Showing posts with label மணி ரத்னம். Show all posts
Showing posts with label மணி ரத்னம். Show all posts

Monday, December 10, 2012

விஸ்வரூபம் -DTH -ல் வெளியீடு -கமல் -ன் தன்னிலை விளக்கம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHdLqt_ncOMTJrEP_6yqWNEAG0y-jWn6Xwi-UkDwIOge5p756gnZs5-vsyYFs1Qvu_YWvSdZ-DydMrI875RMHSBIobcamBk5CrLQYspsaIR9xfAhEfUmZ9RJ7_A0XNxiJp5EbDsW_IUpg/s400/Viswaroopam+Latest+Wallpapers+Cinema65.com+(3).jpg 

 

கிடைத்ததைச் சுருட்டுபவன் நானல்ல... டிடிஎச் வெளியீட்டால் குடிமுழுகிப் போகாது...! - கமல் அதிரடி

சென்னை: விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகளுக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
kamal blasting statement on viswaroopam 
dth release
கமல்ஹாசனின் காட்டமான 3 பக்க அறிக்கை


புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்...அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத் துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.



ராஜ்கமல் நிறுவனத்தின் DTH முயற்சியையும் புரிதல் இல்லாததால் ‘புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம்' என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம்.



ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம் - பெரும்பான்மை - ‘இது சினிமாவர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி; தமிழ் சினிமாவை, ஏன்...உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளைக் கடக்கவைக்கும் முயற்சி' என்று என்னைப் பாராட்டுகிறது.


இது சந்தோஷமான செய்தி. DTHற்கு வெகுவானவரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஒரு சிறுபான்மை மட்டும் இதுநாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.


 http://www.cinepicks.com/telugu/gallery/viswaroopam/viswaroopam-stills-1759.jpg
இந்த DTH என்பதுஎன்ன?


எல்லார் வீட்டிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியாஎன்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள் அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி.



சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த DTH.


இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதை விடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடப்பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளப்புகிறார்கள்.
கிடைத்ததைச் சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சான்று.



என்படம்முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்கப் பலர் பெரிய விலைகளைச் சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி.




முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத் தயாரிப்பாளர்கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்துச் சொல்லி கறுப்புப் பண விளையாட்டைக் குறைத்துக் கொண்டால், 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.



ஒரே நாளில் விஸ்வரூபத்தின் தமிழ்இசை இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசைதகடாக முதல் இடத்திற்குவிஸ்வரூம் வரும் என்கிறது வியாபார வட்டாரம்.



இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?



DTH ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்தி யேகக்காட்சி முடியும் போது படம் DTH கருவியில் தங்காது. ஒருமுறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய்க் கிடைக்காது.



விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத் தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது TV-ல்காட்டுவதற்கு மட்டும் அல்ல.



DTH வசதி தமிழக ஜனத் தொகையில் 3 விழுக்காடு வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் 1½ விழுக்காடு வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம்.



7½ கோடியில் ஒரு விழுக்காடு படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50% ஐ கள்ள DVD வியாபாரிகொண்டுபோவதைத்தடுப்பதற்குசிறுமுயற்சிகளேசெய்கிறார்கள். கள்ள DVDக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டு விட்டு நேர்மையான வியாபாரத்தைத் தடுப்பது கண்டிக்கத்தக்கது.



திருடனுக்கு 50% கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்றுகூட சேரக் கூடாது என்பது நியாயமில்லாத வாதம்.



இந்த முயற்சியால் தியேட்டரில் கூட்டம் குறையாது. தொலைக்காட்சியில் இலவசமாய் படம் காட்டினால் வியாபாரம்கெடும் என்று எதிர்த்துத்தோற்ற இதே வியாபாரிகள் இன்று சுபிட்சமாக வாழும் சான்றே போதுமானது.



பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள ஒருபக்தி விளக்கம். வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்குப் போவதைக் குறைத்துக் கொண்டதாய்த் தெரியவில்லை.


கிட்டதட்ட அந்த நிலைதான் சினிமா அரங்க அனுபவத்திற்கும் வீட்டில் மின்விசிறி இருப்பினும் காற்று வாங்க கூட்டம் கடற்கரைக்கு வருகிறது. ரேடியோவில் தன்குரல் கேட்டால் புகழ் குறையும் என்று, நினைத்துப் பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும் நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன?


http://www.cinejosh.com/gallereys/movies/normal/viswaroopam_movie_stills_0806120245/viswaroopam_movie_stills_0806120245_026.jpg


முஸ்லீம்களுக்கு எதிரானதா?


முடிவாக இது முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சந்தேகப்படுகிறதாம் ஒரு சில முஸ்லிம் அமைப்புகள். இந்த முஸ்லிம்கள் படத்தை பார்த்து, மனம் மாறி, தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டு விட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் மனதிற்குள் வருந்தினால் மட்டும் போதாது. நான் விடமாட்டேன். சகோதரனைச் சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லிம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டாஅண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும்.



அத்தனை பிரியாணியையும் நான் ஒரு ஆள் சாப்பிட இயலாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள் எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச்செய்யுங்கள். அப்பெரு விருந்தில் கலந்துகொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.



-இவ்வாறு அந்த அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.

 

Kamal S Plan With Mani Ratnam Son


சென்னை: உலக நாயகன் கமல் ஹாசன் இயக்குனர் மணிரத்னத்தின் மகனை வைத்து ஒரு திட்டம் தீட்டியுள்ளாராம்.


கமல் ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அடுத்ததாக ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் பாரி ஆஸ்பர்னுடன் சேர்ந்து கமல் பணியாற்றவிருக்கிறார். உலக தரத்தில் படம் எடுக்கும் உலக நாயகனை ஹாலிவுட் படத்தில் பார்க்க ரசிகர்கள் பேராவலாக உள்ளனர்.


இந்நிலையில் கமல் இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தனை தன்னுடன் ஹாலிவுட் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இது வரை சினிமா உலகை விட்டு விலகியே இருக்கும் நந்தன் கமல் மூலம் அதுவும் ஹாலிவுட் போகிறார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


நந்தன் கமலின் ஹாலிவுட் படத்தில் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளரக பணியாற்றுவார் என்று தெரிகிறது.

நன்றி - தட்ஸ் தமிழ்


http://www.tamilqueens.com/wp-content/uploads/2012/05/viswaroopam-on-location-stills-bf943a96.jpg


Monday, November 26, 2012

இதயக்கோவில் - மணி ரத்னம் VS கோவைத்தம்பி சர்ச்சைகள்

http://img.filmlinks4u.net/2010/07/Idhaya-Kovil-1985-Tamil-Movie-Watch-Online-300x293.jpg 
மணிரத்னத்துக்கு வாய்ப்பு கொடுத்ததே தவறு: கோவைத் தம்பி 
Posted Date : 11:45 (20/11/2012)Last updated : 11:47 (20/11/2012)
சென்னை
'இதயக்கோவில்’படத்தில் மணிரத்னத்துக்கு டைரக்டர் வாய்ப்பு கொடுத்ததே  தவறு என்று மைக் மோகனின் வெள்ளி விழா படங்களை தயாரித்த மதர்லேண்ட் பிக்சர்ஸ்  நிறுவனத்தின் அதிபர் கோவைத்தம்பி காட்டமாக கூறியுள்ளார்.


பென்குவின் பதிப்பகம்,மணிரத்னத்திடம் எடுத்திருக்கும் நீண்ட பேட்டியை தொகுத்து  'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளது.


இந்த புத்தகத்தின் சில அம்சங்களை ஆனந்த விகடன் வார இதழ்,மொழி பெயர்த்து  வெளியிட்டுள்ளது.

அதில்,'முதல் தோல்வி?’ என்ற கேள்விக்கு," தயாரிப்பாளர் கோவைத் தம்பி அப்போது  உச்சத்தில் இருந்த ராதா, அம்பிகா இருவர் கால்ஷீட்டையும் வைத்திருந்தார். என்னுடன்  படம் செய்ய ஆசைப்பட்டு, படத்துக்கான கதையை ஒரு கேசட்டில் பதிவுசெய்து எனக்கு  அனுப்பி இருந்தார். 'இது என் டைப் படம் இல்லை. இப்போது என்னால் உங்களுக்குப்  படம் செய்ய முடியாது’ என்று அவரிடம் நேரில் சொல்லச் சென்றேன்.


நான் சொன்னதைக் கேட்ட அடுத்த கணமே போனில் ராதா, அம்பிகா இருவரின்  கால்ஷீட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டு, எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார்.  வேண்டாம் என்று சொல்லச் சென்ற நான், என்னை அறியாமல் 'இதய கோயில்’  படத்தில் சிக்கிக்கொண்ட கதை இது. இளையராஜாவின் இசை படத்தை ஓரளவு  காப்பாற்றியது.

குறிப்பாக, 'நான் பாடும் மௌன ராகம்...’ பாடலைக் காட்சிப்படுத்தியபோது  'பியாஷா’ குருதத்துக்கு அஞ்சலி செலுத்துவதாக உணர்ந்தேன். அந்தப் பாடல்தான்  'மௌன ராகம்’ என்ற என் அடுத்த மெகா ஹிட் படத்துக்கான டைட்டிலைத் தந்தது.  மற்றபடி என்னுடைய மிக மோசமான படம் 'இதய கோயில்’!” என்று மணி ரத்னம்  குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மணி ரத்னத்தின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கோவைத் தம்பி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை  யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள்  அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம்  ‘இதயக்கோவில்’ என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.

கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா  படங்களை தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க,  தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்’ டைரக்டர் ஆக்கியது என்  தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியது  உண்மைதான்.

எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது ஏன்  என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.அந்த படத்தில் எனக்கு மூன்று பட  செலவு ஏற்பட்டது. விவரம் தெரியாமல்,காட்சிகளை சுட்டுத்தள்ளியது என்  பொருளாதாரத்தை சுட்டு பொசுக்கியது.என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்’  வெற்றி படம்தான்.

திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்’  படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என்  நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது” என்று  கூறியுள்ளார்.
மக்கள் கருத்து 
1. Avathaany6 Days ago
மணி ரத்தினம் யார் என்பதை காட்டிவிட்டார். நன்றி கெட்டத்தனம் என்பது இதுதான்.தமிழ்ச்சினிமா இன்று இன்னொரு பரிமாணத்தை அடைந்துவிட்டது.இவற்றை எட்டுவதற்கு கோவைதம்பியும் ஒரு காரணம் என்பதை மணிரத்தினம் மறந்துவிட்டார்.

மணிரத்தினதின் விமர்சனம் ஏறிய ஏணியை எட்டி உதைப்பதற்கு சமமானது.மணிரத்தினத்தின் இப்போதைய தகுதி வேறாக இருக்கலாம்.ஆனால் அப்பொழுது அவரின் இயக்கும் தகுதி அந்தளவுதான்.

இதயக்கோவில் படம் அந்தக் காலகட்டத்தில் மிக நல்ல படமே.அந்தப் படத்தை அவரே குறை சொல்வது தனக்குத் தானே எச்சில் உமிழ்வது போன்றதே.

பெரிய சிந்தனைவாதி தன்னை நினைத்துக் கொள்ளும் மணி ரத்தினம் அணுக்களின் கூட்டுத்தான் பொருள்களின் தோற்றம் என்பதை அவர் உணர்வார்தானே.

அதைப் போன்றதுதான் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு கொண்டது.மணி ரத்தினதின் படங்களைப் பார்த்து ரசிப்பவந்தான் நானும் .ஆனால் மணி ரத்தினத்தின் தலைக்கர்வம் பிடித்த் இந்த அசிங்கமான முட்டாள்தனமான சிறுபிள்ளைத்தனமான் நன்றி கெட்டத்தனமான பேட்டி அவர் யர் என்பதைக் காட்டிவிட்டது.

இவர் 70களில் சினிமாவை புதிய பாதை நோக்கி நகர்த்திய பாலு மகேந்திராவைப் பற்றியோ பாரதிராஜ பற்றியோ குறிப்பிடாமல் விட்டதற்கு மறாதி காரணமல்ல,அழுக்காறுதான் காரணம்.

சினிமாவின் நிலை கண்டு அதைக் காப்பற்ற களம் இறங்கியதாக கூறியிருக்கின்றார்.இதைவிட தலைக்கனம் பிடித்த பதில் வேறில்லை.

மணிரத்தினம் அவர்களே!.தமிழ்ச் சினிமா உங்கள் கையில் மட்டுமே இருப்பதாக நினைக்காதீர்கள்.இதயக்கோவில் இயக்கிய போது தட்டுத்தடுமாறி எழுந்து நடக்க முயற்சித்த சிறுபிள்ளை நீங்கள்.

கைபிடித்து நடை பயிற்றுவித்தவரை கேவலப்படுத்தாதீர்கள்.
2.
Indian6 Days ago
நிச்சயமாக வெற்றிப்படம்தான். நல்ல பாடல்கள், கவுண்டமணி காமெடி, அம்பிகா,ராதாவின் அழகு என்று நிறைய சொல்லலாம். வாயைக்கொடுத்து .....புண்ணாக்கிகொள்வது என்பது இதுதான். கோவைத்தம்பி அழகிய பதில் கொடுத்திருக்கிறார்.
3.Thamilarasu K6 Days ago
மணிரத்னம் மிகப்பெரும் இயக்குநர் என்ற நிலையில் இப்போது இருப்பதால் எதைவேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறார் போலும். இதயகோயில் ஒரு நல்ல திரைப்படந்தான். அற்புதமான இசை, பாடல்கள்!
4. Zahir Husain6 Days ago
இதுதான் அவர்களின் வழக்கம்.... நன்றிகெட்ட தனம். ஏற்றிவிட்ட ஏணியை எட்டிஉதைப்பது.... நன்றிகெட்ட ஜென்மம்.... 
5.
madhavan6 Days ago
"மணி" இல்லாத ரத்தினத்தை மணிரத்னமாக மாற்றினால் இப்படித்தான் நடக்கும்.
6. venkatesh6 Days ago
Maniratnam does not have right to say this ? he is not talking about other's movie, he says about what he feels, nowadays the tolerance level is going down ....
7.
Chandramohan6 Days ago
எனக்கென்னவோ மணிரத்தினம் தன்னைத்தானே திட்டிக்கொள்வதாகத்தான் தெரிகிறதே தவிர கோவைத்தம்பியைப் பற்றித் தவறாக எதுவும் சொன்னதாக் இல்லையே!
8. THAMIZH UK6 Days ago
இன்று தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் நிலை இதுதான்...

படம் ஆரம்பிக்கும் வரையில் தான் அவர் "முதலாளி"..... பூஜை முடிந்துவிட்டால்.... முதலில் "அவர்" காலி....

ஹ்ஹ்ஹ ஹ்ஹ்ஹ ஹ்ஹ்ஹா...ஹா ஹா