Saturday, November 05, 2011

BLITZ - AN ACTION THRILLER MOVIE REVIEW

http://cinemagateway.com/wp-content/uploads/2011/06/Blitz-poster.jpg 

கடந்த 10 நாட்களா ஊர்ல தீபாவளிக்கு ரிலீஸ் ஆன 3 படங்களே எல்லா தியேட்டர்ஸ்ஸையும் ஆக்ரமிச்சுட்டு இருந்ததால  மக்கள் நொந்துட்டாங்க ( நான் தான் மக்கள்.. மக்கள் தான் நான்) இன்னைக்கு புதுசா ஒரு இங்கிலீஷ் படம் ரிலீஸ் ஆனதும் ரிலாக்ஸா கிளம்புனேன்.. 

ட்ரான்ஸ்போட்டர் ஹீரோ Jason Statham தான் இதுல ஹீரோ.. படத்தோட கதை என்ன? போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கற ஆள்ங்களா பார்த்து வரிசையா கொலை பண்றான் ஒரு சீரியல் கில்லர்..அவன் ஏற்கனவே ஒரு சாதாரண அடி தடி கேஸ்ல ஹீரோவான போலீஸ் ஆஃபீசர் கிட்டே போலீஸ் அடி வாங்குனவன் தான்.. அந்த அடிதடி கேஸ்ல ஹீரோ வில்லனை போட்டு கும்மு கும்முனு கும்மிடறார்.. அப்பவே வில்லனுக்கு போலீஸ் மேல செம காண்டு.. 
கோபப்படறவன் நேரா போய் யார் அடிச்சாங்களோ அவனை கொல்ல வேண்டியதுதானே? அப்படி செஞ்சா 2 ரீல்லயே படம் முடிஞ்சிடுமே.. அதனால தலையை சுத்தி மூக்கை தொடற கதையா வில்லன் சுத்தி வளைச்சு கொலை செய்யறார்.. 

இதை ஒருத்தன் பார்த்துடறான்.. அவன் ஒரு பத்திரிக்கைக்காரனுக்கு ஃபோன் பண்ணி சொல்லி பேரம் பேசறான்.. எனக்கு 50.000 டாலர் குடுத்தா கொலையாளி பற்றி துப்பு குடுப்பேன்னு சொல்றான்.. பரபரப்பான நியூஸ்க்கு ஆசைப்பட்டு அந்த டீலிங்க்குக்கு ஒத்துக்கிட்டு  பிரஸ் காரர் போறார்.. அந்த ஆதாரங்களை கைப்பற்றும்போது வில்லன் அந்த இன்ஃபார்மரை போட்டுத்தள்ளிடறார்..

photo


 இப்போ ஹீரோ எப்படியோ போராடி சேசிங்க் பண்ணி, துரத்தி ( 2ம் ஒண்ணுதானா?) வில்லனை பிடிச்சிடறாரு.. ஆனா கோர்ட்ல நிரூபிக்க முடியல.. அவர் அசால்ட்டா வெளில வந்துடறாரு.. ஏன்னா எந்த கொலைக்கும் ஆதாரம் இல்லை.. அப்படியே பார்த்த சாட்சி இருந்தாலும் அவங்க டாக்டர் ராம்தாஸ் மாதிரி பல்டி அடிக்கற ஆளுங்களா போயிடறாங்க.. 


இந்த மாதிரி நேரத்துல ஹாலிவுட் ஹீரோ என்ன செய்வார்? நம்ம கோடம்பாக்க ஹீரோக்கள் என்ன செய்வாரோ அதையே தான்.. எஸ் அதே தான் (என்கவுண்ட்டர்ல )போட்டுத்தள்ளிடறார்.

படத்துல வில்லனா நடிச்சவர் தான் புரொடியூசரோன்னு சந்தேகப்படற அளவு அவருக்கு அதிக முக்கியத்துவம்.. ஹீரோ வர்ற சீனை விட வில்லன் தான் அதிக சீன்ல வர்றார்.. அதைக்கூட நாங்க தாங்கிக்கத்தயார்.. ஆனா ஹீரோயினுக்கு மெடிஷனுக்கு கூட ஒரு சீன் இல்லை.. அட்லீஸ்ட் கிஸ்? ம் ம் அதுவும் இல்ல.. அப்புறம் என்ன இதுக்கோசரம் ஹீரோயினை புக் பண்ணனும்.. நான் தெரியாம தான் கேட்கறேன்.. 

Still of Zawe Ashton in Blitz


 ரசிக்க வைத்த வசனங்கள்

1.  ஹீரோ - ஏம்மா , ஒரு  போலீஸ் போடற டிரஸ்ஸா இது? 


லேடி - ஏன்.. உன் டிரஸ் மட்டும்?   ( இந்த சீனில் அந்த லேடி அணிந்திருப்பது ஒரு பெட்டி கோட்)

2.  என் ஃபிரண்ட் ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டான், அவனை நீ தான் காப்பாத்தனும்.. 

உன் பாய் ஃபிரண்ட்டா?

ம்ஹூம்.. அவன் சின்னப்பையன்பா.. ( ஏன் பெரிய பையனைத்தான் பாய் ஃபிரண்டா வெச்சுக்கிவீங்களோ?)

3. உனக்குபிடிச்ச நெம்பர் 7? அல்லது 8? 

8

ஓக்கே.. இன்னும் 8 போலீஸ் ஆஃபீசர்ஸை நான் கொல்லப்போறேன்.. 

4.  உன்னை எல்லாரும் முரடன்னு சொல்றாங்களே..?

உன்னைக்கூட நிறைய பேரு வெத்து வேட்டுன்னு சொல்றாங்க..

5.   அது என்னனு தெரியுமா? மைக்கேல் ஜாக்ஸனோட யூரின்.. விலை மதிப்பே இல்லாதது.. சேகரிச்சு வெச்சிருக்கேன்.. 

உவ்வே ( இது மை மைண்ட் வாய்ஸ் )

6. ஃபிகரு - இதுக்கு முன்னால பொம்பளையை பார்த்ததே இல்ல போல.. எப்படி பார்க்கறான் பாரு..  ( ஹூம், ஃபாரீன்லயும் நம்மள மாதிரிதான் போல.. ஹி ஹி )

7. ஃபிகரு - நான் கூப்பிடறவரை இங்கே வராதேன்னு சொன்னேனே?

நீ தான் கூப்பிடவே இல்லையே? ( இதுல மட்டும் நாங்க தெளீவா இருப்போமில்ல?)



Still of Zawe Ashton in Blitz

8. ஃபிகரு - எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.. 

அதுல எனக்கு என்ன லாபம்? 


ஓக்கே.. உனக்கு என்ன வேணும்?

நைட் வீட்டுக்கு வா.. 

சரி வர்றேன்.. ( அடிப்பாவி)

9.  யோவ் .. இந்த தகவலை உனக்கு சொல்லனும்னா எனக்கு 50000 டால்ர் வேணும்.. ஒரு பைசா குறைஞ்சாக்கூட.......

போய் போலீஸ்ல சொல்லு.. பண்றது இல்லீகல் வேலை.. லீகல் பற்றி பேசறே நீ?

10 . எனக்கு போலீஸ் புரொடக்‌ஷன் தருவீங்களா?

கண்டிப்பா.. ஆனா ஜெயில்ல வெச்சு.. 

11.  டியர்.. ஏன் சைலண்ட்டா இருக்கே?

ஃபிகரு - எனக்கு அதுதான் பிடிக்கும் ( அப்டித்தான் சொல்வாங்க.. மெரேஜ்க்கு பிறகுதான் தெரியும் வயலண்ட் கேர்ள்ஸ்னு)

12.  உண்மைலயே நீ புத்திசாலியா இருந்தா....... நீ புத்திசாலி இல்லைன்னு தெரியும்..  குற்றத்தை ஒத்துக்கோ.. 

13.  நீ உள்ளே இருந்தாதான் சேஃப்னு அப்பவே சொன்னேனே? ( ஆ ராசா உள்ளேபோய் 6 மாசத்துக்கு மேல ஆகியும் ஏன் ஜாமீன்  கேட்கலைன்னு இப்போ தெரியுது)


http://0.tqn.com/d/worldfilm/1/0/4/w/620291_DSC_0065a.jpg

 இயக்குநர் கோட்டை விட்ட இடங்கள் ( லாஜிக் சொதப்பல்கள்)

1. நடு ரோட்ல ஒரு போலீஸ் ஆஃபீசரை சுட்டுட்டு கேசுவலா வில்லன் போறான்.. யாரும் கண்டுக்கலை.. அட்லீஸ்ட் ஒரு அலறல்.. பதட்டம்..? ம்ஹூம்

2.  நான் கேபிள் காரன் வந்திருக்கேன்.. கதவை திறங்கன்னு வில்லன் சொன்னதும் ஆல்ரெடி கொலை பயம் உள்ள போலீஸ் டக்னு கதவைத்திறந்து நான் தான் கேபிள் கனெக்‌ஷன் கட் பண்ணீ பல மாசம் ஆச்சே.. ந்னு கேனத்தனமா சொல்றாரே?

3.  ஒரு இன்ஃபார்மரு பிரஸ்காரனை கூப்பிட்டு வில்லனோட கார் டிக்கியை திறந்து அல்வா மாதிரி எவிடன்ஸ் காட்றாரு.. அதை உடனே அபேஸ் பண்ணாம அவனை கூட்டிட்டு போய் டீ வாங்கிக்குடுத்து மறுபடி வந்து பார்த்தா அதை காணோம்.. இப்படியா அசால்ட்டா பிரஸ்காரன் இருப்பான்?

4.  ஹீரோ வில்லனை துரத்திட்டு 4 கி மீ தூரம் ஓடிட்டே இருக்காரு.. 2 அடி தூரத்துலதான் வில்லன் ஓடரான்.. அப்பவே ஷூட் பண்ண வேண்டியதுதானே? சேசிங்க் சீன் வேணும்கறதாலா?

5. ஹீரோயின்க்கு 8 கோடி குடுத்து புக் பண்ணிஎன்ன யூஸ்? ரொமன்ஸ் சீன் உண்டா? ஜாலி கிஸ்ஸாவது உண்டா? தமிழ்ப்படம் பாருங்க 10 லட்சம் ரூபா சம்பளம் குடுத்துட்டு 1 கோடிக்கு ஒர்த்தாகும் அளவு எங்காளுங்க எடுக்கறதை..


http://images.dvdtimes.co.uk/protectedimage.php?image=clydefrojones/RocketScience5.jpg_30012008

திரைக்கதை பின் பாதியில் ரொம்பவே திணறுகிறது.. ஒளிப்பதிவு , இசை எல்லாம் சுமார் ரகம்

ஆக்‌ஷன் காட்சிகளூம் குறைவுதான்..

ஈரோடு ஸ்ரீ லட்சுமி தியேட்டரில் பார்த்தேன்..

 சி.பி கமெண்ட் - பிரமாதமான படம்னு சொல்லிட முடியாது.. டப்பா படம்னு தள்ள வும் முடியாது.. சுமார்.. ரகம்


டிஸ்கி 1- போஸ்டரில் ஏ சான்றிதழ் பார்த்து சீன் இருக்குன்னு யாரும் நினைக்காதீங்க.. அது வன்முறைக்கு கொடுக்கப்பட்ட்டது.. படம் அக்மார்க் சைவம்.. அப்போ நான் தான் சீன் படம்னு ஏமாந்து போய்ட்டேனா?ன்னு கேட்காதீங்க.. நாங்க எல்லாம்  போஸ்டர் டிசைன் பார்த்தே, டைட்டிலை வெச்சே கண்டு பிடிக்கற ஆளுங்க ..

டிஸ்கி 2 - blitz அப்டின்னா என்ன அர்த்தம்னு  படம் பார்க்கும்போதே ஒரு கேர்ள் ஃபிரண்டுக்கு மெசேஜ் அனுப்பி கேட்டேன்.. 2 அர்த்தம் சொன்னாங்க.. 1. A PERIOD OF GREAT ACTIVITY FOR SAOME SPECIAL PURPOSE ( INFORMAL) 2. GERMANN (NOUN)

ஆனா படத்துல வில்லனோட பேருதான் ப்லிட்ஸ்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://content.internetvideoarchive.com/content/photos/7283/30589602_.jpg

பரி பூர்ண ஃபேமிலி ஜோக்ஸ் ஹி ஹி ஹி


1.நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை : விஜய்...! # ஆமாண்ணே, ஒரு மாதிரியாதான் நடிக்கறீங்க, நோ டவுட்டு

---------------------------

2. நடிகை பூர்ணாவுக்கு 5 தங்கைகளாம், தயாரிப்பாளர்கள் படை எடுப்பாம் # பரி பூர்ண ஃபேமிலி போல ( டைட்டில் ட்வீட்)

-------------------------------

3. கவர்ச்சியான ஸ்டில்கள் வெளியானதால் என் இமேஜ் எல்லாம் போயிருச்சே- நடிகை ஆண்ட்ரியா # வீடியோவே வந்தாச்சு, பாப்பா வுக்கு இன்னும் தெரில போல

-----------------------------------------

4.  அத்தான், நீங்க ஆன்மீக வாதியா? நாத்திக வாதியா?

கோயிலுக்கு போவேன், ஆனா சாமி கும்பிட மாட்டேன்.. ஹி ஹி ஹி

---------------------------

5. ஜீவாவுடன் நடிக்க கூடாது என்று, ஒஸ்தியில் தன்னுடன் நடித்த ரிச்சாவுக்கு தடை போட்டுள்ளார் சிம்பு. # ஆக்டிங்க் தானே நோ? டேட்டிங்க்? - ஜீவா


----------------------------



6. டியர், என்னை லவ் பண்றதா சொன்ன இந்த 4 வருஷமும் என் கிட்டே பல்பு தான் வாங்குனீங்க, வேற என்ன யூஸ்? 

அட கிறுக்கி, நான் பல்பு கடை வெச்சுட்டேன்

-----------------------------

7. டியர், எனக்கு கிரிக்கெட்ல ஏ, பி சி டி கூட தெரியாது..

அப்டியா? நீ தேவலை. எனக்கு இங்கிலீஷ்ல கூட நீ சொன்ன அந்த லெட்டர்ஸ் எல்லாம் தெரியாது

---------------------------

8. காதல் என்பது உளவியல் சார்ந்தது, கள்ளக்காதல் என்பது களவியல் சார்ந்தது

-----------------------

9..நல்லவர்கள் சின்ன வயசில் இறப்பதற்குக்காரணம் கடவுள் அவர்களை அதிகம் நேசிப்பதாலாம் # எதுக்கும் நான் கெட்டவனாகவே இருந்திடலாம்னு நினைக்கறேன்


-----------------------------------

10. . லேடி ரைட்டர் - 50 வயசு ஆனபின் தான் என் ஃபோட்டோவைவெளியிடுவேன்.


நிருபர் - மேடம்,குழப்பாதீங்க, 60க்குப்பிறகு எப்படி 50 வரும்?

-------------------------------------





11.சிலர் நம் வாழ்வின் வாழ்த்து ஆவார்கள், பலர் நம் வாழ்வின் படிப்பினை ஆவார்கள்

--------------------------------------

12. சம்பந்தப்பட்ட நபரே சலித்துக்கொள்ளும் அளவு தூக்கிப்பேசுவதும் தவறு, வலிக்கும் வரை ஒருவரை தாக்கிப்பேசுவதும் தவறு

-------------------------

13. டியர் , 11.11.11  ராசியான நாள் ,என்ன பண்ணலாம்? 

சாரி சதீஷ், அன்னைக்குதான் உங்களை கழட்டி விட்டுட்டு புது லவ்வருக்கு வாய்ப்பு தரலாம்னு ஐடியா

-------------------------------

14. மற்றவர்களின் கண்ணீரை துடைக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் அவர்கள் கண்ணீர் விட தான் ஒரு காரணமாகவாவது இல்லாமல் தவிர்க்கலாம்

---------------------------------------

15. ஹீரோ பாம்பை கைல பிடிச்சுக்கிட்டு இருக்கற மாதிரி சீன் இருந்தா படம் ஹிட் ஆகிடும்னு ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கு.. 

சார்.. படம் ஹிட் ஆகும் ஓக்கே, நான் அவுட் ஆகிடுவனே?

-----------------------------------


16. பல நாட்களாக நீடித்திருந்த நட்பு  ஒரே ஒரு வார்த்தையால் முறிகிற வாய்ப்புகள் இருப்பதால் நாம் நாக்கில் ,உதட்டில் ஜாக்கிரதையாக இருக்க நேரிடுகிறது

--------------------------------

17. காமமில்லாத காதல் அரிதானது,ஆனால் அதுதான் அழகானது, அன்பானது

--------------------------------

18. மாமா, உங்க பொண்ணுக்கு குழந்தை மனசுன்னு எப்டி சொல்றீங்க? 

30 வயசு ஆகியும் இன்னும் JOHNSON & JOHNSON பேபி சோப்தான் யூஸ் பண்றாளே?

------------------------------------

19. செம்பில்லாமல் தங்க நகை செய்ய முடியாது, ஆனால் அன்பு மட்டுமே கொண்டு காதல் செய்யலாம் # KDM  காதல்

---------------------------------

20.  காமம் எட்டிப்பார்க்கும்போது காதல் கோபம் கொண்டு வெளி நடப்பு செய்து விடுகிறது

--------------------------------

Green Roses

21. மனதை மட்டுமே தொட்ட காதல்கள் பல உண்டு, உடலை மட்டுமே தொட்ட காதல்கள் தொட்ட பின் நேசிப்பின் சதவீதம் கொஞ்சம் குறையக்கூடும்

-------------------------------

22. டியர், என்னை தொடாம லவ் பண்ணுங்க.

சாரி, கண்ட கண்ட கவிதையை எல்லாம் படிச்சு உன் மனசை கெடுத்துக்காதே. உன் மனசை மட்டும் தொட்டா போதுமா? # பல்டி

----------------------------------

23. காமம் முடிந்த பின் காதல் முழுமை பெறுவதோ, நிறைவு பெறுவதோ கிடையாது,அப்படி நடந்தால் அது சுயநலக்காதல் அல்லது உள்நோக்கம் கொண்ட காதல்

-------------------------------------

24. டியர், என்னை மயக்கனும்னா நேருக்கு நேர் என் கண்ணை பார்க்கனும், எதுக்கு என் இடுப்பைப்பார்க்கறீங்க? 

ஹி ஹி இது “ஹிப்” னாடிஸ காதல்

-----------------------------------

25. என் மனைவிக்கு மாடர்னா இருக்கறது பிடிக்காது.. 

நிஜமாவா?  

ஆமா, மிக்ஸி யூஸ் பண்ணாம அம்மிக்கல்லுல சட்னி அரைக்கச்சொல்றா #அவ்வ்வ்வ்வ்வ்வ்

---------------------------------


Friday, November 04, 2011

ஈரோட்டில் தங்கக்கார் - கின்னஸ் சாதனைக்காக!!!!!!!!!!!!

சில வருடங்களுக்கு முன் எஸ் தாணுவின் தயாரிப்பில் கேப்டன் கூலிக்காரன் என ஒரு டப்பா படத்தில் நடித்தார் , நினைவிருக்கிறதா? அந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் ஒரு தங்கக்கார் காண்பிப்பாங்க.. வில்லன் தன் சொத்து முழுவதையும் தங்கமாக சேர்த்து கார் ஆக்கி இருப்பார். அது உருக்கப்பட்டு அழியும்.. அதை பார்த்தவங்க எல்லாம் உச் கொட்டிட்டே பார்த்தாங்க.. அது போல் நிஜமாகவே ஒரு தங்கக்கார் இப்போ வந்திருக்கு.. 

கின்னஸ் சாதனைக்காகவும் , கோல்டு பிளஸ் ஜுவல்லரியின் விளம்பரத்திற்காகவும் மக்களை கவர்வதற்ககவும் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.. 

80 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி , மேலும் 10,000 ரத்தின கற்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது.. இது விற்பனைக்கல்லவாம் ( நல்ல வேளை.. தப்பிச்சோம்.. )

ரூ 1 லட்சம் மதிப்புள்ள நானோ கார் வாங்கி  பின் பொற்கொல்லர்கள் உதவியுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.. 

ஈரோடு  நகரில் பெருந்துறை சாலையில்  பழைய பாளையம் பஸ் ஸ்ட்ட்ப் அருகே  ஈஸ்வர மூர்த்தி மஹால் ,  திருமண மண்டபத்தில் இது பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.. 

அனுமதி இலவசம்.. காரை மட்டும் பார்க்க நினைக்கறவங்க மதியம் 12 டூ 3 மணிக்கு போகவும்.. 

ஈரோடு மாநகர் ஃபிகர்களையும் பார்க்கனும் என ஆவலாக உள்ளவர்கள் மாலை 5 டூ 7 போகவும்.. 

எனக்கு ஃபிகர் பார்க்கும் ஆர்வம் இல்லாததாலும், அடிப்படையில் நான் நல்லவன் என்பதாலும் நான் 12 மணிக்குத்தான் போனேன்.. ( நம்புங்கப்பா)







டிஸ்கி -1 இந்தப்படம் என் சொந்தக்கேமராவில் படம் பிடிக்கப்பட்டது.. எனவே இனி நன்றி கூகுள் என ஏன் போடலை என யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க .. ( ஐ ஜாலி)

டிஸ்கி 2  - கேமரா ஏது? புதுசு!!! என கேட்பவர்களுக்கு.. அது தனி பதிவாக பின்னர் போடப்படும்..

டிஸ்கி 3 -   திருமணம் ஆன அபாக்கிய ஆண்கள் தனியாக போய் பார்த்து வரவும் என்னை மாதிரி.. மனைவியை அழைத்து வந்தால் அவர் அங்கலாய்ப்புகள் கேட்டுக்கொண்டிருக்கவே நேரம் சரியாக இருக்கும், காரை ரசிக்க முடியாது ..

ஆஃபீசில் நான் வாங்கிய பல்புகள் ( சீக்ரெட்ஸ்)


1.”ஹிப்”னாடிஸத்தில் சிறந்தவர் தமனாவா? இலியானாவா? டவுட்டு டேவிட்டு


-----------------------------

2.என்னை கட்சில யாரும் மதிக்க மாட்டேங்கறாங்க, அதனால ராஜினாமா பண்றேன்..

என்ன தலைவரே?இப்படி சொல்றீங்க? உங்க சம்சாரம் கூடத்தான் உங்களை மதிக்க மாட்டேங்கறாங்க, அதுக்காக அவங்களை டைவர்ஸ் பண்ணிடுவீங்களா?

------------------------------------------

3.தலைவர்ட்ட நீதி கேட்டு போராடுனீங்களே, கிடைச்சுதா?


ம்ஹூம், ஆனா கொஞ்சம் நிதி கிடைச்சுது.. கமுக்கமா இருந்துட்டேன்

---------------------------------------

4. தமிழகம் முழுக்க தலைவருக்கு அதிருப்தியாளர்கள் இருக்காங்களாமே?

ஆமா, தலைவருக்கு மொத்தம் 42 சின்ன வீடுகள், எல்லாருக்கும் அவங்க எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி சொத்துக்களை பிரிச்சுத்தர முடியலயாம்.

-------------------------------------

5. தலைவர் திருந்திட்டாராம், புது மனுஷனா அவதாரம் எடுத்துட்டாராம்..

சரி.. என்ன கலாட்டா..?

புது மனுஷனுக்கு புது சம்சாரம் வேணுமாம். 

------------------------------------------------



6. மேனேஜர் - ஆஃபீஸ்ல வேலை செய்யாம சேலையை பார்த்துட்டு இருக்கீங்க?

சார்.. விபரம் தெரியாம பேசாதீங்க.. நம்ம ஆஃபீஸ்ல இருக்கற 12 ஃபிகர்ல 8 பேர் சுடிதார்-ல , 4 பேர் மிடில .. யாருமே சேலைல இன்னைக்கு வர்லையே? # புள்ளி விபரப்புலி வித் மைக்ரோநோட்டாலஜி  இன் லேடீஸாலஜி

-------------------------------------------

7. தலைவரே, கன்யா குமரி எங்களுக்கே என கேரளா சொல்லுதே?

அதெல்லாம் முடியாது.. கன்யா, குமரி 2 ஃபிகர்களும் எங்களுக்கே சொந்தம் , விட்டுத்தர மாட்டோம்..

-------------------------------------

8. டிராஃபிக் எஸ் ஐ - போஸ்ட் மேன் , கைல என்ன கவர்?

ஸ்பீடு போஸ்ட் சார்...

ஓவர் ஸ்பீடு-னு கேஸ் போடப்போறேன், எடு 50 ரூபா..

----------------------------------------------

9. வீரத்துக்கும் , துரோகத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சுக்கோ.. 

தெரியும்.... வை கோ தனியா நின்னது வீரம், திராவிடக்கட்சிகள் தங்கள் கூடணி கட்சிகளை கழட்டி விட்டது துரோகம்.. 

-------------------------------------

10. என் கிட்டே கை நீட்டி சம்பளம் வாங்கறவன் நீ.. மறந்துடாதே...

சார், எந்தக்காலத்துல இருக்கீங்க? சேலரி அக்கவுண்ட்ல சம்பளம் கிரெடிட் ஆகுது.. ஹே ஹே ஹேய்.. 

----------------------------------------------------



11.  மிஸ்.... 2  5   4.... 


புரியல,... எனக்கு 1 .   4   3 வேணா தெரியும்ம்.. இதென்ன?


அதுதான்.. அட்வான்ஸ்டு டைப்..   ஹிஹி ஹி 

------------------------------------------

12. ஆஃபீஸ் டைம்ல பொண்ணுங்களோட சிரிச்சு பேசிட்டு இருக்கக்கூடாது, ஓக்கே?

சாரி சார்... உங்களை மாதிரி முகத்தை உம்முனு வெச்சுக்கிட்டு கடலை போட எனக்குத்தெரியாது.. 

----------------------------------------------

13. மேனேஜர் - உங்களைப்பார்க்க வர்ற உங்க ஃபிரண்ட்ஸை உங்க வீட்டுக்கு வரச்சொல்லி பார்த்துக்கக்கூடாதா? எதுக்கு ஆஃபீஸ் வரச்சொல்றீங்க?

வீட்டுக்கு வரச்சொன்னா எங்கம்மா இதென்ன சத்திரமா?ன்னு திட்றாங்க சார்.. “

------------------------------------

14. ஒர்க்கிங்க் டைம்ல வேலை செய்யாம சிரிச்சுட்டு இருக்கே?

சார்.. இப்போ நான் என்ன செய்யனும்? வேலை செய்யனுமா? உம்முன்னு இருக்கனுமா?

-----------------------------------------

15. அரை மணி நேரம் நீ ஆஃபீஸ்க்கு லேட், அட்டெண்டன்ஸ்ல SIGN  பண்ணாதே.. 

ஹி ஹி ஹி நேத்தே சைன் பண்ணிட்டுப்போய்ட்டேன் சார்.. 

----------------------------------



16. தலைவரே.. மகளிர் அணித்தலைவி குந்தவை வந்திருக்காங்க..

 அவங்களை  ஹால்லயே குந்த  வை, வந்துர்றேன்..

---------------------------------------
17. ஆஃபீஸ்ல  காலை 9  டூ 6 யாரும் பொண்ணுங்க கூட பேசக்கூடாது...



ஓக்கே  மேனேஜர் சார்.. இந்தக்கண்டிஷன்ஸ் எங்களுக்கு மட்டும் தானா? உங்களுக்கும் சேர்த்தா?

--------------------------------------------

18. ஆஃபீஸ்ல  காலை 9  டூ 6 யாரும் பொண்ணுங்க கூட பேசக்கூடாது...

ஓக்கே சார்... ஆனா 6 மணிக்குப்பிறகு அவங்க அவங்களோட வீட்டுக்குப்போயிடுவாங்களே.. அதுக்குபிறகு எப்படி பேச முடியும்?

------------------------------------------------

19. டாக்டர், எனக்கு மாலைக்கண் வியாதி இருக்கு.

மேடம் செக் பண்ணிட்டேன், நத்திங்க்.

அதாவது யாராவது காசு மாலை போட்டிருந்தா என்கண்ணை உறுத்துது

-------------------------------

20. DR, என் ஃபிரண்ட் அடிக்கடி ஆனியன் பக்கோடா,பஜ்ஜி ,வடை சாப்பிடறாங்க.இதனால ஏதாவது பாதிப்பு வருமா?

ஆமா, அவங்க HUSBக்கு பட்ஜெட்ல துண்டு விழும்

---------------------------------

Thursday, November 03, 2011

KIILING ME SOFTLY - ஹாலிவுட் கில்மா சினிமா - விமர்சனம்

http://akimages.fridaymoviez.com/3/970/89135/Killing-Me-Softly.jpg 

டைட்டிலைப்பார்த்ததும் ஏதோ நர்ஸோட சுய சரிதைக்கதைன்னு என் ஃபிரண்ட் சொன்னான்..  எப்பட்றா கண்டு பிடிச்சேன்னா சாஃப்ட்டா கொல்றது அவங்கதானே?ன்னான்.. நல்ல இங்கிலீஷ் நாலெட்ஜ்டா உனக்குன்னு சொல்லிட்டு படம் பார்க்க போனா கதை டாபிக்கே வேற.. ஆனாலும் சீன் படம் தான்.. அதானே நமக்கு வேணும்..

அலீஸ் - இதான் ஃபிகரோட பேரு.. அமெரிக்காகாரி.. லண்டன்ல வசிக்கறா.. ( அமெரிக்கான்னா லண்டன்லதான் வசிப்பா, பின்னே ஊட்டி கிண்டர் கார்டன்லயா வசிப்பா?) இதே தமிழ் சினிமான்னா ஹீரோ கூட எப்படி முதல் சந்திப்பு நடந்தது? எப்படி லவ் வந்தது?னு காட்டவே 4 ரீல் எடுத்துக்குவாங்க.. ஆனா இது ஃபாரீன் படம் ஆச்சே.. மொத்தமே 5 ரீல் தான் (நம்ம கணக்குக்கு 10 ரீல்)

அதனால அவளுக்கு ஒரு  லவ்வர் இருக்கான்கறதை ஒப்பனிங்க்லயே சொல்லிடறாங்க.. இப்போ மேட்டர் அதில்லை.. கடை வீதில அவ போறப்ப ஒருத்தன் அவளை நோட் பண்றான்.. ( ஏன் புக் பண்ணலையா?ன்னு கடி ஜோக் அடிக்காதீங்க.. நெக்ஸ்ட் அதான் பண்ணப்போறான்).. 3 நாள் இந்த மாதிரி நடக்குது.. 4 வது நாள் அவனா வந்து கடலை போடறான்.. எந்த நாடா இருந்தாலும் பசங்க கடலை போடறதுல மட்டும் மன்னனா இருக்காங்க.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu-BOTxom9LMOoQLgmikCby-y1N0jBvjTVyEZhPoEsJTvicmoaZP5k_PBzDS9w54gtKn0tFhmvmm4lEFNa-YFVu4tMNG11R-Dp1bHjiAbu6pTjYg1nH1AxmxbZi9XyNEbZSVckAnbndWY/s400/killing+me+softly_back.jpg

அவன் வீட்டுக்கு கூப்பிடறான்.. இவளும் போறா.. பக்கத்து சீட் ஃபிரண்ட் கேக்க்கறான்.. முன்னே பின்னே அறிமுகம் இல்லாத ஆள் கூட அவ ஏன் தனியா போகனும்? கூட அவ லவ்வரையும் கூட்டிட்டு போக வேண்டியதுதானே? லாஜிக் இடிக்குதே?ங்கரான்.. அடங்கோ/....அவளுக்கு அது தெரியாதா? எல்லாம் ஒரு ஆர்வம் தான்.. அவன் என்ன ராமாயணம். மகாபாரதம் சொல்லித்தரவா அவன் வீட்டுக்கு கூப்பிடறான்? அவளும் தெரிஞ்சுதான் போறா.. வெயிட்..அப்டின்னேன்.

2 பேரும் எதும் பேசிக்கலை.. பரஸ்பரம் பேர் கூட கேட்டுக்கலை.. ஆனா கில்மா மட்டும் அங்கே முடிஞ்சிடுது..  ஆனா சீன் செம சீன் தான்./. ஹி ஹி அப்புறம் அவ ரிட்டர்ன் ஆகிடறா.. ஆனா அவன் நினைப்புலயே இருக்கா.. அவன் பேரு ஆடம் அப்டினு தெரிஞ்சுக்கறா.. ( காலக்கொடுமை பாருங்க, எல்லாம் முடிஞ்ச பிறகுதான் பேரே அவ்வ்வ்வ்)

பனி மலைல ட்ரெக்கிங்க் போற ஆள்தான் ஆடம்.. இப்போ என்ன பண்றா ஹீரோயின்? காலம் காலமா பொண்ணுங்க பண்ற வேலையை பண்றா.. அதாவது பழைய லவ்வரை கழட்டி விட்டுடறா.. புது லவ்வர் கூட சுத்தறா..

இதுல என்ன கூத்துன்னா அந்த ஆடம் எனும் பாய் ஃபிரண்ட் மேட்டர்தான் முடிஞ்சுதேன்னு கழட்டி விடாம மேரேஜ் பண்ணீக்கலாம்னு கம்ப்பெல் பண்றான்... அவளுக்கு ரொம்ப சந்தோஷம்ம்.. ஆஹா, அவன் ரொம்ப நல்லவன் போலன்னு நினைக்கறா.. 


http://www.memberslog.in/files/flash/Killing-me-softly_Heather-graham_3.jpg
இப்போதான் கதைல ஒரு ட்விஸ்ட்.. அவளுக்கு அனாமதேய ஃபோன் கால்ஸூம், லெட்டர்சூம் வருது.. ஆடம்- மை மேரேஜ் பண்னதே , அது உனக்கும் நல்லதில்லை, அவனுக்கும் நல்லதில்லைன்னு ( அப்போ யாருக்குத்தான் நல்லது?)

ஆனா எதை வேண்டாம்னு சொல்றோமோ அதை வேணும்னு செய்யறதுதானே பொண்ணுங்க சைக்காலஜி? அவ அவனை மேரேஜ் பண்ணிக்கறா.. ஆனா அதுக்குப்பிறகும் அதே மாதிரி மிரட்டல் தொடருது.. இப்போ புதுசா ஒரு மேட்டர், அவ கணவனின் கடந்த கால பயங்கரம் ஒண்ணு பற்றி..

பாப்பாவுக்கு டவுட் ஆகிடுது.. கணவன் வீட்ல இல்லாதப்ப அவன் பர்சனல் ரூமை தேடறா.. ஷாக்.. அவளோட பழைய லவ்வர் எழுது லவ் லெட்டர்ஸ் எல்லாம் பத்திரமா கணவன் வெச்சிருக்கான்.. அப்போ லவ் மேட்டர் அவனுக்கு ஆல்ரெடி தெரிஞ்சிருக்கு..

இப்போதான் பாப்பவுக்கு டவுட் வருது.. அப்புறம் சி ஐ டி வேலை செஞ்சு தன்னை லெட்டர் மூலமா மிரட்னது ஒரு பொண்ணூ என தெரிஞ்சுக்கறா.. அவ தன் கணவனின் பழைய காதலி....

http://cf1.imgobject.com/backdrops/6ca/4bc94298017a3c57fe01c6ca/killing-me-softly-poster.jpg

மேட்டர் சிக்கல் ஆகறதை உணர்ந்து  பாப்பா போலீஸ்ட்ட போகுது... அவங்க ஆதாரம்  வேணும், அதில்லாம ஒண்ணூம் பண்ண முடியாதுங்கறாங்க.. இதே நம்ம ஊரா இருந்தா அவனை பிடிச்சு லாக்கப்ல போட்டு 4 கும்மு கும்மி இருப்பாங்க..

அப்புறம் பாப்பா ஹீரோவை விட்டு பிரிஞ்சிடறா.. அவளே தனியா அந்த கேஸை டீல் பண்றா.. ( ஒரு கேஸே ஒரு கேஸை டீல் பண்ணிதே அடடே..!!!!!)

ஆடம்க்கு ஒரு சிஸ்டர் இருக்காங்க.. சின்ன வயசுல அறியாத வயசுல ஆடம் தன் சிஸ்டர் கூடவே....  அதுக்குப்பிறகு சிஸ்டர் ஒருத்தனை லவ் பண்றா.. பொஸசிவ்நெஸ் காரணமா  ஆடம் சிஸ்டரோட லவ்வரையே கொலை பண்ணிடறான்.. 


http://abreakingnews.com/newsimages/killing-Me-Softly.jpg

இந்த மேட்டரை எல்லாம் ஆதாரத்தோட கண்டு பிடிச்சு போலீஸ்ல பிடிச்சுக்கொடுக்கறா,,
படம் பார்த்திட்டு இருக்கும்போதே இதை எங்கேயோ பார்த்த கதை மாதிரி தெரியுதேன்னு யோசிச்சா விஷால் நடிச்ச முதல்  படமான செல்லமே இந்தப்படத்தை பார்த்துத்தான் சுட்டு இருக்காங்க. ஆடம் கேரக்டர்ல பரத்.. அடம் தங்கை கேரக்டர்ல ரீமா சென்.. 

ஆஹா.. நம்ம ஆளுங்க கதைக்கருவை எப்படி எல்லாம் உருவறாங்க பாருங்க.. அவ்வ்வ்வ்வ். 2002 ல இந்தப்படம் ரிலீஸ்டு.. நம்ம ஊருக்கு 2003 ல வந்துச்சு.. 1 மணி நேரம் 40 நிமிஷம் ஓடுது படம்.. 

5 சீன் இருக்கு .... ஆமா,, ஒரே ஹீரோயின் எத்தனை சீன் வந்தாலும் 1 தானே கணக்கு என அங்கலாய்ப்பவர்கள்க்கு ஒரு வார்த்தை சீன் இருக்குன்னு சொன்னா அதை போய் பார்த்து ரசிக்கனும், ஆராயக்கூடாது, கேள்வி கேட்கப்படாது.. 2 வெவ்வேற ஃபிகர்கள்ப்பா.. எஞ்சாய்

http://s11.allstarpics.net/images/orig/j/0/j0ji068jb2d586bj.jpg

டிஸ்கி - கிராமங்கள்ல தறிக்கு பாவு ஓட்டுவாங்க , பார்த்திருக்கீங்களா? கைத்தறிக்கு..... பார்க்காதவங்க இந்தப்படத்துல ஹீரோயின் கழுத்துல நீண்ட பாவு மாதிரி துணியால சுத்தி என்னமோ போஸ்ல ஹா ஹா செம காமெடி .. 4 வது  ஸ்டில் அதுதான் ஹய்யோ ஹய்யோ..

சுட்டிப்பாப்பாவிடம் ஒரு மக்கு பிளாஸ்திரி அப்பா வாங்கிய பல்புகள்

 என் குட்டி தேவதையின் பெயர் அபிராமி ஸ்ரீ.. எட்டு வயது ஏஞ்சல்.. ஈரோடு இந்து கல்வி நிலையத்தில் 3ஆம் வகுப்பு படிக்கிறா.. அவ சில சமயம் டாடின்னு கூப்பிடுவா, பல சமயம் அப்பா, வெகு சில சமயங்களில் பெயர் சொல்லி.. கோபம் வரும் போது டேய் லூசு... எப்படி கூப்பிட்டாலும் இனிமைதான் எனக்கு..  மத்தவங்க கிட்டே பல்பு வாங்குனா அவமானமா இருக்கும்.. ஆனா நம்ம வாரிசு கிட்டே வாங்குன பல்பு ஜாலியா இருக்கு..

அவமானங்களையே கூச்சப்படாம பதிவு போடற நாம வெகுமானத்தை போடாம விடுவோமா?ஹா ஹா இதோ அணிவகுப்பு....





1. டாடி.. ராட்டன் தூரி சுத்தலாம், வா.


எனக்கு தலை சுத்தும், நீ போம்மா..

நீ சுத்த வேஸ்ட்ப்பா.....


--------------------------------------

2. டாடி.. இந்த ஹோம் ஒர்க்கை எப்படி பண்றது?ன்னு . எனக்கு சொல்லிக்குடுங்க...

அம்மா கிட்டே கேளுடா செல்லம்..

ஏம்ப்பா.? நீ மக்கா?

--------------------------------------

3. ஓடும் பஸ்ஸில்..

கண்டக்டர் வர்ற வரை நீ என் மடிலயே இரு.. ஒரு டிக்கெட் மிச்சம் பண்ணலாம்..

அப்போ. அம்மாவையும் மடிலயே உக்கார வைங்கப்பா. 2 டிக்கெட் மிச்சம் பண்ணலாம்..

-------------------------------------------

4. அப்பா. எடுபுடி ஆள்னா என்ன அர்த்தம்?

ஏன் கேட்கறே?

அப்பாவை ஏன் மேரேஜ் பண்ணிக்கிட்டே ?அப்டினு அம்மா கிட்டே  கேட்டப்ப நிறைய எடுபுடி வேலை செய்ய ஆள் தேவைபட்டுச்சுனு சொன்னாங்கப்பா.

--------------------------------------

5. அப்பா... நம்ம வீட்ல எல்லா வேலையும் செய்யறே.. ஆனா அம்மாவோட அம்மா வீட்டுக்கு வந்தா மட்டும் கால் மேல கால் போட்டுக்கிட்டு கெத்து காட்றியே ஏன்?


”  .............................................”


----------------------------------------------------------

6. அப்பா... ஆஃபீஸ்ல ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் எவ்ளவ் தர்றாங்க? (HRA)

ரூ 3000

ஆனா ஹவுஸ் ஓனர் கிட்டே ரூ 2000 தானே தர்றே? ஏன் ஏமாத்தறே? ஒண்ணா ஆஃபீஸ்ல ரூ 1000 ரிட்டர்ன் குடு, அல்லது ஹவுஸ் ஓனர் கிட்டே ரூ 3000 குடு.


--------------------------------------------------------

7. அப்பா... யு கே ஜி  பாடத்துல ஒரு டவுட்டு..

ஸாரிம்மா.. நான் எல்கேஜி , யு கே ஜி  எல்லாம் படிக்கல..

அப்போ என் கூட நீயும் ஸ்கூல்க்கு வாப்பா.

---------------------------------------------------------------

Modern Slides


8. டாடி.. டூர் போலாமா?

ஆஃபீஸ்ல லீவ் கிடைக்காதம்மா.

ஏம்ப்பா? உங்களுக்கு லீவ் லெட்டர் எழுத தெரியாதா?


-------------------------------------------------------

9. அப்பா, ஆஃபீஸ் மீட்டிங்க்னா என்ன?

எப்படி வேலை செய்யறது?ன்னு ஹிண்ட்ஸ் குடுப்பாங்க..


அப்போ உனக்கு சுய புத்தியே இல்லையா?

----------------------------------------------------

10. பிராக்ரஸ் கார்டுல ஏன் தமிழ்ல சைன் பண்றீங்க?

தமிழன் தமிழ்ல தான் கையெழுத்து போடனும்மா..


பொய்.இங்க்லீஷ் தெரியாதுதானே?


----------------------------------------------------

11. சைக்கோ -ங்கறதை தமிழ்ல எழுதறப்ப ஏன்  க்கோ என எழுதறே?

இங்கிலீஷ்ல சைக்கோ என்ற வார்த்தைல P  சைலண்ட், அப்போ அந்த லாஜிக் பிரகாரம் தமிழ்ல சை சைலண்ட்,,

-----------------------------

12. அப்பா, நீ ஏன் பியூட்டி பார்லர் போறதில்லைன்னு கண்டு பிடிச்சிட்டேன்..


ஏன்?

அது பியூட்டிங்களுக்கு மட்டும் தான்..

--------------------------------------------


13. பாப்பா - டாடி, கடவுள் ஒரு ஐ ஸ்பெஷலிஸ்ட்டா?

ஏன்?

தப்பு செஞ்சா உம்மாச்சி கண்ணை குத்தும்னு மிரட்றாங்களே?


----------------------------------------

14. ஆண்கள் எந்த வித முக மூடியும் இல்லாமல் (அணியாமல் )சந்தோஷமாக பொழுதை கழிப்பது தன் மழலையுடன் இருக்கும் தருணங்களே!

-------------------------------------

15.பெண்கள் எந்த வித முக மூடியும் இல்லாமல் சந்தோஷமாக பொழுதை கழிப்பது தன் அம்மா வீட்டில் இருக்கும் தருணங்களே!

--------------------------------------





Wednesday, November 02, 2011

சேலம் டாக்டர்-ன் மோசடிகள் - உண்மை சம்பவம்


Anti-smoking ads
Anti-smoking ads

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கிராமத்துல டாக்டர் சண்முகம் மிக ஃபேமஸ்.. அவருக்கு 2 பொண்ணுங்க , முத பெண்ணின் பெயர் லதா.. 2வது பெண்ணின் பெயர் உமா பாரதி..

2வது பெண்ணை டாக்டருக்கு படிக்க வைத்தார்..அவருக்கு மாப்பிள்ளையும் டாக்டராவே பார்த்து மேரேஜ் பண்ணி வெச்சாரு.. சேலத்துல  மாப்ளைக்கு சொந்தமா க்ளினிக் இருக்கு..

அப்துல்கலாம் கிட்டே அவார்டு வாங்கற மாதிரி உமாபாரதி  ஒரு ஃபோட்டோவை ரெடி பண்ணி அதை தன் க்ளினிக் விளம்பரமா வெச்சு  காசு பார்த்தாங்க.. அது யாரோ கண்டு பிடிச்சு கேஸ் ஃபைல் பண்ணி பல முறை நடையா நடந்து கோர்ட்டின் கண்டனத்தையும் , அபராதம் கட்டச்சொல்லி ஆணையும் பெற்று எப்படியோ மீண்டு வந்தார்..


இப்போ மோசடி உமாபாரதியின் கணவர் டர்ன்..

டெஸ்ட் டியூப் பேபி ட்ரீட்மெண்ட்ல அவர் ஸ்பெஷலிஸ்ட்.. ஆனா அவர் ஒரு எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் தான்.. அப்புறம் எப்படி இவர் டெஸ்ட் டியூப் பேபி ஸ்பெஷலிஸ்ட் ஆனார் என்பது இப்போ தான் வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கு..

ஒரு தம்பதி குழந்தை இல்லைன்னு ட்ரீட்மெண்ட்க்காக வந்திருக்காங்க.. பல டாக்டர்ட்ட போயாச்சு, பல கோயில் குளம் அலைஞ்சாச்சு.. ஆனா மழலை பாக்கியம் இல்லை..

டெஸ்ட்ல மனைவி சைடுல எந்த குறைபாடும் இல்லைன்னு தெரிய வந்தது.. கணவனிடம் உயிர் அணுக்கள் கவுண்ட்டிங்க் கம்மி .. டெஸ்ட் டியூப் பேபிக்காக வந்திருக்காங்க..

வழக்கம் போல் செய்யும் பில்டப்பாக ரொம்ப சிரமம் சார் என சொல்லி ஏதோ டெஸ்ட் எடுப்பது போல் பாவ்லா காட்டி ஒரு வாரம் கழிச்சு வாங்க, ரிசல்ட் சொல்றேன் என அனுப்பி விட்டார்.. ஒரு வாரம் கழிச்சு அவங்க வந்ததும் 10 லட்சம் ரூபா செலவு ஆகும்.. என்று கூறி இருக்கிறார்..

ரொம்ப அதிகம் என அந்த தம்பதி தயங்கியதும் பேரம் (!!) ஒரு வழியாக படிந்து ரூ 8 லட்சத்துக்கு வந்தது..

கணவனிடம் இருந்து ஸ்பெர்ம் எடுத்துக்கொண்டார்.. அடுத்த நாள் ட்ரீட்மெண்ட்க்கு மனைவியை வரச்சொல்லி இருந்தார்..

பொதுவாக ஒரு மனைவி என்பவர் கணவன் தன்னைத்தவிர வேற யாராவது ஒரு பெண்ணை பார்த்தாலோ, பழகினாலோ மனைவிக்கு பிடிக்காது , பொஸஸிவ்நெஸ்தான் காரணம்.. ஆனால் உமாபாரதி செய்த மேட்டர் தமிழ்க்காலாச்சாரத்துக்கு முற்றிலும் புதியது, புதிரானது.. பணம் என்னவெல்லாம் செய்யத்தூண்டுகிறது என்பதற்கு ஒரு உதாரணமாக , மோசமான முன்னுதாரணமாக உமா பாரதி விளங்கினார்



அந்த பேஷண்ட்டிடம் பிரெயின் வாஷ் செய்ய ஆரம்பித்தார்..

 ”இங்கே பாரம்மா, டெஸ்ட் டியூப் பேபி ட்ரீட்மெண்ட் என்பது ரொம்ப ரிஸ்க்.. 40% சான்ஸ் தான் இருக்கு.. சப்போஸ் 4 மாச கருவுல கலையவும் வாய்ப்பு இருக்கு, அதே கரு 6 மாசத்தில் கலைந்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து தான்.. “

“ இப்போ என்னம்மா பண்றது?”

“ ரொம்ப ஈஸியான,100% ரிசல்ட் கரெக்ட் ஆக , இந்த பிரச்சனைக்கு ஒரு வழி இருக்கு.. ஆனா அதுக்கு நீ சம்மதிக்கனும்..”

“என்னம்மா? என்னென்னவோ சொல்றீங்க?”

“ இதெல்லாம் சகஜம் டவுன்ல.. நிறைய பேர் இப்படி ஓக்கே சொல்லி இருக்காங்க.. அதாவது நீங்க கண்ணை மூடி 5 நிமிஷம் அட்ஜஸ் பண்ணிக்குங்க ...என் கணவர் உங்களுக்கு குழந்தை வரத்தை இயற்கை முறைப்படி தருவார்.. விஷயம் யாருக்கும் தெரியாது...”

அந்தப்பெண் மிரண்டு போய் வேக வேகமாக வீட்டுக்கு வந்து விட்டார்,.. அட்வான்ஸ் ஆக ரூ 5 லட்சம் பணம் கட்டி இருக்கிறார்கள்.. அவள் தன் கணவனிடம் அழுது கொண்டே இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறார்..

அவர் சில ஆட்களை கூட்டிக்கொண்டு ஹாஸ்பிடல் போய்  நியாயம் கேட்டிருக்கிறார்.. பணத்தை ரிட்டர்ன் கேட்டார்.. டாக்டர் தர மறுத்து விட்டார்.. அட்வான்ஸ் கொடுத்தா கொடுத்ததுதான்.. நான் அப்படி எல்லாம் உங்க மனைவி கிட்டே கேட்கவே இல்லை.. அவங்க தான் ஏதோ சதி செய்யறாங்க  அப்டினு பிளேட்டை திருப்பி போட்டிருக்கிறார்.. 

இப்போது கேஸ் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

பிள்ளை வேண்டி ட்ரீட்மெண்ட் எடுக்கும் நபர்களுக்கு சில ஆலோசனைகள்


1. மனைவியுடன் அவரது அம்மா, அல்லது உங்கள் அம்மா துணையாக எப்போதும் விட்டு வாருங்கள்
 
2. சில டாக்டர்கள் வேண்டும் என்றே உங்களை டைவர்ட் பண்ணவும் , பெண்ணை தனிமைப்படுத்தவும் ஏதாவது வாங்கி வர சொல்லலாம். அதனால் வெளிவேலைகள் பார்க்க இருவர்.. மனைவியுடன் ஒரு பெண் துணை அவசியம்.. 



3. நல்ல டாக்டர் தானா? என வெளி உலகில் விசாரிக்கவும், ஆல்ரெடி அவரிடம் ட்ரீட்மெண்ட் எடுத்தவர்கள் யார் என கண்டறிந்து அவர்கள் அனுபவம் கேட்டறியவும். 

4. எல்லாவற்றையும் விட சிறந்தது. அநாதை இல்லங்களில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது.


டிஸ்கி - இந்த சம்பவம் நடந்து 4 வருடங்கள் ஆகிறது. வழக்கு இன்னும் நடந்து வருகிறது, ஹாஸ்பிடல் சீல் வெச்சுட்டாங்க. சேலத்துலதான் சீல். அவங்க 2 பேரும் இப்போ தலை மறைவு. எந்த ஊர்ல ஹாஸ்பிடல் திறந்து வெச்சாங்களோ? சமீபத்தில் வெளியான கருங்காலி என்ற படம் இந்த சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.

அபா”ரம்பா” ட்வீட்ஸ் , ”அமலா”க்க ஜோக்ஸ்

1. ஆஃபீசில் உயர் அதிகாரிகள் தனக்குகீழ் பணிபுரியும் ஆட்களை சக பெண் ஊழியர்கள் முன் அவமானப்படுத்தினால், தான் ஹீரோ ஆகிடலாம் என  நினைக்கிறார்கள்

-------------------------------------

2. கூட இருந்தே குழி பறிப்பதில் தமிழர்கள் தன்னிகரற்றவர்களாக திகழ்கிறார்கள்

-----------------------------

3. சில விஷயங்களை யாரிடமாவது பகிர்ந்தால் தேவலை என்றிருக்கும், பல விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவே கூடாது என்றிருக்கும.

--------------------------

4. பிரபல நடிகர், நடிகைகளை கண்டால் உடனே ஓடிப்போய் அருகில் நின்று ஃபோட்டோ எடுத்து வீட்டில் பெருமையாக மாட்டிக்கொள்வான் தமிழன்
------------------------

5. பெண்களின் பொறாமை நீறு பூத்த நெருப்பாகவும் , ஆண்களின்  பொறாமை உள்ளங்கை நெல்லிக்கனி போலவும் இருக்கும்

--------------------------

orm Hallway Fun

6.தன் தவறை ஒத்துக்கொள்தல், மன்னிப்புக்கேட்டல்,  திருத்திக்கொள்ள முற்படுதல் இந்த குணங்களை  என் தந்தையிடம் இருந்து கற்றுக்கொண்டேன்

-----------------------

7. பழக்கமானவர்களைபார்த்ததும் படார் என புன்னகைக்க என் மழலையிடம் இருந்து கற்றுக்கொண்டேன்

--------------------------------

8.  உன் மீதான என் அக்கறையை என் வார்த்தைகளில் எதிர்பார்க்காதே!!

-------------------------------

9. 100 கிலோ அரிசி மூட்டை தூக்குபவன் அதை வாங்க முடியல. 100 கிலோ அரிசி வாங்கறவன் அதை தூக்க முடியல # ப.பி

-------------------------------

10.  நான் இப்போ தனியாதான் இருக்கேன், ஏன்னா எனக்கான காதல் கதையை எழுதுவதில் கடவுள் பிசியா இருக்கார் #SMS

----------------------------------------





11.  தொடை தெரியும் வகையில் உடை அணிய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் தடை # அபா”ரம்பா”

----------------------------

12. உங்க காதல் மீட்டிங்க் குளத்துல நடக்குதா?

ஓக்கே, அதை ஏன் பயந்து நடுங்கிட்டே சொல்றீங்க?


நீ வேற , அவ சொந்த ஊரு கூடங்குளம்

-----------------------------

13. டியர், என் கூட சேட் (CHAT)  பண்ன ஏன் வர மாட்டேங்கறீங்க?

அன்பே, உன் விரல் நோகக்கூடாதுனுதான்

------------------------------

14.  க்ளோனிங்க் முறைல நடிகை அமலா, அமலா பால் போல கொழுக் மொழுக் ஃபிகர்களை உருவாக்கறாங்களாம்.

. ஓஹோ, ”அமலா”க்கப்பிரிவா?

----------------------

15.  ஹோட்டல்ல சாப்பிடறப்ப எதுக்காக அந்தப்பக்கமா வந்த கீரைக்காரியை கட்டிப்பிடிச்சீங்க?

டாக்டர் தான் சாப்பிடறப்ப கீரை சேர்த்தனும்னார்

------------------------------------




16. கற்பழிப்பு காட்சியில் மட்டும் நடிக்க கூப்பிடுறாங்களே....! ராக்கி சாவந்த் வருத்தம்!!  # அடப்பாவமே, அந்த டைம்ல கூட நடிக்கனுமா?

-------------------------

17. சினிமாவாகிறது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை வரலாறு! # அடடா, ஜோடியா ஒரு லேடியை ஹீரோயினா யாரையும் போட முடியாதே?

--------------------------------

18. காலம் ஒருவனை அறிவாளியாக மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனக மாற்றும்

----------------------------

19.  நதியின் அழகு கரையைத்தாண்டாத வரை.. காதலின் அழகு காமத்தை தீண்டாத வரை

--------------------------------------

20. என் பலவீனமான தருணங்களில் என்னை ஒழுக்கத்தில் இருக்க வைத்து காப்பாற்றுவது உன் கற்பு நெறி

---------------------------------

Tuesday, November 01, 2011

பிரபல பெண் பதிவர் மணல் கயிறு ரீமேக்கில் நடித்தால்..ஒரு ஜாலி கற்பனை


விசுவுக்கும் சரி, எஸ் வி சேகருக்கும் சரி மணல் கயிறு ஒரு மறக்க முடியாத காமெடி எண்ட்டர்டெயினர் படம் தான்..  அந்தப்படத்துல ஹீரோ பென் பார்க்கப்போறப்ப சில கண்டிஷன்ஸ் போட்டு அலப்பறை செய்வாரு.. .. கடைசில எந்த கண்டிஷனுக்குமே ஒத்து வரத ஃபிகரை மேரேஜ் பண்ணி  அவஸ்தைப்படுவாரு...அந்தப்படத்தை இப்போ நாம ரீ மேக் பண்ணப்போறோம்.. 



பொதுவா ஒரு படத்தை உல்டா பண்றப்ப அறிவில்லாதவன் அப்படியே ஜெராக்ஸ் எடுப்பான்,கொஞ்சம் மூளைக்காரன்  சில சீன்கள் எக்ஸ்ட்ரா சேர்த்துவான்.. அதாவது 5 டூயட், 6 ஃபைட், கொஞ்சம் மொக்கை காமெடி இப்டி.. இன்னும் கொஞ்சம் டெவலப் ஆனவன் ஹீரோவை ஹீரோயின் ஆக்குவான்.. வில்லனை வில்லி ஆக்குவான்.. கேட்டா மூலக்கதை ஜஸ்ட் ஒரு இன்ஸ்பிரேஷன்தான் அப்டினு ஒரு சாக்கு சொல்வான்.. நாம இந்த மணல் கயிறு ரீமேக்ல ஒரு பெண் மாப்ளை தேடும் படலமா மாத்தப்போறோம்..


ஹீரோயின் பற்றி சில குறிப்புகள்

1. இவர் ஒரு பிரபல பெண் ட்வீட்டர்.. (எதிர்காலப்பதிவரும் கூட) சொந்த (நொந்த!!?) ஊர் கோவை (கோவக்காரரா? கோவைக்காரரா? ) இரண்டு எழுத்துக்காரர்.. .(அதாவது ட்விட்டர்ல)

2. யார் வம்புக்கும் போகாதவர், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர்.. 

3.  ஆண்களுக்கு சாதகமாக பேசுவார்.. பி காம் படிச்சிருக்காருன்னு நினைக்கறேன் அதனால ரொம்ப காம் (CALM TYPE) டைப்

ஹீரோயின் இண்ட்ரொடக்‌ஷன் போதும்,,, கதை..



” அப்பா, எதுக்கு என்னை வரச்சொன்னீங்க?”


” இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்கம்மா”


” அப்பா, நீங்க எந்தக்காலத்துல இருக்கீங்க? அது எல்லாம் 1998 உடன் முடிஞ்ச விஷயம், இப்போ நடக்கறது 2011.. மாப்ளை பார்க்க பொண்ணு வீட்டுக்காரங்க போறதுதானே வழக்கம்.. “



” அய்யய்யோ.. இதென்னம்மா? புது வெடி குண்டா இருக்கு?”

“ இல்லப்பா.. நாமதான் மாப்ளை வீட்டுக்குப்போறோம்..அதுக்கு முன்னால எனக்கு எப்படிப்பட்ட மாப்ளை வேணும்னு  சொல்லிடறேன்.

கண்டிஷன் நெம்பர் 1 - மாப்ளை படிச்சிருக்கக்கூடாது, ஆனா கை நிறைய சம்பளம் வாங்கனும் ( ஏன்னா, படிச்ச மாப்ளை திமிரா பேசுவான்)

கண்டிஷன் நெம்பர் 2 -  மாப்பிள்ளை சைவமா இருக்கனும், ஆனா அசைவமும் சமைக்கத்தெரிஞ்சிருக்கனும் ( ஏன்னா நான் அசைவம், அவரும் அசைவமா இருந்தா குடும்ப செலவு ஓவர் ஆகிடும்)

கண்டிஷன் நெம்பர் 3 - மாப்பிள்ளைக்கு டான்ஸ்ஸை ரசிக்கற ரசனை வேணும் ( ஏன்னா நான் அப்பப்ப கோபத்துல ஆட்டமா ஆடுவேன்)

கண்டிஷன் நெம்பர் 4 - மாப்பிள்ளைக்கு தமிழ் தவிர வேற எந்த மொழியும் தெரிஞ்சிருக்கக்கூடாது  ( ஏன்னா எனக்கும் எதுவும் தெரியாது)

கண்டிஷன் நெம்பர் 5 -  மாப்ளை யார் கண்ணுக்கும் தெரியக்கூடாது ( ஏன்னா நான் ரொம்ப பொஸஸிவ் டைப், என்னைத்தவிர வேற யாரும் அவரை பார்க்கவே கூடாது )

கண்டிஷன் நெம்பர் 6 - நான் செத்துட்டா உடனே அவரும் என் கூட உடன் கட்டை ஏறிடனும். ( இல்லைன்னா அவர் வேற ஒரு கட்டையை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருப்பார்.. அதுக்கு விடலாமா?)

கண்டிஷன் நெம்பர் 7 -  மாப்ளை வாய் பேச முடியாதவரா இருக்கனும் அல்லது காது கேட்காதவரா இருக்கனும் ( ஏன்னா நான் ஓவரா பேசுவேன்.. ஒரு வீட்டுக்குள்ள ஒரு வாயாடி தான் இருக்கனும்)

கண்டிஷன் நெம்பர்  8  -  ரொம்ப முக்கியமான கண்டிஷன் , மாப்ளை இண்ட்டர்நெட் நாலெட்ஜ் இல்லாதவரா இருக்கனும்.. (ஏன்னா நான் நாள் பூரா நெட்ல இருப்பேன், அவரும் அப்டியே இருந்தா வீட்டு வேலை எல்லாம் யார் பார்ப்பாங்க? அதான்.. )



மாப்ளை வீட்டுக்கு போறாங்க..

அறிமுகப்படலங்கள், வரவேற்பு ஃபார்மாலிட்டி பேச்சுக்கள் முடிந்த பின்...

”மாப்ளையை வரச்சொல்லுங்க, என் பொண்ணு அவர் கிட்டே பேசனுமாம்.. ”

“இதோ, இப்போ வரச்சொல்றேன்.. அவன் கூட பொண்ணு கிட்டே ஏதோ பேச ஆசைப்பட்டான்.. “
”சாரி.. சம்பந்தி.. யார் பேசுனாலும் என் பொண்ணுக்கு பிடிக்காது.. அவ கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்.. “


மாப்பிள்ளையும், பொண்ணும் தனியே தன்னந்தனியே.....

” தம்பி.. நீ எது வரை படிச்சிருக்கே?”

”என்னது? தம்பியா?”

”உன் பேரு தம்பிதுரை தானே? அதை சுருக்கிட்டேன்..”

”சரி.. என்ன மரியாதை இல்லாம நீ , வா, போ அப்டி கூப்பிடறீங்க?”

”மரியாதைங்கறது மனசில இருந்தா போதும்.. உதட்டளவில் தேவை இல்லைன்னு நினைக்கறவ நான்”

“பார்க்கறவங்க தப்பா நினைக்க மாட்டாங்களா?”

” மத்தவங்களுக்காக வாழ்ற வாழ்க்கை எல்லாம் ஒரு வாழ்க்கையா?”

“சரிங்க.. வம்பு எதுக்கு... எப்படியோ கூப்பிடுங்க.. “

”அப்போ நான் வம்புக்காரியா?”

”அய்யோ, நான் அப்டி சொல்லவே இல்லீங்களே.. சரி, நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன்.. நான் எட்டாங்கிளாஸ் வரை படிச்சிருக்கேன். “

”வெரிகுட்.. உன்னை மாதிரி கூமட்டையனைத்தான் தேடிட்டு இருந்தேன்.. உனக்கு ஃபைட் போடத்தெரியுமா?”

”ச்சே.. ச்சே.. நான் எதுக்குங்க உங்க கூட ஃபைட் போடறேன்..? சந்தோஷமா வெச்சு காப்பாத்துவேன்..

என்னது? வெச்சு காப்பாத்துவியா? நான் என்ன சின்ன வீடா? என் கூட ஃபைட் போடறதுக்கு இல்லை.. ரோட்ல நாம ஜோடியா போறப்ப 4 ரவுடிங்க வர்றாங்க, அவங்களை அடிச்சு விரட்டுவியா?”

”என்னங்க இது அநியாயமா இருக்கு.. நான் என்ன தளபதி தினேஷா? ஃபைட் எல்லாம் போட.. நீங்க எதிர்பார்க்கறது எல்லாம் ஓவர்ங்க..”

” டான்ஸ் ஆடத்தெரியுமா? பாடத்தெரியுமா?ன்னு எல்லாம் நீங்க கேட்கறீங்களே.. டிட் ஃபார் டாட் அதாவது பழிக்குப்பழி..”

“ யார் மேலயோ இருக்கற கோபத்தை ஏன் என் மேல காட்றீங்க?”

” உனக்கு லேடீஸ் சைக்காலஜியே தெரியாதா? எவன் இளிச்சவாயனோ அவன் கிட்டே த்தானே துள்ள முடியும்..?

” அவ்வ்வ்வ்வ்வ்”

” சரி.. உனக்கு சமைக்கத்தெரியுமா?”

”ஓ... எல்லா அயிட்டங்களையும் பிரமாதமா சமைப்பேங்க.”

” என்னது? அயிட்டமா?”

”அதாவது வகைகள்”

”ம்.. அது.. எனக்கு டபுள் மீனிங்க்ல பேசறது கொஞ்சம் கூட பிடிக்காது.. என்ன பேசப்போறியோ அதை முதல்லியே ரிகர்சல் பார்த்துட்டு அதுல டீசண்ட்டான அர்த்தம் வருதான்னு பார்த்துட்டு அப்புறமா பேசு..”

” ஓக்கேங்க.. உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க.. “

” அது முக்கியம் இல்லை.. உன்னை எனக்கு பிடிக்கனும்.. அதுக்கு நீ எனக்குப்பிடிச்ச மாதிரி நடந்து காட்டனும்.. “

” அடடா.. எனக்கு ஒரே மாதிரி தாங்க நடக்கத்தெரியும்.. ரஜினி நடை.. சிவாஜி நடை இதெல்லாம் தெரியாதுங்க.. “

” ஜோக்? இதுக்கு நான் சிரிக்கனுமா? ஒண்ணு சொல்றேன்.. எனக்கு இந்த வழியறது.. கடிக்கறது.. மொக்கை போடறது இதெல்லாம் பிடிக்காது.. “

“சரி.. உங்களைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்க”

” என்னை எதிர்த்து யார் பேசினாலும் எனக்குப்பிடிக்காது.. அதே சமயம் ஆமாம் சாமி போடற ஆளுங்களையும் பிடிக்காது.. “

” குழப்பறீங்களே.. “

” ஆர்கியூமெண்ட் பண்றதுன்னா எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி..”

“அதுக்கு நீங்க வக்கீலா போய் இருக்கலாமே?”

”இப்போதான் சொன்னேன்.. என்னை எதிர்த்து கேள்வி கேட்டா பிடிக்காதுன்னு.. வக்கீலா போனா கறுப்பு கோட், வெள்ளை சட்டை போடனும்.. என்னை யார் கண்ட்ரோல் பண்ணூனாலும் எனக்கு பிடிக்காது.. “

”அய்யய்யோ. அப்போ டிராஃபிக் ரூலை மதிக்க மாட்டீங்களா?”


” எனக்கு எந்த ரூல்ஸூம் பிடிக்காது.."
"அம்மா தாயே.. நான் ஒண்ணே ஒண்ணு சொல்லவா?”

“ ம், சொல்லு”

“ என்னை விட்ரு..!!!!!!!!”

அவர் ஓடுகிறார்.. பின்னணியில் கமல் -ன் விக்ரம் பட பாடல் ரீ மிக்ஸில்

தம்பி.. ஜும்ஜ்ஜுசுகும் , ஜும்ஜ்ஜுசுகும்  நீ என்னப்பார்த்தவன், நான் உன்னைப்பார்த்தவள்.. உன் கைகளால் மாலையை நீ சூடிடு.. தம்பி... ச்சும் ச்சுசுகும் ச்சும்ச்சுசுகும்.. தம்பி..

டிஸ்கி - 1 
இது ஆணாதிக்கப்பதிவோ, பெண்ணாதிக்கப்பதிவொ அல்ல, ஜஸ்ட் காமெடி & மொக்கை ஆதிக்கப்பதிவு..

டிஸ்கி - 2 குறிப்பிட்ட அந்தப்பெண் பதிவர், அவங்கம்மா, அப்பா, தாத்தா, பாட்டி , அம்மம்மா, அப்பப்பா.. உஷ் அப்பா.... அனைவரிடமும்  பதிவின் ப்ரீவ்யூ காட்டி அப்ரூவல்  வாங்கி பின் போடப்பட்டுள்ளது..



எகத்தாளமான ஜோக்ஸ்

1. தலைவரே! கான்ஃபிடன்ஸ், கான்ஃபிடன்சியல் என்ன வித்தியாசம்?

எலக்‌ஷன்ல நாம தான் ஜெயிப்போம்னு நினைக்கறது கான்ஃபிடன்ஸ், அதுக்கான முன்னேற்பாடா கள்ள ஓட்டு போடறது  கான்ஃபிடன்சியல் ..

-------------------------------------


2. மன்னா! உங்களைப்பார்க்க மகத நாட்டு இளவரசி திவ்யா ஸ்பந்தனா வந்திருக்கிறார்....

அமைச்சரே! குத்து ரம்யா என த்தெளிவாக கூறுங்கள்..

----------------------------------


3. வேலாயுதம் படத்துல விஜய் குடிக்கற மாதிரி சீன் எதுவும் இல்ல, ஆனாலும் டாக்டர் ராம்தாஸ் அந்தப்படத்தை எதிர்க்கறாரே, ஏன்?

டைட்டில்லயே “தம்” இருக்கே?


----------------------------------------

4. என் கணவர் என்னை அழகிங்”கறார்” , குணவதிங்”கறார்”.. ஒத்தை நாடி ஃபிகர்ங்”கறார்”....

ஓஹோ அவர் ரொம்ப ”கறார்” பேர்வழின்னு சொன்னியே, இந்த அர்த்தத்துலதானா?

--------------------------------------

5.  லைப்ரரி - சிறு குறிப்பு வரைக

ஃபிகருக்கு நூல் விடறதுக்காக கண்டு பிடிக்கப்பட்ட அமைதியான இடம்தான் லைப்ரரி எனப்படும் நூலகம்


-----------------------------------------------------

New Day by Brin .



6. ஜெயில் பயம் தலைவருக்கு இன்னும் போகவே இல்லை போல்..


ஏன்?

கட்டுச்சோறு விருந்துக்குக்கூப்பிட்டாக்கூட வளை “காப்பு” நிகழ்ச்சியா?அய்யய்யோ, நான் வர்லைங்கறாரே?

---------------------------------------

7. வாயுள்ள பிள்ளை  பிழைச்சுக்கும்..

அதெப்பிடி? GAS ட்ரபுள் வந்தா வாயு உள்ள பிள்ளை ஹாஸ்பிடல்  போக வேணாமா?

----------------------------------------

8. நீ வீரனா? கோழையா?

நாங்க எல்லாம் மேரேஜ்  ஆன அன்னைக்கே மனைவி கால்ல விழுந்து லைஃபை ஸ்டார்ட் பண்ணுன ஆளுங்க ..

---------------------------------------------

9. டாக்டர், மேரேஜ் ஆகி 8 மாசம்  ஆகியும் இன்னும் எங்களுக்கு பேபி பிறக்கலை,ஆனா பக்கத்து வீட்ல  2 ஜோடிகளுக்கு 6 மாசத்துலயே பிறந்துடுச்சு.. எப்டி?

விடுங்க, அவங்க லவ் மேரேஜா இருக்கும்..

---------------------------------

10. சுவரில் நோட்டீஸ் ஒட்டுங்கள்-னு எழுதி வெச்சிருக்கீங்களே?ஏன்?

ஒட்டாதேன்னா எவன் கேக்கறான்?

-------------------------------------------

 Arm Raised

Monday, October 31, 2011

நாளைய இயக்குநர் - விமர்சனம்

Indian Peafowl 
 

Bird Photography


கலைஞர் டி வி ல ரொம்ப நாளைக்கப்புறமா கீர்த்தி கொஞ்சம் டீசண்ட்டான நைட் கவுனோட ,ஓரளவுக்கு சுமாரான  ஹேர் ஸ்டைலோட  வந்து ஜட்ஜூங்க கிட்டே ஒரு உருப்படியான கேள்வி கேட்டாங்க.. 


“சார்.. அந்தக்காலப்படங்களுக்கும், இந்தக்கால படங்களுக்கும் என்ன வித்தியாசம்?”

“ டெக்னிக்கலா ரொம்ப முன்னேறி இருக்காங்க... கதை சொல்லும் விதத்துல ரொம்ப ஃபாஸ்ட்டா இருக்காங்க.. உலக சினிமா எல்லாம் பார்த்து பழக்கப்பட்டதால மக்கள் ரசனை உயர்ந்து இருக்கு..  க்ளிஷே காட்சிகள் எல்லாம் வேணாம்.. சீக்கிரம் மேட்டர்க்கு வா, இழுக்காதேங்கறாங்க..”

இப்போ கீழே வருவதில் ஹெட்டிங்க்ல முதல்ல இருப்பது இயக்குநர் பெயர், அடுத்து வருவது பட டைட்டில்


1. இளங்கோ - பேயாவது , பிசாசாவது

ஒரு பார்க்ல 2 ஃபிரண்ட்ஸ் உக்காந்து பேசிட்டு இருக்காங்க.. சப்ஜெக்ட் பேய் பற்றி.. ஒருத்தன் பேய் இருக்குங்கறான், இன்னொருத்தன் இல்லைங்கறான்.. அப்புறம் 2 பேரும் ரூமுக்கு போறாங்க.. நைட் தூங்கறப்ப  ஒருத்தன் பேய் பிடிச்ச மாதிரி ஆக்ட் பண்றான்.. இன்னொருத்தனுக்கு பயம் வந்துடுது... விழிப்பு தட்டிடுது.. பாத்ரூம் போறான்.. திரும்ப வரும்போது  இன்னொரு ஃபிரண்ட் பேய் மாதிரி மாஸ்க் போட்டு பே என பயமுறுத்துறான்.. ஹார்ட் அட்டாக்ல ஆள் அவுட்..

கொஞ்ச நாள் கழிச்சு  இறந்த நண்பன் ஃபோட்டோவை ரூம்ல மாட்டி படுத்திருக்கான்.. அந்த இன்னொரு ஃபிரண்ட்.. இந்த டைம் இவன் அதே மாதிரி பாத்ரூம் போறான்.. செத்துப்போன ஃபிரண்ட் மாஸ்க் மாட்டி அதே போல் இவனை பயமுறுத்த இவனும் மேல் லோகம் போறான்.. 

இப்போ 2 பேரும் பேயாக மாறி  பேய் ஃபிரண்ட்ஸ் ஆகிட்டோம்னு ஜோக் அடிக்கறாங்க..


இயக்குநர்க்கு சில ஆலோசனைகள்

1. பேய் தன் செல்ஃபோன் ரிங்க் டோனாக  காக்க காக்க கனகவேல் காக்க என்ற சுப்ரபாத பாட்டை வெச்சிருக்கு.. அதெப்பிடி?வேற ரிங்க் டோன் சிக்கலை? சாமியும் பேயும் ஒண்ணாகிடுச்சா?

2. மாஸ்க் மாட்டிக்கிட்டு பயமுறுத்துவது முதல் டைம் ஓக்கே, செகண்ட் டைம் வேற ஆங்கிள்ல சொல்லி இருக்கலாம்.. 

3. திகில் எஃபக்ட் நல்லா ஒர்க் ஆகிட்டு வர்றப்ப அந்த க்ளைமாக்ஸ் கடி ஜோக் எதுக்கு? அது சீரியஸ் படத்தை காமெடி ஆக்கிடுச்சு..

Bird Photography

2. முருகப்பிரகாஷ் கணேசன் - இடைவெளி

ஒரு லவ் ஜோடி ரூம்ல .. யாரும் பயந்துடாதீங்க. சும்மா பேசிட்டு இருக்காங்க.. அவங்க ஃபிளாஸ்பேக்.. 

ஒரு கார் போய்ட்டிருக்கு.. ஹை டெக் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள் அதுல ட்ராவலிங்க்..  காட் டிரைவர் தான் ஹீரோ.. அவருக்கு ஒரு ஃபோன் வருது.. அம்மா பேசறாங்க, டிரைவரோட அம்மாதான்.. கலைஞர் டி வி ல அம்மா பேசற சீன் எப்படி அலோ பண்ணாங்களோ? 1800 ரூபா அனுப்ப சொல்றாங்க.. அதுக்கு ஹீரோ முயற்சி பண்றேன் கறார்.. 


ஹீரோயின் உடனே அந்த அளவு பணம் கூட உங்க கிட்டே இல்லையா?ன்னு கேட்க ஹீரோ அவரோட சுய புலம்பலை நெஞ்சை டச் பண்ற மாதிரி சொல்றாரு.. ஹீரோயினுக்கு உடனே லவ் வந்துடுது...

பொருளாதார ரீதியா இடைவெளி இருந்தாலும் காதல்க்கு அது தடை அல்ல அப்டினு சொல்ல வர்றாரு இயக்குநர்.. ஆனா........!!!!!!


இயக்குநர்க்கு சில ஆலோசனைகள்

1.   ஹீரோயின் நல்ல ஃபிரஷ் ஃபிகரா போடுங்க.. படத்துல வந்த பாப்பாவுக்கு 34 வயசு முற்றிய முகம்.. யூத் கதைக்கு செட் ஆகலை..

2. இருக்கற 8 நிமிஷத்துல டக்னு கதையை சொல்லுங்க. ஃபிளாஷ் பேக் உத்தி இந்த கதைக்கு தேவை இல்லை.. 

3. ஹைடெக் கேர்ள் அந்த டிரைவரை லவ் பண்றது நம்பற மாதிரி அழுத்தமா சொல்லலை

மனம் தொட்ட வசனம்


1. ஏய்.. நீ சொல்ற கதை எல்லாம் என் கனவுல 100 நாள் படமா ஓடிடுச்சு.. 



Bird Photography

3. சரவணா - அப்பா

ஃபாரின்ல 4 வருஷங்களா சம்பாதிக்க வேலைக்கு போற அப்பா.. ரிட்டர்ன் வர்றார்.. ஆனா மனைவி கிட்டே சொல்லலை.. திடீர்னு சர்ப்பரைஸ் விசிட்டா வர்றாரு.. ஃபோன் பண்ணி பேசறார்.. மனைவிக்கு செம சந்தோஷம்.. பையனை கூப்பிட்டு பேசச்சொல்றா.. ஆனா பையன் மெஷின் மாதிரி அம்மா சொல்லிக்குடுத்த மாதிரி விட்டேத்தியா பேசறான்.

அவனுக்குள்ள ஏக்கம்.. அப்பா தன் கூட இல்லையேன்னு.. ரோட்ல போற ஒரு அப்பா மகன் ஜோடி அந்நியோன்யமா கொஞ்சிட்டு போறதை ஏக்கமா பார்க்கறான்.. 

. இப்போ அந்தப்பையனோட அப்பா வீட்டு வாசல்ல வந்து நிக்கறாரு.. தன் மகனுக்காக வாங்கி வந்த பொம்மையை எல்லாம் அவன் கிட்டே எடுத்து காட்றாரு.. 

ஆனா அந்தப்பையன் உள்ளே திரும்பி “ அம்மா, பொம்மைக்காரர் வந்திருக்காரு, வாம்மா, பொம்மை வாங்கித்தாம்மா” ந்க்கரான்.. வேதம் புதிதுல  பளார் வாங்குவாரே சத்யராஜ் அந்த எஃபக்ட்.. அப்போத்தான் அவருக்கு புரியுது.. நம்ம பையன் நம்ம முகத்தையே மறந்துட்டான்னு.. இனி எப்பவும் குடும்பத்தை விட்டு பிரியக்கூடாதுன்னு  உணர்ந்து பையனை தோள்ல வெச்சு வாக் போறாரு.. முதல்ல ஏக்கமா பையன் பார்த்தானே ஒரு அப்பா பையன் ஜோடி அவங்களை இஅவ்ங்க கிராஸ் பண்றப்ப இந்தப்பையன் எங்கப்பாவும் வந்துட்டாருன்னு பெருமிதமா ஒரு பார்வை பார்க்கரானே அடடா.... டச்சிங்க்.. 

இந்தப்படம் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை

1. பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை அல்ல.. பணம் சம்பாதிக்க நாம் வெளிநாடு சென்றால் குடும்ப பாசம் காணாமல் போகும்.. 

2. மழலைக்கு மகிழ்ச்சி தந்தை தாயின் அருகாமை மட்டும் தான்.. 

3. குடும்பம் இருப்பதற்கும், குடும்பத்துடன் இருப்பதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன..

இந்தப்படம் சிறந்த படம் விருது வாங்கியதில் அனைவருக்கும் மகிழ்ச்சி..




Bird Photography
4. ஆண்டனி - GOD'S MISTAKE 

 ரோட்ல ஒருத்தன் செல் ஃபோன்ல பேசிட்டே நடந்து போறான்..  லாரி வந்து அடிச்சுடுது.. ஆள் ஸ்பாட் அவுட்.. இப்போ அதிசியப்பிறவி படத்துல வர்ற மாதிரி மேல் லோகத்துல கதை.. கடவுளும், கணக்குப்பிள்ளையும் பேசிக்கறா மாதிரி..

மனிதர்கள்க்கு நல்ல பூரண ஆயுளை நான் குடுத்தேன்.. அறிவியல் கண்டு பிடிப்புகள் மூலமா அவன் தான் தன் அழிவைத்தேடிக்கறான், ஆயுளை குறைச்சுக்கறான்..  அப்டின்னு ஒரே அட்வைஸ் மழை.. ஆனா எல்லாமே சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்.. பிரச்சார நெடி இல்லாம இன்னும் சாஃப்டா சொல்லி இருக்கலாம்.. 


அவனுக்கு இன்னொரு சான்ஸ் தர்றாங்க.. . இந்த டைம் லாரிக்காரன் அவனை அடிச்சானா? அவன் தப்பினா? என்பது சஸ்பென்ஸ்..

 மனம்  கவர்ந்த வசனங்கள்

1. அங்கே பாரு, செல் ஃபோன்ல குடும்பம் நடத்திட்டே வர்றான் பாரு.. 

விடுங்க, புதுசா மேரேஜ் ஆனவன்.. மனைவிட்ட பேசிட்டு வர்றான்

2. எல்லோரும் நல்லா வாழனும்னு நான் தலை விதியை எழுதறேன், அனா மனிதர்கள் விதியை மதியால் வெல்வதாக நினைத்து தங்கள் ஆயுளை சீக்கிரம் முடித்துக்கொள்கிறார்கள்.


3.  எல்லாத்துலயும் லிமிட் வெச்சு படைச்ச நான் மனிதனோட அறிவுல மட்டும் லிமிட் வைக்க மறந்துட்டேன்.. அதான் நான் செஞ்ச தப்பு..

ரொம்ப அமெச்சூர்த்தனமான டைரக்‌ஷனா இருந்தாலும் சொல்ல வந்த கருத்து செம. வெல்டன் டைரக்டர்..