Showing posts with label மணிரத்னம். Show all posts
Showing posts with label மணிரத்னம். Show all posts

Sunday, March 29, 2015

'ஓ காதல் கண்மணி' படத்தின் 'மென்டல் மனதில்' பாடல் மாஸ் ஹிட் ஆனது எப்படி? - ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புப் பேட்டி

அல்லா ரக்கா ரஹ்மான், ஒரே நேரத்தில் அமைதியாகவும், ஆர்வமாகவும், கவலையுடனும் இருக்கிறார்.
ஒரு இசையமைப்பாளராக அவர் சந்தோஷமாக இருக்கிறார். 'ஓ காதல் கண்மணி' படத்தின் 'மென்டல் மனதில்' பாடல் ஹிட் ஆகியுள்ளது. ஒரு மகனாக கவலையுடன் இருக்கிறார். அவரது அம்மாவுக்கு உடல் நலம் குன்றி தற்போது தேறிவருகிறார். ஒரு தயாரிப்பாளராக ஆர்வத்துடன் இருக்கிறார். அவரது முதல் இந்திப் படம் தயாராகிவருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் வீழ்ந்த சில மணி நேரங்களில் அவரது கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. குர்தா, ஜீன்ஸ் என நிறைவாகக் காட்சியளித்த ரஹ்மானிடம் இரானியப் படம், இளையராஜா, அவரது எதிர்காலம் என அனைத்தையும் பேசினோம்.
சமீபத்தில் நீங்கள் எழுதி, இசையமைத்து பாடிய 'மென்டல் மனதில்' பாடலுக்கு அனைத்து தரப்பிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?
அது ஒரு மென்மையான, ஜாலியான பாடல். பாடலாசிரியர் வைரமுத்து அப்போது ஊரில் இல்லை. ஆனால் மணிரத்னத்துக்கு உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்டது. நாங்கள் ஏற்கனவே இதற்கு முன்னர் 'அலைபாயுதே' படத்தில் 'என்றென்றும் புன்னகை' பாடலை சேர்ந்து எழுதியுள்ளோம். எனவே மீண்டும் அப்படி ஒரு சூழல் எங்களுக்கு அமைந்தது.
அது எப்படி மணிரத்னம் மட்டும் உங்களிடமிருந்து விசேஷமான இசையை பெறுகிறார்?
அவர் தான் என்னை திரைப்படங்களில் அறிமுகம் செய்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இப்போது மணி, வைரமுத்து, நான் என நாங்கள் மூவரும் தனியாக ஒரு பிராண்ட் (Brand) ஆகிவிட்டோம். நாங்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொண்டு வேலை செய்யலாம் என்று நினைத்தால் கூட முடியாது. ஏனென்றால் மக்களின் எதிர்பார்ப்பு அப்படி. அது ஒரு தூண்டுகோலாக இருக்கிறது. கடந்த சில வருடங்களில் எங்களால் முடிந்ததை செய்துள்ளோம். ஆனால் மக்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு என்ன தேவையோ அதைத் தர நினைக்கிறோம்.
பாடல் உருவாக்கத்தின்போது உங்கள் மூவரிடையே நிறைய கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் ஏற்படும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ காதல் கண்மணியை பொருத்தவரை என்ன நடந்தது என்று கூறுங்கள்.
எனக்கு சில விஷயங்கள் பிடிக்காது. சில நேரங்களில் ஒலிக்காக வார்த்தைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டும். ஒலி மிக முக்கியம். அது வார்த்தைக் குவியலைத் தவிர்க்கும். மக்களின் கவனத்தை சட்டெனக் கவர வேண்டும். அவர்களுக்கு, முன் இருந்தது போல பொறுமை இருப்பதில்லை
'ஒகே கண்மணி' படத்தில், 'நானே வருவேன்' என்ற பாடலில் அந்தரா என்ற அழகான இசைக் கருவியை நாங்கள் பயன்படுத்தியுள்ளோம். ஆனால் வார்த்தைகள் சிக்கலாக இருந்தன. எனவே ஒரே வார்த்தை (சின்னஞ்சிறு) திரும்ப திரும்ப வருமாறு மாற்றினோம். பாரம்பரிய கலைகளில் இருக்கும் முறைதான் அது. உதாரணத்துக்கு 'தும்ரிஸ்' என்ற பாடல் வகையை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரே வார்த்தை மீண்டும் மீண்டும் வரும். ஏனென்றால் இசை சிக்கலாக இருக்கும். எனவே வார்த்தைகள் சிக்கலாக இருக்கக் கூடாது. 'யாத் பியா', 'மோரே சஜ்னி' போன்ற தும்ரி பாடல்களை கேட்டீர்கள் என்றால், ஒரே வரி மீண்டும் மீண்டும் பாடப்படும். கேட்பவர்களுக்கு கவனம் செலுத்த அது எளிமையாக இருக்கும்.
நீங்கள் திரைக்கதை எழுதுகிறீர்கள், இந்தி படம் ஒன்றை தயாரிக்கிறீர்கள். இசை அல்லாத மற்ற துறைகளுக்கு செல்வதன் காரணம் என்ன?
இந்திய சினிமாவில் ஒரு வெறுமை இருப்பதாக உணர்கிறேன். ஒரு கலைஞனாக என்னுடைய வளர்ச்சி அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியுமா எனப் பார்க்கிறேன். ஒன்று வெற்றி பெற்றால் அதையே அனைவரும் செய்கின்றனர். ஆனால கலைக்காக ஒரு சிலரே இருக்கின்றனர். என்னால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. மக்களுக்கு என்ன பிடிக்கும், நமது இசையில் தொலைந்து போன சுவை என இரண்டுக்குமான ஒரு சமநிலையை நான் தேடுகிறேன். அனைத்து அம்சங்களிலும் இந்த சமநிலை எட்ட முடியுமா என்று பார்க்க கடந்த 4 வருடங்களாக இதற்காக உழைத்து வருகிறேன்.
நீங்கள் இசையமைத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதபோது எவ்வளவு ஏமாற்றமா இருக்கும்? சென்ற வருடம் லிங்கா, காவியத் தலைவன் ஆகிய படங்கள் அப்படி அமைந்தன.
நான் நிறைய படங்களுக்கு ஒரே சமயத்தில் இசையமைத்து தவறு செய்துவிட்டேன். சிலருக்கு நான் முடியாது என சொல்லிருக்க வேண்டும். அதிகமான அழுத்தம், உறக்கமில்லாத இரவுகள் என ஒரு அணியாக எங்கள் முதுகு தேய நாங்கள் வேலை செய்தோம். அவற்றுக்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லை என உணர்கிறேன். நான் இயற்கையாக விரும்பும் (கலையை) ஒன்றை வாழ்க்கை எனக்கு கொடுத்திருக்கிறது. அதிக வேலைப்பளுவில், அழுத்தங்களோடு வேலை செய்வது நல்லதல்ல.
லிங்கா அதில் ஒன்று என ஒப்புக்கொள்கிறீர்களா?
சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளன்று படத்தை வெளியிடவேண்டிய நிர்பந்தம். அந்தப் படத்தை பொருத்தவரையில் என்ன ஆனது என மக்களுக்குத் தெரியும். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடவேண்டும். இசைக் கலைவை. பின்னணி இசைக் கோர்ப்பு என அனைத்தையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் காவியத் தலைவன் வேலையும் நடந்து கொண்டிருந்தது. அனைத்தும் ஒரே நேரத்தில் வந்தது. அது அசந்தர்ப்பமான சூழல்.
சில தரப்பு மக்கள், உங்கள் இசை 90-களில் இருந்தது போல இல்லை என கூறுகிறார்கள்
எனக்குப் பெருமையாக உள்ளது. என்னிடம் ஏதோ ஒன்று அவர்களுக்கு பிடித்துள்ளதே (சிரிக்கிறார்)
அத்தகைய கருத்துகளை கேட்கும்போது உங்கள் மனதில் என்ன தோன்றும்?
ஒரு படைப்பாளியாக நான் புதிதாக எதையாவது செய்ய வேண்டும். எனது அன்றைய இசைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இன்றைய இசைக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். நீங்கள் ரசித்த ஒரு முன்னாள் நடிகையிடம் இன்று சென்று, "எனக்கு உங்களை பிடிக்காமல் போய்விட்டது" எனக் கூறமுடியுமா?
வசந்தபாலனோடு இணைந்து வேலை செய்தீர்கள். இந்த வருடம் விக்ரம் குமாரோடு இணைந்துள்ளீர்கள். உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமான இயக்குநர்களோடு எளிதாக வேலை செய்வதை விட்டு, உங்களுக்கு பரிச்சயமில்லாத இயக்குநர்களுடன் வேலை செய்வது ஏன்?
ஒரு கட்டத்துக்கு மேல் சிலரிடம் அதிகமான உரிமை எடுத்துக் கொள்வோம். அது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் கெட்டதும் கூட. மணிரத்னம், அஷுடோஷ், ஷங்கர் போன்றவர்களிடம் அது நல்ல விஷயம். ஏனென்றால் அவர்கள் எனக்கு புதிய சவால்களைத் தருகின்றனர். எப்படியும் இரண்டு வருடங்களுக்கு ஒரு திரைப்படம் தான் இயக்குகின்றனர். புதிய இயக்குநர்கள் புதிய விஷயங்களை கண்டறிய இடம் தருகிறார்கள்.
'முகம்மது' என்ற உங்கள் இரானிய படத்தின் நிலை என்ன் ? அதை நீங்கள் ஒப்புக் கொண்ட காரணம் என்ன?
வேலைகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. படத்தொகுப்பு இன்னும் முடியவில்லை. இரானிய படங்களின் ரசிகன் நான். முக்கியமாக மஜித் மஜிதியின் படங்களுக்கு. ஒருநாள் இம்தியாஸ் அலி என்னைக் கூப்பிட்டார். யூடிவி நிறுவனத்திடம், மஜிதி, அவருடைய படத்தில் நான் வேலை செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சினிமா வரலாற்றில் குறிப்பிட்டத்தக்க திரைப்படமாக அது இருக்கும்.
ஆனால் அந்தப் படத்துக்கு இசையமைப்பது எளிதாக இருந்திருக்காதே
அவரது எதிர்பார்ப்புகள் மிக மிக அதிகமாக இருந்தன. ஒருவகையில் அது நல்லதுதான். ஏனென்றால் அவர்கள் வேலை செய்யும் முறையை தெரிந்துகொள்ள விரும்பினேன். அவர்கள் எப்படி உருவாக்குகிறார்கள், காட்சிகளை எப்படி எழுதுகிறார்கள் என தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன். இரண்டு முறை இரானுக்கு பயணம் செய்துள்ளேன். இரண்டுமே அற்புதமான அனுபவமாக இருந்தன.
உலகம் முழுவதும் ஓய்வின்றி பயணம் மேற்கொள்ளுகிறீர்கள். உங்கள் மூன்று குழந்தைகளுடன் செலவிடம் நேரம் இருக்கிறதா?
நாங்கள் சேர்ந்து பல திரைப்படங்களை பார்ப்போம். குறிப்பாக 3டி அனிமேஷன் திரைப்படங்கள்.
உங்களுக்கும், உங்கள் அம்மாவுக்குமான பாசப் பிணைப்பைப் பற்றி சொல்லுங்கள்? அவரிடமிருந்து நீங்கள் கற்றதென்ன? ஆஸ்கர் மேடையிலேயே அவரைப் பற்றி நீங்கள் பேசினீர்கள்
அதுதான் வாழ்க்கையிலிருந்து நீங்கள் கற்றுக் கொள்வது. எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும், எதற்காக குடும்பத்தில் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும் என தெரியும். அம்மா கடுமையாக உடல்நலம் குன்றி இருந்து, இப்போது தான் தேறி வருகிறார். அவர் உடல்நலம் தற்போது பரவாயில்லை. ஆனால் முன் இருந்தது போல இல்லை.
சென்னையின் அபிபுல்லா சாலையைச் சேர்ந்த ஒரு சாதாரண மாணவனான நீங்கள் தற்போது சர்வதேச அளவில் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளீர்கள். இதற்காக எப்படி உங்களை மாற்றிக் கொண்டீர்கள்?
வானிலையும், மண்டலமும் மாறும்போது அனைத்தும் மாறும். அங்கு 3 அடுக்கு உடைகள் அணிந்து கொள்வேன். ஸ்டூடியோக்களை பொருத்தவரை இங்கிருப்பது போன்ற வசதிகள் அங்கு எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. இசை குறிப்புகள் அனைத்தும் முன்னதாகவே தயாராக இருக்க வேண்டும். ஆனால் அதற்கேற்றார் போல சூழலை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பழக்கப்பட எனக்கு 10 வருடங்கள் ஆனது.
நீங்கள் தனியாக இசையமைப்பதற்கு முன்னர் இளையராஜாவின் குழுவில் இசைக் கலைஞராக பணியாற்றியது அனைவருக்கும் தெரியும். இன்னமும் அவருடன் தொடர்பில் இருக்கிறீர்களா?
அவரை கடைசியாக ஓர் இசை விழாவில் சந்தித்தேன். நான் வெளிநாடுகளில் இருக்கும்போது விழாக்கள், திரையிடல்கள் என எங்காவது பல்வேறு இசையமைப்பாளர்களை அடிக்கடி எதேச்சையாக சந்தித்து வருகிறேன். இங்கு சென்னையில் என்னால் அப்படி வெளியில் செல்ல முடிவதில்லை. வேலை அல்லது குடும்பம் அல்லது என் இசைப்பள்ளி என எப்போதுமே ஏதோ ஒன்றில் மூழ்கியிருப்பேன். எனவே வெளியில் செல்ல நேரம் இல்லை. எங்களுக்கிடையே பரஸ்பரம் மரியாதை உள்ளது.
நீங்கள் அதிகம் புத்தகம் வாசிப்பதுண்டா?
(சிறிது நேரம் யோசித்துவிட்டு) கடைசியாக நான் படித்த புத்தகம், ஹண்ட்ரட் ஃபுட் ஜர்னி (Hundred Foot Journey) மற்றும் பீலே (Pele) படங்களின் திரைக்கதை புத்தகம். அவையும் புத்தகங்கள்தானே!
இசையைப் பொருத்தவரை தற்போது தமிழில் பல புதிய இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர். நீங்களே புகழ்ந்துள்ள சந்தோஷ் நாராயண், மேலும் அனிருத், ஜி.வி.பிரகாஷ், இந்தியிலும் பலர் உருவாகியுள்ளனர். திறமையானவர்கள் கையில்தான் இசை இப்போது இருக்கிறது என சொல்லமுடியுமா?
இசையில் கண்டறிய நிறைய உள்ளது. வெறும் ஹிட் பாடல்களை மட்டுமே தரவேண்டும் என கேட்கக் கூடாது. காலத்தைக் கடந்த இசையைத் தர ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவருக்கென ஒரு விதியை வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தின் இசையை நாம் ஏன் இன்னும் விரும்புகிறோம்? ஏனென்றால் அவை காலத்தை வென்றவை. ரசிகர்களுக்கு இன்னமும் அவற்றுடன் ஓர் இணைப்பு உள்ளது. நான் அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன். அதேதான் இளம் இசையமைப்பாளர்களும் செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.
உங்கள் இசைப்பள்ளி தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. அதற்கான எதிர்கால திட்டம் என்ன?
புதிதாக ஒரு கட்டிடம் வேண்டும் என்பது பெரிய பணியாக இருந்தது. தற்போது அது கிடைத்துள்ளது. இசையைப் பற்றி தெரிந்துகொள்ள அது அற்புதமான இடமாக இருக்கிறது. சில நேரங்களில் அங்கிருக்கும் மாணவர்களைக் கண்டால் பொறாமையாக உள்ளது. ஏனென்றால் நான் வளரும்போது அப்படி ஒரு இடம் எனக்குக் கிடைக்கவில்லை. தனிப்பட்ட அடையாளத்தோடு மாணவர்கள் பொழுதுபோக்குத் துறையில் வேலை செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். முக்கியமாக மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
நேரம் கிடைக்கவில்லை என கூறுகிறீர்கள். தினசரி தொழுகை செய்ய நேரம் கிடைக்கிறதா?
அதுதான் எனக்கு உயிர்மூச்சு.
உங்கள் தினசரி வாழ்க்கை சமநிலையில் தானே இருக்கிறது?
நாம் செய்யும் அனைத்து வேலைகளையும் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து செய்து வரவேண்டும். நாளை செய்துகொள்ளலாம் என்பதற்கே இடமில்லை. அதைத்தான் நான் சமீப காலங்களில் உணர்ந்துள்ளேன். நாளை பிரார்த்தனை செய்து கொள்ளலாம், நாளை இசையமைக்கலாம் என்றெல்லாம் நினைக்க மாட்டேன். எதாவது செய்யவேண்டுமென்றால், இன்றே செய்ய வேண்டும்.
©தி இந்து, ஆங்கிலம்
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா


நன்றி -த இந்து



  • அவர் ஒரு சினிமா இசையமைப்பாளர் என்பதை தாண்டி அவரிடம் கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முக்கியமாக அவருடைய மெண்டல் பாலன்ஸ். வாழ்க்கையையும் தொழிலையும் அவர் பார்க்கும் விதம். ஏனோ, அவரை பார்க்கும் போது எனக்கு தோனியின் நியாபகம் வரும். இருவருமே mr.கூல். வெற்றியை மூளைக்கும், தோல்வியை மனதுக்கும் எடுத்து செல்லாதவர்கள். தற்பெருமையை கிட்டே வர விடாதவர்கள். முக்கியமாக அதிகம் பேசாதவர்கள். ரஹ்மானின் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்.
    about 8 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
       
    • Dilli Babu  
      இசைப்புயலின் இரானிய படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
      Points
      6140
      about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • நடராஜன்-மேட்டூர்அணை.  
        தமிழ் சினிமா வெற்றிடத்தை நிரப்ப 'சீக்கிரம்' வாருங்கள் ரகுமான் சார். தொடர்ந்து தங்களது இசையில் மெய்மறந்து பாடல்கள் கேட்க, பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்றும் உள்ளனர்.
        Points
        1465
        about 17 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
        • Sriramachandran Manickam at State Government 
          உங்கள் பேட்டி மிகவும் மனநிறைவை தந்தது. நன்றி.
          Points
          1575
          about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
          • சேரமான் Nadunilai  
            பக்குவப்பட்ட மனிதர் !
            Points
            9820
            about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
            • Kmsdgl  
              பெரும் புதையல் தன இருப்பிலிருந்து புயலாய் கிளம்பி உயர்ந்து புவியை தனது இசை பிம்பத்தின் மென் சுழற்சியில் சுழல வைத்து மெய்மறக்க செய்துகொண்டிருந்து சற்றே ஓய்ந்தாலும் மீட்சி பெறலாம் ஆனால் வெளியாகிவிட்ட புயல் மீண்டும் தனது துவக்கமாகிய - தாய் இடப்புதையலை தேடி சென்றடைதல் சாத்தியமா 

            Tuesday, November 18, 2014

            என்னைத் தூங்கவிடாத இருவர் -பாரதிராஜா


            படைப்பாளிகளையும், குறும்பட இயக்குநர்களையும், திரைப்பட ஆர்வலர்களையும், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற திறமைசாலிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் என்ற அறிவிப்புடன், 'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
            இந்நிறுவனத்தின் தொடக்க விழா நவம்பர் 10-ஆம் தேதி காலை சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார். நடிகர் சித்தார்த், விஜய் சேதுபதி, சிம்ஹா, இயக்குநர் பாலாஜி மோகன், தயாரிப்பாளர் சி.வி.குமார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
            விழாவினை தொடக்கி வைத்து இயக்குநர் பாரதிராஜா பேசியது:
            "'ஜிகர்தண்டா' படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை எல்லாம் பார்த்தபோது, என்ன இது இவ்வளவு வன்முறை படமா இருக்கிறதே என்று நினைத்தேன். தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகரித்துவிட்டதே என்று கவலைபட்டேன். சில நாட்களுக்கு பிறகு 'ஜிகர்தண்டா' பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிரட்டி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
            'ஜிகர்தண்டா' பார்த்துவிட்டு எனக்கு இரண்டு நாட்களுக்கு தூக்கம் வரவில்லை. இதற்கு முன்பு இதேபோன்று மணி ரத்னம் இயக்கிய 'நாயகன்' பார்த்துவிட்டு மூன்று நாட்களுக்கு தூக்கம் வரவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் புதிய சிந்தனைகளோடு வருகிறார்கள். சினிமா தற்போது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது.
            சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் வடுக்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். நான் எந்த ஒரு நடிகையும் நடிச்சு காட்டுங்க என்று கூறி தேர்வுசெய்ய மாட்டேன். ஒருத்தரை பார்ப்பேன், பிடித்திருந்தால் வாப்பா என்று அழைத்து வந்து நடிக்க வைப்பேன். நான் காட்டுல பூத்த பூ மாதிரி. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் பிருந்தாவனம் கார்டனில் பூத்த பூ போல இருக்கிறார்கள். நன்றாக செதுக்கிறார்கள்.
            சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் எனக்கு தெரியாத ஒன்று சினிமா வியாபாரம்தான். முதல் இரண்டு பட ஹிட் கொடுத்துவிட்டு, மூன்றாவது படம் ஒப்பந்தமானபோது சம்பளத்தைத் தயங்கித் தயங்கி 15 ஆயிரம் என்று கேட்டேன். ஆனால், என்னுடைய உதவியாளர் பாக்யராஜ்தான் சண்டைப் போடு 30 ஆயிரம் வாங்கி கொடுத்தார். எனக்கு சினிமா மட்டுமே எடுக்க தெரியும். வியாபாரம் தெரியாது. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். இன்று கார்த்திக் சுப்புராஜ் தொடங்கியிருக்கும் இந்நிறுவனம் சிறப்பாக வர வேண்டும்" என்று வாழ்த்தினார்.
            ரஜினி இடத்தை உடனே அடைய நினைப்பது தப்பு: எஸ்.ஜே.சூர்யா
            இந்த விழாவில் கலந்து கொண்டு எஸ்.ஜே சூர்யா பேசியதாவது, "நாம தியேட்டர் சைடு தான் ரொம்ப வீக்கா இருக்கோம். அந்த உண்மையை ஒப்புக்கிட்டுத்தான் ஆகணும். இங்க பெரிய ஹீரோக்களோட படங்கள் தவிர மற்ற ஹீரோக்களோட படங்களுக்கு அவ்வளவா தியேட்டர்கள் கிடைக்க மாட்டேங்குது. அது உண்மைதான். ஆனா அதை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்.
            இப்போ ரஜினி படம் ரிலீசாகுதுன்னா அதே அளவு தியேட்டர்கள் என்னோட படத்துக்கும் கெடைக்கணும்னு ஆசைப்படுறது தப்பு. ஒரு சாதாரணம் பஸ் கண்டக்டரா இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி இன்னைக்கு இந்த இடத்துக்கு வந்திருக்கார்னா அதுக்கு அவரோட உழைப்பு ஒரு காரணம்.
            பல வருடங்கள் உழைப்பு அதுக்கு பின்னாடி இருக்கு. அப்படிப்பட்டவர் இடத்துக்கு சினிமாவுக்குள்ள வந்த உடனே வர ஆசைப்படுறது தப்பு. அவரோட படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கிற மாதிரியே என்னோட படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கணும்னு ஆசைப்படுறதும் தப்பு" என்று கூறினார். 



            நன்றி - த இந்து

            Monday, December 10, 2012

            கடல் - ஏ கீச்சான் ,நெஞ்சுக்குள்ளே காதல் பாடல்

            http://moviegalleri.net/wp-content/uploads/2012/02/mani_ratnam_kadal_movie_first_look_posters.jpgமணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்கு கடல் என்று பெயரிட்டுள்ளார். இதனை அவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படத்திற்கு பூக்கடை என்று பெயர் வைத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படம் பற்றி பல்வேறு தகவல்களும் வெளியாகின. இந்நிலையில், பூக்கடை என்ற தலைப்பு எங்களுடையது என இயக்குனர் சரணிடம் உதவியாளராக இருந்த சதீஷ் என்பவர் புகார் கூறினார். இதுபற்றி தகவல் அறிந்த டைரக்டர் மணிரத்னம், என் படத்தோட தலைப்பு பூக்கடைன்னு நான் சொல்லவே இல்லை. நான் வைக்காத தலைப்புக்கு எதற்காக பிரச்னை? என்று கூறினார்.


            இந்நிலையில் தனது அடுத்தபடத்திற்கு கடல் என்று பெயர் வைத்துள்ளதாக மணிரத்னம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்தின் நாயகனாக கார்த்திக் மகன் கவுதமும், நாயகியாக சமந்தாவும் நடிக்க இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அர்ஜூனும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் நடிப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போவதாகவும் கூறியுள்ளார்.


            "கடல்" படம் தமிழக மீனவர்கள் பிரச்னையை எடுத்து சொல்லும் படமாகவும், அதில் ஒரு அழகிய காதல் கதையும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.கோடம்பாக்கமே ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்ளும் விஷயம்... மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்து ஹீரோயின் சமந்தா வெளியேறிவிட்டதுதான்!


            https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhbd-gPDCPLDJ8JEyUwY5fjptqV-haFxFtEGPBIJ6RZxSpSEJjvCBVf4yYr5S4fhRCe7WJ_OUfCw814s-h5ysu7vRhwvASMBFM_mz_WLE6t_YLdvwiYh_uhPMPdbIMa8G-t9XCOhNxTSE/s1600/manirathnam+ar+rahman+samantha+kadal+movie+stills+wallpapers+first+look+hellotolly.com+(3).jpg



            ஏன்? என்னாச்சு? எப்படி?


            என ஒவ்வொருவரும் மணிரத்னம் ஸ்டைலிலேயே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!


            http://chennaionline.com/images/articles/November2012/53d2ff12-8f9c-4f86-a92a-0e23357b9a5fOtherImage.jpg


            கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தென் தமிழகத்தின் கடற்கரையோர கிராமங்களில் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.


            மணிரத்னத்தைப் பொருத்தவரை இந்தப் படம் அவருக்கு பெரிய சவால். காரணம், தொடர்ந்து அவரது படங்கள் பாக்ஸ் ஆபீசிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அவரது சமீபத்திய வெளியீடான ராவண், தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலுமே படுதோல்வி கண்டது.



            எனவே பார்த்துப் பார்த்து கடல் படத்தை உருவாக்கி வருகிறார்.




            சமந்தா இந்தப் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டதும், தனது வாழ்க்கையில் இந்தப் படம் மறக்கமுடியாததாக அமையும் என்று சந்தோஷப்பட்டார்.


            ஆனால் இப்போது திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சமந்தா அறிவித்துள்ளார். கவனிக்க... மணிரத்னம் நீக்கவில்லை... சமந்தாவே விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார்.



            தமிழில் இனிமேல்தான் சமந்தாவுக்கு வெற்றிப் படம் அமைய வேண்டும். இந்த சூழலில் பெரிய வாய்ப்பு ஒன்றிலிருந்து தானாகவே விலகிக் கொண்டிருக்கிறாரே... என்னவாக இருக்கும்? என்று பேச ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்...



            இப்போதைக்கு, நீதானே என் பொன்வசந்தம், ஷங்கர் படம் மற்றும் கார்த்தியுடன் பிரியாணி ஆகியவை சமந்தாவின் கைவசம் உள்ளன.


            சுனாமியே வந்தாலும் மணிரத்னத்திடமிருந்து அவர் படம் குறி‌த்த சிறு தகவல்கூட பெயராது. நாமே துப்பறிந்து பகிர்ந்து கொண்டால் மட்டுமே உண்டு. இரண்டாவது சாய்ஸ் வைரமுத்து. படத்துக்கான பப்ளிசிட்டி நேரத்தில் வைரமுத்து படத்தின் அருமை பெருமை பற்றி தனது விறைப்பு தமிழில் வண்டியாக கொட்டுவார்.








            தென்னக கடற்கரையோரம் மையம் கொண்டிருந்த மணிரத்னமும் டீமும் இப்போது அந்தமானை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அங்கு நடக்கிறது. ஹீரோயின் சமந்தா விலகிக் கொண்டதால் அவருக்குப் பதில் ராதாவின் இளைய மகள் துளசியையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அலைகள் ஓய்வதில்லை படத்தில் தானும், கார்த்திக்கும் அறிமுகமானது போல் கடலில் தனது மகளும் கார்த்திக்கின் மகனும் அறிமுகமாவதில் ராதாவுக்கு கொள்ளை மகிழ்ச்சி. இது கடல் என்றால் அது அலைகள் ஓய்வதில்லை. பெய‌ரில்கூட பொருத்தம் என்று பெருமை கொள்கிறாராம்.





            துளசிக்கு இப்போது 14 வயதுதான் ஆகிறது. அதற்குள் மணிரத்னம் பட ஹீரோயின் என்ற பெரும் சுமை எதுக்கு என்றும் இன்னொருபுறம் சர்ச்சை சலசலக்கிறது.



            மௌனமாக இருந்தே அனைத்தையும் ஆஃப் பண்ணிவிடுவார் மணிரத்னம். 
            மணிரத்னத்தின் சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெ‌ரிய அளவில் சாதிக்கவில்லை. யானை இளைத்தாலும் தந்தம் இளைக்காதில்லையா. மணிரத்னத்தின் புகழை இந்த ச‌ரிவு எதுவும் செய்யவில்லை.



            அவர் இயக்கி வரும் கடல் இன்னும் பத்து சதவீதம் முடியவில்லை. அதற்குள் பத்திரத்துடன் படத்தை விலை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நமக்குக் கிடைத்த தகவல் உண்மையெனில் கடலுக்கு முதலில் வலை வீசியவர்கள் ஜெமினி பிலிம்ஸ். மாஸ் ஹீரோ இல்லாத கடலின் தமிழக திரையரங்கு உ‌ரிமையை மட்டும் 25 கோடிக்கு அவர்கள் கேட்டதாக தெ‌ரிகிறது. தெலுங்கு, கேரள உ‌ரிமை, தொலைக்காட்சி, ஆடியோ, வெளிநாட்டு உ‌ரிமைகள் தனி.மணிரத்னம் இந்த டீல் குறித்து வழக்கம் போல் எதுவும் சொல்லப் போவதில்லை. வைரமுத்து ஏதாவது வாய் திறந்தால்தான் உண்டு.

            கடல் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்த 70 நாட்களில் முடித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். காதல் படமான கடலில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க துளசியை மலையாளக் கரையோரத்தில் இருந்து கூட்டி வந்திருக்கிறார்கள். மணப்பாடு, அந்தமான், கேரளா கடற்கரையோரங்களில் கடல் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள். கவுதமும் துளசியும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நடிப்புத் திறமையை காட்டியதில் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார் மணிரத்னம். அர்ஜூன், அரவிந்த் சாமி, லக்ஷ்மி மஞ்சு, பொன்வண்ணன், பசுபதி மற்றும் தம்பி ராமையா என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் கடலில் களம் இறங்கியிருக்கிறார்கள். 


            இயக்குனர் மணிரத்னம், ஒரு படத்துக்கும், அடுத்த படத்துக்கும் இடையே, அதிக இடைவெளி எடுத்துக் கொள்வார். ஒரு படம் வெளியாகி, நீண்ட நாட்களுக்கு பின் தான், அடுத்த படத்துக்கான பணிகளை துவங்குவார். தற்போது, இந்த நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார், அவர். "கடல் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும்,  அந்த படத்துக்கான, இறுதி கட்ட பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும், இப்போதே, அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தை, மணிரத்னம் இயக்கப் போகிறார். இந்த படத்துக்கான. கதை விவாதத்தில், மணிரத்னமும், ஜெயமோகனும், தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன.


            thanx - thats tamil, dinamalar, cine 123  


            நவரச நாயகன் எனப்பட்ட நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கின் முதல் சினிமா ஸ்டில்லை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். கடல் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் கவுதம் கார்த்திக். ஆனால் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும், மீடியா அதிகமாக பரபரக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கவுதமின் ஸ்டில்களை வெளியில் விடாமல் மறைத்து வந்தார் மணிரத்னம். manirathnam releases another first look of goutham மேலும் படங்கள் இடையில் ஒருமுறை கவுதமின் ஸ்டில் யதேச்சையாக வெளியாகிவிட, பதறிப்போய், அதை நீக்கச் சொன்னதெல்லாம் நடந்தது. இந்த நிலையில் கடல் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது முற்றிய கத்தரிக்காயை வெளியில் காட்டி வியாபாரம் செய்தாக வேண்டுமே... எனவே தினத்துக்கு ஒரு ஸ்டில்லாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு கடல் ஃபர்ஸ்ட் லுக் என்ற பெயரில் கவுதம் முகத்தைக் காட்டாமல் ஒரு ஸ்டில்லை வெளியிட்டார் மணிரத்னம். இப்போது அதில் கொஞ்சம் முன்னேற்றம். கவுதம் முகத்தை ஓரளவு காட்டியபடி உள்ள டிசைனை வெளியிட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் இதே ரேஞ்சுக்கு படத்தின் ஹீரோயினான ராதா மகள் துளசியையும் காட்டப் போகிறார். .

            Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2012/12/manirathnam-releases-another-first-look-of-goutham-165767.html
            ஏ கீச்சான் பாடல்

            Nenjukulla Kadal Official Song - AR Rahman

             
             
             

            Saturday, November 17, 2012

            சுஹாசினி என்னை நிராகரித்தது ஏன்? - மணிரத்னம் பேட்டி

            http://www.cinesouth.com/images/new/pwed-4.jpg

            குழந்தைகளும் வயதானவர்களும் இந்தியாவைப் பிரதிபலிக்கிறார்கள்!"


            ஆர்.சரண்
            ணிரத்னம் பேசுவதே ஆச்சர்யம். அதுவும் மீடியா ஆட்களுடன் பேசு வது அபூர்வம். அப்படிப்பட்டவர் ஒரு பேட்டிக்காக ஒரு செய்தியாள ரிடம் 100 மணி நேரம் பேசியிருக் கிறார் என்றால், நம்ப முடிகிறதா?



            'தி இந்து’ நாளிதழின் துணை ஆசிரியரான பரத்வாஜ் ரங்கன், தேசிய விருதுபெற்ற திரை விமர்சகர். சினிமா, இசை, ஓவியம், புத்தகம், பயணம், நகைச்சுவை எனப் பல தளங்களில் எழுதுபவர். பென்குவின் பதிப்பகத்துக்காக இவர் மணிரத்னத்தை எடுத்திருக்கும் நீண்ட பேட்டிதான் 'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வந்திருக்கிறது.



            ''நான் 50 தடவை அவரைச் சந்தித்து இருப்பேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு சூழலில் பேசுவோம். எவ்வளவோ முறை அவரை வெறுப்பேற்றும்விதமான கேள்விகளைக் கேட்டு இருக்கிறேன். ஆனால், அவரிடம் சற்றும் முகச்சுளிப்போ, அசௌகர்யமான உடல்மொழியோ வெளிப்பட்டது இல்லை. விமர்சகரை மதிக்கத் தெரிந்த உன்னதமான கலைஞன் மணிரத்னம்!'' என்கிறார் பரத்வாஜ் ரங்கன். புத்தகத்துக்கு அணிந்துரை ஏ.ஆர்.ரஹ்மான். சொல்லவும் வேண்டுமா? விற்பனையில் பரபரப் பைக் கிளப்பி இருக்கிறது 'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’. புத்தகத்தில் இருந்து...


            http://www.our-kerala.com/newgallery/imageMaker.php?size=530x500&image=images/photos/images/suhasini%20with%20maniratnam2.jpg

            ''பார்த்த முதல் படம்...''



            '' 'உத்தமபுத்திரன்’ என்று நினைவு. நான் கலாஷேத்ரா கேம்பஸில் இருக்கும் பெசன்ட் தியாசெபிகல் ஸ்கூல் ஹாஸ்டலில் தங்கிப் படித்த காலத்தில்தான் நிறையப் படங்கள் பார்த்தேன். அங்கு பக்கத்தில் டூரிங் டாக்கீஸ் ஒன்று இருந்தது. யாருக்கும் தெரியாமல் நண்பர்களோடு லுங்கி, பனியனோடு போய் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன். அங்கு வார்டனும் யாருக்கும் தெரியாமல் வருவார். சில நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் பார்த்து பம்மிக்கொள்வோம்!''




            ''முதல் பட அனுபவம்...''



            ''மும்பை 'பஜாஜ் இன்ஸ்டிட்யூட்’ டில் எம்.பி.ஏ. முடித்த பின், அங்கு ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் பணியாற்றினேன். அப்போது எல்லாம் இயக்குநர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் இருந்தது இல்லை. ஆனால், நண்பர்கள் பி.ஆர்.பந்துலுவின் மகன் ரவிஷங்கர், வீணை பாலசந்தரின் மகன் ராமன் ஆகியோருடனான சினிமா தொடர்பான விவாதங்களும் திரைக்கதை அமைக்கும் பணி களும்தான் என்னை சினிமா பக்கம் ஈர்த்தன.




            ஆனால், அதுவரை நான் சினிமாபற்றித் தெரிந்து வைத்திருந்தது எல்லாம் வெறும் ஆங்கிலப் புத்தகங்கள் வாயிலாக மட்டுமே. இந்தச் சூழலில்தான் பாரதிராஜாவின் '16 வயதினிலே’, மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்’ இரண்டும் என்னுள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தின.



            சந்தான பாரதி, பி.வாசு, பி.சி.ஸ்ரீராம் போன்ற நண்பர்களின் அறிமுகம் கிடைத்தபோது, 'உட்லண்ட்ஸ் டிரைவ் இன்’னில்தான் எப்போதும் கிடப்பேன். நாள் முழுக்கக் காபி குடித்துக்கொண்டு சினிமாபற்றிப் பேசுவோம். கிட்டி எம்.பி.ஏ. படிக்கும்போது எனக்கு சீனியர். அவர் அப்போது சோழா ஷெரட்டன் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.



             'பல்லவி அனுபல்லவி’ கன்னடப் படத்தின் ஸ்க்ரிப்ட்டை முடித்த பின், கமலிடம் காட்டி ஓ.கே. வாங்குவதற் காக எப்போதும் கிட்டியுடன் கமல் வரும் நேரத்தில் அங்கு இருப்பேன். 'பல்லவி அனுபல்லவி’ படத்தில் அனில் கபூர் நடித்த ரோலில், அப்போது கமலை நடிக்கவைக்க வேண்டும் என்பது என் கனவு. ஆனால், கமலுக்கு நான் ஒரு கதை சொன்னால், அவர் எனக்கு ஐந்து கதைகள் சொன்னார்.

            http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_-_Film_Maker_Mani_Ratnam_and_his_wife_Suhasini.jpg/220px-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_-_Film_Maker_Mani_Ratnam_and_his_wife_Suhasini.jpg

             இப்படியே போனது. சாருஹாசன் அறிமுகமானார். நான் யாரிடமாவது உதவி இயக்குநராக சினிமா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார். என்னுடைய அப்போதைய ஒரே சாய்ஸ்... மகேந்திரன். சாருஹாசனே அப்போது மகேந்திரனிடம் என்னை அழைத்துச் சென்றார். ஆனால், மகேந்திரன் என்னைக் கவனிக்கவே இல்லை. அப்போது வருத்தமாக இருந்தது.



            ஆனால், சில வருடங்களில் இயக்குநரான பிறகு இந்தச் சம்பவத்தை அவரிடம் சொன்னபோது சிரித்துக்கொண்டே, 'சந்தோஷப்படுங்க... யாருடைய துணையும் இல்லாமல் நீங்கள் பெரிய ஆளாக வர வேண்டும்னு இருந்திருக்கு. அன்னைக்கு நான் கவனிக்காததுகூட நல்லதுக் குத்தான் பார்த்தீங்களா!’ என்றார்.



            என் அண்ணன் ஜீ.வி. மூலம் 'கலாகேந்திரா’வின் இயக்குநரான துரைக்கு ஸ்க்ரிப்ட்டை அனுப்பிவைத்தேன். அது பாலசந்தரின் கைகளுக்குக் கடைசி வரை போய்ச் சேரவில்லை என்பது எனக்கு அப்போது தெரியாது. பாரதிராஜா என் அடுத்த டார்கெட். அவரை நேரில் போய் சந்தித்தேன். பெர்ஃபெக்ட் ஸ்பைரல் பைண்டில் ஆங்கில ஸ்க்ரிப்ட்டோடு போய் நின்றேன். 'நிழல்கள்’ படத்தில் பிஸியாக இருப்பதாகவும் பிறகு சந்திக்கலாம் என்றும் பாஸிட்டிவாகப் பேசி அனுப்பிவைத்தார்.



             இயக்குநர் ஆன பிறகுதான் தெரிந்தது என்னு டைய குழப்பமான ஆங்கில நடை அவருக்கு அன்று புரியவில்லை என்பது. பி.சி.ஸ்ரீராமோடு லாம்ப் ரெட்டா ஸ்கூட்டரில் ஒவ்வொரு தயாரிப்பாளர் வீடாக ஏறி இறங்கி இருக்கிறேன். கடைசியில் கிருஷ்ணமூர்த்தி என்ற தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு, அப்போதைய ஹிட் பெர்சனாலிட்டிகளான ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவையும் இளையராஜாவையும் சந்தித்து கதையைச் சொன்னேன்.



             அதன் பிறகு, அந்தப் படத்தின் ஹீரோயின் கேரக்டருக்காக சுஹாசினியிடம் கேட்டேன். 'நோ’ சொல்லிவிட்டார். (சுஹாசினி என் இரண்டு படங்களை அப்போது நிராகரித்தார்). அப்புறம் அனில் கபூர், லட்சுமி, எடிட்டர் லெனின் வந்தது எல்லாம் பெரிய கதை. படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும், சிறந்த திரைக்கதைக்கான மாநில விருதும், கணவரைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையே ஆன உணர்வுகளைப் பேசியதால், தைரியமான முயற்சி என்று பாராட்டுக்களையும் குவித்தது!''



            ''முதல் தமிழ்ப் படம்...''



            ''என் முதல் தமிழ்ப் படம் 'பகல் நிலவு’. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் வசனம் எழுதினேன். பேப்பரில் இருந்து காட்சிகளாக உருவம் கொடுக்கும்போது ஆங்கிலத்தில் இருப்பது வேறு மாதிரி இருந்தது. அது பெரிய தவறு என்பதைப் புரிந்துகொண்டேன். தமிழில் முழு ஸ்க்ரிப்ட்டையும் எழுதினேன். 'மெயின் ஸ்ட்ரீம் கமர்ஷியல் படம் இது’ என்று நிர்ணயித்துக்கொண்டு, நானும் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனும் இணைந்து வேலை பார்த்தோம். சத்யராஜ் - முரளி - இளையராஜா காம்பினேஷனில் அண்ணனே இந்தப் படத்தைத் தயாரித்ததால், நான் கொஞ்சம் கொஞ்சமாக முழுமையான சினிமா கற்றுக்கொண்டே இயக்கிய படம்!''




            ''முதல் தோல்வி...''



            ''தயாரிப்பாளர் கோவைத் தம்பி அப்போது உச்சத்தில் இருந்த ராதா, அம்பிகா இருவர் கால்ஷீட்டையும் வைத்திருந்தார். என்னுடன் படம் செய்ய ஆசைப்பட்டு, படத்துக்கான கதையை ஒரு கேசட்டில் பதிவுசெய்து எனக்கு அனுப்பி இருந்தார். 'இது என் டைப் படம் இல்லை. இப்போது என்னால் உங்களுக்குப் படம் செய்ய முடியாது’ என்று அவரிடம் நேரில் சொல்லச் சென்றேன்.



            நான் சொன்னதைக் கேட்ட அடுத்த கணமே போனில் ராதா, அம்பிகா இருவரின் கால்ஷீட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டு, எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். வேண்டாம் என்று சொல்லச் சென்ற நான், என்னை அறியாமல் 'இதய கோயில்’ படத்தில் சிக்கிக்கொண்ட கதை இது. இளையராஜாவின் இசை படத்தை ஓரளவு காப்பாற்றி யது. குறிப்பாக, 'நான் பாடும் மௌன ராகம்...’ பாடலைக் காட்சிப்படுத்தியபோது 'பியாஷா’ குருதத் துக்கு அஞ்சலி செலுத்துவதாக உணர்ந்தேன். அந்தப் பாடல்தான் 'மௌன ராகம்’ என்ற என் அடுத்த மெகா ஹிட் படத்துக்கான டைட்டிலைத் தந்தது. மற்றபடி என்னுடைய மிக மோசமான படம் 'இதய கோயில்’!''



            ''முதல் சிறுகதை...''



            ''திவ்யா என்ற ஒரு சிறுகதையை, எனக்குத் தெரிந்த தமிழில் பள்ளி நாட்களில் எழுதி இருந்தேன். மோசமான பிராமணத் தமிழில் இருக்கும் அது. என் மனைவி அதைப் படிக்கும்போது எல்லாம் சிரிப்பாள். உடையில் கட்டுப்பாடு, ஆண்களோடு பேசக் கட்டுப்பாடு எனக் கட்டுப்பாடுகளால் உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரு பெண்ணை, திடீரென ஒரு நாளில் ஒரு மனிதனுடன் தனி அறைக்குள் தள்ளிவிட்டு வாழ்ந்துகொள் என்று சொல்வது அபத்தம் இல்லையா என அந்தக் கதை பேசும். முதலிரவை மட்டுமே மையமாக வைத்து அந்தக் கதையை எழுதி இருந்தேன். முதலிரவைத் தாண்டிய என் பார்வைதான் 'மௌன ராகம்’. 'கம்பளிப் பூச்சி மாதிரி இருக்கு’ என்ற டயலாக் அந்த முதல் சிறுகதையில் இருந்து வந்ததுதான்!''



            ''முதல் மெகா ஹிட்...''



            ''மும்பையில் எம்.பி.ஏ., படித்தபோது, மும்பை நிழல் உலகில் மிக உச்சத்தில் இருந்தார் வரதராஜ முதலியார். மாதுங்கா பகுதி மக்கள் அவரைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள்.



            தமிழ்நாட்டில் இருந்து போன ஒருவ ரால் எப்படி வேற்று மொழி நகரமான மும்பையில் கொடி கட்டி ஆள முடிகிறது என ஆச்சர்யப்பட்டேன். கமலிடம் திருப்பங்கள் நிறைந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையைப் படம் எடுக்கலாம் என்று சொன்னதும், உடனே சம்மதித் தார். கமல் இந்தப் படத்தில் ஓர் இயக்கு நரின் ஆளுமையோடு என்னை வழி நடத்தினார். சக நடிகர்களுக்கு மேக்கப் போட்டுவிடுவதில் ஆரம்பித்து, ஹேர் ஸ்டைல் வரை அந்தப் படத்தில் கமல் எனக்கு அறிவிக்கப்படாத உதவி இயக்குநராகத்தான் இருந்தார்.



            ஒரு காட்சியை விளக்கும்போதே ஏழு விதமான யோசனைகளோடு அந்தக் காட்சிக்குப் பன்முகத்தன்மை கொடுத்து வியக்கவைப்பார். ஒரு நடிகனால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற நடிப்புகுறித்த என் எல்லைகளை விரிவாக்கியதே கமல்தான். ஓர் இயக்குநர் அவரிடம் நிறையக் கற்றுக்கொள்ள முடியும். அதே சமயம், நிறையக் கவன மாகவும் இருக்க வேண்டும்!''  



            ''முதலும் கடைசியுமான சென்டிமென்ட்ஸ்...''



            ''என் படங்களில் எப்படியும் அதிக அளவில் குழந்தைகளையும் வயதானவர் களையும் பயன்படுத்துவேன். அது சினிமாவுக்குள் இந்தியாவைப் பிரதிபலிக்கும் அம்சம் என்பதால்.



            அதுபோலவே ரயில் சம்பந்தப்பட்ட காட்சிகளை எப்படியும் வைத்துவிட மெனக்கெடுவேன். ஃபேர்வெல் உணர் வுக்கு ரயிலைவிடச் சிறந்த கருவி வேறு எதுவும் இருக்க முடியாது!''


            நன்றி - விகடன்



            http://www.deccanherald.com/images/editor_images/June%202010/June%2017%202010/mani-ratnam-rai-ap.jpg

            Wednesday, October 31, 2012

            Conversations with Mani Ratnam - மணிரத்னம் பேசிய சர்ச்சைக்குரிய உரை

            http://cdn1.supergoodmovies.com/FilesFive/mani-ratnam-s-kadal-location-stills-9f7e81dd.jpg 

            மணிரத்னம் வயது 30

            ‘‘ரஜினிக்கு என்னிடம் கதை இல்லை!’’


            எஸ். சந்திரமௌலி

            தமிழ் சினிமாவை உலக சினிமா உயரத்துக்கு தூக்கிப் பிடித்த முன்னோடி மணிரத்னம். தாம் பேசுவதைவிட, தம் படங்கள் பேசவேண்டும்; பேசப்பட வேண்டும் என்ற கருத்துக்குச் சொந்தக்காரர் அவர். 1983, ‘பல்லவி அனுபல்லவிகன்னடத் திரைப்படத்தின் மூலமாகத் திரையுலகில் பிரவேசித்தவர்


             அடுத்த படம் மலையாளத்தில்உணரு’. 85ல்பகல் நிலவுமூலமாக தமிழில் களமிறங்கினார். 86ல், ‘மௌனராகம்மூலமாக தம்மைத் திரும்பிப் பார்க்க வைத்தார். ‘நாயகன்மூலமாக அகில இந்திய வீச்சு கிடைத்தது. தற்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும்கடல்படத்தோடு மணிரத்னத்துக்கும் சினிமாவுக்குமான தொப்புள் கொடி உறவுக்கு வயது முப்பது.


             இந்தத் தருணத்தில் தாம் வந்த சினிமா பாதையைத் திரும்பிப் பார்த்து, தமது எண்ண ஓட்டங்களை ஆங்கிலப் புத்தகமாகப் பதிவு செய்து, இந்திய சினிமாவுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். தலைப்பு: Conversations with Mani Ratnam. எழுதி இருப்பவர்: பரத்வாஜ் ரங்கன். பெங்குயின் வெளியீடு. தம் படங்களைப் பற்றி மணிரத்னம் என்ன சொல்கிறார்? ஒரு சுவையான டிரெயிலர்:

            விவேகானந்தா கல்லூரியில் பி. காம் படித்த பிறகு, மும்பை சென்று பஜாஜ் இன்ஸ்டிட்டியூட்டில் எம்.பி.. முடித்து விட்டு, ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் பணியாற்றினேன். அங்கே எனக்கு வேலை பிடிக்கவில்லை என்றாலும், சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளிக்கூட இல்லை. பிரபல இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் மகனும், என் நண்பருமான ரவி சங்கர் தமது முதல் (கன்னட) படத்தை எடுக்க முடிவு செய்த போது, வீணை பாலசந்தரின் மகன் ராமனும், நானும் சேர்ந்து மூவருமாக ஆபீஸ் விட்ட பிறகு மாலை நேரங்களில் சந்தித்து, படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுத முடிவு செய்தோம்



             ஒவ்வொரு சீன் குறித்தும் கடுமையான விவாதம் நடக்கும். ஆங்கிலத்தில் ஸ்கிரிப்ட்டை தயார் செய்து கொண்டு, ரவிசங்கர் ஷூட்டிங் ஆரம்பித்தார். கோலாரில் படப்பிடிப்பு. நாங்கள் ஆங்கிலத்தில் எழுதிய சீன்களை, கன்னட வசனகர்த்தாவுக்கு விளக்கிச் சொல்வது என் வேலை. முதல் ஷெட்யூல் முடியும் தறுவாயில்எனக்கான இடம் சினிமாஎன்று நான் முடிவு செய்தேன். அப்போது கூட படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதி, டைரக்டர்களுக்குக் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. ஆனால்பல்லவி அனுபல்லவிஸ்கிரிப்ட் ரெடியானபோது, ‘படத்தை நாமே இயக்கினால் என்ன?’ என்ற எண்ணம் வந்தது.


            மும்பையில் இரண்டு வருடங்கள் படித்தபோது, மும்பை நிழல் உலகில் மிக உச்சத்தில் இருந்தார் வரதராஜ முதலியார். மாதுங்கா பகுதி மக்கள் அவரை தெய்வமாகவே நினைத்தார்கள். சக மனிதர் ஒருவரை ஏன் இவர்கள் தெய்வமாக மதிக்கிறார்கள்? என்பது எனக்குப் புதிராகவே இருந்தது. அது எனக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது


             தமிழ்நாட்டிலிருந்து போன ஒருவரால் எப்படி மும்பை நகரத்தையே கட்டி ஆள முடிகிறது என வியந்து போனேன். கமலிடம் திருப்பங்கள் நிறைந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையைப் படமெடுக்கலாம் என்று சொன்னதும் உடனே சம்மதித்தார். ‘மௌனராகம் கதைஅப்ரூவ் ஆவதற்கு ஐந்தாண்டுகள் பிடித்தது. நாயகன் பத்தே நிமிடங்களில் .கே. ஆனது.



            ‘அக்னி நட்சத்திரம்படத்துக்கு இளையராஜா ரீ-ரிக்கார்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவருடைய நண்பரான இன்னொரு இசையமைப்பாளர், ‘ இப்படியே படத்தை ரிலீஸ் பண்ணாதீர்கள்! கிளைமாக்சை மறுபடியும் எடுங்கள்.


             இல்லையென்றால் படம் பார்க்கிறவர்கள் கண் வலிக்கிறது என்று சொல்வார்கள். நான் சினிமாவில் பல வருடமாக இருப்பவன். நான் சொல்கிறேன். நீங்கள் தப்பு செய்திருக்கிறீர்கள். படம் வெற்றி பெற்றால், நான் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்என்று சொன்னார்.


            என் படங்களில் வரும் மழைக் காட்சிகளுக்கு (ஜப்பானிய இயக்குனர்) குரசோவாதான் காரணம். அவரது படங்களில் பஞ்சபூதங்களும் உயிரோட்டத்தோடு இடம்பெற்றிருக்கும். மழை, என் காட்சிகளுக்கும் வலு சேர்க்கிறது.

            பேபி ஷாம்லிக்கு அப்போது இரண்டரை அல்லது மூன்று வயது. அழகான, ஆரோக்கியமான, துறுதுறு வென்று இருக்கும் அந்தக் குழந்தையை மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் போல நடிக்க வைப்பது பெரும் சவாலாகத்தான் இருந்தது. ஒரு சிறிய வீட்டில் வீடியோவில் ஒருநாள் படம் பிடித்தோம். எதிர்பார்த்தபடி அமையவில்லை.


             ‘அஞ்சலிபடத்தையே டிராப் பண்ணி விடலாமா என்று யோசித்தோம். அண்ணா நகரில் உள்ள சிறப்புக் குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று, அங்கே இருந்த எஸ்தர் என்ற குழந்தையின் சிரிப்பு, அழுகை, கோபம் என்று விதம் விதமாக இரண்டு மூன்று நாட்களுக்கு கூடவே இருந்து டெஸ்ட் ஷூட் பண்ணினோம். பேபி ஷாம்லிக்கு அதைப் போட்டுக் காட்டினோம். அதன்பிறகு பிரச்னை ஏதுமில்லை.


            ரஜினிக்கு என்னோடு பணியாற்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய ஸ்டாரை வைத்துப் படமெடுக்க என்னிடம் கதை இல்லை. ரஜினியை வைத்து வழக்கமான ஒரு படத்தை எடுக்க எனக்கு விருப்பமில்லை. ரஜினியின் இமேஜுக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் அது என் படமாகவும் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன். அப்போது தான் மகாபாரத கர்ணன் ஐடியா எனக்குத் தோன்றியது. என் அண்ணன் ஜி.வி. யோடு போய், ரஜினியைச் சந்தித்துப் பேசினேன். உடனே சம்மதித்தார். ‘தளபதிஇப்படித்தான் ஆரம்பமானது.



            ‘இருவர்படத்தின் ஹீரோயினுக்காக ஒரு புதுமுகத்தைத் தேடிக் கொண்டிருந்த போது, ராஜிவ் மேனன், ஐஸ்வர்யா ராயை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தினார். ‘உங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க வழிசெய்யும் படம் அல்லஇருவர்படம். படத்தில் அவருக்குரிய இருமாறுபட்ட ரோல்களைப் பற்றிச் சொன்னேன். நடிக்க சம்மதமா?’ என்று கேட்டபோது, சினிமாவில் நடிப்பதா? வேண்டாமா? என்று தயக்கத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் .கே. சொன்னார். அடுத்து, ஆபீசில் டெஸ்ட் எடுத்தோம். தமிழ் வசனம் கொடுத்துப் பேசச் சொன்னோம். முதல் நாள் ஷூட் டிங்கில் ஐஸ்வர்யா ராய் பேசியஎனக்குப் பேசணும்என்ற வசனத்தை அவர் இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறார்.


            ஃபிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு குழந்தை அமெரிக்காவில் ஒரு தம்பதிக்கு, தத்து கொடுக்கப்பட்டது. அதன் வளர்ப்புப் பெற்றோர்கள், அந்தக் குழந்தைக்கு அதன் பெற்றெடுத்தவர்களைக் காட்டுவதற்காக ஃபிலிப்பைன்சுக்கு அழைத்து வந்தார்கள். உணர்ச்சிபூர்வமான அந்தச் சந்திப்பு பற்றி டைம் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளியானது. அதை சுஹாசினி படித்துவிட்டு, என்னிடம் காட்டினார். அதை வைத்து ஒரு படம் எடுக்கும்படி அவரிடம் சொன்னேன். அவர் டி.வி. சீரியலில் பிசியாக இருந்ததால், நானே, ஸ்ரீலங்கா பின்னணியில் படமெடுத்தேன். அதுதான்கன்னத்தில் முத்த மிட்டால்.’


            சீதை கேரக்டருக்கு மிகப் பொருத்தமான முகம் ஐஸ்வர்யா ராய்யுடையதுதான் என்று நான் நினைத்தேன். அதனால்தான் ராவணனில் அவரை நடிக்க வைத்தேன்.


            மணிரத்னத்தோடு 100 மணி நேரம்

            மணிரத்னத்தின் படங்கள் பற்றி அவரோடு நீண்ட உரையாடல்கள் நடத்தி, Conversations with Mani Ratnam புத்தகத்தை எழுதி இருப்பவர் ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியரான பரத்வாஜ் ரங்கன். சினிமா தொடர்பான ஆழமான கட்டுரைகள் பல எழுதியவர். பரத்வாஜ் ரங்கன் பேசுகிறார்:
            நான் மணிரத்னத்தின் படங்களைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் படித்து விட்டு, என்னை ஒரு புத்தகம் எழுதும்படி பெங்குயின் நிறுவனம் கேட்டது. ஒரு பத்திரிகையாளராக அவரைச் சந்தித்துப் பேட்டி காண்பதற்கான எனது முயற்சிகள் வெற்றிபெறவில்லை என்பதால், மணிரத்னத்தின் ஒவ்வொரு படமாக எடுத்துக் கொண்டு அலசி, ஒரு புத்தகம் எழுத நினைத்தேன். அதற்கு முன்பாக, மரியாதை நிமித்தம் அவரைச் சந்தித்தேன். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோதுதான், ஒவ்வொரு படம் பற்றியும் அவரோடு உரையாடி புத்தகத்தையும் உரையாடல்களின் தொகுப்பாகவே எழுதுவது என்பது முடிவானது.
            ஒரு சந்திப்பில் இரண்டு மணி நேரம் பேசுவோம். இதுபோல 50 தடவைகள் சுமார் 100 மணிநேரம் பேசி இருப்போம். என் கேள்விகள், அவை எரிச்சலூட்டும்படி இருந்தாலும் அவர் கோபப்படாமல், தம் கருத்தை அழுத்தமாகத் தெரிவித்தார். அவரது பேச்சில் நேர்மை இருக்கும். ‘ராவணன்படம் முடிந்து சுமார் மூன்று மாதங்கள் கழித்து ஆரம்பித்தோம். அவரோடு பேசிய அனைத்தையும் எழுதியிருந்தால், இந்தப் புத்தகம் 300 பக்கங்களுக்குப் பதிலாக 600 பக்கங்கள் வந்திருக்கும். மணிரத்னம் நேரத்தைப் பொன்னாக மதிப்பவர். சந்திப்புக்கு நேரம் கொடுத்துவிட்டார் என்றால், அந்த நேரத்தில் ரெடியாக இருப்பார்.
            ஒரு சந்திப்பில் அவர் சொன்ன விஷயங்களை, அடுத்த முறை சந்திப்பதற்கு முன்னால் எழுதிவிடுவேன். ஒவ்வொரு படத்தின் கதை, கதாபாத்திர உருவாக்கம், நடிகர்கள், வசனம் போன்றவற்றோடு கேமரா, எடிட்டிங், மியூசிக் போன்ற டெக்னிக்கல் விஷயங்களைப் பற்றியும் நிறைய பேசினோம். ஆனால், எல்லோருக்கும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும்படி புத்தகம் அமைய வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தேன்."


            நன்றி - கல்கி 
             https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsIYh85sHIkyh4r8NhyphenhyphenUUD2Aaig-NW1zk8KHoSZcqcgD8a_PWB9Dit41E6xcxaqQ2GXuk9C0MMMxF-fI7jqsd0c8Do29UybebDyT2n2qu6o9uTHfJ7OCh3RFpPI8Pd6VdkYjZPl_nIQzTB/s1600/Kadal-Movie-Pics.jpg

            எழுபதுகளில் நான் பார்த்த மோசமான படங்கள்தான் என்னை இயக்குநராக மாற்றின. தமிழ் சினிமாவைக் காப்பாற்றத் தூண்டின, என மனம் போன போக்கில் பேசி சர்ச்சை கிளப்பியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.



            கான்வர்சேஷன் வித் மணிரத்னம் என்ற புத்தகத்தில் அவரது பேட்டி இடம்பெற்றுள்ளது. பொதுவாக அதிகம் பேசாதவர் என்று அறியப்படும் மணிரத்தனம், இந்தப் பேட்டியில் நிறைய பேசியுள்ளார். அப்படி பேசியதால்தான் இவரது மனதுக்குள் எத்தனை இருட்டு நிறைந்து கிடக்கிறது என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



            அந்தப் பேட்டியின் ஒரு பகுதி இது:



            ‘ஒரு ஒழுக்கமான எம்.பி.ஏ.ஸ்டூடண்டா நான் பாட்டுக்கு என் வேலையை பாத்துக் கொண்டு இருந்திருக்க வேண்டியவன் நான். ஆனால் எழுபதுகளில் வந்த மட்டமான தமிழ்ப் படங்கள்தான், தமிழ் சினிமாவை நாமாவது காப்பாற்ற வேண்டும் என என்னை உணரவைத்தது.



            பாலசந்தர் மற்றும் மகேந்திரன் படங்கள் தவிர்த்து, 70 களில் தமிழ் சினிமாவில் பல குப்பையான படங்களை நான் தொடர்ந்து பார்க்க நேர்ந்ததால், கோபப்பட்டுதான் நான் சினிமா எடுக்க வந்தேன். அப்போது மற்ற இயக்குனர்களும் நல்ல படங்கள் எடுத்திருந்தால் நான் தமிழ் சினிமாவுக்கு வந்தே இருக்கமாட்டேன்," என்கிறார் மணிரத்னம்.



            மணிரத்னம் எடுத்ததில் எது ஒரிஜினல், எது நல்ல படம் என்பதை அவரே விளக்கிச் சொன்னால்தான் உண்டு. தொடர்ந்து 4 தோல்விப் படங்கள் தந்தவர் இதே மணிரத்னம்தான். அனைத்துப் படங்களிலும் ஏதாவது ஒரு புராணத்தைக் கட்டிக் கொண்டு அழும், இவர் நாயகன் எடுத்த கதையை முக்தா சீனிவாசன் கடந்த ஞாயிறன்று பிரித்து மேய்ந்துவிட்டார்.




            எழுதுபதுகளில் பல அருமையான படைப்புகள் வந்தன. எழுபதுகளில் இவர் குறிப்பிடுவது பாலச்சந்தரையும், போனால் போகட்டுமென்று மகேந்திரனையும் மட்டுமே.



            அந்த காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த ஸ்ரீதரையோ பாலுமகேந்திராவையோ, ஏன் இன்றும் வியக்க வைக்கும் படைப்பான அவள் அப்படித்தான் தந்த ருத்ரையாவையோ விட்டுவிட்டது ஏனோ.. எழுதுபதுகளில்தான் பாரதிராஜா என்ற சினிமா புரட்சியாளன் அழுத்தமாக தடம் பதித்தான் என்பதும் இந்த இருட்டு ஸ்பெஷலிஸ்ட் மணிரத்னத்துக்கு தெரியாமல் போனது ஏனோ?



            'மணிரத்னம் தன் படங்களின் நேர்மை குறித்த யோக்கியமான விவாதத்தை முதலில் தொடங்கி வைக்கட்டும். மற்ற படைப்பாளிகளை விமர்சிக்கும் தகுதி அவருக்கில்லை!' - இது மணிரத்னத்தின் பேட்டி குறித்து இன்றைய படைப்பாளி ஒருவரின் காட்டமான விமர்சனம்!



            நன்றி - தட்ஸ் தமிழ்


            http://moonramkonam.com/now/wp-content/uploads/2012/04/Kadal-gauntham-samantha-maniratnam-kadal-movie-story.jpg


             டிஸ்கி - மேலே குறிப்பிடப்பட்ட செய்தி வேறொரு தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இதில் எனக்கு  உடன்பாடு என்றோ உடன்பாடு இல்லை என்றோ சொல்லி விட முடியாது.