல்ஸ்.. 



3. ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர், அவரைத்தவிர மற்ற எல்லாரும் க்ளோஸ் கட்டிங்க் பண்ணி இருக்காங்க. அவர் மட்டும் ஃபங்க் விட்டிருக்கார் . கேட்க ஆள் இல்லை . அவர் தானே தயாரிப்பும்? 



4. முதல் கொலை நடந்தப்ப அந்த போலீஸ் ஆஃபீசர் சட்டை பூரா ரத்தம் , அப்புறம்  பொலீஸ் வந்தப்ப ஒரே ஒரு இடத்துல மட்டும் ரத்தம் 



5. ஹீரோ ஹையர் ஆஃபீசர் அவரே ஒரு ரவுடியை அடிச்சு தோள்ல வேதாளம் தூக்கும் விக்ரமாதித்தன் மாதிரி போறார். அவருக்குப்பின்னால் போகும் ரியாஸ்கான் அவருக்கு கீழே வேலை சேயும் ஆஃபீசர் சம்சாரம் கூட செல் ஃபோன்ல பேசிட்டு வர்றார் ஜாலியா... எந்த ஆஃபீசர் சும்மா இருப்பார்? 


6. அபார்ட்மெண்ட்ல 67  குடி இருப்பு இருக்கு. எல்லா வீட்டு டூப்ளிகேட் சாவியும் எங்காவது செக்யூரிட்டி கிட்டே இருக்குமா? தேவைன்னா  போய் வாங்கிட்டு வருவான். சாவி ஓனர் கிட்டேதான் இருக்கும்


7 . கதைப்படி அபார்ட்மென்ட் வாட்ச்மேன்  வீட்ல ஆள் இல்லாதப்போ ஒவ்வொரு வீடா திறந்து டேபிள்ல இருக்கும் பணத்தை 1000 , அல்லது 2000 அப்டி அடிச்சுட்டு இருக்கார். அந்த கணக்குப்படி  அவர் சராசரி வார வருமானம் மினிமம் 67,000 ரூபா. ஆனா அவர் ரிஸ்க் எடுத்து கொலையாளியை வேவு பார்த்து போலீஸ்ல தகவல் சொல்ல கேட்கும் பணம் ஜஸ்ட் ரூ 50,000 . அதுக்கு அவர் அபார்ட்மெண்ட்லயே திருடிக்கலாமே? இன்னும் அதிகப்ப்ணம் கேட்கற மாதிரி சீன் வெச்சிருக்கலாம் 



8.  படத்துல கொலையாளியை வேவு பார்ப்பது , ஆதாரங்கள் சேக்ரிப்பது எல்லாமே அந்த வாட்ச்மேன் தான், 2 ஹீரோயின்களையும் கரெக்ட் பண்றது தவிர ஹீரோ என்ன தான் செய்யறார்?



http://i.ytimg.com/vi/gEF1Tnh4dnI/mqdefault.jpg



9. ஹீரோ கொலையாளியை அவன் வீட்ல சந்திக்கும்போது “ சர்ச் வாரண்ட் இருக்கா?ன்னு கேட்கும்போது ஹீரோ பம்மறார். வீட்ல அவர் எதிர்பார்த்த ஆதாரம் இல்லைன்னதும் ஏன் ரிட்டர்ன் ஆகறார்? வாட்ச்மேன் சாட்சி இருக்கு. நீ கன் வெச்சிருந்தியே எங்கே? என அப்பவே 2 தட்டு தட்டலாமே?  ஏன் பம்முறாரு? 



10. ஒரு சீன்ல மழை வந்துட்டு இருக்கு , ஹீரோ ஜன்னல் ஓரமா உக்காந்து லேப்டாப்ல என்னமோ பண்ணிட்டு இருக்காரு . மழை சாரல் அடிச்சு  லேப்டாப் நனையுது , அவர் கண்டுக்கவே இல்லை.. 


11. ஹீரோயின் ஏன் கேன்ம் மாதிரி ஒயிட் & ஒயிட் டிர்ஸ் போட்டுக்கிட்டு துப்பட்டா போடாம மழைல நனைஞ்சு ஹீரோ வீட்டு வாசல்ல நின்னு குற்ற வாளியை சீக்கிரம் பிடிங்கன்னு சொல்லிட்டு போகுது.? அதை ஃபோன்லயே சொல்லி இருக்கலாமே? 


12. டம்மி வில்லன் படம் போட்ட 3 வது ரீல்லயே ஹீரோயினை ரேப் பண்ணப்போறதா மிரட்டிடறான். ஹீரோயின் ஹீரோ கிட்டே அதை ஏன் முதல்லயே சொல்லலை? படம் போட்டு `12 வது ரீல்ல போனா போகுது , பெட்ரோல் விலை 2 ரூபா ஏறி இருக்கு என்பது மாதிரி அசால்ட்டா சொல்றாரே? 



13. ஹீரோ ஹீரோயின் கிட்டே உன் பேரு என்னன்னு கூட எனக்குத்தெரியாதுங்கறார். ஆனா அந்த சீனுக்கு முன்னால ஹீரோயின் ஹீரோவுக்கு எஸ் எம் எஸ் அனுப்புது. இவர் கூப்பிட்டு கால் பண்றாரு. அதுல ஹீரோயின் பேர் இருக்கு 


14. படத்தோட மெயின் கதை என்ன? க்ரைம் த்ரில்லர், சீரியல் கில்லர். அதை விறு விறுப்பா சொல்ல சான்ஸ் இருந்தும்  ஹீரோவோட அப்பாவை இழந்து ஹீரோ படும் சோகம், மனைவியை இழந்து படும் சோகம், ஹீரோயின் அண்ணன் இழந்து படும் சோகம் இத்தனை செண்ட்டிமெண்ட் லொள்ஸ் எதுக்கு? படத்துக்கு பயங்கர ஸ்பீடு பிரேக்கர்ஸ் 


15.  ஹீரோயின் லூஸ் மாதிரி “ போராட்டத்துல என் உயிரையும் தரத்தயார்”  அப்டிங்கறார். அவர் என்ன சத்தியாகிரகப்போராட்டத்துல கலந்துக்கிட்டாரா? வில்லனைப்பிடிக்க ஏதும் உதவி பண்ணாரா? எதுவும் இல்லை 



16.  ஹீரோ பளார்னு அறை வாங்கிட்டு அடி வாங்கறதுல ஒரு சுகம் இருக்குன்னு லூஸ் மாதிரி  உளர்றாரே ஏன்?



http://www.cinegoer.com/navigation/telugu-cinema/movies/hit-list/hit-list-telugu-movie-stills-1-10.jpg



17.  கைல போட வேண்டிய வளையலை ஹீரோயின் காதுல போட்டிருக்கே ஏன்? அதுதான் ரிங்கா? நல்ல வேளை தொப்புள்ல போடலை 



18. ஊர்ல கல்யாணம் ஆகாத 1008 நல்ல பசங்க இருந்தாலும் இந்த கேன ஹீரோயின்கள் ஏன் ஆல்ரெடி மேரேஜ் ஆன செக்ண்ட்ஸ் ஹீரோ கிட்டே வலியனா போய் விழுதுங்க?

19 .வில்லன் லூஸா? ஹீரோயினை கொல்லனும்னா கொல்லனும், ரேப் பண்ணனும்னா ரேப் பண்ணனும். எதுவுமே பண்ணாம கேனம் மாதிரி ஹீரோவுக்கு ஃபோனைப்போட்டு உன் ஆள் என் கஸ்டடில இன்ன இடத்துல இருக்கா. உனக்கு 10 நிமிஷம் டைம் தர்றேன், கண்டு பிடிச்சா அவ உனக்கு, இல்லைன்னா எனக்கு அப்டீங்கரான். கண்ணா மூச்சி விளையாட்டா நடக்குது? இந்த லட்சனத்துல வில்லன் மைக்ல  அப்பப்ப ரன்னிங்க் கமெண்ட்ரி வேற செம காமெடி


20. கொலை செஞ்சது இவன் தான் என நல்லா தெரியுது, ஆனா எந்த ஆதாரமும் இல்லைன்னு போலீஸ் சொல்லுது. ஆனா வில்லன் கைல எந்த கிளவுசும் போடாமதான் வாட்ச் மேனை கழுத்தை நெரிச்சு கொல்றான். அவன் கைரேகை வாட்ச்மேன் டெட் பாடில இருக்குமே? மேட்ச் பண்ணி பார்க்கலையா?


21 ஹீரோவுகு டிரஸ்ஸிங்க் சென்ஸ்னா என்னன்னே தெரியாதா? போலீஸ் ஆஃபீசர் அதுவும் க்ரைம் பிராஞ்ச் ஆஃபீசர் சிவில் டிரஸ்ல இருக்கும்போது நீட்டா பிளெயின் சர்ட் தான் போடுவாங்க. டுட்டோரியல் காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி ஸ்டோன் வாஸ் சர்ட்டும், கேவலமான பேண்ட்டும் போட்டிருக்காரு



22. வில்லனோட எண்ணம் போலீஸ்ங்க எல்லாரையும் போட்டுத்தள்ளுவது என்றால் அவர் ஏன் ராகுல் டிராவிட் மாதிரி கட்டை வெச்சு சிங்கிள் சிங்கிள் ரன்னா எடுக்கறாரு? பல இடங்கள்ல டோட்டல் டேமேஜ் பண்ண வாய்ப்பு இருந்தும் ஒரு ஒரு ஆளா ஏன் கொல்றார்?


23.வில்லன் ஒரு இன்ம்பொட்டண்ட். மேட்டருக்கு லாயக்கில்லை. அப்படிப்பட்டவர் ஒரு காட்சில லேடி எஸ் ஐ கிட்டே “ உன் பொண்ணை என் கிட்டே அனுப்பி வை அல்லது நீ வர்றியா?”ன்னு லூஸ் மாதிரி பேசறாரே? அவர்னாலதான் முடியாதே?


24. ஓப்பனிங்க் பில்டப்ல வில்லன் ஒரு ஹிட் லிஸ்ட் போட்டு 8 பேர் கொல்லப்போறேன், 2 பேரை கொன்னாச்சு, மீதி 6 பேர் பாக்கிங்கறார். ஆனா க்ளைமாக்ஸ்ல ஆல்ரெடி நான் பலரைக்கொன்னிருக்கேன், இன்னும் கொல்வேன் , கணக்கில்லைங்கறார். அப்புறம் அந்த 8 லிஸ்ட் என்ன இதுக்கோசரம் சொன்னார்? என்ன லிங்க் அந்த 8 பேருக்கும் ?


25.வாட்ச்மேனா வர்றவர் 8 வது மாடில இருந்து  2 கிமீ தூரத்துல இருக்கும் நீச்சல் குளத்துல இருக்கும் பெண்கள் குளிக்கும் காட்சியை நோக்கியா 62233 மாடல் ஃபோன்ல வீடியோ எடுக்கறார்.ரூ 9000 மதிப்புள்ள அந்த ஃபோன்ல அவ்வ்ளவு ரேஞ்ச் லாங்க் கவரேஜ் வசதி எப்போ வந்தது?அப்புறம் அவர் க்ளோசப்ல ஒரு லேடி குளிப்பதை 2 அடி தூரத்துல க்ளோசப்ல வாட்ச் பண்றார், அப்போ ஏன் வீடியோ எடுக்கலை?


http://www.cinespot.net/gallery/d/1006285-1/Hit+list+malayalam+movie+_11_.JPG




விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40 ( இது மலையாளப்படம் என்பதால் விமர்சனம் போட மாட்டாங்க )


 குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே




 சி பி  கமெண்ட் - க்ரைம் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம். மோசம் இல்லை.. லேடீஸ் நெளிய வைக்கும் சில காட்சிகள் உண்டு. அதனால் பெண்கள் இந்தப்படத்தை தியேட்டரில் பார்ப்பதை தவிர்க்கலாம்




கடல் - ஏ கீச்சான் ,நெஞ்சுக்குள்ளே காதல் பாடல்

http://moviegalleri.net/wp-content/uploads/2012/02/mani_ratnam_kadal_movie_first_look_posters.jpgமணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்கு கடல் என்று பெயரிட்டுள்ளார். இதனை அவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படத்திற்கு பூக்கடை என்று பெயர் வைத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படம் பற்றி பல்வேறு தகவல்களும் வெளியாகின. இந்நிலையில், பூக்கடை என்ற தலைப்பு எங்களுடையது என இயக்குனர் சரணிடம் உதவியாளராக இருந்த சதீஷ் என்பவர் புகார் கூறினார். இதுபற்றி தகவல் அறிந்த டைரக்டர் மணிரத்னம், என் படத்தோட தலைப்பு பூக்கடைன்னு நான் சொல்லவே இல்லை. நான் வைக்காத தலைப்புக்கு எதற்காக பிரச்னை? என்று கூறினார்.


இந்நிலையில் தனது அடுத்தபடத்திற்கு கடல் என்று பெயர் வைத்துள்ளதாக மணிரத்னம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்தின் நாயகனாக கார்த்திக் மகன் கவுதமும், நாயகியாக சமந்தாவும் நடிக்க இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அர்ஜூனும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் நடிப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போவதாகவும் கூறியுள்ளார்.


"கடல்" படம் தமிழக மீனவர்கள் பிரச்னையை எடுத்து சொல்லும் படமாகவும், அதில் ஒரு அழகிய காதல் கதையும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.கோடம்பாக்கமே ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்ளும் விஷயம்... மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்து ஹீரோயின் சமந்தா வெளியேறிவிட்டதுதான்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhbd-gPDCPLDJ8JEyUwY5fjptqV-haFxFtEGPBIJ6RZxSpSEJjvCBVf4yYr5S4fhRCe7WJ_OUfCw814s-h5ysu7vRhwvASMBFM_mz_WLE6t_YLdvwiYh_uhPMPdbIMa8G-t9XCOhNxTSE/s1600/manirathnam+ar+rahman+samantha+kadal+movie+stills+wallpapers+first+look+hellotolly.com+(3).jpg



ஏன்? என்னாச்சு? எப்படி?


என ஒவ்வொருவரும் மணிரத்னம் ஸ்டைலிலேயே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!


http://chennaionline.com/images/articles/November2012/53d2ff12-8f9c-4f86-a92a-0e23357b9a5fOtherImage.jpg


கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தென் தமிழகத்தின் கடற்கரையோர கிராமங்களில் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.


மணிரத்னத்தைப் பொருத்தவரை இந்தப் படம் அவருக்கு பெரிய சவால். காரணம், தொடர்ந்து அவரது படங்கள் பாக்ஸ் ஆபீசிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அவரது சமீபத்திய வெளியீடான ராவண், தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலுமே படுதோல்வி கண்டது.



எனவே பார்த்துப் பார்த்து கடல் படத்தை உருவாக்கி வருகிறார்.




சமந்தா இந்தப் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டதும், தனது வாழ்க்கையில் இந்தப் படம் மறக்கமுடியாததாக அமையும் என்று சந்தோஷப்பட்டார்.


ஆனால் இப்போது திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சமந்தா அறிவித்துள்ளார். கவனிக்க... மணிரத்னம் நீக்கவில்லை... சமந்தாவே விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார்.



தமிழில் இனிமேல்தான் சமந்தாவுக்கு வெற்றிப் படம் அமைய வேண்டும். இந்த சூழலில் பெரிய வாய்ப்பு ஒன்றிலிருந்து தானாகவே விலகிக் கொண்டிருக்கிறாரே... என்னவாக இருக்கும்? என்று பேச ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்...



இப்போதைக்கு, நீதானே என் பொன்வசந்தம், ஷங்கர் படம் மற்றும் கார்த்தியுடன் பிரியாணி ஆகியவை சமந்தாவின் கைவசம் உள்ளன.


சுனாமியே வந்தாலும் மணிரத்னத்திடமிருந்து அவர் படம் குறி‌த்த சிறு தகவல்கூட பெயராது. நாமே துப்பறிந்து பகிர்ந்து கொண்டால் மட்டுமே உண்டு. இரண்டாவது சாய்ஸ் வைரமுத்து. படத்துக்கான பப்ளிசிட்டி நேரத்தில் வைரமுத்து படத்தின் அருமை பெருமை பற்றி தனது விறைப்பு தமிழில் வண்டியாக கொட்டுவார்.








தென்னக கடற்கரையோரம் மையம் கொண்டிருந்த மணிரத்னமும் டீமும் இப்போது அந்தமானை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அங்கு நடக்கிறது. ஹீரோயின் சமந்தா விலகிக் கொண்டதால் அவருக்குப் பதில் ராதாவின் இளைய மகள் துளசியையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அலைகள் ஓய்வதில்லை படத்தில் தானும், கார்த்திக்கும் அறிமுகமானது போல் கடலில் தனது மகளும் கார்த்திக்கின் மகனும் அறிமுகமாவதில் ராதாவுக்கு கொள்ளை மகிழ்ச்சி. இது கடல் என்றால் அது அலைகள் ஓய்வதில்லை. பெய‌ரில்கூட பொருத்தம் என்று பெருமை கொள்கிறாராம்.





துளசிக்கு இப்போது 14 வயதுதான் ஆகிறது. அதற்குள் மணிரத்னம் பட ஹீரோயின் என்ற பெரும் சுமை எதுக்கு என்றும் இன்னொருபுறம் சர்ச்சை சலசலக்கிறது.



மௌனமாக இருந்தே அனைத்தையும் ஆஃப் பண்ணிவிடுவார் மணிரத்னம். 
மணிரத்னத்தின் சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெ‌ரிய அளவில் சாதிக்கவில்லை. யானை இளைத்தாலும் தந்தம் இளைக்காதில்லையா. மணிரத்னத்தின் புகழை இந்த ச‌ரிவு எதுவும் செய்யவில்லை.



அவர் இயக்கி வரும் கடல் இன்னும் பத்து சதவீதம் முடியவில்லை. அதற்குள் பத்திரத்துடன் படத்தை விலை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நமக்குக் கிடைத்த தகவல் உண்மையெனில் கடலுக்கு முதலில் வலை வீசியவர்கள் ஜெமினி பிலிம்ஸ். மாஸ் ஹீரோ இல்லாத கடலின் தமிழக திரையரங்கு உ‌ரிமையை மட்டும் 25 கோடிக்கு அவர்கள் கேட்டதாக தெ‌ரிகிறது. தெலுங்கு, கேரள உ‌ரிமை, தொலைக்காட்சி, ஆடியோ, வெளிநாட்டு உ‌ரிமைகள் தனி.மணிரத்னம் இந்த டீல் குறித்து வழக்கம் போல் எதுவும் சொல்லப் போவதில்லை. வைரமுத்து ஏதாவது வாய் திறந்தால்தான் உண்டு.

கடல் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்த 70 நாட்களில் முடித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். காதல் படமான கடலில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க துளசியை மலையாளக் கரையோரத்தில் இருந்து கூட்டி வந்திருக்கிறார்கள். மணப்பாடு, அந்தமான், கேரளா கடற்கரையோரங்களில் கடல் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள். கவுதமும் துளசியும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நடிப்புத் திறமையை காட்டியதில் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார் மணிரத்னம். அர்ஜூன், அரவிந்த் சாமி, லக்ஷ்மி மஞ்சு, பொன்வண்ணன், பசுபதி மற்றும் தம்பி ராமையா என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் கடலில் களம் இறங்கியிருக்கிறார்கள். 


இயக்குனர் மணிரத்னம், ஒரு படத்துக்கும், அடுத்த படத்துக்கும் இடையே, அதிக இடைவெளி எடுத்துக் கொள்வார். ஒரு படம் வெளியாகி, நீண்ட நாட்களுக்கு பின் தான், அடுத்த படத்துக்கான பணிகளை துவங்குவார். தற்போது, இந்த நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார், அவர். "கடல் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும்,  அந்த படத்துக்கான, இறுதி கட்ட பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும், இப்போதே, அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தை, மணிரத்னம் இயக்கப் போகிறார். இந்த படத்துக்கான. கதை விவாதத்தில், மணிரத்னமும், ஜெயமோகனும், தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன.


thanx - thats tamil, dinamalar, cine 123  


நவரச நாயகன் எனப்பட்ட நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கின் முதல் சினிமா ஸ்டில்லை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். கடல் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் கவுதம் கார்த்திக். ஆனால் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும், மீடியா அதிகமாக பரபரக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கவுதமின் ஸ்டில்களை வெளியில் விடாமல் மறைத்து வந்தார் மணிரத்னம். manirathnam releases another first look of goutham மேலும் படங்கள் இடையில் ஒருமுறை கவுதமின் ஸ்டில் யதேச்சையாக வெளியாகிவிட, பதறிப்போய், அதை நீக்கச் சொன்னதெல்லாம் நடந்தது. இந்த நிலையில் கடல் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது முற்றிய கத்தரிக்காயை வெளியில் காட்டி வியாபாரம் செய்தாக வேண்டுமே... எனவே தினத்துக்கு ஒரு ஸ்டில்லாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு கடல் ஃபர்ஸ்ட் லுக் என்ற பெயரில் கவுதம் முகத்தைக் காட்டாமல் ஒரு ஸ்டில்லை வெளியிட்டார் மணிரத்னம். இப்போது அதில் கொஞ்சம் முன்னேற்றம். கவுதம் முகத்தை ஓரளவு காட்டியபடி உள்ள டிசைனை வெளியிட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் இதே ரேஞ்சுக்கு படத்தின் ஹீரோயினான ராதா மகள் துளசியையும் காட்டப் போகிறார். .

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2012/12/manirathnam-releases-another-first-look-of-goutham-165767.html
ஏ கீச்சான் பாடல்

Nenjukulla Kadal Official Song - AR Rahman

 
 
 

விஸ்வரூபம் -DTH -ல் வெளியீடு -கமல் -ன் தன்னிலை விளக்கம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHdLqt_ncOMTJrEP_6yqWNEAG0y-jWn6Xwi-UkDwIOge5p756gnZs5-vsyYFs1Qvu_YWvSdZ-DydMrI875RMHSBIobcamBk5CrLQYspsaIR9xfAhEfUmZ9RJ7_A0XNxiJp5EbDsW_IUpg/s400/Viswaroopam+Latest+Wallpapers+Cinema65.com+(3).jpg 

 

கிடைத்ததைச் சுருட்டுபவன் நானல்ல... டிடிஎச் வெளியீட்டால் குடிமுழுகிப் போகாது...! - கமல் அதிரடி

சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளுக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
kamal blasting statement on viswaroopam 
dth release
கமல்ஹாசனின் காட்டமான 3 பக்க அறிக்கை


புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.



ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்' என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.



ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் - பெரும்பான்மை - ‘இது சினிமாவர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்...உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி' என்று என்னைப் பாராட்டுகிறது.


இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஒரு சிறுபான்மை மட்டும் இதுநாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.


 http://www.cinepicks.com/telugu/gallery/viswaroopam/viswaroopam-stills-1759.jpg
இந்த DTH என்பதுஎன்ன?


எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியாஎன்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.



சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH.


இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடப்பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளப்புகிறார்கள்.
கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று.



என்படம்முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.




முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத் தயாரிப்பாளர்கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.



ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக முதல் இடத்திற்குவிஸ்வரூம் வரும் என்கிறது வியாபார வட்டாரம்.



இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?



DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தி யேகக்காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒருமுறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.



விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத் தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல்காட்டுவதற்கு மட்டும் அல்ல.



DTH வசதி தமிழக ஜனத் தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.



7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரிகொண்டுபோவதைத்தடுப்பதற்குசிறுமுயற்சிகளேசெய்கிறார்கள். கள்ள DVDக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.



திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்றுகூட சேரக் கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.



இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம்கெடும் என்று எதிர்த்துத்தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது.



பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒருபக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை.


கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும் வீட்டில் மின்விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன்குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/viswaroopam_movie_stills_0806120245/viswaroopam_movie_stills_0806120245_026.jpg


முஸ்லீம்களுக்கு எதிரானதா?


முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.



அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச்செய்யுங்கள். அப்பெரு விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.



-இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.

 

Kamal S Plan With Mani Ratnam Son


சென்னை: உலக நாயகன் கமல் ஹாசன் இயக்குனர் மணிரத்னத்தின் மகனை வைத்து ஒரு திட்டம் தீட்டியுள்ளாராம்.


கமல் ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பாரி ஆஸ்பர்னுடன் சேர்ந்து கமல் பணியாற்றவிருக்கிறார். உலக தரத்தில் படம் எடுக்கும் உலக நாயகனை ஹாலிவுட் படத்தில் பார்க்க ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.


இந்நிலையில் கமல் இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தனை தன்னுடன் ஹாலிவுட் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இது வரை சினிமா உலகை விட்டு விலகியே இருக்கும் நந்தன் கமல் மூலம் அதுவும் ஹாலிவுட் போகிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


நந்தன் கமலின் ஹாலிவுட் படத்தில் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளரக பணியாற்றுவார் என்று தெரிகிறது.

நன்றி - தட்ஸ் தமிழ்


http://www.tamilqueens.com/wp-content/uploads/2012/05/viswaroopam-on-location-stills-bf943a96.jpg


சி.பி செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ் பாகம் 2


1. தலைவர் எந்த கட்சியையும் திட்றது இல்லையே ஏன்?

ம்க்கும் அவருக்கு எதிர்கட்சி எது? தான் இருக்குற கட்சி எதுன்னே வித்தியாசம் தெரியாது.

.................................................................................




2. தேர்தல் அறிக்கைக்கு  தொண்டர்கள்லாம் முத்தம் தர்றாங்களே ஏன்?!

அதுதானே கட்சியோட கதாநாயகி. ஆசை வராதா?

................................................................




3. பெட்ரோல் விலை ஏற விஸ்வநாதன் ஆனந்த்தான் காரணம்ன்னு அறிக்கை விட்டிருக்காரே?!

பெட்ரோலியப் பொருட்கள் மீது செஸ் வரிதானே விதிக்கப் பட்டிருக்கு.

..........................................................




4.எப்படியாவது வர்ற எலக்‌ஷன்ல நான் தோத்துடனும்ன்னு கடவுள்கிட்ட தலைவர் வேண்டிக்குறாரே ஏன்?!

தலைவரோட எதிர்கட்சி மகளிர் அணித்தலவி தலைவர் தேர்தல்ல தோத்துட்டா கட்சி ஆஃபீஸை நிர்வாணமா ஒரு ரவுண்ட் ஓடி வர்றதா சபதம் போட்டிருக்காங்க.


...............................................




5.உலகத்துலயே காதலுக்கு எதிர்ப்பே இல்லாத ஜோடி எது?

ஆதாம்.., ஏவாள்..

.......................................




6. மாமியார் பிரச்சனை இல்லாத மருமகளே இல்லை.

அப்படி சொல்ல முடியாது. ஏன்னா ஏவாள்க்கு மாமியாரே இல்லை...,


...................................

7.எவ்வளவு தடவை குளிச்சும் என் உடம்புல இருக்குற ஜவ்வாது செண்ட் வாசம் போக மாட்டேங்குதே!

அதனால என்ன?

“காதலி கூட “மணம்(மனம்) விட்டு பேசலாம்ன்னு நினைச்சு வந்தேன்.

........................................................................

8.ஆரூடம் சொல்லும் ஆக்டோபஸை அழிக்க போவதா தலைவர் மேடைல முழங்குறாரே!

அவர்  தோற்கப் போவதா முன்கூட்டியே அது சொல்லிட்டா விழுற 10 ஓட்டும் விழாம போய்டுமே!

..............................................................

9.இன்ஸ்பெக்டரை அய்யான்னு கூப்பொடாம அய்யோன்னு கூப்பிட்டியாமே?!

இன்ஸ்பெக்டர் லாக்கப்புல இருக்குற பென் கைதி கூட சரசமா சிரிச்சுப் பேசறப்ப இன்ஸ்பெக்டரோட மனைவி திடீர்ன்னு ஸ்டேஷனுக்குள்ளே வந்துட்டாங்களே!

........................................................................

10. தலைவருக்கு மனசுக்குள்ளே பெரிய சினிமா ஹீரோன்னு நினைப்பு.

ஏன்?

நான் ஒரு தடவை ஒரு தொகுதில நின்ன தொகுதில மறுபடி ஒரு தடவை நானே நிக்க மாட்டேன். யார்க்கிட்டயும் ஓட்டு கேட்க மாட்டேன்னு பஞ்ச் டயலாக் பேசுனாரே?!

..............................................................

11. திருப்பதில எல்லா சாமி நகையையும் காணாம போய்டுச்சாமே!

ஏழுமலையானை ஏழைமலையானாக மாத்தாம  விட மாட்டாங்க போல.

.......................................................

12. தன்வினை தன்னைச்சுடும்ன்னு இப்போதான் நான் உணர்ந்தேன்.

எப்படி?

நான் லவ் மேரேஜ் பண்ணுன சித்ரா என்னையே எதிர்த்துப்பேசி எனக்கே சூடு வைக்குறா.

.......................................................................

13.கடன்கார பசங்கன்னு தலைவர் யாரை திட்டுறாரு?

வேற யாரை? இந்தியர்களைத்தான். உலக வங்கில கடன்(லோன்) வாங்குனதுல இந்தியாதான் நெம்பர்1 பிளேஸ்ல இருக்காம்.

.........................................................................

14.தீம்ஸ் பார்க்குல செயற்கை அலை உருவாக்குற வாட்டர் எஞ்சினியர்ஸ் கூட தலைவர் தீவிர டிஸ்கஷன்ல இருக்காரே! எதுக்கு?

வர்ற எலக்‌ஷன்ல அவருக்கு அனுதாப அலை வீச்ச் செய்ய ஐடியா கேட்குறாரு.

.......................................................

15. டாக்டர்.., மாலை கண் நோய்ன்னு சொல்றிங்க. ஆனா, கண் மஞ்சளா இருக்கே!
ஒருவேளை கா”மாலை” கண் நோயா  இருக்குமோ?!
..................................................................................
16. சதீஷ்.., உங்களுக்கு  தாடி வெச்சா நல்லா இருக்கும்.
மோஹனா! கழட்டி விடப் போறேன்னு ஓப்பனா சொல்லு. ஏன் சுத்தி வளைச்சு சொல்றே.

..................................................

17. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?! அழகான பொண்ணுங்களுக்கு “மூளை” சின்னதா இருக்கும், அழகில்லாத பொண்ணுக்கு “மூளை” பெருசா  இருக்கும்.

ஏன்?

குவாலிட்டி இருந்தா குவாண்டிட்டி இல்லை. குவாண்ட்டி இருந்தா குவாலிட்டி இல்லை.

..............................................................

18. காதும்.., காதும் வைத்ததுப்போல் வளர்வதால் தனோ “காதல்” எனப்படுகிறதோ!

..........................................................................................

19.லவ்வரோட தங்கை நமக்கு மிஸ்டுகால் விட்டா இந்த சமுதாயம் என்ன சொல்லும்?!

கண்ணா! இன்னொரு லட்டு திங்க ஆசையா?!

...................................................................................

20. அவள் விரல்பட்ட கோபத்தில் விழுந்துக் கிடக்கிறேன்.- கோலமாக.

Sunday, December 09, 2012

ஐ ஆம் வெயிட்டிங்க்

1. சில்லறை இருக்கறவங்க மட்டும் பஸ்ல ஏறு 


கண்டக்டர் சார், எங்க வீட்ல சில் அறை ( ஏ சி ) இருக்கு, நான் ஏறலாமா? 



------------------------



2. ஜட்ஜ்  - பேனாவால் குத்தி கொலை செஞ்சது ஏன்? 


 கைதி -  கத்தி முனையை விட பேனா முனை தான் கூர்மையானதுன்னு சொன்னாங்க எஜமான் 



---------------------------


3. தலைவருக்கு குறுக்கு வழியே பிடிக்காதாமே? 


 ஆமா, ஏகப்பட்ட ஸ்பீடு  பிரேக்கர் இருக்குமாம், அதனால ஹை வே தான் பிடிக்கும்./  



-----------------------



4. இந்தப்படம் ஏ படம்னு எப்படி சொல்றே? 



 போஸ்டர்ல மட்டும் சீன் இருக்கும் , படத்துல ஒரு சீன் கூட இருக்காது , அதுதான் ஏ படம் 



---------------------------


5. திருக்குறளை எழுதியவர் யார்? 


 டீச்சர் , டிகிரி ஹோல்டர் உங்களுக்கே தெரியலை ந்னா எட்டாங்கிளாஸ் படிச்ச எனக்கு எப்டி தெரியும்? 



---------------------


6. பைக்ல ட்ரிபிள்ஸ் போகக்கூடாது 


 ஓக்கே சார், இன்னொரு ஆளை ஏத்திக்கிட்டு 4 பேரா போறோம்



-----------------------------------


7.  நான் கேட்கும் கேள்விகளுக்கு எஸ் ஆர் நோ மட்டும் சொல்லு 


எஸ் ஆர் நோ 



-------------------


8. வாக்கிங்க் நல்லதுன்னு டாக்டர் சொல்லியும் கேட்காதவன்  இப்போ டெயிலி வாக்கிங்க் போறானே? 



 அவன் அஜித் ரசிகன் ஆகிட்டான் 



---------------------


9.ஜட்ஜ் - மைனர் செயினை திருடி இருக்கே 



. கைதி - மேஜர்  ஜெகதீஷ் செயினை திருடி இருந்தா மட்டும் விட்டுடப்போறீங்களா?


----------------------



10. மிஸ்! இந்தாங்க லவ் லெட்டர் . 



ஆல்ரெடி 98 பேர் குடுத்திருக்காங்க, ஒவ்வொண்ணாத்தான் படிக்க முடியும் . 



ஐ ஆம் வெயிட்டிங்க் ;-))



--------------------------


11. இவருக்கு ஜி கே கம்மின்னு எப்டி சொல்றே? 


 விஜய் டி வி விஜய்க்கு சொந்தமானதா?ன்னு கேட்டாரே? 




---------------------


12. தியேட்டருக்குள்ளே ஏன் வீடு கட்டறீங்க? 



 ஹோம் தியேட்டர் மாதிரி இது தியேட்டர் ஹோம்




---------------------


13. முஸ்லீமா ஒரு படத்துல நடிச்சா அதுக்கு என்ன டைட்டில் வைப்பீங்க? 


 து “பாய்” ஜெக்தீஷ்


-------------------


14. இன்ஸ்பெக்டர்! எதுக்காக என்னை அரெஸ்ட் பண்ணி இருக்கீங்க ?

இனிமேத்தான் யோசிச்சு ஒவ்வொரு கேசாப்போட முடியும் 





-------------------


15. லூசாடா நீ? கூகுள் ல போய் கூகுள்னு டைப் பண்ணி தேடிட்டு இருக்கே? 


 துப்பாக்கி கூகுள் பாட்டு யூ டியூப் லிங்க் தேடறேன் 



-----------------------


16. காலைல 8 மணிக்கு பெங்களூர்ல கொலை செஞ்ச  நீ 9 மணீக்கே சென்னை வந்துட்டியே, எப்படி? 


 சொந்தமா ஹெலிகாப்டர் இருக்குங்க// \




-------------------------------