Showing posts with label kadal. Show all posts
Showing posts with label kadal. Show all posts

Friday, February 01, 2013

கடல் - சினிமா விமர்சனம்

ஒரு நல்ல பாதிரியார் , ஒரு மோசமான தாதா ( தாதான்னாலே மோசம் தானே?ஆனா தளபதி, நாயகன் தாதா நல்லவங்க ஆச்சே?) இவங்க 2 பேரும்  சந்தர்ப்ப வசத்தால சவால் விட்டுக்கறாங்க. 2 பேர்ல யார் ஜெயிச்சாங்க என்பதே கதை. இந்தக்கதைல கிளைக்கதையா  பாதிரியாரின் வளர்ப்பு மகனும், தாதாவின்  நிஜ மகளும் லவ்வறாங்க .அவங்க தான் ஹீரோவும் , ஹீரொயினும் . ஹீரோயின் கொஞ்சம் மெண்ட்டல் . அவங்க ஏன் மென்ட்டல்  ஆனாங்க என்பதற்கு கதைல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அதாவது அதை ட்விஸ்ட்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல . முடியல ..... 


அதாகப்பட்டது மணி ரத்னம் சும்மா இருக்காம மாலை மலர் பேப்பர் நிறைய படிச்சிருக்காரு . அதுல ஒரு நியூஸ் . பாதிரியார் சர்ச்ல ஒரு பெண்ணை மேட்டர் முடிச்சுட்டார். அது அவர் மேல போடப்பட்ட  வீண் பழி . இந்த KNOT டை வெச்சு  ஒரு திரைக்கதை தேத்தலாம்னு பார்த்திருக்கார். இந்தப்படம் வாங்கப்போகும் அடி அவர் தேறவே 2 வருஷம் ஆகும் .



 படத்தோட முதல் ஹீரோ ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தான் . கலக்கிட்டாரு மனுஷன் . கடல் அலைகளை , வானம் , சூரியன் , நிலா , பீச் , துளசி க்ளியவேஜ் -னு அவர் ராஜாங்கம் தான் ஓரளவாவது தியேட்டர்ல உக்கார வைக்குது 


 அடுத்து இசைப்புயல் ஏ ஆர் ஆர் . நெஞ்சுக்குள்ளே, என்னை நீ எங்கே கூட்டிப்போறே? , ஏ லே கீச்சான்  , மகுடி  என 4 பாட்டு ஹிட்.  படமாக்கிய விதம் அழகு 


படத்தை டாமினேட் பண்ணுவது ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன், அவர் தான் தாதா . ஆயுத  பூஜை பட கெட்டப்ல அசத்திட்டார். அவரோட கேரக்டரைசேஷன் இயக்குநர் ஹரி பட காப்பி . 
 அர்விந்த்சாமி  நல்ல பாதிரியாரா வர்றார். சின்ன சின்ன டயலாக் குடுத்து அவரையும், நம்மையும் காப்பாத்திட்டார்  இயக்குநர் . 
 ஹீரோவா கார்த்திக்கின் வாரிசு கவுதம் கார்த்திக்  சைடுல இருந்து பார்த்தா அவர் முகச்சாயல் தெரியுது, நடிக்க முயற்சி பண்ணி இருக்கார். ஒரு முதல் படம் ஹீரோ எந்த அளவு   பண்ணுனா போதுமோ அந்த அளவு பண்ணி இருக்கார் . 



 ஹீரோயின் துளசி. அவர் நல்ல கட்டையோ இல்லையோ அவர் குரல் செம கட்டை. முடியல . தமிழர்கள் குரல் வளத்தைப்பார்க்க மாட்டாங்க சாரி கண்டுக்க மாட்டாங்க என்பது உண்மைதான் , அதுக்காக இப்படியா? ராதா முகச்சாயல் கார்த்திகாவை விட துளசிக்கு ஜாஸ்தி .புருவம் அக்காவை விட தங்கச்சிக்கு சின்னது . ( நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ). அவர் சிரிக்கும்போது ஒரு மாதிரி உதட்டை சுளிக்கிறார். உதட்டை மட்டும் கவனிச்சவங்க கடுப்பாகிடுவாங்க .என்னதான் 15 வயசுல அபார வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் பாப்பா சினி ஃபீல்டுல வளர்றது கஷ்டம் தான் . 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கதைக்கு சம்பந்தமே இல்லாம மீனவன் , கடல் , ஏ லே கீச்சான் பாட்டு எல்லாம்  ரெடி பண்ணி பில்டப் கொடுத்து நீர்ப்பறவையில் சொல்லாத , விடு பட்ட ஏதோ ஒரு மீனவர் பிரச்சனையை , ஈழத்தமிழர் பிரச்சனையை இவர் சொல்லப்போறார்னு எதிர்பார்ப்பை ஏற்படுத்துனது . 



2.  போஸ்டர் டிசைனை நல்ல படம் மாதிரியே உருவாக்குனது




3. விஸ்வரூபம்  வராத சைக்கிள் கேப்ல படம் ரிலீஸ் பண்ணி 7 நாள் ஓட்ட வெச்சது ( அதாவது 7 நாள் ஓடிடும் ) 



4. தான் உண்டு தன் பிஸ்னெஸ் உண்டுனு தேமேன்னு கிடந்த அர்விந்த் சாமியை நல்ல கேரக்டர்னு ஏமாத்தி ரீ எண்ட்ரி கொடுத்து நடிக்க வெச்சது 



5. படத்தை பிரமோட் பண்றதுக்காக தேவையே இல்லாம லிப் லாக் கிஸ் சீனை   வலுக்கட்டாயமா புகுத்துனது .



6 கிறிஸ்டியன்ஸ் ஏதாவது பிரச்சனை பண்ணட்டும் , உலக ஃபேமஸ் ஆகிடலாம்னு வேணும்னே அவங்களை வம்புக்கு இழுத்தது . ( ஆனா அவங்க செம டேலண்ட், யாரும் கண்டுக்கலை , ஏன்னா பிரச்சனை பண்ணுனா பர பரப்பா ஓடும் , இப்போ வந்த சுவடே தெரியாமல் போகும் ) 




இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சார், அலைபாயுதே , மவுன ராகம், கீதாஞ்சலி ( இதயத்தை திருடாதே)  நிஜமாவே உங்க கதை தானா?  ஏன்னா நீண்ட இடைவெளிக்குப்பின் நீங்க எடுக்கப்போகும் காதல் கதை பட்டாசைக்கிளப்பப்போகுதுன்னு நினைச்சா தியேட்டருக்கு வந்த ஆடியன்சை பாதிலயே கிளப்பி விடுதே? 



2. அர்விந்த் சாமி பாதிரியார் , படிச்சவர் . பண்பானவர் , ஆனா அவர் செருப்பு போட்டுட்டு 2 சீன்ல ஷூ போட்டுட்டு 4 சீன்ல தேவாலயத்துக்குள் போய்ட்டு வந்துட்டு இருக்கார், படிப்பறிவே இல்லாத பொடியன்க வெறும் கால்ல போறாங்க



3.  நீங்க 30 வருஷம் சினி ஃபீல்டுல இருந்தீங்க என்பதற்காக 30 வருடங்களுக்கு முன் வைக்க வேண்டிய ட்விஸ்ட்டை எல்லாம் இப்போ வெச்சா எப்டி? சார். 

ஒரு பொண்ணு நல்லவனை கை காட்டி இவன் என்னை ரேப்பிட்டான் ஐ மீன் கெடுத்துட்டான்  அப்டினு பொய்ப்புகார் குடுத்தா அந்தக்காலத்துல அய்யோ பாவம்னு ஜனங்க பார்ப்பாங்க . இப்போ பெஞ்ச் ரசிகன் கூட ஏம்பா அதான் ஏதோ டி என் ஏ டெஸ்ட் இருக்காமில்ல அதை பார்த்தா தெரிஞ்சுடுது அப்டினு சொல்றான் .
 திரைக்கதை அமைச்ச ஜாம்பவான்கள் 2  பேரு , அதுக்கு அசிஸ்டெண்ட்டா 18 பேரு ஆல் டிகிரி ஹோல்டர்ஸ் யாரும் கவனிக்கலை? இந்த லாஜிக் ஓட்டையை உங்க பேசும் படம் சுஹாசினி மேடம் கூட சொல்லலையோ?  ( ஒரு வேளை அவரோட  வசன வாய்ப்பை நீங்க  ரைட்டருக்கு குடுத்துட்டதால நல்லா வேணும் , எப்டியோ போகட்டும்னு விட்டுடாரோ?



4. கடல் ஓரம் வாழும் ஒரு பெண் ணின் முகம் மினுமினுப்பாக ஆயில் போட்ட மாதிரி  இருக்கே, அது எபப்டி?



5. அப்பாவை ஊரே அடிச்சுப்போட்டுட்டு இருக்குன்னு ஒருத்தன் வந்து சொன்னா அப்படியே  பதறி ஹீரோ ஓட வேண்டாமா? அவர் என்னமோ ரஞ்சிதா கிட்டே விசாரனை பண்ற மாதிரி யார் அடிச்சா? எதுக்கு? ஏன்? அப்டினு 10 நிமிஷம் டயலாக் பேசிட்டு இருக்காரு?  ( டயலாக் எழுத டோட்டலா படத்துக்கு இத்தனைன்னு இனி பேசிடுங்க , ஐ திங்க்  ஒரு பக்கத்துக்கு ரூ 10,000 அப்டினு காண்ட்ராக்ட் போட்டுட்டீங்க போல , அண்ணன்  புகுந்து விளையாடிட்டார் ) உங்க படத்துலயே அதிக வசனம் கொண்ட படம் இதுதான் 


6. ஒரு யூத் பையன் சைக்கிளைத்தூக்குவது ரொம்ப சாதாரண விஷயம் . இதுல ஹீரோ சைக்கிளைத்தூக்குவதை ஓவர் பில்டப் கொடுத்து க்ளோசப்ல பை செப்ஸ் எல்லாம் நரம்பு முறுக்கேறுவதைக்காட்டுவது ரொம்ப ஓவர். அவர் என்ன நமீதாவையா தூக்கறார்?




7.  நண்பன் படத்துல ஷங்கர் சார்  பிரசவக்காட்சி ஒண்ணை க்ளைமாக்ஸ்ல வெச்சார்னா கதைக்கு அது தேவையா இருந்தது , அப்டி வெச்சா படம் ஹிட் ஆகிடும்னு யாரோ சொன்னாங்கன்னு கேட்டு கதைக்கு சம்பந்தமே இல்லாம பிரசவ காட்சி . அதுக்கு கேமரா ஆங்கிள் உஷ் அப்பா முடியல . மலையாளப்படம் மாதிரி .. 




8. தேவாலயத்தில்  சின்னப்பையன் உச்சா போகும் காட்சி ,  வசனத்தில் மிக மலிவான  கெட்ட வார்த்தைகள் இதெல்லாம் உங்க தரத்தை குறைக்குது. ப்ளீஸ் டோண்ட் ஃபர்க்ட் யூ ஆர் ஏ செண்ட்டர் டைரக்டர் , இப்படி சி செண்ட்டர் மாதிரி இறங்கி  அடிக்கக்கூடாது . ( கேட்டா அந்த கேரக்டர் அப்படித்தான் பேசும்னு ஒரு நொணை நாட்டியம் ( சால்ஜாப்பு) பேசுவீங்க )

9. உங்களுக்கு காமெடி அவ்வளவா வராதுன்னு எல்லாருக்கும் தெரியும் , அதுக்காக இப்படியா? ரொம்ப ட்ரை ( DRY)


10. மன வளர்ச்சி குறைந்த துளசியை  மருத்துவப்பணி பார்க்க விடுவது எப்படி? சும்மா காயத்துக்கு மருந்து போடுவது என்றால் கூட பரவாயில்லை,பிரசவம் பார்க்கறார், விட்டா  பை பாஸ் ஆபரேஷன் பண்ணிட்வார் போல


11. அர்விந்தசாமி பாதிரியார் கேரக்டர்,  அவர் எப்படி டபால்னு அர்ஜூன் உடம்புல பாய்ஞ்ச புல்லட்டை ஆபரேஷன் பண்ணி எடுக்கறார்? உங்க படத்துல வர்ற கேரக்டர்கள் எல்லாருமே டாக்டர்களா?


12. ட்ரெய்லர்ல , போஸ்டர்ல , ஸ்டில்ஸ்ல துளசிக்கு  லிப் லாக் கிஸ் சீன் வெச்சீங்க , ஆனா படத்துல அது இல்லையே? சென்சார்லயே விட்ட சீனை எதுக்கு தூக்குனீங்க? இது சீட்டிங்க் இல்லையா? ஒரு வேளை  10 நாட்கள் கழிச்சு இணைக்கப்பட்ட லிப் கிஸ் காட்சியுடன்னு ஓட்ட வைக்க தந்திரமா?







மனம் கவர்ந்த வசனங்கள்


1. நம்மூருக்கு புது சாமியார் வந்துருகார்ல.. எம்ஜிஆரு போலவே இருக்கீரே .
2. சந்தோசமா இருக்க கூடாதுன்னு எந்த பைபிள்லயும் சொல்லல, ஏன் உம்முன்னு இருக்கீங்க?
3.  எனக்கு பைபிளும் தெரியும், பசியும் தெரியும்
 எனக்கு  பைபிள் மட்டும் தான் தெரியும் 
4.பாவத்துல நீ தலை குப்புற விழனும், அதை நான் பார்க்கனும் 
5. பாவ மன்னிப்புக்கு 10 ரூபா, ஜெபத்துக்கு 15 ரூபா , ஆனா லேடீஸ் க்கு எல்லாம் ஃபிரீ ஹி ஹி 
6. திஸ் ஈஸ் சாமியார், சாமியார் ஈஸ் குட் 
 யோவ் அது பாதிரியார்யா 
7. எல்லாருக்கும் அம்மா சொல்லித்தான் அப்பாவைத்தெரியும்.
8.  அஞ்சு ரூபா குடுத்து வாரியா? ( வர்றியா? )னு கூப்பிட்டவங்க மத்தில என் கூட வாழ்றியா? வா! கட்டிக்கறேன்ன்னு சொல்ற ஆளை இப்போத்த்தான் பார்க்கறேன்  


9. மனசுக்குள்ளே சூரியன் உதிப்பது போல இருக்கு  ( நீ என்ன டி எம் கேவா?/ )



10. பாதிரியார் யாரோ ஒரு பொண்ணுகூட ஓடுவது மாதிரி தெரியுதே?


 இன்னும் 2 கிளாஸ் சரக்கு அடிச்சுப்பாரும் . 2 பேரோட ஓடிப்போற மாதிரி தெரியும் 



11. சுடறதா இருந்தா எப்பவோ  சுட்டிருப்பே , இப்படி பேசிட்டு இருக்க மாட்டே 



12. நிம்மதியா இருக்கறதை விட உஷாரா  இருக்கறதை நான் விரும்பறேன்


13.  அவ ஏன் அப்படி மன வளர்ச்சி கம்மியா இருக்கான்னா ஆழ்மனசு செய்யும் தந்திரம் , அவ  வளர்றதை விரும்பலை , எதையோ பார்த்து பயந்திருக்கலாம் 


14,.  இப்போதான் உன்னைப்பத்தி நினைச்சேன் 


 என்ன?னு ?



 தெரில , மறந்துட்டேன்



15.  நீ என்னை கை விட்டுட்டியா? 


 நோ , கை நழுவிடுச்சு 


16. நன்மைக்கு இந்த உலகத்துல இடம் இல்லை , எனக்கே தெரியாம என் வாழ்க்கைல ஒரு நன்மை நடந்தா அதை அழிச்சுடுவேன் . அது என் மகளா இருந்தாலும் சரி



17. மனுஷனுக்கு பாவம் செய்யச்சொல்லித்தரத்தேவை இல்லை , நடக்கற மாதிரி அது தானா வந்துடும் 


18.  நான் நிறைய பாவம் பண்ணி இருக்கேன். பாவம்னா என்னன்னு தெரியுமா உனக்கு? 


 ம்ஹூம் 


-------

 சரி சரி , இனி பண்ணாதே, எல்லாம் சரியாப்போச்சு 


( ஆடியன்ஸ் - பாவம் எது தெரியுமா? இந்தப்படத்துக்கு நாங்க வந்தது )










எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் = 40 (  ஆக்சுவலா 37 தான் தரனும் , ஆனா விகடன்ல எப்பவும் ஷங்கர், கமல், மணி 3 பேருக்கும் ஷாஃப்ட் கார்னர் உண்டு  

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - சுமார் 

 ரேட்டிங்க் -  2.5 / 5


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன் 



 சி பி கமெண்ட் -  மணிரத்னம் சாரின் தீவுர ரசிகர்கள் இடைவேளை வரை பார்த்துட்டு ஓடிவிடவும் , ஏ ஆர் ஆர் ரசிகர்கள் எஃப் எம்மில் பாட்டுக்கேட்டுக்கொள்ளவும் ,பொது மக்கள்  டி வி ல எப்போ போடுவாங்கன்னு வெயிட் பண்ணவும். தமிழ்ப்புத்தாண்டுக்கு போட்டுடுவாங்க  .மணிரத்னத்தின் சாதனை அவரோட அட்டர் ஃபிளாப்பான ராவணனை கடல் தாண்டிடுச்சு

diSki -

டேவிட் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/02/blog-post_5252.html










Monday, January 21, 2013

கடல்-துளசி-15 - லிப் கிஸ்-ஏன்? - ஓ பக்கங்கள் ஞாநி ???? VS மணிரத்னம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAHmoyVck_8G2iLYlVZOE0N2bFoixi3uf5QK0WZYqnKhLBRVQ_YbnPqHy7DpT55JrRvNA7NxeJogylp0O66qcYCIZK6Xscwt-eFQvWGWi03Io8kBNFvSOszoLqkxiv2Z1g_yoiHSTTbg5w/s1600/Kadal+Unseen+Movie+Posters+(4).jpg

ஒரு முத்தம்; பல கேள்விகள்!

ஞாநி

‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ்மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க கார்த்திக்கின் மகன், ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல் முறையாக மணிரத்னம் படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர அம்சங்களுடன் வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.

பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணிபுரியும் ஒரு நண்பர்தான். படத்தில் நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்தச் சிறுமியை இப்படி முத்தமிடும் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ஃபேஸ்புக், சமூக இணையதளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் அந்த நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதினேன்.


 http://tamilspicy.com/wp-content/plugins/wp-o-matic/cache/acabe15c6d_kadal-nenjukule-picturized.jpg



நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் :

15 வயது சிறுமியை லிப் கிஸ் அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது மணிரத்னத்துக்கு நல்ல வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா?

படத்துக்கான கடல் படக் குழுவின் நிருபர் சந்திப்பைத் தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில் பணம் திரட்டி மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகு தான் உதவி செய்வது, மெழுகுவர்த்தி கொளுத்துவதெல்லாம் செய்வார்களா?

பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்களா?

இன்றைய சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள் விடலை மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி யாருக்கும் கவலையில்லையா?

தில்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி எழுந்த ஃபேஸ்புக் வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக் காணாமற் போவது ஏன்?"


இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் ஃபேஸ்புக் சுவர்களில் பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும் இவ்வளவு பகிரப்பட்டதில்லை. என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில் முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.

இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து. பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 http://www.cutmirchi.com/upimages/1358430697_0.jpg




உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல வருடங்களாக நடக்கிறது. மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18 தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும் 18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்க வைக்கப்படுவது அவர்கள் சம்மதத்தின் அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான் செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவருடைய அம்மா ராதாவுடையதுதான்.


இப்படி வளர் இளம்பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்க வைத்து இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காசு பண்ணி வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம் அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப நேர்த்தியுடன் செய்யக் கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படைப்பாளியை விடவும் அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்பட வேண்டும்.


அது மட்டுமல்ல, தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப் பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக தீவிரமாக இன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம், கல்வி, மீடியா, வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட தில்லி நிகழ்வுக்குப் பிறகு அதிக கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.


அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் பொறுக்கிப் பாத்திரங்களே ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன் படத்தின் பெரும் பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில் என் நண்பர் நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர். ஒழுக்கமாக வளர்த்த பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும் திட்டுகிறார்கள்" என்று செய்தி அனுப்பினேன்.எனக்கும் செய்தி வந்தது. இனி இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்" என்று உடனே பதில் அனுப்பியிருக்கிறார்.


சினிமா, சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; குற்றம் செய்யவும், தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை சமூகவியலாளர் களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள். பெண்ணைப் பற்றி சமூகத்தில் ஏற்கெனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா, பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்குப் பதிலாக பலப்படுத்துகின்றன.


தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண் பிம்பங்கள் உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில் ஒரு பெண்ணைத் தொட்டுப் பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவச் சிறுவனின் மனம் தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் இருந்ததைவிட பல மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர்பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக் கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினரில் இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித் தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சர்யமானதுதான்.


இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும்.


http://newindianexpress.com/incoming/article1423224.ece/ALTERNATES/w460/Thulasi.jpg

அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம். ஆனால் அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு, எது பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம் தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.


என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச் செல்லும் போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகிறேன். எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு வாழ்த்த முடியாது.

குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது, அதன் கன்னத்தில் முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம் காமத்தின் வெளிப்பாடு. குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின் அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி முக்கியமோ அதே போலத்தான் முத்தங்களும்.


எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப் பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனத்தில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது பற்றிப் படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில் திரைப்படங்கள், யு, ஏ, யுஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை முறை சீராகவோ நேர்மையாகவோ இல்லை. எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம் கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலைநாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட சூழல் இதில் இங்கே நம்மிடம் இல்லை.


பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும் இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், சினிமா துறையினரும் பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம் அரசியல்வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமென்று தனக்குத் தானே விலக்குக் கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குனரும் இனியும் இருக்க முடியாது. அக்கறை என்பது வெறுமே மெழுகுவர்த்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே ‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது.


காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்குச் சொல்லித் தருவதில் பெரும் பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல் ரவுடித்தனத்தையும் விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது மாறியாக வேண்டும். மாற வேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து விவாதித்தாக வேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.



thanx - kalki , pulavar tharumi

http://moviegalleri.net/wp-content/gallery/thulasi-nair-at-kadali-audio/actress_thulasi_nair_hot_photos_kadali_audio_launch_0407aa0.jpg

Wednesday, January 16, 2013

கடல் பற்றி பட வசனகர்த்தா ரைட்டர் ஜெயமோகன் கட்டுரை

Kadal+Latest+Poster+With+Thulasi+Cinema65+(1).jpg (634×980)
கடல் பற்றி நூறுக்குமேல் மின்னஞ்சல்கள். எவற்றுக்கும் தனித்தனியாக பதில்போட விரும்பவில்லை. முடியவும் முடியாது. பயணத்தில் இருக்கிறேன். ஆகவே இந்தப்பதிவு



1. கடலின் கதை பழைய கதை அல்ல. அது சினிமாவுக்காக எழுதப்பட்டது. சிறிய நாவல் வடிவில்.அதன்பின் அதில் சிறிய பகுதி எடுத்துத் திரைக்கதையாக ஆக்கப்பட்டது. எல்லாக் கதைமாந்தர்களுக்கும் நீண்ட கதை நாவலில் உண்டு.படம் வெளிவந்தபின் நாவல் வெளிவரும்.

2. கடல் இப்போதைய வடிவில் ஒரு பரபரப்பான, பிரம்மாண்டமான, உணர்ச்சிகரமான வணிகப்படம்தான். அதற்குள் வாழ்க்கைக்கு மிக நெருக்கமான பல தருணங்கள் உள்ளன. ஆன்மீகமானவை, கவித்துவமானவை– அதுதான் வேறுபாடு


3. கடல் காதல்கதை அல்ல. காதல் அதில் முக்கியமான இடம் வகிக்கிறது. காதல் என்பதை விட ஆணின் ஆன்மா பெண்ணைக் கண்டுகொள்ளும் தருணம் என்று சொல்லலாம், அவ்வளவுதான்


4. கீச்சான் என்பது பாடலில் வருகிறது. நான் எழுதியது அல்ல.மதன் கார்க்கியின் சொல்லாட்சி அது. ஆனால் கீச்சான் என்ற சொல்லாட்சி மிக அற்புதமானது.கீச்சான் என்றால் புலி போலக் கோடுகள் கொண்ட சிறிய மீன். டைகர்ஃபிஷ் என்று சொல்வார்கள் கடலில் உள்ள சிறு மீன், ஆனால் அது புலிதான்.


இனிமேல் கடல் பற்றிய விவாதங்கள் ஏதும் இந்த தளத்தில் இருக்காது. நான் எழுதும் படங்கள் சம்பந்தமான விவாதங்களுக்காக இந்த தளத்தைக் கையாள விரும்பவில்லை. ஏனென்றால் அதற்கு மட்டுமே இங்கே வரும் வாசகர்கள் வந்துவிடுகிறார்கள்.


மேலும் தமிழகமே பேசப்போகும் ஒரு பெரிய படத்தைப்பற்றி இங்கும் பேச ஆரம்பித்தால் வேறு எதற்குமே இங்கே இடமிருக்காது. இந்த இணையதளம் இலக்கியம் தத்துவம் ஆன்மீகம் ஆகியவற்றையே பேசுபொருளாகக் கொண்டது.


நன்றி

ஜெ

gautham-karthik-manirathnam-kadal-movie-stills.jpg (960×512)


அன்புள்ள ஜெ,

கடல் நீங்கள் எழுதிய படம் என்று இப்போதுதான் அறிந்தேன். கடல்பற்றி எந்தச்செய்தியுமே இல்லாமல் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அமைந்த நெஞ்சுக்குள்ளே என்ற பாட்டு மட்டும்தான் இதுவரை வெளிவந்துள்ளது. நான் சமீபத்தில் கேட்ட அற்புதமான பாடல் அது


மணிரத்னம் என் ஆதர்ச இயக்குநர். அவருடன் நீங்கள் இணைந்து செயல்படவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அது இப்போது சாத்தியமானதில் மகிழ்ச்சி. படம் சிறப்பாக அமைந்திருக்கும் என நினைக்கிறேன்


சியாமளா பாலகிருஷ்ணன்



kadal-movie-stills1-550x280.jpg (550×280)

அன்புள்ள சியாமளா,

மணிரத்னத்துக்கும் எனக்குமான உறவு ஆரம்பிப்பது 2006 ல். ’நான் கடவுள்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. நான் திரையுலகுக்கு வந்ததே 2005 இல்தான். கஸ்தூரிமான் வெளியாகியிருந்தது. எங்களூர்க்காரரும் நண்பருமான இயக்குநர், நடிகர் அழகம்பெருமாள் மணிரத்னத்தின் இணை இயக்குநர். மணிரத்னம் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையை விரிவாக்கம் செய்ய முடியுமா என்று என்னைக் கேட்டார். அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் அப்போது ஒரு கதையை எப்படி சினிமாவாக ஆக்குவதென எனக்கு தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.


அந்தப் படம் தொடர்பாகவே நான் மணிரத்னத்தைச் சந்தித்தேன். கொஞ்சம் தயக்கத்துடன். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே அந்தத் தயக்கம் இல்லாமலானது. அவரிடம் மிக உற்சாகமாக இலக்கியம் பற்றி பேசமுடிந்தது. அவரை நவீனத்தமிழிலக்கியத்திற்குள் ஆழமாகக் கொண்டுவரவும் என்னால் முடிந்தது. பொதுவாகத் தனிமைவிரும்பியும் அதிகமாக வாசிக்கக்கூடியவருமான அவரால் சரசரவென தமிழிலக்கியத்தின் முன்னோடிகள் பலரை வாசித்து முடிக்கமுடிந்தது. அவரிடம் அசோகமித்திரன் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கினார்.


ஒரு நண்பராக நான் அவரிடம் இலக்கியம் பற்றிப் பேசியதே அதிகம். ஒரு கட்டத்தில் இதனால் நான் கற்றுக்கொள்ளவேண்டியவற்றை இழக்கிறேன் என உணர்ந்து அதன்பின்னரே சினிமா பற்றி பேச ஆரம்பித்தேன். அவை எல்லாமே என்னைப்பொறுத்தவரை முக்கியமான தருணங்கள். என்னுடைய வட்டத்தின் பெரும்பாலான நண்பர்களை மணிரத்னத்துக்கு அறிமுகம் செய்தேன். அவர்களெல்லாம் இன்று மணிரத்னத்தின் நண்பர்களே.


நாங்கள் பேசிய முதல்படம் நடக்கவில்லை. சினிமாவில் கதைக்கருக்கள் எளிதாகக் காலாவதியாகிக்கொண்டே இருக்கும் என்பதே காரணம். அதன்பின் அவர் குரு படம் எடுக்கப்போனார். அதன்பின் இன்னொரு படம் பேசினோம், அதுவும் நடக்கவில்லை. அதன்பின் அவர் ராவணன் எடுத்தார். அதன்பின்னர் மீண்டும் தொடர்பு கொண்டு பொன்னியின் செல்வன் செய்யலாம் என்றார். திரைக்கதை முழுமையாக எழுதப்பட்டபின் படம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகுதான் கடல்.


நான் தமிழின் முக்கியமான இயக்குநர்களிடம் பணியாற்றியிருக்கிறேன். நான் முழுக்க முழுக்க கவனித்த படமாக்கல்முறை என்றால் பாலாவுடையதுதான். அதன்பின் வசந்தபாலன். அதன்பின் படப்பிடிப்புகளில் நான் தெரிந்துகொள்ள ஏதுமில்லை என்று பட்டது. வெயில்வேறு தாங்கமுடியவில்லை. ஆகவே நான் படப்பிடிப்புத்தளங்களுக்குச் செல்வதேயில்லை. இருந்தாலும் ஒழிமுறி படத்தில் ஆரம்பம் முதல் இருந்தேன். அந்தப்படம் பாலா படமாக்கும் முறைக்கு நேர் தலைகீழ். மிகமிகமிகச் சிக்கனமான படமாக்கல்முறை கொண்டது.


Maniratnam’s-Kadal.jpg (300×300)

கடல் படத்தைப் பொறுத்தவரை நான் அதன் படப்பிடிப்பைக் கவனிக்கவில்லை. திரைக்கதை வடிவம் படமாக்கலில் எப்படி மாறுகிறது எனக் காண ஆர்வமாக இருந்தேன். நல்ல திரைக்கதையில் இருந்து நல்ல சினிமா ஒரு தாவு தாவி தன்னை அடைகிறது. இலைநுனியில் இருந்து ஆடி ஒரு கணத்தில் தாவிப் பறக்கும் பூச்சியைப்பிடிக்கும் தவளைபோல இயக்குநர் திரைக்கதையில் இருந்து பறந்தெழுந்து சினிமாவைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்று படுகிறது.


சினிமா அப்படிக் காற்றில்தாவிச் செல்வதைப் பார்ப்பது ஒரு பெரிய அனுபவம். எப்படி இந்த மாற்றம் நிகழ்கிறதென இதுவரை என்னால் அறிய முடியவில்லை. இப்போது அதுவே என்னைக் கவர்ந்திழுக்கும் வசீகரம். அவ்வகையில் கடல் ஒரு பெரிய அனுபவம்


ஜெ


kadal_13558049261.jpg (480×428)

 நன்றி - ரைட்டர்  ஜெயமோகன் , லிங்க் கொடுத்த 


Monday, December 10, 2012

கடல் - ஏ கீச்சான் ,நெஞ்சுக்குள்ளே காதல் பாடல்

http://moviegalleri.net/wp-content/uploads/2012/02/mani_ratnam_kadal_movie_first_look_posters.jpgமணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்கு கடல் என்று பெயரிட்டுள்ளார். இதனை அவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படத்திற்கு பூக்கடை என்று பெயர் வைத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படம் பற்றி பல்வேறு தகவல்களும் வெளியாகின. இந்நிலையில், பூக்கடை என்ற தலைப்பு எங்களுடையது என இயக்குனர் சரணிடம் உதவியாளராக இருந்த சதீஷ் என்பவர் புகார் கூறினார். இதுபற்றி தகவல் அறிந்த டைரக்டர் மணிரத்னம், என் படத்தோட தலைப்பு பூக்கடைன்னு நான் சொல்லவே இல்லை. நான் வைக்காத தலைப்புக்கு எதற்காக பிரச்னை? என்று கூறினார்.


இந்நிலையில் தனது அடுத்தபடத்திற்கு கடல் என்று பெயர் வைத்துள்ளதாக மணிரத்னம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்தின் நாயகனாக கார்த்திக் மகன் கவுதமும், நாயகியாக சமந்தாவும் நடிக்க இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அர்ஜூனும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் நடிப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போவதாகவும் கூறியுள்ளார்.


"கடல்" படம் தமிழக மீனவர்கள் பிரச்னையை எடுத்து சொல்லும் படமாகவும், அதில் ஒரு அழகிய காதல் கதையும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.கோடம்பாக்கமே ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்ளும் விஷயம்... மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்து ஹீரோயின் சமந்தா வெளியேறிவிட்டதுதான்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhbd-gPDCPLDJ8JEyUwY5fjptqV-haFxFtEGPBIJ6RZxSpSEJjvCBVf4yYr5S4fhRCe7WJ_OUfCw814s-h5ysu7vRhwvASMBFM_mz_WLE6t_YLdvwiYh_uhPMPdbIMa8G-t9XCOhNxTSE/s1600/manirathnam+ar+rahman+samantha+kadal+movie+stills+wallpapers+first+look+hellotolly.com+(3).jpg



ஏன்? என்னாச்சு? எப்படி?


என ஒவ்வொருவரும் மணிரத்னம் ஸ்டைலிலேயே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!


http://chennaionline.com/images/articles/November2012/53d2ff12-8f9c-4f86-a92a-0e23357b9a5fOtherImage.jpg


கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தென் தமிழகத்தின் கடற்கரையோர கிராமங்களில் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.


மணிரத்னத்தைப் பொருத்தவரை இந்தப் படம் அவருக்கு பெரிய சவால். காரணம், தொடர்ந்து அவரது படங்கள் பாக்ஸ் ஆபீசிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அவரது சமீபத்திய வெளியீடான ராவண், தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலுமே படுதோல்வி கண்டது.



எனவே பார்த்துப் பார்த்து கடல் படத்தை உருவாக்கி வருகிறார்.




சமந்தா இந்தப் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டதும், தனது வாழ்க்கையில் இந்தப் படம் மறக்கமுடியாததாக அமையும் என்று சந்தோஷப்பட்டார்.


ஆனால் இப்போது திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சமந்தா அறிவித்துள்ளார். கவனிக்க... மணிரத்னம் நீக்கவில்லை... சமந்தாவே விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார்.



தமிழில் இனிமேல்தான் சமந்தாவுக்கு வெற்றிப் படம் அமைய வேண்டும். இந்த சூழலில் பெரிய வாய்ப்பு ஒன்றிலிருந்து தானாகவே விலகிக் கொண்டிருக்கிறாரே... என்னவாக இருக்கும்? என்று பேச ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்...



இப்போதைக்கு, நீதானே என் பொன்வசந்தம், ஷங்கர் படம் மற்றும் கார்த்தியுடன் பிரியாணி ஆகியவை சமந்தாவின் கைவசம் உள்ளன.


சுனாமியே வந்தாலும் மணிரத்னத்திடமிருந்து அவர் படம் குறி‌த்த சிறு தகவல்கூட பெயராது. நாமே துப்பறிந்து பகிர்ந்து கொண்டால் மட்டுமே உண்டு. இரண்டாவது சாய்ஸ் வைரமுத்து. படத்துக்கான பப்ளிசிட்டி நேரத்தில் வைரமுத்து படத்தின் அருமை பெருமை பற்றி தனது விறைப்பு தமிழில் வண்டியாக கொட்டுவார்.








தென்னக கடற்கரையோரம் மையம் கொண்டிருந்த மணிரத்னமும் டீமும் இப்போது அந்தமானை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அங்கு நடக்கிறது. ஹீரோயின் சமந்தா விலகிக் கொண்டதால் அவருக்குப் பதில் ராதாவின் இளைய மகள் துளசியையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அலைகள் ஓய்வதில்லை படத்தில் தானும், கார்த்திக்கும் அறிமுகமானது போல் கடலில் தனது மகளும் கார்த்திக்கின் மகனும் அறிமுகமாவதில் ராதாவுக்கு கொள்ளை மகிழ்ச்சி. இது கடல் என்றால் அது அலைகள் ஓய்வதில்லை. பெய‌ரில்கூட பொருத்தம் என்று பெருமை கொள்கிறாராம்.





துளசிக்கு இப்போது 14 வயதுதான் ஆகிறது. அதற்குள் மணிரத்னம் பட ஹீரோயின் என்ற பெரும் சுமை எதுக்கு என்றும் இன்னொருபுறம் சர்ச்சை சலசலக்கிறது.



மௌனமாக இருந்தே அனைத்தையும் ஆஃப் பண்ணிவிடுவார் மணிரத்னம். 
மணிரத்னத்தின் சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெ‌ரிய அளவில் சாதிக்கவில்லை. யானை இளைத்தாலும் தந்தம் இளைக்காதில்லையா. மணிரத்னத்தின் புகழை இந்த ச‌ரிவு எதுவும் செய்யவில்லை.



அவர் இயக்கி வரும் கடல் இன்னும் பத்து சதவீதம் முடியவில்லை. அதற்குள் பத்திரத்துடன் படத்தை விலை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நமக்குக் கிடைத்த தகவல் உண்மையெனில் கடலுக்கு முதலில் வலை வீசியவர்கள் ஜெமினி பிலிம்ஸ். மாஸ் ஹீரோ இல்லாத கடலின் தமிழக திரையரங்கு உ‌ரிமையை மட்டும் 25 கோடிக்கு அவர்கள் கேட்டதாக தெ‌ரிகிறது. தெலுங்கு, கேரள உ‌ரிமை, தொலைக்காட்சி, ஆடியோ, வெளிநாட்டு உ‌ரிமைகள் தனி.மணிரத்னம் இந்த டீல் குறித்து வழக்கம் போல் எதுவும் சொல்லப் போவதில்லை. வைரமுத்து ஏதாவது வாய் திறந்தால்தான் உண்டு.

கடல் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்த 70 நாட்களில் முடித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். காதல் படமான கடலில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க துளசியை மலையாளக் கரையோரத்தில் இருந்து கூட்டி வந்திருக்கிறார்கள். மணப்பாடு, அந்தமான், கேரளா கடற்கரையோரங்களில் கடல் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள். கவுதமும் துளசியும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நடிப்புத் திறமையை காட்டியதில் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார் மணிரத்னம். அர்ஜூன், அரவிந்த் சாமி, லக்ஷ்மி மஞ்சு, பொன்வண்ணன், பசுபதி மற்றும் தம்பி ராமையா என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் கடலில் களம் இறங்கியிருக்கிறார்கள். 


இயக்குனர் மணிரத்னம், ஒரு படத்துக்கும், அடுத்த படத்துக்கும் இடையே, அதிக இடைவெளி எடுத்துக் கொள்வார். ஒரு படம் வெளியாகி, நீண்ட நாட்களுக்கு பின் தான், அடுத்த படத்துக்கான பணிகளை துவங்குவார். தற்போது, இந்த நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார், அவர். "கடல் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும்,  அந்த படத்துக்கான, இறுதி கட்ட பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும், இப்போதே, அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தை, மணிரத்னம் இயக்கப் போகிறார். இந்த படத்துக்கான. கதை விவாதத்தில், மணிரத்னமும், ஜெயமோகனும், தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன.


thanx - thats tamil, dinamalar, cine 123  


நவரச நாயகன் எனப்பட்ட நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கின் முதல் சினிமா ஸ்டில்லை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். கடல் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் கவுதம் கார்த்திக். ஆனால் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும், மீடியா அதிகமாக பரபரக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கவுதமின் ஸ்டில்களை வெளியில் விடாமல் மறைத்து வந்தார் மணிரத்னம். manirathnam releases another first look of goutham மேலும் படங்கள் இடையில் ஒருமுறை கவுதமின் ஸ்டில் யதேச்சையாக வெளியாகிவிட, பதறிப்போய், அதை நீக்கச் சொன்னதெல்லாம் நடந்தது. இந்த நிலையில் கடல் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது முற்றிய கத்தரிக்காயை வெளியில் காட்டி வியாபாரம் செய்தாக வேண்டுமே... எனவே தினத்துக்கு ஒரு ஸ்டில்லாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு கடல் ஃபர்ஸ்ட் லுக் என்ற பெயரில் கவுதம் முகத்தைக் காட்டாமல் ஒரு ஸ்டில்லை வெளியிட்டார் மணிரத்னம். இப்போது அதில் கொஞ்சம் முன்னேற்றம். கவுதம் முகத்தை ஓரளவு காட்டியபடி உள்ள டிசைனை வெளியிட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் இதே ரேஞ்சுக்கு படத்தின் ஹீரோயினான ராதா மகள் துளசியையும் காட்டப் போகிறார். .

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2012/12/manirathnam-releases-another-first-look-of-goutham-165767.html
ஏ கீச்சான் பாடல்

Nenjukulla Kadal Official Song - AR Rahman