Tuesday, June 23, 2026

OBSESSIONS(2026)-ஆங்கிலம்- சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் ஹாரர் திரில்லர்)

 



வெறும் ஒரு மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டு 101 மில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்த மெகா ஹிட் படம் இது.திரை அரங்குகளில் வெளியாகும் முன்பே  5/9/2025 ல் டோரெண்ட்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பலரது பாராட்டுக்களைப்பெற்ற படம் இது.


15/5/2026 முதல் அமெரிக்கத்திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இந்தியாவில் ,தமிழகத்தில் 29/5/2026 முதல் வெளியாகி இருக்கிறது     


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்,நாயகி,வில்லி ,நண்பன் நால்வரும் ஒரு மியூசிக் ஸ்டோரில் ஒன்றாகப்பணி புரிபவர்கள்.

நாயகிக்கு நாயகன் மீது சொல்லாத காதல்.நாயகனுக்கு  வில்லி மீது வெளிப்படுத்தாத காதல்.


நாயகன் இதயம் பட முரளி மாதிரி ரொம்ப கூச்ச சுபாவம் கொண்டவன்.காதலை சொன்னால் இருக்கற பிரண்ட்சிப்க்கும் கேடு நிகழ்ந்து  விடுமோ என பயப்படுகிறான்.

நாயகன் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒன் விஷ் வில்லோ என்ற மேஜிக் பாக்ஸ் ஒன்று வாங்குகிறான்.நம்ம ஊர் சந்தைகளில் தாயத்து விற்பார்களே..வசியம் செய்ய உகந்த தாயத்து என விளம்பரப்படுத்துவார்களே அது மாதிரி இந்த ஒன் விஷ் வில்லோ  என்ற பாக்சும் அசாதரணமானது.அதை ஓப்பன் பண்ணி நம் உள்ளக்கிடக்கையை வெளியிட்டால் அது அப்படியே நிறைவேறும்.


நாயகன் அந்த ஒன் விஷ் வில்லோ என்னும் பாக்சை விலைக்கு  வாங்குகிறான்.வில்லியின் மீதான காதலை சொல்லி இந்தக்காதல் நிறைவேற வேண்டும் எனப்பிரார்த்திக்கிறான்.


என்ன ஆச்சரியம்?,அது நாள் வரை தோழி ஆகப்பழகிக்கொண்டிருந்த வில்லி நாயகனிடம் நெருக்கமாகக்காதலி ஆகப்பழகுகிறாள்.

ஒரு சந்தர்ப்பத்தில் நாயகி நாயகன் மீதான காதலை வெளிப்படுத்துகிறாள்.

இதற்குப்பின் நடக்கும் ஏடாகூடமான திகில் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகன் ஆக மைக்கேல் ஜான்சன் அருமையாக நடித்திருக்கிறார்.கூச்ச சுபாவம் ,தயக்கம் எல்லாவற்றையும் முகத்தில் காட்டுகிறார்.


வில்லி ஆக இண்டே கவ்ரெட்டே மிரட்டல் ஆன நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.ஆரம்பத்தில் தென்றல் மாதிரி வருபவர் பின் ஆக்ரோஷப்புயல் ஆக மாறுவது பயங்கரம்

நாயகி ஆக ,நண்பன் ஆக நடித்தவர்கள் நடிப்பும் சிறப்பு.

ராக்பர்வெல் இசை கச்சிதம்.டெய்லர் கிளமன்ஸ் ஒளிப்பதிவு கண்களில் ஒத்திக்கொள்ளும் தரம்.

கர்ரி பார்க்கர் எடிட்டிங்கில் படம் 109 நிமிடங்கள் ஓடுகிறது.


கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் எடிட்டர் ஆன கர்ரி பார்க்கர்


சபாஷ்  டைரக்டர்


1. வில்லியின் கேரக்டர் டிசைன் ,அவரது மிரட்டல் நடிப்பு அட்டகாசம்.

2 நாயகி நாயகனிடம் தன் காதலை வெளிப்படுத்தியதும் வில்லி உடனடியாக  நாயகியைக்கொலை செய்வது எதிர்பாராத திருப்பம்

3 நாயகன் வில்லியிடமிருந்து தப்பிக்கப்போடும் திட்டங்கள் கச்சிதம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 ஒன் விஷ் வில்லோ பாக்சை விலைக்கு வாங்கும் நாயகனின் நண்பன் ஒரு மில்லியன் டாலர் பணம் கேட்க அது உடனே கிடைக்கிறது.இப்படிப்பட்ட அபூர்வ சக்தி படைத்த பாக்சைக்குறைந்த விலைக்குக்கடையில் ஏன் விற்கிறார்கள்? சுருக்கமாகச்சொன்னால் இந்த மந்திரத்தகடு உங்கள் வீட்டில் இருந்தால் ஐஸ்வர்யம் பெருகும் என விளம்பரப்படுத்தி விற்கும்  தகடுகளை கடைக்காரர் ஏன் தன்னிடமே வைத்து செல்வத்தைப்பெருக்கக்கூடாது ?

2 வில்லி நாயகியைக்கொலை செய்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது.நாயகனின் நண்பனைக்கொல்லவே தேவை இல்லை.

3 படு பயங்கரமான பாடி ஹாரர் விஷயங்களைக்குறைத்திருக்கலாம்.



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான சைக்கலாஜிக்கல் ஹாரர் திரில்லர் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம். ரேட்டிங். 3/5



Obsession
At night, a man in a car looks at a small box. In the background, a woman stands in front of the door of a house. At the center of the poster are the film's title, credits and tagline reading, "Be careful who you wish for...".
Theatrical release poster
Directed byCurry Barker
Written byCurry Barker
Produced by
  • James Harris
  • Haley Nicole Johnson
  • Christian Mercuri
  • Roman Viaris
Starring
CinematographyTaylor Clemons
Edited byCurry Barker
Music byRock Burwell
Production
companies
Distributed by
Release dates
  • September 5, 2025 (TIFF)
  • May 15, 2026 (United States)
Running time
109 minutes[1]
CountryUnited States
LanguageEnglish
Budget$750,000–$1 million[2][3][4]
Box office$100.6 million[5][6]